Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்திரா சார்,

    உங்களுக்கு ஆயுசு நூறு.நேற்றுதான் என்னை போல் ஒருவன் திருப்பி பார்த்தேன். இன்று உங்கள் காலை செய்தி என்னை போல் ஒருவன்.

    ராமண்ணா ,நடிகர்திலகத்தை பிரதான நாயகனாக வைத்து ஆறு படங்கள் இயக்கி உள்ளார்.

    கூண்டு கிளி, காத்தவராயன்,ஸ்ரீவள்ளி,தங்கசுரங்கம்,சொர்க்கம், என்னை போல் ஒருவன்.

    என்னுடைய தர வரிசையில் சிறந்தவை என்னை போல் ஒருவன்,காத்தவராயன்,தங்க சுரங்கம். என்னை போல் ஒருவன் ,ஏழு வருடங்கள் (1971 முதல் 1978 வரை)தயாரிப்பு தாமதம், ராமண்ணாவின் அகல கால் வைத்த பொருளாதார நெருக்கடி இவற்றால் தாமதமாக வந்தாலும் பிரமாத வெற்றி பெற்ற படம்.இன்றளவும் ரசிகர்களால் போற்ற படும் இப்படம் ,அற்புதமான செண்டிமெண்ட்-நகைச் சுவை-பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படம்.வரவேண்டிய நேரத்தில் வந்திருந்தால் வெள்ளிவிழாதான்.

    இதன் மிக சிறந்த அம்சங்கள்.

    1)நடிகர்திலகம்-இந்த படத்தின் தன்மை,நீக்கு போக்கு அறிந்து ,இரட்டை வேடத்தில் மிக குறைந்த அளவே வித்தியாச படுத்துவார். நடை உடை பாவனை உருவம் ஒத்து போவதாக கதையமைப்பு. சிறிதே குண திரிபும், குண நலனும் உடைய இரு பாத்திரங்கள். திராவிட மன்மத மேதையின் சித்திரிப்பில் ஜொலிக்கும்.முதலில் ராஜசேகரின் குண சித்திரம் மூன்று காட்சிகளில்.அடுத்த காட்சி இருவரின் சந்திப்பு. அடுத்தடுத்த காட்சிகள் சுந்தரமூர்த்தி,சேகராக நடிக்க வேண்டிய கட்டாய காட்சிகள். இவற்றில் அபார நகைச் சுவை timing ஓடு situation comedy ரகம். விவரங்கள் தெரியாமல், எச்சரிக்கையோடு, சங்கடம் தவிர்த்து,மற்றோர்க்கு இதமாக,உறவின் எல்லை மீறாமல் கத்தி மேல் நடக்கும் சூழ்நிலை.
    ரசிகர்களின் நாடி பிடித்து அசத்துவார். உதாரணம் தான் மயங்கி கிடப்பதாக எண்ணி வாசுவும்,ஆலமும் உரையாடும் காட்சியில் தாளமிடும் கை .மிகவும் கம்பி மேல் நடக்கும் பாத்திரங்கள். உதாரணம் சேகர் தன் அம்மாவுக்கு மருந்து வாங்க அலுத்து கொள்ளும் பணமுடை.

    2) செறிவான,அலுக்காத திரைக்கதை. இன்றைய படங்கள் போல எந்த உணர்ச்சியும் எல்லை மீறாமல் ,ஆனால் மனதில் பதியும் விந்தை. சக்தி கிருஷ்ணசாமி, சரித்திர படங்கள் அளவு, குடும்ப-பொழுது போக்கு சித்திரங்களிலும் தனது வசன திறமையை காட்டுவார்.பொழுதுபோக்கு மன்னன் ராமண்ணா கேட்கவே வேண்டாம். அவரது சிறந்த படங்களில் ஒன்று. நான் முதல், இது இரண்டாவது.

    3)ரஹ்மான் கேமரா, சுந்தரம் நடனம், வெங்கடேசன் சண்டை, விஸ்வநாதன் இசை அனைத்தும் படத்தோடு ஒன்றும். தனித்து தெரியாமல்.

    4)ஆலம் -சிவாஜி இணை அழகோ அழகு. நெருக்கம். இதில் கதாநாயகிகள் உஷாநந்தினி,சாரதாவிற்கு டூயட் கிடையாது. ஆலத்திற்கு இரண்டு.

    5)அத்தனை பாத்திரங்களும் பேசும் முறை, நடிப்பு இயல்போ இயல்பு. சாரதா,ருக்மிணி,வாசு,மனோகர் அனைவரும். உஷாநந்தினி உறுத்தல்.

    6)உட்கார்ந்தால் எழுவது தெரியாமல் ஆறிலிருந்து அறுபது வரை கவரும் அற்புத பொழுது போக்கு.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Likes Harrietlgy, adiram liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •