-
16th July 2016, 05:42 PM
#3151
Junior Member
Veteran Hubber
Guest entries / Gap fillers from GG thread!
நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!
அமரர் ஜெமினியின் இயல்புக்க்கேற்ற காதல் குடும்ப சூழல் கதைப்போக்கில் நீறு பூத்த நெருப்பாக தனது உணர்வுகளை அடக்கிக் கொண்டு பண்பு கெடாது எதிராளியை அணுகும் காட்சிகள் எண்ணிலடங்கா !
பகுதி 3 ராமு
கொள்ளையர்களால் மனைவியை இழந்து மகனும் பேச்சிழந்து நிற்கையில் முகமறியாக் கொள்ளையனைப் பொசுக்க வேண்டும் என்னுமளவு வெஞ்சினம் மேலோங்கி குரோதம் நிறைந்த விழிகளுடன் நீறு பூத்த நெருப்பராக மன்னர் பிழம்படித்த காவியம் ராமு !
மகோன்னத நடிப்பின் சிகரம் தொடும் மன்னர் நமக்களித்த மறக்க முடியாத திரைச் சுவடி இக்காட்சியே !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th July 2016 05:42 PM
# ADS
Circuit advertisement
-
16th July 2016, 09:19 PM
#3152
Junior Member
Veteran Hubber
நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!
அமரர் ஜெமினியின் இயல்புற்ற காதல் குடும்ப சூழல் கதைப்போக்கில் நீறு பூத்த நெருப்பாக தனது உணர்வுகளை அடக்கிக் கொண்டு பண்பு கெடாது எதிராளியை அணுகும் காட்சிகள் எண்ணிலடங்கா !
பகுதி 4 : சாந்தி நிலையம்
என்ன இருந்தாலும் தனது புத்தி சுவாதீனமற்ற மனைவியின் மேலிருந்த ஆழ்மன அன்பால் மனைவியின் அண்ணன் பாலாஜியின் பிளாக் மெயிலை ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத மன்னர் நீறு பூத்த நெருப்பாக உள்மனதில் புகைந்து கொண்டிருந்த கோபக்குமுறலை நெருப்புப் பிழம்பாக சீறியடித்து பாலாஜியை ஒரு வழி பண்ணுகிறார் ....!
-
16th July 2016, 09:45 PM
#3153
Junior Member
Veteran Hubber
நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!
அமரர் ஜெமினியின் இயல்புக்க்கேற்ற காதல் குடும்ப சூழல் கதைப்போக்கில் நீறு பூத்த நெருப்பாக தனது உணர்வுகளை அடக்கிக் கொண்டு பண்பு கெடாது எதிராளியை அணுகும் காட்சிகள் எண்ணிலடங்கா !
பகுதி 5
பூவா தலையா ?!
இத்தனை காலமாக ரகசியங்களை மறைத்து தன்னை ஒரு கோழை மாப்பிள்ளையாகவே நடத்தி வந்திருக்கிறார் என்பது ஜெய் மூலம் அம்பலமானதும் நீறு பூத்த நெருப்பாக மவுனம் காத்த மன்னர் பொங்கியெழுந்து சுழற்றுகிறார் சவுக்கை ! அடி சக்கை....!
ஆனால் ஒரு பெண்மணியிடமா மன்னரே தங்கள் வீரத்தைக் காட்டுவது .....கொஞ்சம் சறுக்கலே!
-
16th July 2016, 10:32 PM
#3154
Junior Member
Veteran Hubber
நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!
பகுதி 6
உன்னால் முடியும் தம்பி / ருத்ரவீணா
முதிர்ந்த வயதிலும் மன்னரின் நடிப்புத்திறன் புடம்போட்ட பொன்னாகவே ஒளிர்ந்தது !
பழமைவாதியாக தனயன் கமலஹாசனின் /சிரஞ்சீவியின் புதுமைப் போக்கும் தார்மீக சிந்தனைகளும் பிடிக்காமல் பிள்ளையையே வெறுத்து ஒதுக்கும் நீறுபூத்த நெருப்பான உணர்வுகளை வெகு இயல்பாக யதார்த்தமாக மனதில் ஆணியடிக்கும் வண்ணம் மீண்டும் நிரூபித்து பாராட்டுக்களை அள்ளினார் மன்னர் !
To my eyes, Rajanikanth's Kabali make up closely resembles that of GG's make up in this movie....of course Rajini is in coat-suit!!
Last edited by sivajisenthil; 16th July 2016 at 10:39 PM.
-
16th July 2016, 10:52 PM
#3155
Senior Member
Diamond Hubber
மதுண்ணா!
தங்களின் மணநாள் பரிசாக ஏதாவது தர வேண்டும் என்று தோன்றியது. சரி! என்ன தரலாம்? மண்டை காய்ந்து இறுதியில் என்னுடைய குரலில் ஒரு அருமையான ஹிந்திப் படப் பாடலை பாடி அதை பரிசாகத் தரலாமே என்ற விபரீத ஆசை தோன்றியது. இரண்டு நாள் மெனக்கெட்டு பிராக்டிஸ் செய்து ஒருவழியாக பாடி முடித்து மீடியா ஃபயரில் அப்லோட் செய்தேன். என்னடா இது நல்ல பரிசாகத் தருவான் என்று நினைத்தால் இப்படி சோதனைக்குள்ளாக்கி விட்டானே என்று நீங்கள் வருத்தமும் படலாம். நீங்கள் செய்த புண்ணியம் அவ்ளோவ்தான். முதலிலேயே மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.
ராகவேந்திரன் சார், ராஜ்ராஜ் சார் இருவரும் கண்டிப்பாக மன்னித்து விட வேண்டும்.
'ஜி'யும் என்னை மன்னிக்க.
மதுண்ணா! நல்லதோ கெட்டதோ சந்தோஷமாக இந்தப் பரிசை தருகிறேன். மனமுவந்து ஏற்றுக் கொள்ளவும்.
இதோ 'ஜுவல் தீஃப்' படத்திலிருந்து கிஷோர் அமர்க்களப்படுத்திய சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான 'yeh dil na hota bechara' இப்போது என்னுடைய குரலில் உங்கள் அனைவரையும் பாடாய்ப் படுத்தப் போகிறது. உங்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அடிக்கணும்னு நினைப்பவர்கள் இப்போதே கியூவில் நிற்கலாம்.
டவுன்லோட் செய்து கேட்க.
http://www.mediafire.com/download/hr...vasudevan.3gpp
Last edited by vasudevan31355; 16th July 2016 at 11:03 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
17th July 2016, 06:49 AM
#3156
Senior Member
Seasoned Hubber
அந்த கோப்பினிலே ஒரு ரகசியம்
அதை நீயும் கேட்பது அவசியம்
அதன் குரலுக்குள்ளே ஒரு வசியம்
அதைக் கேட்பது தான் சுகமே....
ஒரு புதிய பாடகர் உதயமாகினார்
மதுர கானங்களின் திரியிலே
...
வாசு சார் கலக்கல்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
17th July 2016, 07:19 AM
#3157
Senior Member
Diamond Hubber
வாசு ஜி...
ஆஹா... ஓஹோ... யோட்லிங் எல்லாம் செஞ்சு கலக்கிட்டு இப்படி எல்லாம் நைசா போஸ்ட் போட்டா நாங்க நம்பிடுவோமாக்கும்...
நிஜமாகவே உங்க குரல் ரொம்ப கிளியரா இருக்கு... சாதாரணமாக என்னை மாதிரி ஆசாமிங்க பாடினா தகரத்தில் ஆணியால் கீறின மாதிரி ஒரு சத்தம் வரும். இங்கே பிருகா எல்லாம் அனாயாசமாக வருது... கண்டிப்பா அடுத்த தடவை சந்திக்கிறபோது நீங்க எக்கசக்கமா பாட வேண்டி இருக்கும்.. விக்ஸ் டிராப்ஸ், ஸ்ட்ரெப்சில்ஸ், மிளகு ரசம், புளிப்பு மிட்டாய் எதுவேணாலும் கொண்டு வரேன்.. தொண்டை சரியில்லைன்னு எல்லாம் கதை விட்டு தப்பிக்க முடியாது..
எது வந்த போதும்.... இந்த அன்பு போதும்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
17th July 2016, 12:00 PM
#3158
Senior Member
Diamond Hubber
Originally Posted by
madhu
வாசு ஜி...
விக்ஸ் டிராப்ஸ், ஸ்ட்ரெப்சில்ஸ், மிளகு ரசம், புளிப்பு மிட்டாய் எதுவேணாலும் கொண்டு வரேன்.. தொண்டை சரியில்லைன்னு எல்லாம் கதை விட்டு தப்பிக்க முடியாது..
உங்களை பார்த்துட்டாலே அல்லாம் போச்சு. ஹோகயா. (மகிழ்ச்சி,பய,மரியாதை) கண்டிப்பா அத்தனையையும் கொண்டு வாங்க. குறிப்பா மிளகு ரசம். பாட்டை சகிச்சுகிட்ட உங்களுக்கும், ரசிக வேந்தருக்கும் நன்றி.
Last edited by vasudevan31355; 17th July 2016 at 12:07 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th July 2016, 03:36 PM
#3159
Senior Member
Seasoned Hubber
//முதிர்ந்த வயதிலும் மன்னரின் நடிப்புத்திறன் புடம்போட்ட பொன்னாகவே ஒளிர்ந்தது !
பழமைவாதியாக தனயன் கமலஹாசனின் /சிரஞ்சீவியின் புதுமைப் போக்கும் தார்மீக சிந்தனைகளும் பிடிக்காமல் பிள்ளையையே வெறுத்து ஒதுக்கும் நீறுபூத்த நெருப்பான உணர்வுகளை வெகு இயல்பாக யதார்த்தமாக மனதில் ஆணியடிக்கும் வண்ணம் மீண்டும் நிரூபித்து பாராட்டுக்களை அள்ளினார் மன்னர் !//
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
17th July 2016, 08:12 PM
#3160
Junior Member
Veteran Hubber
நீறு பூத்த நெருப்பு(டா!) ஜெமினி கணேசன் !!
பகுதி 8 சரசுவதி சபதம்!
விதி வசத்தால் பெண்தெய்வத்தின் அருள்பார்வை கடாட்சத்தில் கடைந்தெடுத்த கிராமப்புற கோழை மாவீரனாக உருமாற்றம் பெற்று அதேபோல யானை மாலை போட்டதால் ராணியாகி விட்ட கோவை சரளா டைப் (ஷாஜஹான்) பிச்சைக்காரியிடம் தளபதியாகப் பதவி பெறுகிறார்!!
கட்டழகனான தன்னை விட்டுவிட்டு தங்களைப்போலவே விதியின் சதியால் திடீரென்று பேச்சுவரப் பெற்று வசனமழை பாடல் சாரல் ஜெயிலிலும் ஆடல்பாடல் என்று தூள்கிளப்பும் கதியற்ற கவிஞனை தன்னைப் பாராட்டி பாடியே தீர வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருப்பதைத் தவிர நாட்டு மக்களுக்கான நன்மை பற்றி நினைக்காத ராணியிடமும் வாயாடிக் கவிஞனிடமும் தீராத கோபத்தை
நீறுபூத்த நெருப்பாக பென்ஹர் சார்ல்டன் ஹெஸ்டன் கெட்டப்பில் வாயில் பெட்ரோல் ஊற்றி தீயேயாக உமிழும் வித்தைக்காரன் போல் இடிச்சிரிப்பு வீரப்பா உள்ளங்கை பிசையும் நம்பியாராக மாறி கிலியூட்டுகிறார் மன்னர்!!
நடிகர்திலகம் கிடத்தப்பட்டிருக்கும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட சூழலில் ஜெமினி ஏவிய யானை காலைத் தூக்கும்போது நடிகர்திலகம் மற்றும் மன்னரின் எக்ஸ்பிரஷன்கள் எனக்கு கோல்டுபிங்கர் ஜேம்ஸ் பாண்ட் வில்லனின் லேசர் பீம் கொஞ்சம் கொஞ்சமாக தாக்க முன்னேறும்போது ஷான் கானரி காட்டும் ஜேம்ஸ் பாண்ட் முகபாவனைகளையே நினைவுபடுத்தி வதைக்கிறதே !!
NT taking over Sean Connery/James Bond OO7 position, GG taking over the Bond villain Gert Forbe's position and the Elephant's pillar leg simulates the Laser Beam......HAAAAA HAAAHAAAAA!
Last edited by sivajisenthil; 17th July 2016 at 08:47 PM.
Bookmarks