Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    For a change of pace, something a little different...

    படம்: உன்னிடத்தில் நான் (1986)
    வரிகள்: வாலி
    இசை: தாயன்பன்
    நடிப்பு: நேதாஜி & நளினி
    பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ் & வாணி ஜெயராம்



    நினைத்தால் உனைத் தான் நினைப்பேன்
    நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்
    நினைத்தால் உனைத் தான் நினைப்பேன்
    நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்
    நிழல் போல் தொடர்வேன்
    நினைவாய் படர்வேன்

    அடடா... அடடா...
    இளமை இளமை இளமை

    நினைத்தால் உனைத் தான் நினைப்பேன்
    நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்

    மமகரிஸ ஸரிஸ ஸரிஸ
    தநிஸா... கரிஸநிதமகம
    நிபமரிஸ... ஸரிஸ ஸரிஸ
    ஸரிஸநி... பமநிபமரிமப...

    வா.... தினம் தினம் தா...
    தரிசனம் பால் நிலவே
    நான் தான் வானம்

    உறவாடும் நெஞ்சம் ரெண்டுமே
    ஒரு பாதையில்
    பிரிவென்ற வார்த்தை இல்லையே
    அகராதியில்

    பனிக் கால போர்வையாக நீ
    தை மாசியில்
    இதமான தென்றல் காற்று நீ
    வைகாசியில்

    இரவும் பகலும்
    தொடரும் உறவு இதுவோ

    நினைத்தால் உனைத் தான் நினைப்பேன்
    நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்

    நான் தழுவிட நீ நழுவிட
    ஏன் அழகே இனி மேல் நாணம்

    தொடும்போது தேஹம் எங்கிலும்
    ரோமாஞ்சனம்
    இது தானோ காமதேவனின்
    ப்ரேமாயணம்

    சுவையான காதல் கீதமே
    படித்தால் என்ன
    சுகமான ஆசை ராகமே
    இசைத்தால் என்ன

    இசையும் லயமும்
    இணைய இணைய இனிமை

    நினைத்தால் உனைத் தான் நினைப்பேன்
    நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்

    நிழல் போல் தொடர்வேன்
    நினைவாய் படர்வேன்

    அடடா... அடடா...
    இளமை இளமை இளமை

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •