-
31st May 2016, 11:57 PM
#1301
சந்திரசேகர் சார், பரணி மற்றும் ராமஜெயம் சார்,
உங்கள் ஆவலை நிறைவேற்றும்வண்ணம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய முயற்சி செய்கிறேன். நன்றி!
அன்புடன்
-
Post Thanks / Like - 5 Thanks, 3 Likes
-
31st May 2016 11:57 PM
# ADS
Circuit advertisement
-
1st June 2016, 12:11 AM
#1302
சிவா சார்,
அது போன்றே நடிகர் திலகத்தின் ராணுவ சீருடை Blow Up ஸ்டில் சூப்பர். சினிமா எக்ஸ்பிரஸ் முதன் முதலாக பெரிய வடிவில் வெளியானபோது அதன் நடுப்பக்கத்தில் வந்த Blow Up இது. 1980 மார்ச் 15 அன்று வெளியான சினிமா எக்ஸ்பிரஸ் என்று நினைவு. அந்த நேரத்தில் மதுரை ஸ்ரீதேவியில் வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியாகியிருந்தது. அதற்கு முன்பு பாலும் பழமும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த Blow Up வெளியான இதழையும் வைத்துக் கொண்டு கட்டபொம்மன் பார்க்க தியேட்டருக்கு சென்று தியேட்டருக்கு எதிர்வரிசையில் இருந்த மளிகை கடை வாசலில் நண்பனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது கடை உரிமையாளர் என்னிடமிருந்து கேட்டு வாங்கி புத்தகத்தை பார்த்து விட்டு நடுப்பக்க Blow Up- ஐயும் பார்த்துவிட்டு [மதுரைக்கே உரித்தான ஒரு வார்த்தையை சொல்லிவிட்டு] "கணேசனை அடிச்சிக்க ஒரு பயலும் கிடையாது. எந்த டிரஸ் போட்டாலும் எப்படி இருக்காப்பல பாரு" என்று சொன்னது இப்போதும் காதுகளில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நாள் ஞாபகத்தை மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்த தங்கள் பதிவிற்கு நெஞ்சார்ந்த நன்றி!
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 8 Likes
-
1st June 2016, 12:12 AM
#1303
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 3 Thanks, 6 Likes
-
1st June 2016, 08:34 AM
#1304
Senior Member
Devoted Hubber

Originally Posted by
KCSHEKAR
திரு.சிவா சார்,
நடிகர்திலத்தின் இலங்கை சாதனைகளை தொடர்ந்து பதிவிட்டுவரும் தங்களுக்கு நன்றி. தாங்கள், சென்னை சீனிவாசா திரையரங்கில் நடைபெற்ற சிவகாமியின் செல்வன் விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சி. சென்னையில் இருக்கும் தகவல் பற்றி தெரிவித்திருந்தால், நம் நண்பர்கள் பலரையும் சந்தித்து உரையாடியிருக்கலாம்.
நம் திரி நண்பர்களின் கலந்துரையாடல் சந்திப்பு ஒன்றிற்கு திரு.முரளி சீனிவாஸ் அவர்கள் முயற்சி எடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும்.
திரு சந்திரசேகர் சார்
சில தேவை நிமித்தம் குறுகியகால அவகாசத்தில் சென்னை வந்திருந்தேன்
சிவகாமியின் செல்வன் விழாவில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் அமைந்தது
மிக மகிழ்ச்சியாக இருந்தது.
அங்கே திரு முரளி சார் திரு s.வாசுதேவன் சார் திரு khan திரு சொக்கலிங்கம் சார்
மற்றும் டைரக்டர் திருc.v. ராஜேந்திரன் அவர்களையும் சந்திக்கும்
வாய்ப்பு கிடைத்தது
முழுமையா பங்கேற்கமுடியாமல்போய்விட்டது மிகவும் கவலையாக இருக்கிறது.
மீண்டும் சென்னை வரும் காலம் வராமல் போகாது
சந்திப்போம்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
1st June 2016, 08:50 AM
#1305
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Murali Srinivas
நண்பர் சிவா அவர்களே,
சென்னை வந்து சென்றதில் உங்களுக்கு நல்ல ஆவண அறுவடை நடந்திருக்கிறது என புரிகிறது. பராசக்தியின் 38 வது வார விளம்பரம் பிரமாதம். அது போலவே இலங்கையில் எந்த படமும் செய்யாத சாதனைகளை செய்த உத்தமன் மற்றும் அந்தமான் காதலி, ஜெனரல் சக்கரவர்த்தி ஆகிய படங்களின் 100-வது நாள் விளம்பரங்களின் அணிவகுப்பு மிக பிரமாதம்.
ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்வை கொடுத்த புகைப்படம் பட்டிக்காடா பட்டணமாவின் மதுரையில் வெள்ளிவிழா கொண்டாட்ட புகைப்படமே. அந்த நாள் ஞாபகம் என்பது நான் விரும்பி எழுதும் தொடர். இளைய சகோதரன் செந்தில், சந்திரசேகர் சார் மற்றும் பலரும் விரும்பி படிக்கும் தொடர் அது.
என்னிடம் பேப்பர் கட்டிங்களோ, டைரி குறிப்புகளோ இல்லை.அல்லது வேலை செய்யும் அலுவலகத்தில் பழைய செய்தித்தாள்களை பார்க்கவும் குறிப்பெடுக்கவும் வசதியும் கிடையாது. என் நினைவிலிருந்து எழுதும் குறிப்புகளே அவை. ஆகவே எந்த தவறும் நேர்ந்துவிடாமல் எழுத வேண்டுமே என்பதனாலேயே நேரம் எடுத்துக் கொள்கிறேன். அப்படியிருக்கும்போது நான் எழுதியவற்றின் உண்மை நிலையை எடுத்துக்கூறும் வண்ணம் விளம்பரங்களோ, புகைப்படங்களோ அல்லது செய்திகளோ இவற்றை யாரேனும் தரவேற்றும்போது எனக்கு ஏற்படும் மகிழ்வு அளவிடமுடியாதது. வசந்த மாளிகை வெளியான அன்று மதுரையில் பெய்த மழை செய்தியாக வந்திருந்ததை சுவாமி பதிவு செய்தார். 1972 அக்டோபரில் கோவையில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவை வசந்த மாளிகையோடு சேர்த்து காண்பித்ததை விளம்பரத்தின் மூலம் செந்தில்வேல் பதிவு செய்தார். இப்போது மதுரையில் பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழா நிகழ்விற்கு வந்த நடிகர் திலகம் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதை பதிவு செய்திருந்தேன். அந்த நிகழ்வு பத்திரிக்கையில் புகைப்படமாக வந்திருந்ததை இங்கே நீங்கள் தரவேற்றியிருக்கிறீர்கள். நாம் எழுதும் சம்பவங்கள் உண்மையின் அடிப்படையில் சொல்லப்படுபவை என்பதற்கு இதை விட சான்றுகள் தேவையில்லை.
மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
அன்பின் முரளி சார்
சென்னை வந்ததில் பல ஆவணங்கள் கிடைத்தன.
விபரம் விரிவாக பின்னர் எழுதுகிறேன்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
1st June 2016, 09:22 AM
#1306
Senior Member
Devoted Hubber
10 வது ஹவுஸ் புல் வாரம்
பட்டாக்கத்தி பைரவன்
ஜெஸிமா(கிராண்பாஸ்) ஶ்ரீதர் (யாழ்ப்பாணம்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 3 Thanks, 5 Likes
-
1st June 2016, 09:47 AM
#1307
Junior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
1st June 2016, 08:34 PM
#1308
Senior Member
Seasoned Hubber

SSS என நம்மால் அறியப்படும் நமது அன்பும் பாசமும் நிறைந்த நண்பர் சுந்தரபாண்டியன் அவர்களுக்கு நமது நடிகர் திலகம் திரி சார்பில் உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். இறையருளால் வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
sss thanked for this post
sss liked this post
-
1st June 2016, 09:11 PM
#1309
Junior Member
Senior Hubber
இனிய உதய நாள் நல்வாழ்த்துகள்.. சுந்தர பாண்டியன் சார்!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
sss thanked for this post
sss liked this post
-
1st June 2016, 10:32 PM
#1310
என்றும் அன்பிற்குரிய வீயார் சார் மற்றும் ஆதவன் ரவி சார் அவர்களே , மனதார வாழ்த்திய நடிகர் திலகத்தின் உள்ளங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி...என் உயிர் மூச்சி உள்ளவரை நடிகர் திலகமே என் துணை... நீங்கள் அனைவரும் உறுதுணை... மிக்க நன்றி...
சுந்தர பாண்டியன்
Bookmarks