-
7th May 2016, 10:20 PM
#2681
Senior Member
Senior Hubber
எப்போ கேட்டாலும் இனிக்கும் பாட்டு..
கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்
கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்
என்ன என்ன என்றாரம்பம்
இன்பம் இன்பம் இன்றாரம்பம்
.
மார்பில் மூடும் ஆடை மயக்கத்தாலே சரிந்ததோ
மார்பில் மூடும் ஆடை மயக்கத்தாலே சரிந்ததோ
பார்வை மோதும் வேளை பருவராகம் இசைத்ததோ
பார்வை மோதும் வேளை பருவராகம் இசைத்ததோ
நாணம் விடாதோ அம்மம்மா பெண்களே
வேண்டும் நிதானம் அம்மம்மா ஆண்களே
என்ன என்ன என்றாரம்பம்
இன்பம் இன்பம் இன்றாரம்பம்
.
கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்
கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்
என்ன என்ன என்றாரம்பம்
இன்பம் இன்பம் இன்றாரம்பம்
.
கொதிக்கும் இந்த உடலை குளிரச்செய்ய வழியென்ன
கொதிக்கும் இந்த உடலை குளிரச்செய்ய வழியென்ன
கூந்தல் அலையில் நீந்தி குளிக்க வேண்டும் பைங்கிளி
கூந்தல் அலையில் நீந்தி குளிக்க வேண்டும் பைங்கிளி
வருவார் வராமல் எண்ணங்கள் ஆறுமோ
தருவார் தராமல் பெண் மேனி தூங்குமோ
என்ன என்ன என்றாரம்பம்
இன்பம் இன்பம் இன்றாரம்பம்
அந்த ஒரு செகண்ட் இசையில்லாத மெளனம் பேசும் வார்த்தைகள் தான் என்னே!
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
7th May 2016 10:20 PM
# ADS
Circuit advertisement
-
7th May 2016, 11:43 PM
#2682
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sivajisenthil
08/05/2016
வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் சிறுவயதிலே பிரிந்த அன்னையை சிறையிலே மகன் சந்திக்க நேரும் உருக்கமான இறுக்கமான சூழலில் ஜெமினியின்
உன்னதமான உணர்ச்சிக் குவியலான தாய்ப் பாசம் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்புப் பாடமே !

ஜெமினி திரியில் நான் முன்னம் எழுதிய (30th May 2015) பதிவிது. இங்கே இப்போது பதிவிடுவது பொருத்தம் என்று நினைக்கிறேன்.
வஞ்சிக் கோட்டை திவானின் மகன் எதிரிகளால் வஞ்சிக்கப்பட்டு, கொடுஞ்சிறையில் வெந்து தணிந்து, வேதனை அனுபவிக்க, பக்கத்து சிறையில் சொந்தத் தாயும் அடைபட்டுக் கிடக்க, தாய் அறையின் கல்லுடைத்து தப்பி வந்து மகனிடம் வந்து சேர, அதுவரை அநாதை என்று தன்னை எண்ணிக் கொண்டிருந்த மகன் தாய் தன் மகனை அடையாளம் கண்டு வரலாறு கூறி அவன் அநாதை இல்லை என்று ஆறுதல் அளித்து அள்ளி மகிழும் போது ஆனந்தம் பொங்கி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறான். சிறையிலிருந்து தப்பி வெளியேற சிறைக் கற்களை தாயுடன் சேர்ந்து பெயர்க்கிறான். தப்ப வழி கிடைக்கும் சமயத்தில் தாய் தன் உயரை விடுகிறாள். துவல்கிறான்... அழுகிறான்... புரள்கிறான்... புலம்புகிறான்.... துடிக்கிறான் துன்பத்திலேயே உழன்ற மகன்.
அற்ப நேரம் அன்னையுடனான அன்னியோன்யத்தை எண்ணி அழுகிறான். கொள்ளி போடவும் கொடுஞ்சிறையில் வழி ஏதுமில்லை.
இருந்தால் என்ன?
அன்னையைப் புதைக்க அங்கேயே சவக்குழி தோண்டுகிறான். அதுவரை இருந்த பொறுமை அறவே அழிந்து பொங்கி எழுகிறான். சிறைக்கு வரும் காவலாளியைத் தாக்கி, மற்றவர்களையும் தாக்கி தான் குடும்பத்தை நாசம் செய்த வஞ்சகனை பழி வாங்கத் தப்புகிறான் தண்ணீரில் குதித்து.
மகனாக ஜெமினி. தாயாக கண்ணாம்பா. உணர்ச்சிமிகு கட்டங்கள். தாயும் மகனும் சிறையில் சந்திக்கும் காட்சி உணர்சிக் குவியல்களின் சங்கமம்.
தாடியும் மீசையுமாய் பொலிவிழந்த முகத்துடன் நலிந்த, உருக்குலைந்த தோற்றத்துடன் நடிப்பில் உருக்குலையாத ஜெமினி.
சோகங்கள் கவ்வ தாயைப் பார்த்ததும் தாங்க முடியாத மகிழ்ச்சியை காட்டுவதிலாகட்டும்...தாய் தான் பறி கொடுத்த தங்கையை பற்றிக் கேட்டதும் துவண்டு 'அவளை எமனிடம் பறி கொடுத்து விட்டேனம்மா' என்று கதறுவதாகட்டும்... அனாதையாகக் காரணமாயிருந்த அப்பாவின் மேல் கொள்ளும் கோபமாகட்டும்... அவர் நல்லவர் என்று சொல்லி அன்னை நம்பிக்கையூட்ட, பின் அவர் மேல் கொள்ளும் தாபமாகட்டும்... அன்னை தன் மடியில் உயிர்விடும்போது நிலை குலைந்து சிலை போல அசைவற்றுப் போவதாகட்டும்... அவளின் துயரங்களை நினைத்து துன்பப்படுவதாகட்டும்... சிலிர்த்தெழுந்து சிறு கடப்பாரையில் மாதாவின் அடக்கத்திற்கு மண் தோண்டுவதாகட்டும்... உள்ளே கிடந்த வீரம் வீறு கொண்டு எழுந்து அங்கு வரும் வீரர்களை உருண்டு புரண்டு சாயப்பதிலாகட்டும்...
அம்மா அம்மா என்றே ஆயிரம் ஆண்டுகள்
அழுது புரண்டாலும்
மகனே!
அன்னை வருவாளோ!
உனக்கொரு ஆறுதல் சொல்வாளோ!
முன்னை தவமிருந்து
உன்னை முன்னூறு நாள் சுமந்து
பொன்னைப் போலே உன்னை
போற்றி வளர்த்திட்ட
அன்னை வருவாளோ!
கொள்ளி இடவும் வகையில்லை
என்றே நீ கொடுஞ்சிறையில்
கலக்கம் கொள்ளாதே!
அள்ளி இட அரிசி இல்லையென்றால் என்ன?
அன்பை சொரிவாய் மகனே!
கண்ணீராலே நீராட்டு
அன்னை தன்னை
மண் மேலே தாலாட்டு
என்று 'இசைச் சித்தர்' தனக்கே உரிய பாணியில் பின்னணியில் உருகிப் பாட,
ஜெமினி இந்தக் காட்சிகளில் நம் மனதை தன் ஆழமான அழும் நடிப்பால் தோண்டி விடுவார். அந்த இயல்பான சோகம் அதுவும் தாய் இறந்தவுடன் அவர் காட்டும் அவர் மேல் கருணை பிறக்க வைக்கும் முகபாவங்கள் முத்திரைதான். அவருடன் சேர்ந்து நம் கண்களும் கலங்கத்தான் செய்யும்.
'வஞ்சிக் கோட்டை வாலிபனி'ல் என்னை மிக மிக பாதித்த காட்சி இது.
Last edited by vasudevan31355; 7th May 2016 at 11:46 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
8th May 2016, 12:09 AM
#2683
Junior Member
Veteran Hubber
வாசு என்பதன் விரிவாக்கம் வார்த்தைகளின் சுரங்கம் என்பதே !
சில திரைப்படங்களின் சில காட்சிகள் கல்வெட்டுக் கீற்றாய் மனதில் ஆழமான வடுவாய்ப் பதிந்து அந்தப் பிரமிப்பிலிருந்து நம்மால் என்றுமே விடுபட இயலாது என்பதற்கு
அமரர் ஜெமினி கணேசனின் சாகாவரம் பெற்ற நடிப்புப் பதிவுகளில் இக்காட்சியும் ஒன்றே !!
ஒரே அலைவரிசையில் நமது எண்ணங்கள் இருக்கின்றன என்று பெருமைப் படுத்தியமைக்கு நன்றி வாசு சார் !
செந்தில்
Last edited by sivajisenthil; 8th May 2016 at 12:12 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
8th May 2016, 12:36 AM
#2684
Senior Member
Senior Hubber
வ. கோ வாலிபனில் எனக்கு வைஜயந்தி மாலா ரொம்ப ப் பிடிக்கும்.. அனாவசியமாகச் சாகடித்தது பிடிக்காது..
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
8th May 2016, 08:01 AM
#2685
Junior Member
Veteran Hubber
பிஎஸ் வீரப்பா ஏன் மந்தாகினியைக் கொன்றார்? என்றுபாகுபலி ராஜமௌலியாரிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்வோம் வஞ்சிக்கோட்டை வாலிபன் 2 எடுத்து வைஜயந்தியின் பாத்திரத்தை உயிர்ப்பித்து சின்னக் கண்ணரை குஷிப்படுத்திட!!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
8th May 2016, 09:47 AM
#2686
Senior Member
Diamond Hubber

காபரே கானங்களில் மட்டுமல்ல....கண்ணீர் வரவழைக்கும் கானங்களிலும் கில்லாடி ராட்சஸி. வறுமையில் வாடும் குமாரி ஷீலா வயிற்றுப் பிழைப்புக்காக தன் தங்கைகளுடன் ஆடிப்பாடி பிழைப்பு நடத்தும் பரிதாபம். ஈஸ்வரியின் குரலில் ஈட்டியாகத் துளைக்கிறது இதயத்தை இப்பாடல். இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் அடிவயிறு என்னையுமறியாமல் கலங்குவதை உணருவேன். மூன்றெழுத்தில் எனக்குப் பிடித்த முத்தான முதல் பாடல்.

பாடலின் இன்னொரு விசேஷம் ஈஸ்வரியுடன் என்னுடைய இன்னொரு பிடித்தமான பாடகி சரளா கூட்டணி அமைத்ததுதான். சரியான சளைக்காத சரளா இணை...துணை... வேறென்ன வேண்டும்?
மது அண்ணாவும், நானும் இப்பாடலைப் பற்றி செல்லில் பேசி மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது. அவருக்கும் மிக மிக பிடித்த பாடல். ஆனால் பாடலின் வீடியோ மிஸ்ஸிங். விரைவில் தர முயற்சி செய்கிறேன்.
தெய்வத்தின் கோவில்
தெய்வந்தான் இல்லையே
மனிதனின் பூமி
மனிதன்தான் இல்லையே
அவை இரண்டும் இல்லா வேளையிலே
ஏழைப் பெண்கள் வீதியிலே
முதலாவது சரணத்தில்,
'வாழ்வது எங்கள் ஆசை
ஒரு மாளிகை ராணியைப் போ...ல '
என்று முடித்து ஈஸ்வரி எடுக்கும் அந்த ஹம்மிங் சோகம். நெஞ்சக் காணியை அப்படியே குல்கந்து குரல் ஏர் பூட்டி உழுகிறது. வறுமையின் கொடுமையும், இளமைக்கால இன்னலையும் அந்த ஹம்மிங் ஒரே சேர பிரதிபலிக்கும்.
பின்வரும் இசையே இல்லாமல் வரும் வரிகளும் வறுமையை உணர்த்துவதே.
'ஆண்டவன் காட்டிய பாதை
ஒரு ஆண்டியின் பிள்ளையைப் போலே'
'தன்னைத்தானே காணும் உலகில் என்னைக் காண்பார் யாரம்மா?'
என்ற ஈஸ்வரி பாடும் வரிகளிலேயே அவர்களின் வறுமைக் கதை நமக்கு உணர்த்தப்படுவிடும்.
'யாரம்மா?' என்று ஈஸ்வரி முடித்தவுடன் சரளா குழுவினர் உடன் தொடரும் அந்த இரண்டு முறை 'யாரம்மா' இடியாக இருதயத்தில் இறங்கும்.
இதற்குப் பின்
சரளா சரளமாகப் பின்னுவார். டோட்டலாக பாடலைக் கேப்சர் பண்ணிவிடுவார். ஈஸ்வரிக்கே சவால் விடுவதுபோல இருக்கும்.
'தங்கைக்கென்றோர் அண்ணன் இருந்தான்
எங்கு சொல்வாய் ஏனம்மா?'
(மதுண்ணா! இந்த வரி கொஞ்சம் டவுட். சரி பார்க்கவும். காது பஞ்சர்)
(அந்தக் குரலில் அவர் பாடிய இஸ்லாமிய தனிப்பாடல்கள் கண்டிப்பாக நம் நினைவுக்கு வந்துபோகும்).
ஷீலா மெச்சூர்டான அக்கா என்பதால் ஈஸ்வரி அவருக்கான சோக வரிகளை விரக்தியாக வெளிப்படுத்துவார். உடன் தங்கை விவரமறியா இளம்பெண் என்பதால் அவளுக்காகப் பாடும் சரளா குரலில் ஈஸ்வரியை விட அதிகமாக தழுதழுப்பில் சோகம் காட்டுவார். என்ன ஒரு புரிதல் தன்மை!
இப்போது பாடல் சோகத்தின் விளிம்பிற்கு சற்றே உச்ச ஸ்தாயியை அடையத் தொடங்கும்.
'கருணை நெஞ்சைத் தேடித் தேடி கண்ணீர் சிந்தும் பெண்ணம்மா
பெண்ணம்மா
பெண்ணம்மா'
கடமை என்று ஒருவர் வந்தால் காலில் விழுவேன் நானம்மா'
முடித்தவுடன் ஈஸ்வரியின் மீண்டும் இரக்கத்தை வரவழைக்கும் சோக ஹம்மிங்.
பாடலென்றால் அப்படி ஒரு பாடல் இது. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது இப்பாடல் நினைவுக்கு வராமல் போனதில்லை.
'மூன்றெழுத்'தில் இப்பாடலில் என் மூச்சிருக்கும் என்றும்.
Last edited by vasudevan31355; 8th May 2016 at 02:59 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
madhu thanked for this post
-
8th May 2016, 03:00 PM
#2687
Junior Member
Newbie Hubber
சின்ன கண்ணன்,
சுஜாதாவை நான் நேரில் பார்த்த போது சொன்னவை. என் எழுத்திலேயே ஐந்தில் ஒரு பகுதிதான் ரசிகர்களால் மேய படுகிறது. அந்த ஐந்து யானை பார்க்கும் குருடர் போல அவரவர் ரசனை க்கேற்ப தீர்மானம் பெறும் என்றார். தாங்கள் கண்ணாடி முன்னே நிற்பவர் போலும் ,எழுதி குவிப்பது ,பாட்டுக்கு பாட்டு போன்ற சில்லறை காரியங்களில் ஈடுபட்டு பதிவு எண்ணிக்கையை அதிகரிப்பது போன்று ஈடுபடாமல் ,படிக்க கற்று கொள்ளுங்கள்.
இந்த பதிவுகளின் நோக்கம் ,ராகங்களின் பெயரல்ல. விவரணை அல்ல. அவை என் மனதில் விளைத்த தாக்கங்கள். சில சுவாரஸ்ய வாழ்வின் இணையான சினிமா நிகழ்வுகள். சற்றே இணைப்புக்காக மற்ற பாடல்கள் சாம்பிள் .
சாறை விட்டு சக்கையை சுவைக்கும் சராசரி போல ,ராகங்களை கூகிளில் மேய்ந்து இன்னும் சில பாடல்கள். இதில் கல்லெல்லாம்,மலர்கள் பாடல்களுக்கு உரிய விவரணை பகுதிகளை படிக்காமல் விட்டு விட்டதாக எழுதினால்?
கார்த்திக், முரளி,ராகவேந்தர்,வாசு ,மது,சாரதி மற்றும் நான் மற்றோர் எழுத்தை ஒன்று விடாமல் படிப்போம். நான் மதிக்கும் பதிவரான தாங்கள் எனக்கு தொடர்ந்து ஏமாற்றமே அளிக்கிறீர்கள்.தயவு செய்து ,பங்கு பெரும் திரியில் மற்றவர் எழுத்தை முழுதும் படியுங்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
Last edited by Gopal.s; 8th May 2016 at 03:09 PM.
-
8th May 2016, 09:15 PM
#2688
Senior Member
Senior Hubber
கண்டிப்பாக கோபால்.. அப்படியே செய்கிறேன். நன்றி.
-
9th May 2016, 04:53 AM
#2689
Senior Member
Diamond Hubber
ஆஹா... ரெண்டு நாளா நெட்வொர்க் இல்லை. வாசுஜி... அது "தங்கைக்கென்றோர் அண்ணன் இருந்தால் இந்தத் துன்பம் ஏனம்மா ?" ... ஆனால் துன்ப"ம்" என்று சரளா அழுத்திப் பாடவில்லை. அதனால் கேட்பவர்களுக்கு கொஞ்சம் தொந்தரவு
-
9th May 2016, 07:17 AM
#2690
Senior Member
Diamond Hubber

Originally Posted by
madhu
ஆஹா... ரெண்டு நாளா நெட்வொர்க் இல்லை. வாசுஜி... அது "தங்கைக்கென்றோர் அண்ணன் இருந்தால் இந்தத் துன்பம் ஏனம்மா ?" ... ஆனால் துன்ப"ம்" என்று சரளா அழுத்திப் பாடவில்லை. அதனால் கேட்பவர்களுக்கு கொஞ்சம் தொந்தரவு

சூப்பர் மதுண்ணா. நிறையமுறை கேட்டும் பிடிபடவில்லை. வார்த்தைகளும் பொருந்தவில்லை. "தங்கைக்கென்றோர் அண்ணன் இருந்தால் இந்தத் துன்பம் ஏனம்மா ?" என்பது அழகாகப் பொருந்துகிறது. அதுதான் சரி. நன்றியோ நன்றி.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks