Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கால யந்திரத்தில் பின்னோக்கி பயணித்து சைக்கிடெலிக் ட்ரான்ஸ் அனுபவம் பெற்றதுண்டா? கிட்டத்தட்ட ஜார்தா கொஞ்சம் மிகையாக எடுத்தால் அந்த அனுபவம் கிட்டலாம். சிவகாமியின் செல்வன் நூறாவது நாள் விழா நடந்த ரஷியன் கலாசார மண்டபத்தில் எனக்கு பிடித்த பருவ வயதிற்கு சென்று ,கை தட்டி விசிலடித்து கூத்தடித்து என்னை மறந்த வேளை ,இன்றும்,என்றும் இனிப்பது.

    வாணிஸ்ரீ,Y .G .மஹேந்திரா,ராம்குமார்,சீ.வீ.ராஜேந்திரன்,லதா,எம்.எஸ ்.வீ புதல்வி,சிதம்பரத்தின் (கமலா)புதல்வர்,கனகசபை பேரன்,சேரன்,வீரரின் அன்னை,என்று சபை நிறைந்தது.

    நம் Y .Gஆரம்பத்தையே களை கட்ட வைத்தார். சிவாஜி ஒருவர் மட்டுமே சாதனையாளர்,அவர் படங்களே பாடம் என்று துவங்கினார்.

    லதா கொஞ்சம் சொதப்பல்,ஆனாலும் ,சிவாஜியுடன் தன் நல் அனுபவத்தை பரவசத்துடன் நினைவு கூர்ந்தார்.

    வாணிஸ்ரீயின் சரளமான extempore பேச்சுதான் அன்றைய highlight . தான் ,குடும்பத்தின் பொருட்டு சினிமாவை,வெளிச்சத்தை தவிர்த்து வாழ்ந்ததை குறிப்பிட்டு ,குடும்ப தலைவியாய் வாழ்ந்த அனுபவத்தை மிக அழகான முரண்களோடு விளக்கினார். நடிகர்திலகத்தின் ரசிகையாக தொடங்கி அவருடன் நடிக்கும் போது ஒரே குடும்பமாக பழகி களித்ததை நினைவு கூர்ந்து,அவர் தன்னை ட்ரெஸ்ஸிங் சென்ஸ் க்கு புகழ்ந்து தள்ளியதை இனிப்புடன் குறிப்பிட்டார். ஒரு நடிகர்திலகம்தான் உலகிற்கு,இனி பிறக்கவே முடியாது என உறுதி பட உரைத்தார்.

    சீ.வீ. ராஜேந்திரன், இந்த படத்தை எடுக்கும் யோசனையுடன் சென்று ,நடிகர்திலகம் தனக்கு ஊக்கம் கொடுத்ததை கூறினார். நடிகர்திலகம் தான் பாத்திரத்துக்காக தானே உடை,சிகை ,நடிப்பு முறை எல்லாவற்றையும் முடிவெடுத்து செயல் படுத்தும் லாவகத்தை குறிப்பிட்டார். எம்.எஸ்.வீ ,இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பு கொண்ட தைரியத்தை புகழ்ந்தார்.

    சேரன் , தான் வெறி கொண்ட நடிகர்திலகத்தின் ரசிகனாக தன் அனுபவங்களை சொல்லி, அவரின் நாயகியர்களை தானும் காதலித்ததை வேடிக்கையாக குறித்தார். நடிகர்திலகத்தின் கொள்கையும் அரசியலும் தூய்மையும் மக்களால் புரிந்து கொள்ள பட்டிருந்தால் ,தமிழகமே இன்று நிமிர்ந்திருக்கும் என்பதை குறிப்பிட்டார்.

    சிதம்பர புதல்வர் ,தான் நடிகர்திலகத்தின் ரசிகனாக இருந்த அனுபவத்தை சுவை பட கூறினார்.

    விருந்தினர்,சிறப்பு விருந்தினர்,பங்களிப்பாளர் (படத்திற்கு)எல்லோருக்கும் பாராட்டு தட்டு,சால்வைகள் என்று சம்பிரதாயங்கள். நண்பர்களுக்குள் அரட்டை குதூகலம் ,படத்தை கண்டு களித்தல் என்று அபூர்வ மாலை பொழுது முடிந்தது.

    ராம்குமாரின் பேச்சு வழக்கம் போல cliched .குறிப்பிட ஒன்றுமில்லை.

    இரண்டு விஷயங்கள்.

    நீங்கள் ஒரு வீட்டிற்கு அழைக்க படுகிறீர்கள் என்று வைப்போம். வர ஒப்பு கொண்டு விட்டு, அந்த வீட்டிற்கு சென்றால் ,அந்த வீட்டு மனிதர்களுக்கும் ,உங்களுக்கும் பொதுவாக உகந்த விஷயத்தைத்தானே பேச வேண்டும்? ஒருவர் வெறுத்து ஒதுக்கும் விஷயத்தையா பேசுவது?இந்த சபை நாகரிகம் கூட தெரியாதவர்கள் பொது வாழ்வுக்கோ .சபைக்கோ வர அருகதையற்றவர்கள். அதை சிலரிடம் எதிர்பார்க்க முடியாது.

    எனது கனவு கன்னியை ஆர்திரிடிஸ் கால்களுடன் ,நடக்க முடியாமல் நடந்து வந்ததை காணும் போது ,மனது வலிக்கவே செய்தது.

    முரளி ,ராகவேந்தர் இருவருக்கும் எங்கள் நன்றிகள்,வாழ்த்துக்கள்.
    Last edited by Gopal.s; 14th July 2016 at 10:15 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •