Results 1 to 10 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உலகம் சுற்றும் வாலிபன்:-..........தொடர்கிறது. பச்சைக்கிளி பாடலைப்பற்றி சொல்ல மறந்துவிட்டேன்.டிங் டிங் டிடிங் டிங் டிங் டிடிங் டிங் டிங் டிடிங் டிங் டிங்...பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ? பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ? என்ன ஒரு வரி.டிங் டிங் டான்டக்கு டான்டக்கு டான்டக்கு டான்டக்கு டான்டக்கு டான்டக்கு பின்னணியில் ஒரு மேளம் கொட்டியிருப்பார் மெல்லிசை மன்னர். குட் மியூசிக் கம்போசிங்.அற்புதம். எனக்கு மிகவும் நன்றாக நினைவிருக்கிறது.HMV மியூசிக் கம்பெனி LB ரெகார்ட் அந்த நாளில் வெளியிட்டது.பொன்பட்டாடை மூடிசெல்லும் தென்சிட்டோடு மெல்ல என்று முடியும்.மறுபடியும் அந்த ரெகார்டை திருப்பி போடவேண்டும்.ஆர்வம் அதிகமாகும்.தாய்லாந்து நடிகை மேட்டாருங் ரீட்டா மிக அழகாக வாயசைத்திருப்பார் பாருங்கள்.மிகப் பொருத்தமாக close உப-இல் காண்பிப்பார்கள்.Athilum தலைவர் ராஜாவுடையில் பறந்து சென்று பாடுவதுபோல் படமாக்கியிருப்பார்.அதோடு நெஞ்சை அசைத்து அசைத்து ஒரு movement கொடுப்பார் பாருங்கள். சூப்பர்.மேட்டா தேடிவரும் ஹோட்டல் தூசிதியாணியின் பிரம்மாண்டம் நம்மை மிகவும் மிரட்டும்.தன்னை மேட்டா விரும்புகிறார் என்று தெரிந்ததும் MGR அழகாக எடுத்துசொல்லி அவருக்கு புரியவைக்கும் காட்சி அற்புதம்.அப்போது சந்திரகலா முகபாவனை அற்புதம்.தலைவரை மேட்டா நீ என்று அழைக்கும் வெகுளித்தனம் அருமை.இந்த பாடலின் போது தலைவர்-மேட்டா இருவரின் நடன அசைவு மிகவும் அருமை. தத்தை போல தாவும் பாவை பாதம் நோகும் என்று மெத்தை போல பூவை தூவும் வாடை கற்றும் உண்டு. கவிஞரின் வர்ணனையை பாருங்கள்.சரி இப்பாடலை theatre இல் எத்தனை முறை oncemore கேட்டார்கள் என்பது யாருக்குமே தெரியாது.
    அடுத்து சண்டைக்காட்சி. முதல் fight மனோஹருடன் ஹோட்டல் அறையில்.கத்தியுடன் மனோகர் வந்தவுடனே லதா கேட்பார் ஜானி என்னவிசயம் என்று. அப்போதே நமக்கு தெரிந்துவிடும் fight ஆரம்பம் என்று. பின்னணி இசை பிரம்மாதம்.டான்டண்ட டான்டண்ட டான்டண்ட டான்டண்ட டான்டண்ட டான்டண்ட என்று ஒரு பின்னணியில் stunt .அதுவும் புதுமையான ஜூடோ stunt . இரு கட்டைவிரலையும் நிமிர்த்தி ஒரு அசைவு காண்பிப்பார் பாருங்கள். ஒரு கட்டத்தில் மனோஹரின் கட்டைவிரல் நகம் தலைவரின் கன்னத்தில் கிழித்து சதை பெயர்ந்தது தெரியும்.கோபமான தலைவர் மனோஹரின் இருகட்டைவிரல்களையும் தன் இரு கட்டைவிரல்களால் பிழிந்து விடுவார் பாருங்கள். பார்த்துகொண்டிருக்கும் எனக்கு மயக்கமே வந்துவிட்டது.ஏனெனில் நான் சின்ன பையன்.இப்போதில்லை..அதுவும் 1971இல்.தலைவர் விடும் ஒவ்வொரு பஞ்சுக்கும் மனோகர் முகம் வீங்குவதை V .ராமமூர்த்தியின் கேமரா கோணம் மிக தெளிவாக காட்டும்.
    2. அடுத்த stunt ஜஸ்டிநுடன். சந்திரகலா பரத நாட்டியம் பல அரங்குகளில் மிக தெளிவாக படம் பிடிக்கப்பட்டிருக்கும்.தாம் ததி கின தக தாம் ததி கின தக தாம் ததி கின தக என்ற ஜதியோடு டிங்டிடிடிங்டிங் டிங்டிடிடிங்டிங் டிங்டிடிடிங்டிங் என்ற பின்னணி இசைவேறு.தலைவரும் நாகேஷும் அதனை தொலைநோக்கு காமெராவில் பார்ப்பது அழகு.தலைவர் இதைப்பார்க்கும் படி நாகேஷிடம் காமெராவை கொடுத்தவுடன் அதனை அவர் அசட்டு சிரிப்புடன் பையில் போடும் காமெடி சூப்பர்.பின்பு justine சந்திரகலாவை விரட்ட stunt ஆரம்பம். இருவரும் இரண்டு கைகளையும் முன்னும் பின்னும் கட்டியபடி அரைகுறை ஆடையுடன் நிற்கும் ஆரனங்குகளுக்கு நடுவில் சண்டை செய்யும் அழகே தனி.இதில் தான் ஜஸ்டினுக்கு வசனம் வேறு.எல்லாப்படத்திலும் ஓகே பாஸ்.எஸ் பாஸ் என்பதுடன் முடிந்துவிடும்.ஆனால் இதில் இவளுக்காக பெரிய ஆளு மாதிரி என்னைப்போட்டு அடித்தாயே அய்யா என்பார். stunt சீன் சூப்பர்.
    2. மூன்றாவது stunt நம்பியாருடன்.Highlight stunt சீன்.ஜப்பான் புத்தர் கோவில் போன்று சத்யா ஸ்டுடியோவில் செட் போட்டு எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி.இடையில் டயலாக் வேறு."எதற்கும் ஆசைப்படாத நீங்களா இப்படி?" என்பார் MGR .நான் புத்த பிட்சுவே அல்ல என்பார் நம்பியார்.அது புத்தமகனின் புனித இடம். நீ கொடுத்தே நான் வாங்கினேன். இப்போது எனக்கு ப்ளீஸ் ஒரு சான்ஸ் கொடேன்." என்பார் MGR சிரித்தபடி.நம்பியாரின் காலின் இடையில் படுத்து முதுகில் MGR கால்களால் மோதுவார் நம்பியார் நிலை தடுமாறி விழுவார். சண்டையை விவரிக்க வார்த்தயே இல்லை.சண்டை முடிந்தவுடன் நம்பியாரை தோல் மேல் தூக்கிசெல்லும் மனிதாபிமான காட்சி.
    4.அடுத்த சண்டை அசோகனுடன்.மஞ்சுளாவை கெடுக்க முயல்வார். தலைவர் தான் விஞ்ஞானி ஆயிற்றே.. கதவுக்கூண்டை உடைத்து அசோகனை ஒரு வழி பண்ணிவிடுவார்.அதிலும் அவரை அடிக்கவேண்டும் என்ற ஆவலினால் அடிக்க முயல்வதால் சண்டை போல் தெரியாது. அடிபட்டு விழுந்தவுடன் கொஇங்க் கொஇங்க் கொஇங்க் கொஇங்க் கொஇங்க் கொஇங்க் கொஇங்க் என்ற tune MSV MSV தான் அய்யா.Athuvum அசோகன் அடிபட்டு விழுந்தவுடன் ஓடி வந்து வாட் happened என்பார் S .கோபாலகிருஷ்ணன் (DR ).கைக்குட்டையை எடுத்து அசோகன் வாயில் வரும் ரத்தத்தை துடைத்தவுடன் Thankyou டாக்டர்.என்பார் அசோகன் அப்பாவியாக.
    5. கடைசி சண்டை Scatting சண்டை.முதலில் மைக்கில் ஒரு பெண் அறிவிப்பு செய்வார்.லேடீஸ் அண்ட் gentleman என்றவுடன் drums அதிர ஆரம்பிக்கும்.வெறும் கையுடன் மோதுபவர்கள் இப்போது கத்தியுடன் மோதுவார்கள் என்பர். அப்போது கருமையான புள்ளிகள் உள்ள வலை வைத்த முகமூடி அணிந்த தம்பி ராஜு MGRin முக உணர்வை பார்பதற்கு கண் கோடி வேண்டும்.இடையில் ட்றிங் ட்றிங் ட்றிங் ட்றிங் ட்றிங் என்று அண்ணன் முருகன் MGR சுழல் நாற்காலியில் சுழல வைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்படும் காட்சி அருமை.எல்லா வீரர்களுக்கும் தலைவர் தண்ணி காட்டுவார். ஆங்கிலப்படங்களுக்கு நிகரான காட்சி. இதில் பல முகங்களை MGR பிரதிபலிப்பார்.1.நடிகர் MGR - கள்.2.Stunt மாஸ்டர் MGR .3.Cameraman MGR .டைரக்டர் MGR .ஸ்டுண்ட் முடிந்தவுடன் அண்ணன் முருகன் MGRyai விடுவித்தவுடன் முகமூடியை கழட்டியவுடன் வியர்வையோடு புன்முருவலான முகத்தை தலைவர் காண்பிப்பார் பாருங்கள்.ஆஹா ஓஹோ. கடைசியில் தலைவர்1-மஞ்சுளா, தலைவர்2-சந்திரகலாவை விமானத்தில் வழி அனுப்பிவைப்பதுடன் எமது அடுத்த வெளியீடு கிழக்கு ஆப்ரிக்கா வில் ராஜு என்ற வாசகத்தோடு சுபம். அப்பா ஒருவழியாக உலகம்சுற்றும் வாலிபனை முடித்துவிட்டேன்.எவை எல்லாமே நான் 12 வயது சிறுவனாக இருந்தபோது பார்த்ததை கற்பனையில் கொண்டுவந்து எழுதியது.தவறு இருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே.நாளை இதயக்கனி.

    courtesy thalaivar fan sundar rajan sir in fb

  2. Thanks orodizli thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •