மதுண்ணா! கலர் பாகவதர் நன்றாகத்தான் இருக்கிறார். இப்போ நான் ஒரு 'வசந்தம்' தரேன் என்னுடைய குருதட்சணையாக.
'புது வசந்தமாமே வாழ்விலே
இனி புதிதாய் மணமே பெறுவோமே'
'மெல்லிசை மன்னர்' இசையமைத்த முதல் பாட்டாமே!
மதுண்ணா! கலர் பாகவதர் நன்றாகத்தான் இருக்கிறார். இப்போ நான் ஒரு 'வசந்தம்' தரேன் என்னுடைய குருதட்சணையாக.
'புது வசந்தமாமே வாழ்விலே
இனி புதிதாய் மணமே பெறுவோமே'
'மெல்லிசை மன்னர்' இசையமைத்த முதல் பாட்டாமே!
நடிகர் திலகமே தெய்வம்
//ஆனால் 'அவன்தான் மனித'னில் 'அன்பு நடமாடும் கலைகூடமே'வில் அந்த மழையில் குடையை விரித்து, கால்கள் சரியாகி விட்ட குஷியில் சின்னப் பையன் போல் ஒரு ஓட்டம் ஓடி வருவாரே! என்னா அழகாக ஓடி வருவார்! ஓட்டத்திலும் திலகமே. அதை யாராவது குறை சொன்னால் எனக்கு பொல்லாக் கோபம் வரும்.// வாஸ்ஸூ.. ஸாரி.எனக்கு அப்போ ’மஞ்சு’ மயக்கம்
சரி அந்த மே பாட் இன்னொரு தடவை பார்த்தா போச்சு..
எண்ணிட வாரா எழில்பாடல் தோரணத்தில்
முன்னூறு போதாது போ (ங்கள்)
வாழ்த்துகள் அனைவருக்கும்..
அயணம் என்றால் பயணம் என்று அர்த்தமாம்..நமக்கெல்லாம் ராமாயணம் தெரியுமில்லையா.. ராமாயணம் என்றால் ராமனின் பயணம்.. என அர்த்தம்..
எனில் நாமும் இன்னொரு அயணம் எழுதிப் பார்க்கலாமா..
சிம்ரனயனம். – 2 (ஹை.. சிம்ரனின் நயனம் என்றும் வ்ருகிறதே!)
**************
தேவிகாவைப் பற்றி முன்பு எழுதியிருந்த போது – உண்மையான ரசிகன் நடிகையின் பெர்ஸனல் லைஃப் பற்றிப் பார்க்க மாட்டான்..அவர் திரையில் எப்படித் தோன்றுகிறார் … நடிக்கிறார் என்பது மட்டுமே பார்ப்பான் என எழுதியிருந்தேன்..
அதுவே சிம்ரனுக்கும் பொருந்தும்..அவரது பெர்ஸனல் லைஃப் எல்லாம் இங்குபார்க்க வேண்டாம்..அழகு நடிப்பு அழகான பாடல்..மட்டும் பார்க்கலாம் என்னாங்கறீங்க..
விம்மி வருமெழிலோ விண்மீன் விழிமலரோ
சிம்ரன் இடையோ சிறிதாமோ – தெம்மாங்காய்
பாடலுடன் அங்குதான் பாவை நடிப்பினிலும்
ஆடலிலும் மின்னும் அழகு
என்னது அத்தியாயம் 2 ஆ.. அதான் முன்னால தின்னாதே பாட் கொடுத்தேனே.. எனில் இது இரண்டு..
ஆக்சுவலா அவர் நடிக்க ஆரம்பித்த படங்கள் பற்றி எழுத வேண்டும்..இடையில் வரும் இந்தப் படப் பாடலை எடுத்ததற்கு என்னகாரணம்.. இடை தான்..!
இந்தப்பாட்டு கேட்டதே இல்லை நான்..பட் தேடியதில் கிடைத்ததாக்கும்.. நல்ல மெலடி.. நல்ல காதல் பாடல்.. தவிக்கிறேன் தவிக்கிறேன் பாடல் மட்டுமல்ல இன்னொருபாட்டும் காதல் நீதானா காதல் நீதானா
இரண்டிலும் பிரபு தேவா தான்..
உள்ளத்தில் ஒளிந்துகொண்டு உணர்வினைச் சீண்டி
….ஓடாமல் நின்றென்னைச் சோதனையாய்த் தூண்டி
கள்ளமது செயலாமோ கண்ணாநீ உந்தன்
…காரிகையும் நான் தானே கனவினிலே மேலும்\
அள்ளுகின்றாய் துள்ளியெனை அணைக்கின்றாய் இன்னும்
…ஆர்வமாய்ப் பலவாறாய் மாயங்கள் செய்தே
கொள்ளைகொளும் வண்ணமயக் கோலத்தில் வந்தே
…கோதையெனை வதைக்காமல் ஆட்கொள்ளேன் நேரில்…
அப்படின்னு விருத்தத்தில பாடாம பாட்டாப்பாடறாங்க சிம்மு..
//ஓடி வா ஓடி வா இயங்கவில்லை இதயத்தில் ஒரு பாதி
தேடி வா தேடி வா இரு உயிரும் ஒன்றாகும் ஒரு தேதி
காதலே காதலே மேகத்தால் வானில் வீடு கட்டு
தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே....//
*
உள்ள முரசுகையில் ஏற்பட்ட மாற்றமது
வெள்ளப் பெருக்கெடுத்து வேகமாய் – சொல்லினில்
வண்ணமாய்க் காதலாய் வாகாக வந்ததுவே
பெண்ணெனும் பேரழகால் போம்….
*
//என்ன கனவு கண்டாய்
நீ வந்தாய் முத்தம் தந்தாய்
பதிலுக்கென தந்தாய்
போ போ போ சொல்ல மாட்டேன் போ //
காதல் நீ தானா
உன்னைக் காணத்தான்
கண்கள் கொண்டேனா//
அடுத்த பாட்டில் சிம்ரனின் இடையிருக்கும் நடை இருக்காது ஒரே ஓட்டம் தானாக்கும்.. அது என்னான்னாக்க……
பின்ன வாரேன்…
Last edited by chinnakkannan; 10th June 2016 at 03:43 PM.
சின்னா!
உங்க பதிவுகளைப் பற்றிய ஹோம் ஒர்க் கொஞ்சம் பாக்கி இருக்கிறது. முடிச்சிடலாமா?
தணியாத தாகம் சாங்ஸ் ஏனோ என் நெஞ்சில் அப்போதிலிருந்தே ஒட்டவில்லை. டெல்லியாரை நாயகராக பார்க்கவும் கஷ்டம்.
சிம்ரன் நினைவில் சிதைந்து போய் இருக்குமெங்கள் சின்னா! இப்போதய சிம்ரனின் பக்கெட் ஒன்று போட்டு கனவை கலைக்கவா? 'சிம்'ரன் என்ன மைக்ரோவா இல்லை நானோவா? ஆனா கவிதை கொட்டுதே!
//ஆக்சுவலா அவர் நடிக்க ஆரம்பித்த படங்கள் பற்றி எழுத வேண்டும்..இடையில் வரும் இந்தப் படப் பாடலை எடுத்ததற்கு என்னகாரணம்.. இடை தான்..!//
வழிமொழிகிறேன்.
'டைம்' பார்த்து 'தவிக்கிறேன்' சாங் தந்ததற்கு ஒரு ஓஹோ உங்களுக்கு. ராஜாவின் நல்ல பாடல் இது. அப்போது சூப்பர் ஆனால் ராஜா ஒதுக்கப்படும் சமயம். மினுமினு நீல உடையை பிரபுதேவா அணிந்து இப்போது பார்க்கையில் ச்சிப்பு வருது.
மயக்கத்தைத் தரும் 'மயக்கத்தை தந்தவன் யாரடி?' பாடலை குறுகிய இடைவெளியில் கொடுத்தாலும் அனுபவித்து வழக்கம் போல ரசிக்க முடிகிறது. நிச்சயம் ஆதிராம் சாரும் ரசித்திருப்பார். தேங்க்ஸ் சின்னா!
ராட்சஸியின் 'ஆடுவது உடலுக்கு விளையாட்டு' பாடலை ஒரே பாடல் வரி விளக்கத்தில் தந்த உம்மை....உம்மை.... சின்னா இதே பாணியில் ஜோதிலஷ்மி 'தேடிவந்த மாப்பிள்ளை'யில் ஈஸ்வரியின் குரலில் ஒரு பாடல் பாடுவார். அதுவும் தூள். என்ன சொல்லுங்கள் பார்க்கலாம்? ரெண்டும் ஒரே மாதிரி இருப்பதால் கொஞ்சம் குழப்பும்.
300 பக்க வாழ்த்துக்கும், ஜாலியான கவிதை நடை பதிவுகளுக்கும், ஜம் பாடல்களுக்கும் 'சபாஷ்' கண்ணா.
நடிகர் திலகமே தெய்வம்
//அடுத்த பாட்டில் சிம்ரனின் இடையிருக்கும் நடை இருக்காது ஒரே ஓட்டம் தானாக்கும்.. அது என்னான்னாக்க……//
நடிகர் திலகமே தெய்வம்
//சிம்ரன் நினைவில் சிதைந்து போய் இருக்குமெங்கள் சின்னா! இப்போதய சிம்ரனின் பக்கெட் ஒன்று போட்டு கனவை கலைக்கவா? 'சிம்'ரன் என்ன மைக்ரோவா இல்லை நானோவா? ஆனா கவிதை கொட்டுதே! // தாங்க்யூ வாசு.. பக்கெட்டா கனவே கலையாதே வா..
ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாட்டு ரொம்ப நாள் முன்னால் கேட்டிருந்தது.. அதை ஃகோட் பண்ணிய போது பார்க்கவில்லை..எனில் கொஞ்சமாய் விட்டு விட்டேன்..
ஆமாம் டெல்லி கணேஷ் பார்க்க முடியாது தான்.. ஆனால் இந்த பூவே நீ யார் சொல்லி அந்தப் பாட்டுக்கு ஒரு ரீமிக்ஸ் போட்டிருந்தார்கள்பாருங்கள் அது பானுசந்தர் அர்ச்சனா..எப்படி இருக்கும் நீங்களே சொல்லுங்கள்
அப்புறம் இன்னும் நான் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னவர்களுக்கு நன்றி சொல்லவில்லை.. முதலாய் எஸ்வி சார், சிவாஜி செந்தில், ராகவேந்தர் சார் மதுண்ணா அப்புறம் விலாவாரியாக (அவ்ளோ நல்லாவா எழுதறேன்) என்னை புகழ்ந்து மயக்கத்தில் ஆழ்த்திய நீங்கள்..எல்லாருக்கும் ஒரு நன்றி..
அப்புறம் பதிவுகளைப் படித்துப் பாராட்டி எண்ணங்களைச் சொன்ன உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.. நைட் ஒரு ஸ்பெஷல் பாட் கிடைக்குதான்னு பார்க்கறேன்..
எல்லார் ஈஸ்வரியின் பாடல் நைட் வந்து செக் பண்ணிப் போடறேன்.
ஆமாம் இந்த ஓடற பாட் இப்படியா போட் உடைக்கறது..அது என்னா இடம்.. கல்கத்தாவாக்கும்...
For a change here is Bolero conducted by Zubin Mehta
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
Bookmarks