Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோபால்!



    வார்ரே வா! கலக்கி விட்டீர்கள். என்ன ஒரு அழுத்தமான 'ராஜ' ஆய்வு. மூன்று முறை படித்து விட்டேன். 'ராஜா' என்றால் அப்படியே 'சுர்ர்' என்று ஏறுகிறது. ஆதிராம் சார் சொன்னது போல அட்சயப் பாத்திரம் கொண்டவன் ராஜா. எடுக்க எடுக்க சுரந்து கொண்டே இருக்கும். அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி. வந்து கொண்டே இருக்கும்.

    //பொறுமையாய் இரு என்று லேசான தலையாட்டலுடன்//

    ஆஹா! அந்த ஒரு அலட்டாத தலையாட்டலில் தரணியே அடிமைப்பட வேண்டும். 'பொறுமையா இரு' என்பதற்கு பொருத்தமான தலையாட்டல். சைட் போஸ்கள் வர்ணிக்க முடியாத அழகு அம்சங்கள்.

    'சாதாரண கான்ஸ்டபிக்கிட்டே நான் பேசறதில்லேன்னு உனக்குத் தெரியுமில்லே' என்று சந்திரபாபுவிடம் அலட்சியமாக சொல்லும்போது ஒரிஜினல் ராஜாவின் குணத்தையும், திருடனாக நடிக்கும் ராஜாவின் குணத்தையும் ஒரு சேர காட்டி அற்புதமாக வியக்க வைப்பார். இது அதிகாரி ராஜாவுக்கும் பொருந்தும். நடிப்புக் 'கள்ளன்' ராஜாவுக்கும் பொருந்தும்.

    //LIghter இல் போட்டோ எடுக்கும் லாவகம்... வேறு ஒரு நடிகன் கனவு கூட காண முடியாத நடிப்பு.//

    வாயில் ஸ்டைல் சிகரெட்டுடன் எதிராளிகள் உணராவண்ணம்... அவர்கள் நம்பும் வண்ணம் அதே சமயம் செய்யும் வேலையை நீங்கள் சொல்வது போல லாவகமாக, சாமர்த்தியமாக செய்வதோடு பார்வையாளர்களுக்கு இது வில்லன் கோட்டையில் 'ராஜா'வின் கள்ளத்தனமான நடிப்பு என்பதையும் புரியவைத்து விடுவார். அந்த சமயத்தில் எதிரிகளுக்கு சந்தேகம் வராத சிரிப்பை உதிர்ப்பார். அந்த சிரிப்பில் ஜாக்கிரதை உணர்வும் இருக்கும். போட்டோ எடுக்கும் போது எச்சரிக்கையாக எடுப்பார். இரண்டு மூன்று snaps எடுத்தவுடன் அந்த சிரிப்பில் வெற்றிப் பெருமிதம் ஜொலிப்பதை புரிந்தவர்கள் வெகு இலகுவாக உணர முடியும். சந்தேகக் கோடு பரவா வண்ணம் அடியாளை பின்புறம் சிரித்தபடி தட்டிக் கொடுத்து அடுத்த ஸ்டெப் முன்னேறுவது அபாரம். Flash பண்ணும் போதும் ஸ்டைல் கொப்பளிக்கும். Handling அருமையாக இருக்கும். கட்டை விரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் இடையே லைட்டரை வைத்து அற்புதமாக சில தடவை ஷேக் செய்வார். Focus பண்ணுவதும் அற்புதமாகத் தெரியும். இவையனைத்தும் சில வினாடிகள்தாம்.

    உலகில் நம் ரசிகர்களை போல கொடுத்து வைத்தவர்கள் எவரும் இல்லை. ருசிக்க ருசிக்கத் தந்தவன் நம் ராஜா.

    //தங்கத்தை தொட்டதும் கையை தட்டி விடும் அவசர அலட்சிய எச்சரிக்கை//

    அற்புதம்...நான் என்னென்ன நினைக்கிறேனோ அது அப்படியே உங்கள் எழுத்தில் வந்து விழுந்து என்னை பிரமிக்க வைக்கிறது. ஜம்பு தங்கத்தைத் தொட்டதும் படுஅவசரமாக 'வெடுக்'கென்று தட்டி விடுவார். அது போல அபின் பெட்டியை முகர்ந்து smell செய்யும் அழகே அழகு.

    பாலாஜி இருக்கும் போதே ஜெயாவை ஜாலியாக சைட் அடிப்பது ஜோரான ஜோர். பாலாஜி அதை அதிகமாக கண்டு கொள்ளாமல் காட்டிக் கொள்வது சூப்பர். (பாஸிற்கு விசுவாசம், கொடுக்கும் வேலையை எப்பாடு பட்டும் முடித்து பெயர் வாங்கும் கொத்தடிமை வில்லன். ராஜா மூலமோ அல்லது யார் மூலமோ காரியம் நடந்ததும் அப்படியே கழற்றி விட்டு செல்லும் பாஸ் பக்தி என்று பாலாஜியும் ரகளை...'ராஜாவுக்கு உன் மேல ஒரு கண் இல்லே' என்ற ராஜாவின் காதலை ராதாவிடம் கேட்டு அதை அப்படியே தனக்கு சாதமாக்கிக் கொள்ளும் எத்தன். எல்லாவற்றையும் பாஸிற்காக செய்யும் பரிதாப பாபு. இறுதியில் அதே பாஸ் 'அவன் துரோகின்னா அவனை இங்க ஏண்டா கூட்டிகிட்டு வந்தே?' என்று விஸ்வத்தை அழைத்துச் செல்லும் பாபுவிடம் புத்திசாலித்தனம் கலந்த நியாயமான கேள்வியைக் கேட்டு பாபுவையும் நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவது ஏக களேபரம். அத்தனை நாள் பாபுவின் பாஸ் விசுவாசம் ஒரே நொடியில் தவிடுபொடியாகும்.

    //ஜம்புவிடம் கத்தியை காட்டி ஓடுடா என்ற மிரட்டல் தொனியில் காட்டுவது//

    சண்டையின் இறுதியில் உத்திரத்தைப் பிடித்து தொங்கி, எம்பி, இரு கால்களாலும் எதிரி வில்லனுக்கு kick கொடுப்பது டாப் ஸ்டைல்.

    //தொடரும் ramantic marvel கல்யாண பொண்ணு lead scene (அப்புறம்தான்....)//

    நிற்கவே மாட்டார். 'துறுதுறு'என்று சுழன்று கொண்டே இருப்பார். பாடலின் முடிவில் (லா லா லலல்லா) ஜெயாவை இழுத்துக் கொண்டு ஆடிக் கொண்டே செல்பவர் ஒரு கட்டத்தில் இடது புறமாக அடுத்த ஸ்டெப்பை வைப்பார் என்று நாம் நினைக்கும் மாத்திரத்தில் இனிமையாக ஏமாற்றுவார். எதிர்பாராமல் சடுதியில் வலது பக்கம் மூவ்ஸ் தருவார். அற்புதமாக இருக்கும். சி.வி.ஆர் பாடலோடு 'இடைவேளை' தந்து குதூகலப் படுத்துவார். Boat இல் பின்புறம் பறக்கும் அந்த கத்தரிப்பூ வண்ணக் கோட் அவ்வளவு அழகு. எனக்கு மிகவும் பிடித்த ஷாட்.

    //இன்ஸ்பெக்டர் உடை அற்புதமாக இருக்கும். அந்த காட்சியில் stiffness காட்டி எல்லோரையும் குழப்பி பிறகு போலிசை விரட்டும் நயம்.//

    துப்பாக்கியை முகத்தருகே வைத்தபடி உணர்த்தி ஜெயாவிடம் தான் உண்மையான போலீஸ் அதிகாரிதான் என்று சிறு தலையசைவில் அருமையாக உணர்த்துவார்.

    //தொடர்ந்த நாகலிங்கத்தை சந்திக்கும் காட்சியில் தாராவை கண்டதும் காட்டும் கண நேர சங்கடம் கலந்த முகபாவம்..(தாராவின் நிலைக்கு ராஜாவும் காரணமே)//

    சொல்ல வார்த்தைகள் வரவில்லை. அந்த ஒரு வினாடியில் திகைப்பு, குற்ற உணர்வு, 'இவள் எப்படி இங்கே?!' என்ற ஆச்சர்யம் என்று ஓராயிரம் பாவங்கள் காட்டி விடுவார்.

    //இரண்டில் ஒன்று காட்சி ஊடல் கலந்து காதல் விருந்து//

    'மெத்தை போடும் தேவன் என்று என்னைச் சொல்லம்மா' வரிகளின் போது முழங்கால்களை கொஞ்சம் மடக்கி கைகளை முழங்கால்களில் பதித்து வலது குதிகாலை சற்றே பின்பக்கம் உயர்த்தி ஜெயாவை நோக்கி நடந்து வரும் அழகில் அள்ளிக் கொண்டு போவார். எப்படித்தான் செய்கிறார் என்று ஆச்சர்யம் நம்மிடம் மேலோங்கியபடியே இருக்கும். ஷூவுக்கும், அந்த திராட்சை நிற உடைக்கும் அடடா! எப்படிச் சொல்ல!

    கிளைமாக்ஸ் ரகளைகளைப் பற்றி ஒரு பட்டி மன்றமே நடத்தலாம். என்னைப் பொறுத்தவரை இப்படத்தின் கிளைமாக்ஸ் என்னைக் கவர்ந்தது போல வேறு எதுவுமே இல்லை என்பேன். இதே சிக்கல் கிளைமாக்ஸை சி.வி.ஆர் 'சங்கிலி' யிலும் தொடர்வார்.

    'ராஜா' என்பதால் எவ்வளவோ வேலைகளுக்கிடையில் உங்கள் அற்புதப் பதிவிற்கு பின்னூட்டம் அளித்து விட்டேன். ராஜா பற்றி முழு விவரங்களையும் ரத்தினச் சுருக்கமாக ஒன்று விடாமல் நான் அணுஅணுவாக ரசித்த காட்சிகளை ரகளையான வார்த்தைகளில் எழுதி ஜமாய்த்து விட்டீர்கள். ரசனையில் இருவர் உள்ளமும் ஒன்றே! விரித்து விவரித்து எழுத ஆர்வமே! முயல்கிறேன்.
    Last edited by vasudevan31355; 26th January 2017 at 08:29 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Harrietlgy, sivaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •