-
30th September 2016, 01:37 PM
#2281
Junior Member
Newbie Hubber
உன்னை தவிர யாராவது நான் சோழ மன்னன் பரம்பரை என்று சொல்லியிருந்தால் நகைத்திருப்போம். நீ சொன்ன போது வருந்தினோம். உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கும் சக்கரவர்த்தி ,ஏன் சோழ பரம்பரை என்று தமிழ் நிலத்தை மூன்றிலொரு பங்காக குறுக்க வேண்டும்?
உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகமே.
அவதார புருஷர்களில் தந்தை தாய் இருவரையுமே பெருமையாக அடையாளம் காட்டி வாழும் ஒரே அவதாரன் நீ.
சரியான நிலத்தில் சரியான விதையாக ,நாடக உரத்தில் தழைத்த அற்புத பயிரே! உன்னை சுவைக்க வேண்டிய இனமோ , அந்நிய கள் குடித்து அறியாமையில் உழன்றது.
நாங்கள் ஏற்றுமதி செய்திருக்க வேண்டிய முதல் உலகத்தரம் வாய்ந்த இந்திய பொருள் நீதான்.ஆனால் தரமான பொருளுக்கு அழகான உறை போட்டு அலங்கரிக்க தவறினோம் . இப்போது சரியான உறைகளில் தவறான பொருளெல்லாம் ஏற்றுமதி கண்டு தழைக்கிறது.
நீ மட்டுமே பணம்,அதிகாரம் விளம்பர போதைகளால் போலி புகழில் வாழாமல், எங்கள் குடிசை வீடுகளிலும் நிரந்தர தெய்வமாய் எங்களை உன்னதம் பெற வைத்து எங்கள் ஒவ்வொரு அணுக்களிலும் அனுதினமும் உயிர்க்கிறாய்.இந்த உயிர்ப்பு ,சமாதிகள் அல்ல.சந்நிதிகள் .
ஒரு பிறவியால் ,இத்தனை பிறவிகளுக்கு வாழும் போதே மோட்சமளித்த நடிப்பு ராமானுஜனே!!!
உலகத்திற்கு பல நாட்கள் ,பல தினங்கள். தாய்க்கு,தந்தைக்கு,நண்பர்களுக்கு,காதலர்களுக்க ு என்று. தமிழர்களுக்கு ஒரே நாள். அக்டோபர் 1 மட்டுமே.
தமிழர் பெருமை நாள்.
திருவள்ளுவனுக்கு பிறகு பெருமை மீட்ட நாள்.
சேர பாண்டியர்களை தலை குனிய வைத்த சோழ திருமகனின் அவதார நாள்.
மேதைமையும்,திறமையும் ,உழைப்பும்,நேர்மையும்,புகழும் அதிசயமாக இணையும் ஒரே நாளின் நினைவு திருநாள்.
உன்னால் தலை நிமிர்ந்த தமிழே தலை குனிகிறது. உன்னை போற்ற போதிய சொற்களின்றி.
என் உயிர்,உடல் என்றவற்றை தாண்டி எதை உனக்கு காணிக்கையாக்குவேன்?அழியும் இவைகள் அழியாத உனக்கு எப்படி காணிக்கையாகும்?
என் எழுத்தே உனக்கு நானளித்த காணிக்கை. அது என்றும் வாழும் சரஸ்வதி தேவி.என் எழுத்துக்களே நான் உன்னை அர்ச்சித்து போற்றும் சத்திய பூஜை.
எங்கள் போற்றுதலுக்குரிய தலை தமிழ் மகனே!!! தரம் கெட்ட தமிழர்களையும் உன் ஆன்மா மன்னிக்குமாக.வாழும்போதே நண்பர்-பகைவர், உற்றோர்-மற்றோர் என்று பேதம் காட்டாத நீயா ,தெய்வமாகிய பின் பேதம் காட்டுவாய்? உன்னை திரிக்கும் ,திரிக்கும் ,தமிழர்களாய் வாழாமல் தாழும் நரிக்கும் கூட அருள் தருவாய்
நடிப்புக்கும்,ஆண்மைக்கும்,அழகுக்கும்,திண்மைக் கும், தன்மைக்கும்,தகைமைக்கும்,பண்புக்கும்,நட்புக்கு ம்,தூ ய மனதுக்கும், சொற் தமிழுக்கும் இலக்கணம் வகுத்த எங்கள் தலை தெய்வமே!!
தமிழனான எனது முழு முதற் கடமை நிறைவேறிய திருப்தியில் ,நான் நிஜமாக நேசிக்கும் ஒரே நாளில் என் பணிகளை தொடங்குகிறேன்.
Last edited by Gopal.s; 30th September 2016 at 01:41 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
30th September 2016 01:37 PM
# ADS
Circuit advertisement
-
30th September 2016, 08:33 PM
#2282
Junior Member
Devoted Hubber
From Tamil The Hindu,
அக்டோபர் :1- சிவாஜி கணேசன் 88
சின்னையா - ராஜாமணி தம்பதிக்கு 1928-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாளில் பிறந்த குழந்தைதான் கணேசன். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தந்தை சிறை சென்றிருந்தால் பிறக்கும்போதே தந்தையின் முகம் காணவில்லை. தந்தை விடுதலையானபோது அவரது வேலை பறிக்கப்பட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் குடியேறினர்.
படிப்பின் மீது ஆர்வமில்லாத கணேச மூர்த்திக்குத் தெருக்களில் நடந்த கூத்துக்கள், நாடகங்கள் மீது ஆர்வம் அதிகம். நண்பர் காக்கா ராதாகிருஷ்ணன் மூலம் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் குழுவில் சேர்ந்துவிட்டார். கணேசனின் கலைப் பயணத்துக்கு அங்கு வித்திடப்பட்டது. பல முக்கியமான வேடங்களில், பெண் வேடம் உட்பட அனைத்து வேடங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார்.
பெரியாரின் பாராட்டு
அறிஞர் அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ என்ற நாடகத்தின் அரங்கேற்றத்தில் திடீர் என்று ஏற்பட்ட மாறுதலால் முதல் நாள் அளிக்கப்பட்ட 90 பக்க வசனங்களை ஒரே இரவில் படித்து நாடகத்தில் சிவாஜியாகவே மாறினார் கணேசன்.
திரைப்படம், நாடகம் ஆகியவற்றைப் பெரிதும் விரும்பாத பெரியார் ஈ.வெ.ரா., அண்ணாவின் நாடகத்துக்குத் தலைமை தாங்கினார். கணேசனின் நடிப்பும் வசன உச்சரிப்பும் அவரை வெகுவாக ஈர்க்க, நாடகத்தை ரசித்துப் பார்க்க ஆரம்பித்தார். முடிவில் கணேசனைப் பாராட்டிய அவர், ‘நீ சிவாஜியாகவே மாறிவிட்டாய் இன்று முதல் உன் பெயருடன் சிவாஜியும் சேர்ந்து சிவாஜி கணேசன் ஆகிறாய்’ என்று மனதாரப் பாராட்டினார்.
விமான டிக்கெட்டுடன் வந்த வாய்ப்பு
பாவலர் பாலசுந்தரம் எழுதிய ‘பராசக்தி’ என்ற நாடகத்தில் சிவாஜி கணேசன் முக்கியப் பாத்திரத்தில் நடித்துவந்தார். அந்நாடகத்தைப் பார்த்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனர் பி .ஏ. பெருமாள் முதலியாரும் ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரும் இணைந்து இந்நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்தனர். இப்படத்தின் கதாநாயகன் குணசேகரனாக கே. ஆர். ராமசாமியை நடிக்கவைக்க ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் முடிவெடுத்தார். ஆனால் பி.ஏ. பெருமாள் ஒரு புதுமுக நடிகரை வைத்து படமெடுக்க வேண்டும் என்ற முடிவுடன் ‘நூர்ஜகான்’ நாடகத்தில் பெண் வேடத்தில் நடித்த கணேசனைக் கதாநாயனாக நடிக்க வைக்க விரும்பினார்.
திருச்சியில் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த சிவாஜி கணேசனுக்கு விமான டிக்கட்டுடன் சென்னையிலிருந்து சினிமாவில் கதாநாயனாக நடிக்க அழைப்பு வந்தது. 1951-ம் ஆண்டு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் சக்ஸஸ் சக்ஸஸ் என்ற முதல் வசனத்துடன் தன் கலையுலக வாழ்வை ஆரம்பித்து, சினிமாவில் வெற்றி நாயகனாக அரை நூற்றாண்டுக் காலம் திகழ்ந்தார்.
அழியாத பிம்பங்கள்
‘பராசக்தி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள், புராண, சரித்திர நாயகர்களின் கதாபாத்திரங்கள், வரலாற்று நாயகர்கள், எதிர்மறையான கதாபாத்திரங்கள் ஆகியவற்றில் தன்னுடைய நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும், நடை, உடை பாவனையாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு சிறந்த நடிகனாக உருமாறினார். சிவன், கர்ணன், வ.உ.சி., கட்டபொம்மன் போன்றோரை நினைக்கும்போது நம் நினைவில் சிவாஜியின் முகமே நிழலாடும். தந்தை, மகன், அண்ணன், கணவன் எனப் பல்வேறு உறவு முறைகளை அழியாத திரைப் பிம்பங்களாக மாற்றினார்.
கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து...
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என்று 305 திரைப்படங்களில் நடித்துள்ள சிவாஜி கணேசன், சிறந்த நடிகருக்கான ஆசிய - ஆப்பிரிக்கத் திரைப்பட விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, மத்திய அரசின் பத்ம, பத்மபூஷன் விருது, திரைத்துறை வித்தகருக்கான தாதாசாகேப் பால்கே விருது, தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது, பிரெஞ்சு அரசாங்கத்தின் செவாலியே விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், தன்னுடைய அன்னை இல்லத்தின் மேல் ஒரு சிறுவன் புத்தகம் படிப்பது போன்ற ஒரு சிறிய சிற்பத்தை வைத்திருந்தார். அவர் வாழ்ந்த சென்னை, தியாகராயநகர், தெற்கு போக் சாலை செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்று தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது.
தமிழகம் மட்டுமின்றி உலகமே அவரைக் கவுர வித்தது. 1962-ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மாகாணத்திலுள்ள நயாகரா நகரின் ஒரு நாள் கவுரவ மேயர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். 2001-ல் அவர் மறைந்த பிறகு மத்திய அரசு அவருக்குத் தபால் தலை வெளியிட்டுப் பெருமை சேர்த்தது. 2006-ம் ஆண்டு புதுச்சேரி அரசின் சார்பில் புதுச்சேரியிலும், தமிழக அரசு சார்பில் சென்னை கடற்கரை காமராஜர் சாலையிலும் முழு உருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டன.
திரைக்கு அப்பால்
திரைப்படங்களைத் தாண்டியும் அவரது பங்களிப்பு நீண்டது. சினிமாவில் தீவிரமாக நடித்துக்கொண்டிருந்தபோதே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று நடிகர் சங்கத்துக்காகக் கலை அரங்கத்தைக் கட்டினார். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் கட்டபொம்மனுக்குச் சிலை அமைத்து அந்த இடத்தை நினைவுச் சின்னமாகச் சொந்தச் செலவில் பராமரித்தார். மும்பையில் வீ ரசிவாஜி சிலை அமைக்கப் பொருளுதவி வழங்கினார். சென்னை மெரினா கடற்கரையில் திருவள்ளுவருக்குச் சிலை அமைத்துக் கொடுத்தார். தன் மனைவி கமலா அம்மாள் போட்டிருந்த நகைகளை யுத்த நிதிக்காகத் தந்ததுடன், ரூ.17 லட்சம் தொகை வசூலித்துக் கொடுத்தார். மதிய உணவுத் திட்டத்துக்காகப் பிரதமர் நேருவிடம் ரூ. 1 லட்சம் வழங்கினார். பெங்களுர் மக்கள் நலனுக்காக ‘கட்டபொம்மன்’ நாடகத்தின் மூலம் ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கினார். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான காமராஜர் சிலைகள் அவரால் நிறுவப்பட்டவை.
கலையுலகை வென்ற கலைஞனை 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் நாள் காலன் வென்றுவிட்டான். அவர் தன் நடிப்பால் மக்கள் மனதில் பெற்ற இடம் மகத்தானது, நிரந்தரமானது. காலன் உள்பட யாராலும் வெல்ல முடியாதது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th September 2016, 09:45 PM
#2283
Senior Member
Diamond Hubber
இறைவனுக்கு பிறந்த நாள் உண்டா?
உண்டு.
அது அக்டோபர் 1 (1928)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st October 2016, 12:59 AM
#2284
ஒரு நண்பரை பார்க்க போயிருந்தேன். அவர் வீட்டருகே அமைந்துள்ள கோவிலில் ஒரு விழா. அங்கே வேறு சில நண்பர்களை சந்திக்க நேர்ந்தது. எப்போதும் போல் சில பல விஷயங்களை பற்றி பேசிய பின் நமது பாட்டுடை தலைவன் நடிகர் திலகம் பற்றி பேச்சு திரும்பியது. கடந்த சில வருடங்களாக ஒரு விஷயம் கவனித்து வருகிறேன். முன் எப்போதையும் விட இப்போது நடிகர் திலகம் அதிகமாக பேசப்படுகிறார், சிலாகிக்கப்படுகிறார். அவரது பல்வேறு பரிமாணங்கள் சர்ச்சை செய்யப்படுகிறது.
இது போன்றே அவரது ஒவ்வொரு படங்களையும் மீண்டும் பார்க்கும்போது ஒவ்வொரு முறையும் அது புதிய அனுபவமாக மனதினில் விரிகிறது, சின்ன சின்ன நுணுக்கங்கள், நகாசு வேலைகள் ஆங்காங்கே பொன் முறுவல் முந்திரியாய் ருசிக்கிறது. மிக பிரபலமான படமாக இருந்தாலும் சரி, ஒரு ரீமேக் படமாக இருந்தாலும் அதில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் ஈடுபாடு அபாரம்!
மாதாமாதம் நாம் அவரின் படங்களை திரையிடும்போதெல்லாம் இந்த பரவச சிலிர்ப்பை உணர்கிறேன். நமக்கு பழக்கமேயில்லாத ஆட்கள் கூட படத்தை பார்த்துவிட்டு அவர்கள் ரசித்ததை சொல்லும்போது எந்தளவிற்கு அவர் அனைவரின் மனங்களிலும் நிறைந்திருக்கிறார் என்பது தெளிவாகவே புரிகிறது. அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினர் அவரின் வீச்சை கண்டு பிரமிக்கிறார்கள்.
சுற்றி நான்கு சுவர்களுக்குள் என்ற சின்ன வரியில் அந்த ச எப்படி உச்சரிக்கப்பட வேண்டும் என்பதை நடிகர் திலகத்தின் வாயசைப்பு மூலமாகத்தான் கற்றுக் கொண்டேன் என்று சொன்ன இளம் பெண், அந்த நாள் பற்றி பேசப் போனபோது படத்தில சொத்து பிரிப்பது தொடர்பாக அண்ணன் தம்பி இடையே ஏற்படும் வாக்குவாதத்தின் போது நடிகர் திலகத்தின் முகத்தில் தோன்றும் உணர்வு, அந்த காலத்திலேயே எப்படி செய்திருக்கிறார் என்று வியந்த 20-களின் ஆரம்பத்தில் நிற்கும் சினிமா பயின்ற இளைஞன், இவர்களெல்லாம் நமக்கு உற்சாகமூட்டும் வீர்ய மாத்திரைகள்.
அது மட்டுமல்ல, சிவகாமியின் செல்வன் பார்த்துக் கொண்டிருந்தபோது ரங்காராவ் air force வீரர்கள் வெற்றி பெறலாம் அல்லது வீர மரணம் அடைய நேரிடலாம் எனும்போது அந்த வசனத்திற்கேற்ப நடிகர் திலகம் நெஞ்சை விரிப்பதை சுட்டிக் காட்டிய ஒரு சாதாரண தொழிலாளி, சமூகத்தின் அடிமட்ட சூழலில் வாழும் ஒரு ரசிகன், பாரிஸ்டரின் ஆங்கில வசனங்களையும் நீதிமன்ற procedures பற்றியும் விவரிப்பது போன்ற பல்வேறு பிரமிப்புகளை அண்மைக் காலமாக நடிகர் திலகம் நல்கிக்கொண்டேயிருக்கிறார். நவராத்திரி படத்தின் இறுதிக் காட்சியில் கல்யாணத்திற்கு வரும் 7 கதாபாத்திரங்களும் கல்கண்டை எடுக்கும் முறையிலே அந்த பாத்திரத்தின் தன்மை என்ன என்பதை பார்வையாளனுக்கு கடத்துவார் என்பதை சுட்டிக் காட்டிய ஒரு நண்பர் இப்படி தினம்தோறும் unlimited சந்தோஷ பிரமிப்புகளே!
முதலில் சொன்ன நண்பர்கள் குழுவிலும் அதேதான் நடந்தது. பேசிவிட்டு கிளம்பும்போது கோவில் விழாவில் இருந்து TMS குரல் கசிந்து வருகிறது. உன்னை பாடும் தொழிலின்றி வேறு இல்லை, உண்மைதான் என தோன்றுகிறது. பிறந்த நாளன்று மட்டும் அல்லாமல் எல்லா நாளும் உன்னை பாடும் நாளே என்பதுதான் சரி. அதற்குண்டான அனைத்து தகுதிகளையும் பெற்றவன் நீ.
88 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய யுக கலைஞனே!
இந்த மண்ணும் கடல் வானும் உள்ளவரை
உன் புகழ் நிலைக்கும்! உன் கொடி பறக்கும்!
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
1st October 2016, 11:21 AM
#2285
Senior Member
Devoted Hubber
88வது சிவாஜி ஜெயந்தி தின வாழ்த்துக்கள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st October 2016, 12:12 PM
#2286
Junior Member
Devoted Hubber
From Dinamani,
சிவாஜியிடமிருந்து சிறந்த நடிப்பைக் கற்றுக் கொண்ட அனுபவம் குறித்து தேவிகா உங்களுடன் -
‘நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் மட்டுமல்ல, தன்னோடு நடிப்பவர்களின் திறமையும் வெளிப்பட வேண்டும் என்று நினைக்கிற பண்பிலும் அவர் திலகம்!
பாவமன்னிப்பு படத்தில் ரஹீமாக வாழ்ந்து காட்டியிருப்பார். அதில் சிவாஜியுடன் நாயகியாக நடித்த முதல் சீனை என்னால் என்றும் மறக்கவே முடியாது. காரணம் அது ரஹீமை நான் ஜெயிலில் சந்திக்கும் சோகமயமான கட்டம்.
உள்ளேயிருந்து சிவாஜி கதற, வெளியே நிற்கும் நான் புலம்ப... அதனை க்ளைமாக்ஸ் காட்சிக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்துடன், அதிக அக்கறையோடு முதலில் படமாக்கினார் டைரக்டர் ஏ. பீம்சிங்.
சிறைக் கம்பிகளைப் பிடித்தவாறு அதில் முகம் புதைத்து நான் அழ வேண்டும். புதிதாக பெயிண்ட் அடித்திருப்பார்கள் போல. அது என் கைகளில் ஒட்டிக்கொண்டு விட்டது.
சிவாஜிக்கு அதைப் பார்த்ததும் பயங்கர கோபம் ஏற்பட்டது. என் படபடப்பு மேலும் கூடியது.
‘ கம்பிகளைப் பிடித்துக் கொண்டு பலம் கொண்ட மட்டும் அதை ஆட்டி விட்டால் போதுமா...? கண்ணீர் விட்டுக் கதறும் நடிப்பு வந்து விடுமா உனக்கு? இந்தக் கம்பிகள் போலியானவை. நிஜக்கம்பிகள் போல் இவற்றை உலுக்கினால் இவை என்ன ஆகும்? எப்பவும் சுய நினைவோடு நடிக்கணும்.
அப்பத்தான் நீ நடிப்பில் உச்சம் தொட முடியும். இப்ப நான் மேரியாக நடிப்பதை நீ பார்... ' என்ற சிவாஜி,
கம்பிகளுக்குப் பூசப்பட்ட புது சாயம் கொஞ்சமும் கைகளில் படாமல், உணர்ச்சி வசப்பட்டு அழகாக நடித்துக் காட்டினார்.
அன்புக்கரங்கள் படத்தில் நான் மணிமாலாவைச் செல்லமாகக் கடிந்து கொள்ள வேண்டிய ஒரு கட்டம். விளையாட்டுக் கோபம் காட்ட வேண்டிய இடத்தில், அதை உணராமல் நான் நிஜமாகவே கோபித்துக் கொள்வது போல நடித்தேன்.
அதைப் பார்த்த சிவாஜி, ‘இந்த சீன்ல இப்பிடித்தான் நடிப்பீங்களா..? கொஞ்சம் தள்ளுங்க நான் நடிச்சிக் காட்டறேன்.
நடிக்கறதே பொய்யான சமாசாரம். நீ போலியா கோவிச்சிக்கிட்டுப் பாசாங்கு பண்ணணும். அதை விட்டுட்டு முகத்துல இவ்வளவு கடுப்பைக் காமிச்சா காட்சி எப்படி சரியா வரும்?
நீ அவளுக்கு புத்தி சொல்றதுல உள்ளூற அன்பும் பாசமும் எதிரொலிக்கணும். அது உன் ஆதங்கமா வெளிப்படணுமே தவிர ஆத்திரமா மாறிப்போயிடக் கூடாது.
டூரிங் டாக்கீஸுல படம் பார்க்கறவனுக்கும் நீ பொய்யாத்தான் கோவிச்சிக்கிறன்னு புரியறாப்பல நடிக்கணும். என்ன நான் சொல்றது விளங்குதான்னு’ கேட்டுட்டு நான் எப்படிப்பட்ட பாவத்தோடு பேசணும்னு நடிச்சிக் காமிச்சார்.
போலியான கோபத்தில் கூட இவ்வளவு நுணுக்கங்களா...! என்று வியந்தேன்.
அவரோட நடிச்சதாலதான் நான் ஒரு ஆர்ட்டிஸ்ட்டா நிக்கிறேன்னு கூடச் சொல்லலாம். செட்ல எனக்கு சீன் இல்லாத நேரத்துல லைட் பாய் கிட்ட பேசிட்டிருப்பேன். உடனே சிவாஜி என்னிடம்,
‘ஹீரோ கிட்டப் பேசறது தேவையில்லன்னு நினைக்கிற’ என்று நையாண்டியாகக் கேட்டிருக்கிறார். எனக்கு பேசக் கூடாது என்றெல்லாம் இல்லை. ஒரு வித அச்சத்தினால் பெரியவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன்.
ஷாட்ல எப்படி நடிக்கணும்னு எனக்குச் சொல்லிக் கொடுத்துட்டு கம்மியா பண்ணுவார். கூட நடிக்கிறவங்களுக்கும் பேர் வரணும்னு நினைப்பார்... அவர் தான் சிவாஜி.
அதுக்குச் சரியான எடுத்துக்காட்டு வேணும்னா ‘நீல வானம்’ படத்தைச் சொல்லலாம். ‘அதுல கதாநாயகிக்கு முக்கியத்துவம் கிடைக்கிற கேரக்டர். ஹீரோவுக்கு அதிக வேலை கிடையாது.’
அந்த விஷயம் சிவாஜிக்குத் தெரிவிக்கப்பட்டும் அவர் பிடிவாதமா நடித்தார். என் கேரக்டர் ஓங்கி நிற்க வேண்டிய கட்டங்கள் அத்தனையிலும் எனக்காக விட்டுக் கொடுத்து நடிச்சிருக்கார்.
நான் எந்த சீன்லயாவது நடிப்பை கோட்டை விட்டுட்டேன்னா, ‘மண்டு மண்டு’ ன்னுச் செல்லமா கோவிச்சுக்குவார். அப்புறம் அந்தக் காட்சியில் என் நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார்.
நான் கர்ப்பிணியா நடிக்க வேண்டிய காட்சி. தாய்மை அடைந்த பெண்ணின் ஒவ்வொரு அசைவையும் செய்து காட்டி என் நடிப்பை மேம்படுத்தினார்.
அந்த மாதிரி யார் நன்றாக நடித்தாலும் காட்சி முடிந்த பிறகு பாராட்டி விடுவார். அது அவருக்கு மட்டுமே உரிய பெருந்தண்மைக் குணம்!
(தேவிகாவின் கூற்று அத்தனையும் நிஜம். 1970களில் தனது சினிமாக்களைப் பற்றி சுய விமர்சனம் செய்த நடிகர் திலகம், நீல வானம் பற்றிக் குறிப்பிடுகையில்,
‘திருமதி தேவிகாவின் சிறந்த நடிப்பைக் கொண்ட படம்! ' என்று வெளிப்படையாகவே தேவிகாவுக்கு நற்சான்றிதழ் அளித்திருக்கிறார்.
சிவாஜி படப்பட்டியலில் நாயகிகள் குறித்த கணேசனின் பாராட்டு மிக மிக அபூர்வம்!)
‘சிவாஜி எப்பப் பார்த்தாலும், ‘சவுக்கியமா... நல்லா இருக்கியா? 'ன்னு ரெண்டே வார்த்தைகள் தான் கேட்பார். அதில் ஓர் ஆழமான அன்பு ஒளிந்திருக்கும். எனக்கு ஆதரவாக இருந்த அவரது அன்பில் நான் ஒரு போதும் அதிகம் உரிமை எடுத்துக் கொண்டது கிடையாது.
என் மகள் கனகாவுக்கு அப்ப 4 வயது. சிவாஜி தச்சோளி அம்பு மலையாள சினிமாவில் நடிக்கும் போது கை உடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
அவரைப் பார்த்து நலம் விசாரிக்கப் போயிருந்தேன். கனகாவும் என்னுடன் அழைத்துச் சென்றேன். வலியைச் சற்றே மறந்து ஜாலியாக உரையாடியவர், கனகாவைப் பார்த்து ‘உன் பேர் என்னடா’...ன்னு கேட்டார்.
கனகா பதில் பேசாமல் நின்றாள். சிவாஜி மறுபடியும் செல்லமாக அதையே வினவினார். கனகா வாயை இறுக்க மூடிக்கிட்டா. பேசவே இல்லை.
சிவாஜி என்னைப் பார்த்தார்.
‘என்ன பிள்ளை வளர்த்துருக்கே. ' என்றார் இலேசான கோபத்துடன்.
‘என் பொண்ணு என்ன மாதிரியே வளர்ந்திருக்கா... ' என்று சொல்லி சமாளித்தேன். அது நிஜமே. நானும் ஆரம்பத்தில் அறிமுகம் இல்லாதவங்க கிட்டே பேசவே மாட்டேன். ' தேவிகா.
சிவாஜி கணேசனும்-தேவிகாவும் உச்ச நட்சத்திர ஜோடிகளாக ஜொலித்த 1964. தேவிகா பற்றி நடிகர்திலகம் கூறியவை-
‘நல்ல பெண். திறமை உள்ளவர். மேலும் முன்னுக்கு வரக் கூடியவர். சொன்னதைச் சட்டென்று புரிந்து கொள்வதுடன் அப்படியே சிரமப்பட்டு நடிப்பில் கொண்டு வந்து விடுவார்.
ஷூட்டிங்குக்கு வருவதில் ரொம்ப கரெக்ட். சின்ன உதாரணம்- ‘ஆண்டவன் கட்டளை’ படப்பிடிப்பு.
‘அழகே வா அருகே வா
அலையே வா தலைவா வா... ’
பாடல் காட்சியில் தேவிகாவை அலை அடித்துக் கொண்டு போய் விட்டது. அந்த விபத்தில் தேவிகா பிழைத்ததே பகவான் புண்ணியம். உயிர் பயத்தால் தொடர்ந்து அவர் நடிக்க வரமாட்டார் என்று எண்ணினேன்.
மறு நாளே அவர் வழக்கம் போல் வேலைக்கு வந்து எங்களைத் திகைக்க வைத்தார்.
தொழிலில் எத்தனை ஈடுபாடோ அதே சமயம் விளையாட்டுப் பேச்சிலும் சமர்த்து. ஷூட்டிங் சமயத்தில் நிருபர்கள் யாராவது வந்தால் போச்சு. தேவிகாவுக்கு நேரம் போவதே தெரியாது. ’- வி.சி. கணேசன்.
சிவாஜியும் தேவிகாவும் ஜோடி சேர்ந்த படங்களில் சிகரம் ‘கர்ணன்’ அதைப் பற்றி எழுதாமல் தேவிகாவின் திரையுலக அனுபவங்களைப் பூர்த்தி செய்திட முடியாது.
தமிழில் அதிசயிக்கத் தக்க வகையில் நாற்பது லட்சம் பொருட்செலவில் ஈஸ்ட்மென் கலரில் உருவான முதல் பிரம்மாண்ட புராணச் சித்திரம்.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் பாடல்கள் இடம் பெற்ற முதல் இதிகாசப் படம்!
காற்றுள்ளவரை காதுகளில் தேனைப் பாய்ச்சும் கந்தர்வ கானங்கள் கர்ணன் படப் பாடல்கள். பெங்களூர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் கண்ணதாசனால் மூன்றே நாள்களில் முழுமையாக எழுதப்பட்டவை.
1962-1963ல் தயாராகி 1964 தைத் திருநாளில் வெளியானது கர்ணன். தேவிகா கர்ணனின் மனைவி சுபாங்கி.
பணத்தைத் தண்ணீராக வாரி இறைத்து ஒவ்வொரு அரங்கமும் போடப்பட்டது. சுபாங்கியின் வளைகாப்பு மஹாலுக்கு மட்டும் லட்சக்கணக்கில் செலவு செய்து, விஜயா ஸ்டுடியோவில் மாபெரும் செட் அமைக்கப் பட்டது.
துரியோதனன் மனைவி பானுமதியாக நடித்தவர் நடிகையர் திலகம் சாவித்ரி. அவர் சுபாங்கியைத் தாய் வீட்டுக்கு வழி அனுப்பிப் பாடுவதாக வந்த, ‘மஞ்சள் பூசி மலர்கள் தூவி’ என்று தொடங்கும் வளைகாப்புப் பாடலில் தேவிகாவை வாழ்த்தி 45 நடனப் பெண்கள் ஆடினார்கள்.
ஒவ்வொரு காட்சியிலும் தேவிகாவின் அழகிய தோற்றமும், தலை அலங்காரமும், உடலெங்கும் ஜொலி ஜொலிக்கும் விலை மதிப்பற்ற ஆடை அணிகலன்களும் பிரமிக்க வைக்கும்.
அன்றைய தேதியில் வேறு எந்த பிரபல நடிகைக்கும் கிடைத்திராத அரிய வாய்ப்பு! தேவிகாவை மாத்திரம் தேடி வர மிக முக்கிய காரணம் எஸ். வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்.
பி.எஸ். இராமையா எழுதிய ‘தேரோட்டி மகன்’ நாடகத்தை அப்போது சேவா ஸ்டேஜ் வெற்றிகரமாக நடத்தி வந்தது.
அதில் தேவிகா துரியோதனன் மனைவி பானுமதியாக, மேடையில் இதிகாச வசனங்களைப் பேசிச் சிறந்த அனுபவம் பெற்றிருந்தார்.
தேரோட்டி மகன் கதையில் சுபாங்கியை, கர்ணனை அவன் தேரோட்டி மகன் என்பதற்காக வெறுத்து ஒதுக்கும் வில்லியாகக் காட்டினார்கள்.
போருக்குச் செல்லும் கர்ணனை சுபாங்கி வழியனுப்ப மறுப்பாள். பானுமதியாக நடிக்கும் தேவிகாவிடம் கர்ணன் வீரத்திலகம் இட்டுச் செல்லும் கட்டம் கைத்தட்டலைப் பெறும்.
பந்துலு வியாசர் எழுதிய மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு கர்ணன் படத்தை உருவாக்கினார்.
அதன் படி கர்ணனுக்கு விருஷசேனன் என்ற வாரிசு உண்டு. அவன் போரில் மடிவதாகக் காட்டப்பட்டது. அதனால் கர்ணன் படத்தில் சுபாங்கி கதாபாத்திரம் உன்னதமாக அமைந்தது. தேவிகாவின் ஸ்டார் இமேஜ் மேலும் உயர்ந்தது.
யூ ட்யூபில் பதிவேற்றப்பட்டு பார் முழுவதும் நிற மொழி பேதங்களைக் கடந்து அனிருத்தின் கொலவெறி பாடல் பரவி புயலைக் கிளப்பிய 2012. மார்ச் மாதம்- 16 ஆம் தேதி நவீன தொழில் நுட்பத்தில் கர்ணன் மீண்டும் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.
எல்லாரும் ‘கொல வெறி’யில் லயித்திருக்க யாரும் எதிர்பாராத வகையில், எளிதாக இருபத்தைந்து வாரங்களைக் கடந்தது கர்ணன்.
அதே மார்ச் 30ல் மாபெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான தனுஷின் 3 உள்ளிட்டப் புதிய சினிமாக்களை விட, கோடிக்கணக்கில் வசூலித்து அரிய சாதனை படைத்தது கர்ணன்.
-பா. தீனதயாளன்.
-
1st October 2016, 01:26 PM
#2287
Junior Member
Diamond Hubber
உன் ஆசி தவிர
வேறொன்றும் வேண்டாத மாபெரும் ரசிகர் கூட்டத்தை
கொண்டவரே...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st October 2016, 08:40 PM
#2288
Junior Member
Devoted Hubber
From Vikatan,
இன்று நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்த நாள். சிவாஜி என்றால் நடிப்பு, நடிப்பு என்றால் சிவாஜி. சிவாஜியின் மிகப் பெரிய பலமே, அவர் ஏற்று நடித்த பாத்திரங்களுக்கு முன்மாதிரியும் கிடையாது பின் மாதிரியும் கிடையாது. சிவாஜியைப் பற்றி திரையுலகப் பிரபலங்கள் பல்வேறு காலகட்டங்களில் சொன்னவைகளின் தொகுப்பு இதோ உங்களுக்காக...
ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ
'என்னைப் போல் சிவாஜி நடிப்பார்- ஆனால், என்னால்தான் சிவாஜியைப்போல் நடிக்க முடியாது!
எம்.கே.தியாகராஜ பாகவதர்
'அம்மா' என்கிற ஒற்றை வார்த்தையை உச்சரித்ததில் திரைஅரங்கையே கை தட்டவைத்தவர் சிவாஜி ஒருவர்தான்.
நடிகர் சிவகுமார்
சிவாஜியின் மிகப்பெரிய சொத்து, அவரது ஒளிமிக்க, உயிர்ப்புள்ள கண்கள்தான். அந்தக் கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சர்யத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை - அவர் அதிகமாக வெளிப்படுத்தினார்.
நடிகர் வி.கே. ராமசாமி
சிவாஜிக்கும் எனக்குமான நட்பு 1945-ல் யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையின் மதுரை பாலகான சபாவிலிருந்த போதே நாடகங்களில் நடிக்கும் போதே சிவாஜி ஏற்காத பாத்திரமில்லை. பெண் வேடமிட்டு கதாநாயகியாக ஒரு நாடகம் முழுவதும் அசத்துவார். மறுநாள் ராஜாவாக கம்பீரமாக நடை போடுவார். இந்த காலகட்டத்தில் 'இழந்த காதல்' என்ற நாடகத்தில், ஜெகதீஷ் என்ற வில்லன் பாத்திரமும், 'கள்வர் தலைவன்' நாடகத்தில் விஷ வைத்தியனாக நடித்ததும் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தன.
நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள், 'பராசக்தி'யை படமாக எடுக்கும் போது குணசேகரன் பாத்திரத்தில் சிவாஜிதான் நடிக்க வேண்டுமென பெரிதும் முயற்சி செய்து , திண்டுக்கல்லில் நாடகமொன்றில் நடித்துக்கொண்டிருந்தவரை அழைத்து வந்து ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் முன் நிறுத்தினார்.
பராசக்தியின் படப்பிடிப்பு ஏ.வி.எம்மில் நடக்க ஆரம்பித்தபோதே சினிமா உலகில் அவரது நடிப்பைப்பற்றி ஒரே பேச்சாக இருந்தது. மற்ற ஃப்ளோர்களில் நடித்துக்கொண்டிருந்தவர்களெல்லாம் பெருந்திரளாக வேடிக்கைப் பார்க்கக்கூடி விடுவார்கள்.
ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அப்போதைய சவுண்ட் என்ஜினீயராக இருந்த ஜீவா நானும் எத்தனையோ நடிகர்களின் குரல்களையெல்லாம் பதிவு செய்திருக்கிறேன், இவரது நடிப்பும் குரலும் சிம்ம கர்ஜனையாக இருக்கிறது என்று மனந்திறந்து பாராட்டினார். 1952 தீபாவளியன்று வெளியான பராசக்தியின் வசனகள் கிளப்பிய வேட்டுச்சத்தம் திரை உலகில் என்றைக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
நடிகர் நம்பியார்
உலகின் தலைசிறந்த நடிகர்களில் எல்லாம் அவர் தலை சிறந்தவர். எந்த வேடமாக இருந்தாலும் மற்றவர்களைவிட திறமையாக செய்யக்கூடியவர். உத்தமபுத்திரன் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். வில்லன் சிவாஜிக்கு துணை நின்று ஆலோசனை கூறும் பாத்திரத்தில் நான் நடித்திருப்பேன். அந்தப் படத்துக்குப் பிறகும் சிவாஜி வில்லனாக நடித்திருந்தால், எனக்கெல்லாம் வேலை இல்லாமல் போயிருக்கும்.
யயாதி மகாராஜா, இந்திரலோகத்திலிருக்கும் தேவர்கள் போல் இளமையாகவே வாழ விரும்பினார். அதற்கு அவரது பிள்ளைகளில் எவராவது தனது இளமையைத் தந்தால் அவர் இளைமையுடன் வாழலாமென ரிஷி ஒருவர் வரம் தந்தார். ஆனால் எந்தப் பிள்ளையும் தங்களது இளமியைத்த்ர முன் வர வில்லை. அவர் பெற்ற பிள்ளைகளில் அரூபியாக இருந்த ஒரு பிள்ளையை மட்டும் அவர் வெறுத்து ஒதுக்கினார். (கிட்டத்தட்ட தெய்வ மகன் கதை போல் இருக்கிறதே)அந்தப்பிள்ளை தனது இளைமையை தன் தந்தைக்கு தந்ததாக புராணக் கதையொன்று உண்டு. யயாதியின் நிலையில் சிவாஜி இருந்திருந்தால், நான் என் இளமையைத் தந்திருப்பேன்.
நடிகை மனோரமா
சிவாஜியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நடிப்பு மட்டுமல்ல நேரம் தவறாமையும்தான். அத்தனை பெரிய நடிகர் ஷூட்டிங்கில் எவரையும் காக்க வைத்ததில்லை. எந்த இயக்குனரின் படமாக இருந்தாலும், ஒரு புதுமுக நடிகரைப் போல் முழு ஒத்துழைப்பையும் தருவார். வாத்தியாரைப்போல் சொல்லித் தரவேண்டியவர் மாணவனைப்போல் கற்றுக்கொள்வார். அவருடன் பல படங்களில் நடித்திருந்தாலும், 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் நடித்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. அவர் அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரம்.
நடிகை சௌகார்ஜானகி
சிவாஜி ஒரு பிறவிக் கலைஞர். அவருடன் பணிபுரிந்த அந்தக்கால நாட்களை நினைத்தால் மனதுக்குள் எப்போதும் சிலிர்ப்பான அனுபவம்தான். அவரது தொழில்பக்தியையும் காலந்தவறாமையையும் வேறு எவரிடமும் நம்மால் பார்க்க முடியாது. திரையுலகின் தந்தை தாதாசாஹேப் ஆயுள் முழுவதும் சினிமா நன்றாக வளரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரை பிரிட்டிஷ் அரசாங்கம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அதேப் போல் நமது அரசாங்கமும் சிவாஜியைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. காலதாமதமாகவே தாதா சாஹேப் விருதை வழங்கியது.
கவிஞர் கண்ணதாசன்
எதை எழுதுவது, எதை விடுவது ? இமய மலையின் எந்த மூலையைப் புகழ்ந்தால் நியாயமாக இருக்கும் ? கடலிலே எந்தப் பகுதி அழகான பகுதி ? சிவாஜி ஒரு மலை, சிவாஜி ஒரு கடல்.
கண்களின் கூர்மையைச் சொல்வேனா ? அல்லது கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ? ஒன்பது பாவத்தைத் தொண்ணூறு வகையாகக் காட்டும்உன்னத நடிப்பைச் சொல்வேனா ? அவரைப்போல் இதுவரை ஒருவர் பிறந்த தில்லை; இனி பிறப்பார் என்பதற்கும் உறுதி இல்லை ! இது உண்மை. உலகறிந்ததே !
கவிஞர் வைரமுத்து
‘பராசக்தி‘ வெளிவந்து ஓராண்டுக்குப் பிறகுதான் நான் பிறக்கிறேன். நீங்கள் விருட்சமாய் வளர வளர நான் விதையாய் முளைத்திருக்கிறேன். உங்கள் படங்களைப் பார்க்கப் போனபோது மட்டுந்தான் கால் சட்டைப் பைகளில் நிரப்பிக் கொண்டு போன கடலைகளைத் தின்னாமல் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறேன். ‘மனோகரா‘ பார்த்துவிட்டு அந்த உணர்ச்சியில் சிறிதும் சிந்தாமல் அப்படியே வீட்டுக்கு வந்து சங்கிலிக்குப் பதிலாக தாம்புக் கயிற்றால் என்னைப் பிணைத்து இருவரை இழுத்துப் பிடித்துக் கொள்ளச் செய்துவிட்டு புளிய மரத்தைப் புருஷோத்தமனாக்கி என்னை வசனம் பேச வைத்தவர் நீங்களல்லவா…? கட்டபொம்மன்‘ பார்த்துவிட்டு சோளத்தட்டையில் வாள் செய்து என்னைச் சுழற்ற வைத்தவர் நீங்களல்லவா…? உலக சினிமா வரலாற்றில் இந்திய சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது. இந்தியா சினிமா வரலாற்றில் தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர் திலகத்திற்கு அதிமுக்கிய பங்கிருக்கிறது. நீங்கள் நடித்ததால் பல தமிழ்ப் படங்கள் உலகத் தரம் பெற்றன !
எழுத்தாளர் சுஜாதா
ராஜராஜ சோழன், சிவாஜி கணேசனாக நடித்த,''ராஜராஜ சோழன்" படம் பார்த்தேன்! (தமிழ்நாடு பாட நூல் நிறுவன 3 -ம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் ராஜராஜ சோழன் பாடத்தில் சிவாஜிசாரின் படமே இடம் பெற்றிருந்தது).
வியாட்நாம் வீடு சுந்தரம்
இந்திய சிறந்த நடிகர்களுக்கான விருது, இந்தியாவின் சிறந்த நடிகருக்கு வழங்கப்படவே இல்லை. இப்படி பல தரப்பட்ட பாராட்டுக்கள் இருந்தாலும், சிவாஜி நடிப்பை 'ஓவர் ஆக்ஸன்' என்று சொல்லும் சில விமர்சனச் சேவல்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சிவாஜி ஷப்ட்டிலாக நடித்த (அண்டர் ஆக்ட்) அநேகப் படங்களை இந்த வகையினர்,ரொம்ப சௌகரியமாகக் கண்டு கொள்ளமாட்டார்கள். தங்கள் வாதத்துக்குத் துணையாக எம்.ஆர். ராதா, ரங்கராவ், நாகேஷ், சந்திரபாபு, டி.எஸ். பாலையா, எஸ்.வி.சுப்பையா ஆகியோர் நடிப்பைத் துணைக்கழைத்துக் கொள்வார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ரங்கராவ்தானுண்டு, ஒரு சந்திரபாபுதானுண்டு. ஆனால், சிவாஜிக்குள் இவர்கள் எல்லோருமே உண்டு.
-
1st October 2016, 10:52 PM
#2289
Junior Member
Devoted Hubber
From Vikatan,
நடிகர் திலகத்தின் 89 வது பிறந்தநாள் இன்று...அவரைப்பற்றிய சுவாரஸ்யங்கள் சில....
நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் எடுத்துக்கொண்டிருந்த அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு ஒருநாள் பங்குதாரரான தயாரிப்பாளரின் நண்பர் அவரைப் பார்க்க வந்திருந்தார். படத்தின் கதாநாயகனுக்கு அதுதான் முதற்படம். படப்பிடிப்பை கொஞ்சநேரம் பார்த்த அவர், 'இந்த குதிரைமூஞ்சிக்காரனையா கதாநாயகனா போட்டிருக்க...வாயை இப்படி பிளக்கிறானேய்யா, படம் விளங்கினாப்லதான்' என அந்த நடிகரின் காதுபடவே பேசிவிட்டுச்சென்றார். அதைக்கேட்டுக்கொண்டிருந்த அந்த அறிமுக நடிகர் நொந்துபோனார். கவலைப்படாதய்யா எனஅவரை தேற்றிய தயாரிப்பாளர், படப்பிடிப்பை அத்துடன் நிறுத்தி அவரை சில மாதங்களுக்கு தனது சொந்த செலவில் சுற்றுலாத்தலம் ஒன்றுக்கு அனுப்பிவைத்தார். எல்லா செலவுகளும் தயாரிப்பாளருடையது.
திரும்பிவந்த சிவாஜியைப்பார்த்த தயாரிப்பாளரின் நண்பர் 'யாருப்பா இது புது கதாநாயகனா என்றார்...விபரத்தைச்சொன்னதும் அந்த தம்பியா இது...'என ஆச்சர்யத்தில் உச்சிக்கே போனார் தயாரிப்பாளர். அந்தளவுக்கு பொலிவாய் மாறியிருந்தார் அந்த அறிமுகநடிகர். நண்பரின் சொன்னதற்காக தன்னை படத்திலிருந்து நீக்காமல் தொடர்ந்து நடிக்க தனக்கு அளித்த அந்த தயாரிப்பாளரை தன் இறுதிக்காலம் வரை ஆண்டுதோறும் பொங்கலன்று அவரது சொந்த ஊரான வேலுாருக்கு சென்று ஆசிர்வாதம் பெற்று திரும்புவதை வழக்கமாக்கிக்கொண்டார் அந்த நடிகர். 1952 ல் வெளியாகி தமிழ்சினிமாவிற்கு புதியதொரு பாதையை வகுத்த அந்த திரைப்படம் பராசக்தி...அந்த கதாநாயகன் பின்னாளில் உலகப்புகழ்பெற்ற சிவாஜிகணேசன்...இப்படி சிவாஜியின் நடிப்பு வாழ்க்கையின் துவக்கமே ஒரு தன்னம்பிக்கைக்கதை...
விழுப்புரம் சின்னய்யா கணேசன் என்பதுதான் வி.சி கணேசன்...அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்துசாம்ராஜயம் என்ற நாடகத்தில் சிவாஜி கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்ததால், நாடகத்தின் நுாறாவது அரங்கேற்றத்தில் பெரியார், கணேசன் இனி சிவாஜி கணேசன் என பட்டம் வழங்கினார் . அந்த நாடகத்தில் நடிக்க தனக்கு வந்த வாய்ப்பை மறுத்து கணேசனுக்கு பரிந்துரைத்தது எம்.ஜி.ஆர் என்பது இன்னொரு சிறப்பு.
தியாகராஜபாகவதர்,பியு சின்னப்பா என சொந்தக்குரலில் பாடி நடிக்கும் நடிகர்களின் காலம் முடிந்தசமயம் சிவாஜி, எம்.ஜி.ஆர் கே.ஆர் ராமசாமி, எஸ்.எஸ்.ஆர் ஜெமினி கணேசன் என அடுத்த தலைமுறை நடிகர்கள் உருவானார்கள். அதில் தெளிவான தமிழ் உச்சரிப்பு, அழுத்தமான பாத்திர வடிவமைப்பு, உருக்கமான நடிப்பு என முதல்வரிசையில் நின்றவர் சிவாஜி.
எம்.ஜி.ஆரைப்போன்றே சிவாஜியும் அண்ணா மீது அளவற்ற காதல் கொண்டவர். ஆனால் அண்ணாவின் மற்ற தம்பிகள் அவருக்கு உரிய இடம் கிடைக்காமல் பார்த்துக்கொண்டனர். பின்னாளில் அவர் திருப்பதி சென்று வந்த விஷயத்தை பெரிதாக்கி மனஉளைச்சலை ஏற்படுத்தினர். நொந்துபோய் திமுகவிலிருந்து வெளியேறினார் சிவாஜி.
திருப்பதி சென்றால் திருப்பம் நேரும் என்பார்கள். சிவாஜிக்கு திருப்பதி 2 விதத்தில் திருப்புமுனையானது. அங்குதான் அவரது திருமணம் நடைபெற்றது. இறுதிவரை தன் மனைவியுடன் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார் சிவாஜி. ஆனால் அரசியலைப்பொறுத்தவரை அவருக்கு வேறு திருப்பம் நிகழ்ந்தது. அண்ணாவிடம் ஈர்ப்பு கொண்டு திமுகவில் இணைந்து பணியாற்றிய சிவாஜி, 50 களின் மத்தியில் திருப்பதி சென்றார். திரும்பிவந்தபோது அரசியல் களம் அதகளப்பட்டது. திருப்பதி கணேசா திரும்பிப்போ கணேசா என அவரது பட பாணியிலேயே போஸ்டர் ஒட்டி திமுகவினர் எதிர்ப்பு கிளப்பினர். நாத்திகக் கட்சியில் இருந்துகொண்டு திருப்பதி போனதால் இந்த எதிர்ப்பு. தியாகி குடும்பத்தை சேர்ந்தவரான அவரை காங்கிரஸ் அணைத்துக்கொண்டது.
திரையுலகிலும் அரசயலிலும், எதிரும் புதிருமாக எம்.ஜி.ஆர்-சிவாஜி விளங்கினாலும் தனிப்பட்ட முறையில் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டிக்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். அமெரிக்கா அரசின் அழைப்பின்பேரில் அஙகு சென்று வந்த சிவாஜிக்கு நடிகர் சங்கம் சார்பில் பெரும் வரவேற்பை நிகழ்த்தினார் எம்.ஜி.ஆர். விமான நிலையத்திலிருந்து அவரை மாலை மரியாதையுடன் சாரட் வண்டியில் அழைத்துவந்தார். சிவாஜி- எம்.ஜி.ஆர் இடையே தொழிற்போட்டி உச்சத்தில் இருப்பதாக பத்திரிகைகள் எழுதிவந்த நேரத்தில் இந்த நிகழ்வு அதற்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தது. இதற்கென ஒரு சிறப்பு மலரை வெளியிட்ட எம்.ஜி.ஆர், அதில் எந்த நடிகனுக்கும் கிடைக்காத பேறு இது என்றும், சிவாஜி ஒரு மகாநடிகன் எனவும் ஈகோ இன்றி பாராட்டித்தள்ளினார். இறுதிக்காலம் வரை ஒருவர் வீட்டு நிகழ்ச்சியில் இன்னொருவர் பங்குகொள்வதை இருவரும் தவறாமல் கடைபிடித்தனர். சிவாஜி வீட்டுப்பிள்ளைகள் எம்.ஜி.ஆரை பெரியப்பா என்றே அழைப்பர். அத்தனை நட்பை பேணிவந்தனர் திரையுலகில்.
படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட மறுநிமிடத்திலிருந்து அந்த கதாபாத்திரதோடு ஒன்றிவிடுவார் சிவாஜி. தன் அருகில் இருப்பவர்களை கண்களால் அளவெடுப்பதுமனிதர்களை அவ்வப்போது உற்று கவனிப்பார். அவர்களுக்கு சிவாஜி ஏன் தன்னை அபபடி கவனிக்கிறார் என குழம்புவார்கள். அவரது திரைப்படம் வெளியாகும்போது அதற்கான விடை கிடைக்கும். ஆம். அவர்களின் உடல்மொழியை படத்தில அற்புதமாக வெளிப்படுத்தி பாத்திரத்துக்கு உயிர்கொடுத்திருப்பார். திருவருட்செல்வர் திரைப்படத்தில் சிவாஜியின் நடிப்புக்கு ஆதாரமானவர் காஞ்சி சங்கராச்சாரியார்.
நடித்துக்கொண்டிருக்கும்போதே தான் இறந்துவிடவேண்டும் என்பது சிவாஜியின் பெரும் ஆசையாக இருந்தது. அப்படி இறப்பதே தனக்கு பெருமையளிப்பதாகும் என தன் நெருங்கிய நண்பர்களிடம் சொல்வார். படப்பிடிப்புக்கு சென்றபோது எதிர்பாராமல் மரணமடைந்த முத்துராமனுக்கு நிகழ்ந்த இரங்கல் கூட்டத்தில் முத்துராமன் நம்மையெல்லாம் விட சிறந்த நடிகன்...அதனால்தான் தொழிலுக்கு சென்ற இடத்தில் இறந்தார் என நெகிழ்ந்தார் சிவாஜி. ஆனால் சிவாஜியின் இந்த ஆசை நிறைவேறாமல் போனது.
குடும்பத்தினர் மேல் அளவற்ற அன்பு கொண்டிருந்தவர் சிவாஜி. தன் 2 சகோதரர்கள் குடும்பங்கள் உட்பட அனைவரும் இறுதிவரை ஒன்றாகவே வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது. மாபெரும் நடிகன் என்றாலும் அவருக்கு கணக்கு வழக்கு தெரியாது. தன் படத்தில் தன் சம்பளம் என்னவென்று கூட கேட்டு அறிந்துகொள்ள மாட்டார். எல்லாவற்றையும் அவர் தம்பி சண்முகம் பார்த்துக்கொள்வார். தன் சகோதரர்கள் மீது அளவற்ற அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தார் சிவாஜி.
சிவாஜி தீவிர வேட்டைப்பிரியர். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சொந்த ஊருக்கு செல்லும்போது தனது நெருங்கிய நண்பர், வேட்டைக்காரன் புதுார் மாணிக்கத்துடன் துப்பாக்கி தோட்டா சகிதம் கம்பீரமாக காட்டுக்கு புறப்படுவது அவருக்கு பிடித்த விஷயம்.
சிவாஜியின் தந்தை காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்று சுதந்திரப்போரில் பங்கேற்ற தியாகி. ஆனால் சிவாஜிக்கு திராவிட இயக்கத்தின் மீதுதான் ஆசை உண்டானது. அண்ணாவின் தலைமை, முரண்பட்டு காமராஜர் தலைமை, காமராஜரின் மரணத்திற்கு பிறகு ஜனதா தளம் என பயணப்பட்டு தன் சேவைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காத விரக்தியில் இறுதியாக தமிழக முன்னேற்ற முன்னணியை துவங்கினார். திரையுலகில் ஈடில்லா புகழ்பெற்ற அவரால் அரசியலில் ஜொலிக்கமுடியவில்லை.
அமெரிக்கா சென்ற சிவாஜி விரும்பி பார்க்க விரும்பியது ஹாலிவுட் மார்லன் பிராண்டோவைத்தான். பார்த்ததும் அவரை பாராட்டித்தள்ளவேண்டும் என்ற கற்பனையுடன் சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி, சந்திப்பின்போது சிவாஜியை மார்லன் பிராண்டோ பாராட்டித்தள்ளிவிட்டார். நெகிழ்ச்சியின் விளிம்பிற்கு போனார் சிவாஜி.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் படத்திற்காக எகிப்து அதிபர் நாசர் கெய்ரோவிக்கு வர சிவாஜிக்கு அழைப்பு விடுத்தார். அங்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் ஒருநாள் மேயராக சிவாஜிக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அதன் சாட்சியாக அவருக்கு அந்நாட்டின் சின்னம் பொறித்த சாவியை வழங்கினார் எகிப்து அரசு. இந்த கவுரவம் பெற்ற ஒரு திரைக்கலைஞர் சிவாஜி மட்டுமே.
கட்சியிலும் ஆட்சியிலும் தன் கைமீறி நடந்த பல சம்பவங்களால் மனமும் உடலும் தளர்ந்து உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த எம்.ஜி.ஆரை அவரது இறுதிக்காலத்தில் சந்தித்தார் சிவாஜி. அப்போது தம்பி உனக்கு ஒரு பொறுப்பை தரப்போகிறேன். நாளை வா அதுபற்றி பேசலாம் என்றார் எம்.ஜி.ஆர். ஆனால் சிலவேலைகளால் சிவாஜியால் போகமுடியவில்லை. சில நாட்களில் எம்.ஜி.ஆரின் மரணம் நிகழ்ந்தது. எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு என்ன பொறுப்பை தர எண்ணியிருந்திருப்பார் என்ற ரகசியம் அந்த இரு திலகங்களுக்குள் முடிந்துபோனது.
-
2nd October 2016, 05:53 PM
#2290
Junior Member
Devoted Hubber
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 146 – சுதாங்கன்.
சிவாஜி : நீ வந்து கேக்கணும்ங்கிற அவசியமில்லே. ஒரு போன் பண்ணு.கொடுத்து அனுப்புவாங்க. எனக்கு வேண்டியதெல்லாம் படத்தோட மொத்த வசனங்கள் அடங்கின முழு ஸ்கிரிப்ட். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ எழுதி முடிச்சுட்டு, முதல்லேருந்து எல்லாத்தையும் ஒரு தடவை எனக்கு படிச்சுக் காட்டு.
`பாசமலர்’லேருந்து இதுவரைக்கும் நீ எழுதின எந்த ஸ்கிரிப்டையும் நான் படிக்கச் சொல்லி கேட்டதில்லே.ஷுட்டிங்குல , செட்டுல சொன்ன வசனத்தை நான் பேசியிருக்கேன். அவ்வளவுதான்.
இந்த படத்திலே என்னமோ எனக்கு ஒரு `இண்ட்ரஸ்ட்’ ஏற்பட்டிருக்கு.அதோட, டைரக்டர் தாதா மிராசி தமிழ் தெரியாதவன். ஆனா நல்லா எடுப்பான். அதனால தான் அவனைப் போட்டிருக்கோம்.
எங்கள்ல நீயும் ஒருத்தன். அதனால இதை ஒன்னோட சொந்தப் படமா நினைச்சுக்கிட்டு, அப்பப்போ ஷீட்டிங்குக்கு வந்து டயலாக் சொல்லிக் கொடுத்து மேக்ஸிமம் ஒத்துழைக்கணும். நான் கேட்டதுக்காக எழுதி போட்டுட்டு ஓடிடாதே.’
வேடனிடம் அகப்பட்ட மான் வேறு வழியின்றி மிரண்டு போய் நிற்குமே, அதைப் போல நின்றேன்.
சிவாஜி: எப்ப எழுத ஆரம்பிக்கப்போறே?
ஆரூர்தாஸ் : யோசிச்சு சொல்றேன்.
சிவாஜி :யோசிக்கறதுக்கெல்லாம் நேரம் இல்லே.
ஆரூர்தாஸ் : ஷெட்யூல் பை ஷெட்யூலா எழுதிக் கொடுக்கட்டுமா?
சிவாஜி : `ஷெட்யூல் பை ஷெட்யூலா?’ டேய், ஆரூரான், ஒரே ஷெட்யூல்ல ஜூலை மாசத்துக்குள்ளே படத்தை முடிச்சு ஆகஸ்டுல ரிலீஸ் பண்ணணும்னு சண்முகம் சொல்லியிருக்கான்.
ஆரூர்தாஸ் : அப்படீன்னா இப்ப எனக்கு இருக்கிற நெருக்கடியான நிலைமையில ராத்திரியிலே உக்காந்து விடிய விடிய எழுதுறதை தவிர வேறு வழியில்லை.
சிவாஜி : சரி, எத்தனை ராத்திரியிலே எழுதி முடிப்பே?
ஆரூர்தாஸ் : ` ஏழு இரவுகள்! ஒன்று, இரண்டு நாள் கூட ஆகலாம். அது நான் போற வேகத்தை பொறுத்தது.
சிவாஜி : எனக்கு தெரியும். நீ வேகமாக எழுதக்கூடியவன். சீக்கிரம் முடிச்சிடுவே. ஓகே! எப்ப எழுத உக்கார போறே?
ஆரூர்தாஸ் : இன்னிக்கு ராத்திரியே.
சிவாஜி : வெரிகுட், எங்கே உக்காந்து எழுதப் போறே ?
ஆரூர்தாஸ்: எங்கே சொல்றீங்களோ அங்கே.
சிவாஜி: ஒண்ணு செய்றியா?
ஆரூர்தாஸ்: சொல்லுங்க.
சிவாஜி: ராயப்பேட்டை சண்முக முதலித்தெருவிலே நான் இருந்த அந்த வீடு இப்ப காலியா இருக்கு. அதோட, மொட்டை மாடியிலே நான் தனியா ஓய்வெடுக்கிறதுக்காக ஒரு சின்ன கீத்துக்கொட்டகை போட்டிருக்கேன். அமைதியா இருக்கும். நல்லா காத்து வரும். அது உனக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன். அங்கே உக்காந்து எழுதுறியா? ஒரு தொந்தரவும் இருக்காது.
ஆரூர்தாஸ்: அதிலே ஒரு சின்ன கண்டிஷன்.
சிவாஜி : என்ன?
ஆரூர்தாஸ்: தேவர் பிலிம்ஸ் எழுத்து வேலையோட கூட ஷூட்டிங்குக்கும் வந்து `டயலாக்’ சொல்லிக் கொடுக்கணும்னு தேவரண்ணனும் எம்.ஜி.ஆரும் சொல்லி இருக்காங்க. ஆரம்பத்திலேர்ந்தே அப்படித்தான். அதனால ராத்திரி ஒன்பது மணிக்கு மேலதான் நான் `புதிய பறவை’ க்கு எழுத முடியும்.
சிவாஜி: உன் சவுகரியப்படி செய். அப்போ, நம்ம பையன் ராஜீவையும் டிரைவர் முனிசாமியையும் உன்னோட தங்க வெச்சிடறேன். நீதான் சிகரெட் கூட குடிக்கமாட்டியே. வயித்துக்கு வஞ்சகமில்லாம சாப்பிடுவே, அவ்வளவுதான். நீ ராத்திரியிலே இடியாப்பம், பாயா பிரியமா சாப்பிடுவேன்னு எனக்குத் தெரியும். எதிர்ல மெயின் ரோட்டுல `அமீன் கபே’ இருக்கு. அங்கேருந்து உனக்கு விருப்பமானதை வாங்கிக்கிட்டு வரச் சொல்லி சாப்பிட்டுக்க. சிரமத்தைப் பாக்காம எழுதி முடிச்சிட்டீன்னா, உடனே ஷூட்டிங்க ஆரம்பிச்சு முடிச்சு ஆகஸ்ட்ல ரிலீஸ் பண்ணிடலாம். பிசினஸெல்லாம் ஆயிடுச்சு. சரி. வேற என்ன வேணும் ?
ஆரூர்தாஸ்: ஒண்ணும் வேணாம். கவலைப்படாதீங்க. என் அன்னையின் அருளாலேயும், ஆசீர்வாதத்தினாலேயும் ஆகஸ்ட் மாசத்திலே நம்ம `புதிய பறவை’ திரைவானத்திலே பறந்து புகழையும் வெற்றியையும் கொடுக்கும். ஷ்யூர். இப்படி கூறிய வண்ணம் அவரது காலைத் தொடப்போன ஆரூர்தாஸை தடுத்துப் பிடித்துத் தன்னோடு கட்டி அணைத்துக்கொண்டு அவரது தோளில் பாசத்தோடு தட்டிக்கொடுத்தார் சிவாஜி.
ஆரூர்தாஸின் ஆந்தை வேலை ஆரம்பமாயிற்று.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், ஆரூர்தாஸ் அன்றைய பிரபல தந்திரக் காட்சி ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான `பாபுபாய் மிஸ்திரி’யின் இந்தி மொழிப் படமான `சம்பூர்ண ராமாயண’த்துக்கு வசனம் எழுதி தமிழாக்கம் செய்தார். அதில் ஒரு காட்சி. அசோகவனம், நள்ளிரவு நேரம். சீதை உறங்காமல் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். லங்கேஸ்வரனான ராவணன் வருகிறான். சீதையை பார்த்துக் கேட்கிறான்.
`ஜனக நந்தினி உலகமெல்லாம் உறங்கிக்கொண்டிருக்கிறது. உன் விழிகள் மட்டும் இன்னும் உறங்கவில்லையா?’
அதற்கு அவள் சொல்கிறாள்– `என் நாதரைக் காணும்வரையில் நான் கண்ணுறங்க மாட்டேன்.
அதைப் போல, ராயப்பேட்டை பகுதி முழுவதும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அந்த நள்ளிரவில் `கொலகாரன்பேட்டை’ என்று அன்று அழைக்கப்பட்ட இடத்தில் உள்ள சண்முகம் முதலி தெருவில், ஒரே ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஓலை வேயப்பட்ட அறையில் மட்டும் ஒளி தெரிகிறது. உள்ளே, பலவந்தத்திற்கு ஆளான ஒரு வசனகர்த்தா பாயா, இடியாப்பம் தின்றுவிட்டு `மாங்கு மாங்கு’ என்று இடைவிடாது எழுதி தள்ளிக்கொண்டிருந்தார்.
அவருக்கு துணையாக துவார பாலகர்கள் போல, டிரைவர் முனிசாமியும், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் குழந்தை உள்ளம் கொண்ட ராஜூவும் கையை தலையணையாக வைத்துக்கொண்டு கண்கள்மூடி மெல்லிய குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சூழலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் `புதிய பறவை’ யை வண்ணத்தில் வசனம் பேச வைப்பதற்காக, அந்த எழுத்தாளர் தன் மூளையை கசக்கிக்கொண்டிருந்தார்.
`தினமும் பத்து மணியிலிருந்து விடியற்காலை ஐந்து மணி வரையில் `புதிய பறவை’ படத்திற்கு எழுதிக்கொண்டிருந்தார் ஆரூர்தாஸ். அதனால் அவர் கண்கள் சிவந்திருந்தன. அப்போது பகலில் அவர் தேவர் பிலிம்ஸின் `தொழிலாளி’ படத்தில் பகலில் வேலை செய்து கொண்டிருந்தார். இவரது கண்களை கவனித்த எம்.ஜி.ஆர். `என்னாச்சு?’ என்று கேட்டார்.
சொன்னார் ஆரூர்தாஸ்.
சிறிது நேரம் மவுனமாக இருந்துவிட்டு சொன்னார் எம்.ஜி.ஆர். `அன்புக்கு கட்டுப்பட வேண்டியதுதான். அதே சமயம் உடம்பையும் பாத்துக்கணும். உடம்பை வச்சுத்தான் உழைப்பு. இதைக் கேட்டு அழுது விட்டார் ஆரூர்தாஸ்.
அதே சமயம் இன்னொரு நாள், எம்.ஜி. ஆர். படத்தின் படப்பிடிப்பின் மதிய நேர இடைவேளை.
அப்போது–
Bookmarks