Results 1 to 10 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இதயக்கனியை இன்று ஏகாந்திக்கிறேன்:- உலகம் சுற்றும் வாலிபனில் சொல்ல மறந்த ஒன்று. படத்தில் இடம் பெறாத பாடல் ஒன்று உண்டு. அது உலகம் சுற்றும் வாலிபனோடு பயணம் வந்தவளே உறவுப்பாடலைப்பாடவும் ஆடவும் உரிமை கொண்டவளே! ஆஹா ஆஹா என்பதாகும்.படத்தின் நீளம் கருதியோ அல்லது அதை விட சிறப்பான வேறு பாடலுக்காகவோ இந்த பாடலை வெட்டியிருக்கலாம். ஆனாலும் இதுவும் வெற்றி பெற்ற பாடலே! ஒரு வரி:- நாடுகள் தோறும் நான் செல்லும் நேரம் என் முன்னே உன் கண்ணே என்பின்னே வந்தது.மந்திரம் தானோ மாயம் எதேனோ உன்கண்ணே என் நெஞ்சை வென்றது! ஓமை டார்லிங்! ஓமை டார்லிங்! ஓமை ஸ்வீட்டி! ஓமை ஸ்வீட்டி! இலங்கை வானொலியில் அதிகம் இடம் பெற்ற பாடல்! 'உலகம் உலகம் பாட்டுக்காக இதனை நீக்கியிருக்கலாம்! அப்பா நிம்மதி இதயக்கனிக்கு போகலாமா? பட டைடிலில் MSV ஆட்சி செய்திருப்பார்.கிடாரிலேயே கித்தாய்ப்பு செய்வார். டிங்டிங்டிங் டிங்டிங்டிங் டிங்டிங்டிங் டிங்டிங் டிங்டிங் டிடிடிங் டிடிடிங் டிங் டிடிடிங் டிடிடிங் அய்யோ என்ன மனிதனய்யா இவர். ஏ.ஜெகந்நாதனுக்கு வெற்றிப்பரிசை கொடுத்த படம்.நமது விஜயன் சாருக்கு நல்ல பத்திரிகை டைடிலை கொடுத்த படம். பின்னாளில் "தங்கமகன், காதல்பரிசு, நெருப்புக்குள் ஈரம் போன்றவற்றை சத்யாமுவீஸில் ஜெகந்நாதன் இயக்கியிருந்தார்.இதோ டைடில் முடிந்து தலைவர் வரப்போகிறார். அந்நாளில் பாடலுக்கு முன்பு தொகையரா என்ற ஒன்று இடம் பெறும்.அது பாடலுக்கு மிகவும் அழகு கொடுக்கும். இப்போது பாடலே இல்லை.தொகையராக்கு எங்கே போவது? எனக்கு தெரிந்து தமிழ் படத்தின் மிக நீளமான அழகான தொகையரா இடம் பெற்றது இதயக்கனியில்தான்."தென்னகமாம் இன்பத்திருநாட்டில் மேவுவதோ கன்னடத்து குடகுமலை கனிவயிற்றில் கருவாகி தலைகாவிரி என்னும் பெயரில் தாதியிடம் உருவாகி --------------பொறுமையில்லை "பிள்ளை என நாளும் பேச வந்த கண்மனியே! வள்ளலே எங்கள் வாழ்வின் இதயக்கனி இதயக்கனி இதயக்கனி! போங்க சார் எங்க தலைவர் வந்து விட்டார்! Fanta colour டிரஷ்ஷில் தலைவர் நம் ரசிக ரத்தங்களை கையெடுத்து கும்பிடுவார். வேறு யாருக்கு சார் ஓட்டு விழும்? நாடித்துடிப்பு சார்! அதோடு தலைவருடைய சத்யா தோட்டத்தை தரிசிக்கலாம்! டிட்டுடு டிட்டுடு டிட்டுடு உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்! உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்.., மேடுபள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணி பாருங்கள் அண்ணா சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள்! இது போன்ற பாடலை நமக்கு யார் தரப்போகிறார்கள்? எனக்கு அழுகை வருகிறது. மீதி நாளை தான்!


    courtesy thalaivar fan sundarrajan in fb

  2. Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •