-
21st May 2016, 02:36 AM
#2831
Senior Member
Senior Hubber
மேல் நாட்டு மருமகள் ல வாணி கணபதிக்கும் ஒரு மேல் நாட்டுப் பொண்ணுக்கும் ஒரு இங்க்லீஷ் டாமில் சாங்க் உண்டோன்னோ.. சாங்க் ஃபர்ஸ்ட் லைன் மறந்நு போயி
-
21st May 2016 02:36 AM
# ADS
Circuit advertisement
-
21st May 2016, 11:40 AM
#2832
Senior Member
Senior Hubber
வேறுவேண்டும் எனக்கேட்டால் பதிலெதுவும் சொல்லாய்
...விஷமக்கண் பார்வையினால் மெளனத்தால் கொல்வாய்
மேருபோல நிமிர்ந்திருந்த முகத்தினையே சற்றே
..மேவித்தான் இதழமுதம் பருகிடவே அழைத்தால்
சேறுபட்ட சீலையினைப் பார்த்தாற்போல் பதறி
..செவ்விதழைத் தான்மடித்துத் தள்ளலாமோ பெண்ணே
தேருநிலை மாறியதே தங்கநிறப் பெண்ணே
..தெனாவட்டாய் நிலைகொள்ளச் செய்திடுவாய் கண்ணே..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st May 2016, 11:50 AM
#2833
Senior Member
Senior Hubber
காண்கின்ற காட்சிகளில் தெரிகின்றாய் கண்ணாநீ
...கண்டுவக்க நேரினிலே வரவில்லை கண்ணாநீ
பூண்கின்ற அணிகலன்கள் சூடுகின்ற பூச்சரங்கள்
..புடவையதன் வண்ணங்கள் உனக்காக த் தான்கண்ணா
நோன்புதனை நான்கொண்டு நேர்விழிகள் பார்த்தபடி
..நெகிழ்ந்திருப்ப தெதற்காக உனக்காகத் தான்கண்ணா
வேண்டுவன நாந்தருவேன் விரைவினிலே வந்திந்த
..வஞ்சியெந்தன் தாபமதைத் தீர்ப்பாயா கண்ணாநீ
நிரந்தரமாய்க் கனவுகளில் நித்தம் வந்து
...நீலவிழி தனையுருட்டி மிரட்டிச் செல்வாய்
புறந்தள்ளிப் போவென்றால் போகா மல்தான்
..பூவிதழை விரித்துவொரு சிரிப்பைத் தந்து
வரங்களெதும் வேண்டுமென்றால் கேளேன் என்பாய்....
..வாய்திறந்து கூறுமுன்னே மறைந்து செல்வாய்
தரவேண்டும் நனவினிலே எனக்கே கண்ணா
..தக்கபடி ஒருபதிலை சொல்வாய் கண்ணா..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd May 2016, 07:52 AM
#2834
Junior Member
Veteran Hubber
கீதைக் கண்ணன் சொல்வது .....
மாற்றம் ஒன்றே வாழ்வியலில் மாற்றம் இல்லாதது ....
Changes are inevitable and many a times indispensable too, in this human life! Changes only turn new leaves making the withered leaves shed down from a living tree!!
We accept the changes the way they come but we can challenge them if they are detrimental to our own existence within our limits and limitations of the invincible nature against which none can fight and survive! Changes are indicators of mind too...like the color change in a titration process ... till the mind color is exhibited we do not know what had been happening in the minds of our own kith and kin,,,in love too....sudden hate is an indicator!!
In family relationships still it is hard and complex to understand...even a father about the mind changes of his sons and daughters..wife...friends....daily so many changes...changes do not change with time...Bhagavath Geethaa!!
ஜெமினி சிவாஜி பந்தபாசம் ....அப்படியொரு மாற்றம்!
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ ......
மாற்றம் இப்படியும் இனிமையாகவும் இருக்குமோ
பணமா பாசமா ....இப்படியொரு தோற்றம்!!
மாறாத இளமைத் தோற்றத்தில் சரோஜாதேவி !!
Last edited by sivajisenthil; 22nd May 2016 at 01:45 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd May 2016, 11:08 AM
#2835
Senior Member
Senior Hubber
வளமையாய்ப் பூத்த வனப்பினில் மங்கை
இளமைக் கனவினில் இங்கே - உளத்தினில்
ஆற்றாகப் பொங்கி அழகாக ஓடிவரும்
மாற்ற முணர்ந்தாளே மான்..
நல்ல மாற்றங்கள் பாட்டு தான் சி.செ.. நீங்கள் கட்டம் போட்டு வண்ணமயமாய் அழகாய் எழுதுவதிலும், நான் ஏதோ வெண்பா முயற்சி செய்து எழுதிப்பார்ப்பதிலும் மாறப் போவதில்லை தானே 
அட .. நேற்று இல்லாத மாற்றம் என்னது
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd May 2016, 09:32 PM
#2836
Junior Member
Veteran Hubber
Love at First S(F)ight!
காதலில் முடியும் மோதல் ....
இயற்கையே ஆணையும் பெண்ணையும் முரணான தோற்றங்களில் படைத்திருந்தாலும் காந்தத்தின் பால் இரும்புத்துகள்கள் ஈர்க்கப் படுவது இயல்பே !! முதல் சந்திப்பில் மோதல் நிகழ்ந்தாலும் வரும் சந்திப்புகளின் சந்தர்ப்பசூழல்கள் காதல் முகிழ்த்திட காரணிகள் ஆவதும் இயல்பே வாழ்வியலில் !!
காதலான மோதல் 1 சாந்தி நிலலயம்
மோதலர்கள் : ஜெமினிகணேசன்-காஞ்சனா
ஜெமினிகணேசன் படங்களிலேயே காதல் ஈர்ப்பு ரம்மியமாகவும் ரசிக்கத்தக்க விதத்திலும் திரைக் கதையோட்டம் அமைந்து அனைவரையும் ஈர்த்த மன மகிழ் காவியம் சாந்தி நிலையம் !
தான் ஆசிரியையாக சேரப்போவது ஜெமினியின் மாளிகையில் என்பதை அறியாது முதல் சந்திப்பிலேயே காஞ்சனா குதிரைவீரன் ஜெமினியுடன் மோதுவது சுவாரஸ்யம்! அதுவே பின்னாளில் காதலாக மாற வித்திடும் சூழல்களும் காதல் மன்னரின் பிராண்ட் வழிசல்களும் சூப்பரோசூப்பர்!!
Last edited by sivajisenthil; 22nd May 2016 at 09:55 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th May 2016, 04:58 AM
#2837
Senior Member
Diamond Hubber
வாசு ஜி...
எனக்கு எப்போதும் பிடித்த ஆங்கில வரிகள் கொண்ட பாடல்..
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
24th May 2016, 01:57 PM
#2838
Senior Member
Diamond Hubber

Originally Posted by
madhu
வாசு ஜி...
எனக்கு எப்போதும் பிடித்த ஆங்கில வரிகள் கொண்ட பாடல்..
வாஹ்ரே வாஹ்....மதுண்ணா! எனக்கும் பைத்தியமான பாடல். நடிப்பவர் அதைவிட பைத்தியமாக்குபவர். அதனால் ஸ்பெஷல் கிரேடிலேயே இருக்கும் பாடல். எங்களவரின் ட்விஸ்ட் நடன அசைவுகள் வழக்கம் போல விளக்க இயலா பிரம்மிப்பே.
'உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே'
என்று ராஜஸ்ரீயிடம் கைகளைப் பக்கவாட்டில் பெருக்கி, தன்னைத்தானே உருவக் கிண்டல் அடித்து அதில் ராஜியையும் சேர்த்துக் கொண்டு சிரித்துக் கொள்ளும் இடம் என்னைக் கொல்லும் இடம்.
பல்லவி முடிந்து முதல் சரணத்தில் அந்த கிடாரின் இனிதான இசை ஓசையில் ராஜஸ்ரீயின் சிறிய பேயாட்டத்திற்குப் பின்
நடிகர் திலகம் கொடுக்கும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் முக்காலமும் மறக்க முடியாதது. தொடைகளில் கைகள் பதித்து, கை,கால்கள் விரித்து, பின் இடுப்பில் சேலை கட்டுவது போன்ற பாவனையில் இரு ஒய்யார ஓடிசல்கள் அவர் செய்யும் போது ஆனந்த அதிர்வுகள் நம்மில் உண்டாகும். நடன அசைவுகளின் போது அவர் முகத்தில் தெறிக்கும் அந்த அலட்சியங்களை சொல்லி மாளாது. அவரை அள்ளியும் மாளாது. போங்க மதுண்ணா! தூக்கம் போச்சு....வெறிதான் ஏறுது.
Last edited by vasudevan31355; 24th May 2016 at 02:48 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
24th May 2016, 04:18 PM
#2839
Senior Member
Diamond Hubber
மதுண்ணா! சின்னா!
இதிலும் ராஜஸ்ரீதான். ஆங்கில வரிகள் ஆரம்பம்தான். உடன் நாகேஷ், ஏ.எல்.ஆர். ஈஸ்வரி குரல் கேட்டால் கல்லும் கனியாதோ! சும்மா பொறி பறக்கிறது. இசை இன்ப வெள்ள உற்சாகம்..
எனக்கு ரொம்ப, ரொம்ப, ரொம்ப........................................ ..... .....................................ப் பிடித்த பாட்டு.
பாடல் துவங்குமுன் ஒரு சொக்க வைக்கும் 'ஹா...ய்' சொல்வாரே ராட்சஸி! ஆரம்பத்திலேயே டாப்.
Haai
Girls on the beach
b-e-a-c-h
Birds on the tree
t-r-e-e
பெண்ணும் பறவையும் free free
டண்டண்டண் டண்டடண் டண்டண் டண்டண் டண்
(சிப்பிக்குள் இருப்பதை தேடிப் பாருங்கள்)
டண்டண்டண் டண் டடன் டண்டண் டண்டண் டண்
(முத்தத்தைப் பார்த்தபின் மூடி வையுங்கள்)
டண்டண்டண் டண் டடன் டண்டண் டண்டண் டண்
(தித்திக்கும் வாலிபப் பாடல் பாடுங்கள்)
எல்லாம் நமக்காக
வெள்ளி அலை கரையினில் துள்ளி வந்து விழுவதும் உள்ளிருந்த பொருள்களை அள்ளி வந்து தருவதும் தென்னை மரம் அசைவதும் தென்றலுக்கு இசைவதும் எல்லாம் நமக்காக
சரண வரிகளை மேற்கண்ட டியூனோடு பொருத்திப் பாருங்கள்.
அற்புதமாய் இருக்கும்.
இடையிசையில் ஒலிக்கும் வாத்தியக் கருவிகளின் இனிமையை எடுத்துரைக்க வார்த்தைகள் வரவில்லை. என்ன ஒரு பிரம்மாண்டம்!
'பக்கத்துக் காத்துக்கு பருவம் ஏங்குது
பட்டத்து ராணியின் இதயம் பொங்குது
வெட்கத்தை ஆசைகள் விலைக்கு வாங்குது
எல்லாம் எதற்காக
பச்சைக்கிளி பறப்பதும் இச்சைக்கிளி அழைப்பதும் முத்தமிட்டு மகிழ்வதும் முன்னும் பின்னும் அசைவதும் கட்டிக் கொள்ளும் உறவினை திட்டமிட்டு உரைப்பதும் எல்லாம் நமக்காக' ('முன்னும் பின்னும்' அடி தூள்)
அடேங்கப்பா!...மூச்சு விடாமல் மூர்க்கத்தனமாய் இப்படி பாட அரக்கியால் மட்டுமே இயலும்.
மதுண்ணா!
ஒரு சின்ன சுவாரஸ்யம் இந்தப் பாட்டில். நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
இரண்டாவது சரணத்தின் இரண்டாவது வரியான
'பட்டத்து ராணியின் இதயம் பொங்குது' என்ற வரி முதல் முறை வரும் போது ஈஸ்வரி 'பொங்குது' என்று பாடியிருப்பார்.
அதே வரி இரண்டாம் தரம் மீண்டும் வரும் போது 'பட்டத்து ராணியின் இதயம் தூங்குது' என்று ஈஸ்வரி மாற்றிப் பாடியிருப்பார். காது கிழிந்துதான் சொல்கிறேன்.
ராட்சஸி மாற்றிப் பாடி விட்டாரா?... இல்லை... பாடலே அப்படித்தானா?
ஏன் இந்த மாற்றம்? 'பொங்குது' 'தூங்குது' என்று மாறியதை தெரிந்து கொள்ள உள்ளத்தில் ஆசை பொங்குது.
சின்னா!
உங்களுக்கு ஒரு கேள்வி. ராஜஸ்ரீ கோஷ்டியினர் கடற்கரை பாறைகளில் மேடான பகுதிகளில் களிநடனம் ஆடும்போது இறக்கத்தில் நிற்கும் நாகேஷ் திடுமென கீழே படுத்துக் கொண்டு எதையோ தேட எத்தனிக்கிறாரே? என்னாது?
Last edited by vasudevan31355; 24th May 2016 at 04:23 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
24th May 2016, 06:19 PM
#2840
Senior Member
Diamond Hubber
வாசு ஜி...
யெஸ்... நீங்க சொன்னது போல பொங்குது / தூங்குது என்பது போலத்தான் கேட்குது. ஆனால் கூல்டோடில் இருந்து mp3 இறக்கி கேட்டுப் பார்த்தேன். ஹிஹி.. அப்பவும் குழப்பம்தான். மனசில் பொங்குது என்று நினைத்துக் கொண்டு கேட்டால் இரண்டுமே பொங்குது என்பது போல கேட்குது. தூங்குது என்றால் தூங்குது என்று கேட்குது. என்ன செய்வது ?
Bookmarks