-
19th July 2016, 09:03 PM
#11
Senior Member
Diamond Hubber
Originally Posted by
RAGHAVENDRA
வாசு சார்
திருடன் நம் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளையடித்தவன். ஸ்டைல் என்ற வார்த்தைக்கு இன்னுமோர் பரிமாணத்தைக் கொடுத்தவர் தலைவர் இப்படத்தில். செய்யும் தொழில் சமூக விரோதமாக இருந்தாலும் அதனை கட்டாயத்தின் அடிப்படையில் மேற்கொள்பவனின் உள்மனதில் எத்தகைய போராட்டங்களெல்லாம் வெடிக்கும் என்பதை உன்னதமாக சித்தரித்தார் தலைவர். இந்தத் தொழிலே வேண்டாம் என்று ஒதுங்கி செல்பவரை சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அதற்குள்ளேயே நுழைக்கும் கட்டங்களில் மனம் எப்படியெல்லாம் துடிக்கும் என்பதை காட்சி யாக அற்புதமாக வடித்தவர் தலைவர். என்னைப் பொறுத்தவரையில் இப்படத்தில் மேலே தாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் பாடலும், அதைத் தொடர்ந்து அந்த சூதாட்ட விடுதியில் மீண்டும் இவரை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்ட பாடலும் முதலிடம் பெறும். அதிலும் நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்து விட்டான் என்று சூழ்நிலைக்கேற்ற பாடல் வரிகளோடு அமைந்த பாடலில் வெள்ளுடை வேந்தராக மிகவும் ஸ்லிம்மாக சுமார் 20 அல்லது 25 வயதுக்கு மேல் மதிப்பிட முடியாத இளமைத் தோற்றத்தில் தலைவரின் ஒய்யாரமான நடன அசைவுகளும் நடையழகும் நம் உள்ளத்தைக் கபளீகரம் செய்து விடும்.
மறக்க முடியாத திருடன் பாடலோடு மறக்க முடியாத நாளாக இன்றை ஆக்கி விட்டீர்கள். இனியென்ன நினைத்தபடி நடந்து விடும். இந்த இரண்டு பாட்டும் இன்று முழுதும் ஆக்கிரமிக்கும்.
ராகவேந்திரன் சார்,
பக்கங்களில் விளக்கக்கூடிய விஷயங்களை 'நச்'சென்று அழகாகப் பத்தியில் விளக்கி விட்டீர்கள். அருமை. ரசித்து மகிழ்ந்தேன். நன்றி!
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
19th July 2016 09:03 PM
# ADS
Circuit advertisement
Bookmarks