Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தவப்புதல்வன்- 1972

    முக்தா ஸ்ரீனிவாசன் ,சிவாஜியுடன் "அந்த நாள்" முதல் பணி புரிபவர். சில சிறு வெற்றி படங்கள் எடுத்த பிறகு நடிகர்திலகத்துடன் இணைந்து நிறைகுடம்,அருணோதயம் முதலிய வெற்றிகள் கண்டு தவப்புதல்வனை மூன்றாவது தொடர் வெற்றி படமாக வெளியிட்டார்.அவர் எல்லா படங்களுக்கும் அவர் இயக்குனர். அவர் அண்ணன் ராமசாமி பெயரில் தயாரிக்க படும்.

    முதலில் சில வருடங்கள் உதவி இயக்குனாராக பணி புரிந்து ,முழு இயக்குனராக முதலாளி என்ற சூப்பர் ஹிட் படத்துடன் 57 இல் படத்துறையில் நுழைந்தவர்.ஆரம்பத்தில் எஸ்.எஸ்.ஆர் மற்றும் ஜெமினி உடன் பணிபுரிந்தாலும் பின்னாட்களில் இவர்களை உபயோகித்ததில்லை. 69 முதல் சிவாஜியுடன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இணைந்தார்.

    அவர் படங்களுக்கென்று தனி சூத்திரம் உண்டு.

    1) கதாநாயகன் அல்லது நாயகி ஏதாவது உடற்குறை அல்லது மன பிறழ்வு கொண்டிருப்பார்கள்.
    2)இவர்கள் குறைகளால் ஏதாவது மோசமான விளைவு நேரும்.
    3)அந்த விளைவுக்கோ செயலுக்கோ அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.
    4)பழிதுடைத்து, அல்லது குறை தீரும் வரை அவர்களை வில்லனோ வில்லியோ ஆட்டி படைப்பார்கள்.
    5)கதாநாயகன் அதை மற்றவரிடமிருந்து மறைத்து உண்மை வெளிக்கொண்டு வர முயல்வார்.
    6)நகைச்சுவை நடிகர்களுக்கென தனி track ஓடும்.
    7)ஒரு கட்டத்தில் நகைச்சுவை நடிகர்கள் ,கதாநாயகனின் பிரச்சினையில் இணைந்து தீர்க்க பார்க்கும் போது, பிரச்சினையில் வேடிக்கையான திருப்பங்கள் சேர்ந்து படத்தை நகர்த்தும்.
    8)பெரும்பாலும் முடிவு சுபமாகவே இருக்கும்.
    9)நகைச்சுவை முக்கியத்துவம் பெற்றாலும் ,மனதை வருடும் காட்சிகளும் இருக்கும்.
    10)நாகேஷ்,சோ,மனோரமா தவறாமல்.

    ---இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி,டி.கே.ராமமூர்த்தி,குமார் ,கே.வீ.மகாதேவன் என்று மாறி மாறி விஸ்வநாதனிடம் நிலை கொண்டது.

    ---வித்யா movies என்ற போர்வையில் ரவி,ஜெய்,முத்துராமன் என்றும் தொடர்ந்து படங்கள் எடுத்தார்.

    ---நடிகர்திலகத்தை வைத்து 9 படங்கள் இயக்கி தயாரித்தார்.

    ---பலவேறு பட்ட கதாசிரியர்களுடன் பணி புரிந்துள்ளார். குறிப்பிட தக்கவர்கள்-கே.பாலசந்தர்,மதுரை திருமாறன்,மகேந்திரன்,சோ,தூயவன், கலைஞானம்,ஏ.எஸ்.பிரகாசம்,விசு ஆகியோர்.

    ---மிக குறைந்த செலவில் படமெடுத்து பெரும் லாபம் கண்டவர்.

    ---பாலாஜி,திருலோகச்சந்தர்,மாதவன் வரிசையில்,நடிகர்திலகத்தின் loyalist ஆக இருந்து மிக பெரும் பலன் கண்டு ,லாபத்துடன் மன அமைதி கொண்டு மதிப்புடன் வாழ்ந்தவர்.

    ---மெகா ஹிட் படங்கள் தவப்புதல்வன்,அந்தமான் காதலி,கீழ் வானம் சிவக்கும். ஹிட் படங்கள் நிறைகுடம்,அருணோதயம்,இமயம்,பரீட்சைக்கு நேரமாச்சு. சுமார் வரிசையில் அன்பை தேடி,இரு மேதைகள்.

    ---பழுத்த காங்கிரஸ் தேசியவாதி.

    ஒரு மத்யதர குடும்பத்து கல்யாண விருந்துக்கு செல்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கே தெரியும் traditional மெனு .breakfast ,டின்னெர் எல்லாமே நீங்கள் எதிர்பார்த்த படியே. ஆனால் உப்பு,உறைப்பு,இனிப்பு எல்லாமே சரியான விகிதத்தில் கலந்து சுவை கூடுதலாய், பரிமாறும் விதமும் பாந்தமாய் இருந்தால் மனதுக்கு ஒரு இதம் ஏற்படுமல்லவா?அதைத்தான் தவப்புதல்வனில் ரசிகர்கள் உணர்ந்தனர்.தூயவன் திரைக்கதை படு கச்சிதம்.

    நிர்மல் இசையறிவு மிகுந்த ,இசைக்கருவிகள் பலவற்றில் இயல்பான வாசிப்பு திறமை கொண்ட ,அன்னையுடன் தனித்து வாழும் ஒரு பணக்கார இளைஞன்.டாக்டர் வசந்தி அவனை மணக்க இருக்கும் மாமன் மகள்.இருவருமே ஒருவரின் திறமை மீது மற்றவர் மரியாதை வைத்து,ஒருவரின் முன்னேற்றத்தில் மற்றவர் உண்மை அக்கறை செலுத்தும் தூய அன்பு கொண்டவர்கள்.

    நிர்மல் தன் நண்பன் james வேண்டுகோளை தட்ட முடியாமல் ,அவன் ஹோட்டல் இல் trumpet வாசிக்க ஒப்பு கொள்ள,அதன் மூலம் நடன காரி விமலா அவள் குடிகார புல்லுருவி அண்ணன் ஜம்பு இவர்களுடன் அறிமுகமாகி ,அவர்களுடன் உரிய எச்சரிக்கையுடன் நடக்கிறான். இடையில், நிர்மலுக்கு அவன் பரம்பரை நோயான மாலைக்கண் தாக்க,தன் தந்தையை தாக்கி விபத்திலும் கொன்ற அந்த நோய் தாயை சித்த சுவாதீனம் இழக்க வைத்ததையும், தாய் இந்த உண்மையை தாங்க மாட்டாள் என்பதையும் ,வசந்தியிடம் ரகசியம் தங்காது என்பதால் இரவுகளில் தான் வாசிக்கும் ஹோட்டல் அறையில் தங்கி ரகசியம் காக்கிறான்.தற்செயலாய் திருட வரும் ஜம்புவிற்கு இந்த உண்மை தெரிய விமலா இதை வைத்து ,வசந்தியை அறைக்கு வரவழைத்து நிர்மல் தன்னுடன் அந்தரங்கமாய் இருப்பது போல தோற்றம் கொடுத்து அவர்கள் கல்யாணத்தை நிறுத்துகிறாள்.

    நிர்மல் தாய் விரும்பும் பெண்ணிற்கே கல்யாணம் செய்து சொத்தும் சேரும் என்பதால் ,வசந்தியின் கார் முன் தற்கொலை செய்ய வருவது போல் நடித்து தனக்கும் நிர்மலுக்கும் தொடர்புண்டு என்று நிருபித்து, நிர்மலை மிரட்டி வீட்டிற்கே வருகிறாள்.james ,விமலாவை அங்கிருந்து விரட்ட அவள் அண்ணன் போல் விமலாவுடன் வருகிறான். விமலாவை விரட்ட சதி செய்யும் ஒவ்வொரு முறையும் சந்தர்ப்பம் விமலாவிற்கே சாதகமாகி ,கல்யாணம் வரை போக, தற்செயலாய் உண்மை வசந்திக்கு தெரிய, ஒரு வெளிநாட்டு டாக்டர் சிகிச்சையால் நிர்மல் குணமாகி ,விமலாவின் குட்டு வெளியாகி வசந்தியும் நிர்மலும் சேர james அரசியல் பஞ்ச் காமெடியுடன் சுபம்.

    எனக்கு நினைவு தெரிந்த வரை ஒவ்வொரு அசைவுக்கும் லாஜிக் பார்த்து,மிக சுவையான திருப்பங்கள்,மனதை தொடும் பன்முகம் கொண்ட காட்சியமைப்புகள் என்று ஒரு சில மசாலா குடும்ப படங்களே ,ஒரு action பட விறுவிறுப்புடன் அமைந்தன. அவற்றில் ஒன்று தவப்புதல்வன். ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வில்லாத திரைக்கதை,அளவான வசனங்கள்.உறுத்தாத executive வகை இயக்கம்.

    சுவையான காட்சிகளுக்கு பஞ்சமே வைக்காத படம்.love is fine நடனம், வசந்தியுடன் ஹோட்டல் trumpet வாசிப்பதை வீட்டில் சொல்லாமல் மாட்டும் இடம், வாசு திருட வரும் இடத்தில் கண்தெரியாமல் சிவாஜி அவருடன் மோதும் இடம்,
    அம்மாவுக்கு தவறுதலாய் விஷ மருந்து கொடுக்க முயலும் காட்சி ,தான்சேன் காட்சி,விமலா திட்டமிடும் காட்சிகள்,james (சோ),மனோரமா வசந்தியை மாட்ட வைக்க பார்த்து backfire ஆகும் சுவாரஸ்யம் (முக்தா பஞ்ச் ),சிவாஜியை சகுந்தலா ( பிரசித்தி பெற்று தொடர்ந்த ஜோடியின் முதல் படம்) tease பண்ணும் காட்சிகள்,தான் கொடுத்த கம்பு தனக்கே உதவும் காட்சி,சிவாஜி வாத்தியத்தை உடைத்து விரக்தியை வெளிப்படுத்த கே.ஆர்.விஜயா அதே பாணியில் தன் மருத்துவ கருவிகளை உடைக்கும் காட்சி,கிண்கிணி கிண்கிணி கிறிஸ்மஸ் தாத்தா காட்சி, போட்டி பாடல் காட்சி ,இரு பகுதி கொண்ட விறு விறு இறுதி காட்சி , வசந்தியின் நல்ல நோக்கம் கேள்விக்குள்ளாவது என்று பல நல்ல காட்சிகள் சிறந்த முறையில் திரைக்கதையுடன் இணைந்தே பயணிக்கும். மற்ற முக்தா படங்களை விட கூடுதல் professionalism தெரியும்.


    சிவாஜியின் சிகை அலங்காரம்(முக்தா சிவாஜிக்கு நிறைகுடத்தில் ஆரம்பித்த பிரத்யேக ஸ்டைல் அக்கால கிருதாவுடன்),
    வித விதமான டிசைன் குர்தா டைப் மேலுடை,இளமை தெறிக்கும் அழகு,அமெரிக்கையான நடிப்பு,படம் முழுதும் பிரமாதம். மாலைக்கண் நோய்க்கு முழு விளக்கம், கூடுதல் பிரச்சினை என்று மெடிக்கல் ஆகவும் நன்கு டீல் பண்ண பட்ட படத்தில் (Nyctalopia ,xerosis ,edema ) சிவாஜி dry eyes பிரச்சினையில் கண்ணை கொட்டுவதும், கண் தெரியாத போது காதை சிறிதே திசை நோக்கி சப்தம் உணர்வது என்று கலக்குவார். துள்ளல் ஸ்டைல் நானொரு காதல் சந்நியாசி,தான்சேன் இசை கேட்டால், உருக்க கிண்கிணி,முத்திரையுடன் போட்டி பாடல் காட்சி என ரசிகர்களுக்கு full மீல்ஸ் . வாத்தியங்களை உடைத்து முடித்து கடைசியாக கிடாரை எடுத்து வசந்தி போய் விட்டதை உணர்ந்து கடைசி நிமிடத்தில் உடைக்காமல் அணைத்து கொள்ளும் பரவச உருக்க ஈடுபாடு,கடைசியில் தன்னை படுத்தி எடுத்தாளே என்று விமலா கண்ணை கட்டி பரபரப்பாய் பழி வாங்கும் டீசிங் என்று இந்த படத்திலும் அவர் கொடி நாட்டி விடுவார்.

    மெல்லிசை மாமன்னர் இந்த இசையுடன் சம்பந்தமுள்ள படத்திற்கு நன்றாக பங்களித்துள்ளார்.(திருப்தியா கார்த்திக் சார்?)
    சோ,மனோரமா,வாசு ,பண்டரிபாய்,செந்தாமரை அவரவர் பங்கை உரிய முறையில் தர, விஜயா,சகுந்தலா செமையாய் ஸ்கோர் செய்வார்கள்.இந்த படத்திற்கு விஜயா ஓகே.(டூயட் கிடையாது)

    வழக்கமாய் வெற்றி பெரும் முக்தா formula ,இந்த படத்தை சரியான விகித உணர்ச்சி,entertainment ,விறுவிறுப்பு, பாத்திர படைப்பில் முழுமை ,படம் முழுதும் தெரியும் sincerity &seriousness தன்மை இவற்றுடன் ரசிகர்கள்,பொதுமக்கள் (அனைத்து வயதினர்) திருப்தி தந்ததால் பெரிய ஹிட் என்ற status எட்டியது.
    Last edited by Gopal.s; 1st December 2016 at 02:34 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Likes sivaa, Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •