Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    நம் நெஞ்சில் சிரஞ்சீவியாய் நிலைத்து விட்ட தேசிய நடிகர் சசிகுமார் பாடலை எடுத்ததற்காக உங்களுக்கு என் உளமார்ந்த நன்றி. நான் பல முறை குறிப்பிட்டது போல, சசிகுமார் என்றாலே உடனடியாக நடிகர் திலகம் தான் நினைவுக்கு வருவார் என்கிற அளவிற்கு அவர் பெயரை உச்சரித்தவர், சுவாசித்தவர்.

    அவருடன் சந்தித்துப் பேச கிடைத்த அந்த எதிர்பாராத வாய்ப்பிற்காக மழைக்கும் இறைவனுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். ராஜா அண்ணாலைபுரம் போட் கிளப் சாலையின் சந்திப்பில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்க் அருகே அவரை பார்த்துப் பேச கிடைத்த வாய்ப்பு மிகவும் அபூர்வமானது. அதற்கு முன்னும் பின்னும் பல மேடைகளில் மன்றக் கூட்டங்களில் அவர் ஸ்தாபன காங்கிரஸை ஆதரித்துப் பேசியதையெல்லாம் கேட்டிருக்கிறேன். என்றாலும் நேருக்கு நேர் நின்று பேசும் வாய்ப்பு அன்று தான் வாய்த்தது. ஒவ்வொரு முறை தலைவர் பெயரை சொல்லும் போதும் அவருடைய முக மலர்ச்சியைப் பார்க்க வேண்டும். காணக் கண் கோடி வேண்டும் என்பார்கள். அது போல அதைப் பார்க்கும் நமக்கே உற்சாகமாய் இருக்கும்.

    சசிகுமாரைப் பற்றி சொல்லும் போதெல்லாம் ஏனோ என் மனம் நெகிழ்ச்சியடையும். போலித்தனமில்லாத நடிகர் திலக பக்தர். அவரை உள்ளத்தினால் வாழ்த்தியவர். நேசித்தவர்.

    அதனால் அவருடைய பாடல்களை நீங்கள் எப்போது பகிர்ந்து கொண்டாலும் மனம் குதூகலிக்கும். அதுவும் அவள் அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. ஒவ்வொரு சின்னச் சின்ன அசைவிலும் தலைவரை மனதில் நினைத்து செய்திருப்பார். ஆனால் அது ரசிக்கும் படி இருக்கும். அதற்கு சிறந்த உதாரணம் இப்பாடல். இதே போல இன்று வந்த இன்ப மயக்கம் பாடலிலும் அவருடைய மேனரிஸங்கள் தலைவரையே பிரதிபலிக்கும். இன்னொரு பாடலை அலசும் போது இன்று வந்த இன்ப மயக்கம் பாடலைத் தங்கள் எழுத்தில் படிக்க விரும்புகிறேன்.

    அவள் படப்பாடலைத் தங்களுடைய எழுத்தில் வடித்து யாருமே தங்கள் அருகில் நெருங்க முடியாத அளவிற்கு உச்சாணிக் கொம்பில் ஏறி அமர்ந்து விட்டீர்கள். உங்கள் விவரணையின் முக்கிய அம்சம் எல்லோருக்கும் புரியும் எளிய தமிழில் தாங்கள் எழுதும் நேர்த்தி.

    சங்க்ர் கணேஷ் இரட்டையர்களின் பொற்காலம் 1967 மகராசி தொடங்கி 1975 வரை என்று தான் நான் கூறுவேன். குறிப்பாக ஆட்டுக்கார அ்லமேலு படத்திலிருந்து அவர்களின் பாணி வேறு திசையில் பயணிக்கத் தொடங்கி விட்டது. அது வரை சங்கர் கணேஷ் இசையில் இருந்த Innocence மறைந்து விட்டதாகத் தான் உணர்ந்தேன்.

    தாங்கள் சொன்னது போல் சங்கர் கணேஷின் புகழ்க்கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல் கீதா பாடல்.

    தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
    Last edited by RAGHAVENDRA; 13th May 2016 at 06:47 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •