Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    1950களில் நடிகர்திலகத்தின் பாடும் குரலாக இருந்தவர்களில் குறிப்பிட தக்கவர்கள் சிதம்பரம் ஜெயராமன்,சீர்காழி கோவிந்தராஜன் ,ஏ.எம்.ராஜா, டி.எம்.சௌந்தரராஜன். அது தவிர, கண்டசாலா,கிருஷ்ணன், சுந்தரம்,பீ.பீ.ஸ்ரீனிவாஸ் ,சந்திரபாபு,டி.ஏ. மோதி போன்ற பலரும் பாடி வந்தனர். நடிகர்திலகமும் எந்த வித மறுப்பும் சொல்லாமல் எல்லோரையும் ஆதரித்து வந்தார்.

    ஆனால் 59இல் இருந்து நிலைமை தலை கீழ். டி.எம்.எஸ் குரல் நடிகர்திலகத்தின் அங்கீகரிக்க பட்ட குரலாக மாறி ,வெற்றி கூட்டணி ஆகி விட்ட படியால் ,நடிகர்திலகத்தால் எந்த சோதனைக்கும் இடம் கொடுக்க முடியாமல் போனது.

    இரண்டு சுவாரஸ்யங்கள்.

    பாலும் பழமும் படத்துக்கு பாடல் பதிவு முடிந்து படப்பிடிப்பு தொடங்க வேண்டிய தருணத்தில் டி.எம்.எஸ் க்கு கடும் ஜலதோஷம். பட குழுவினர் வேறு பாடகரை வைத்து முடிக்கலாம் என்று முடிவெடுத்த போது ,நடிகர்திலகம் சொன்னது. ஜலதோஷம் என்றாலும் டி.எம்.எஸ் பாடட்டும். டி.எம்.எஸ் பாடி கொடுத்தார் மென்மையான nasal tone இல்.(என்னை யாரென்று,நான் பேச ,பாலும் பழமும்) இதை கேட்ட சிவாஜி துள்ளி குதித்து தன் பேசும் குரலை முடிவு செய்து கொண்டார். விஞ்ஞானி மருத்துவருக்கு தூக்கி வாரிய இள நரை முடியுடன் ,மென்மையான மூக்கின் குரலே கதாபாத்திரத்துக்கு அமெரிக்கையான மெருகு அளிக்க முடியும் என்று. குறையே ,கூடுதல் நிறையானது நடிகர்திலகத்தின் மேதைமையால்.

    குங்குமம் படத்தில் சின்னஞ்சிறிய வண்ண பறவை பாடல் ,ஹிந்துஸ்தானி பாணியும் ,சுர பிர்காக்களும் நிறைந்த தனித்துவ பாடல். சீர்காழியின் பிர்கா சாரீரமே இதற்கு உகந்தது என்று முடிவு செய்து பாடல் பதிவு செய்தாயிற்று. ஆனால் நடிகர்திலகம் சொன்னது. அபசுரம் பாடினாலும் சௌந்தர்ராஜனே பாடட்டும்.(அந்த பாட்டில் டி.எம்.எஸ் திணறி தண்ணீர் குடித்திருப்பார். ஜானகியும் சுவற்றில் ஆணி போல கீறுவார்) அற்புதமான composition . காலத்தை வென்று நின்றாலும் பாடகர்களின் தேர்வு கேள்விக்குரியதே.கோபமாக இருந்த சீர்காழியை ,அவர் இசை நிகழ்ச்சியொன்றில் நடனமாடி நடிகர்திலகம் குஷி படுத்தி வழிக்கு கொண்டு வந்து விட்டார் என்பது வேறு விஷயம்.
    Last edited by Gopal.s; 10th August 2016 at 07:26 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •