Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Hybrid View

  1. #1
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    டி.எம்.எஸ்....நடிகர்திலகம்...கவியரசர்....மெல்லிசைம ன்னர்.இந்தப் பாடலில் எது என்னைக் கவர்ந்தது?இசையா?டி.எம்.எஸ் அவர்களா?மெல்லிசைமன்னரா?இல்லை கவியரசரா என்றால் என்னால் சொல்ல இயலாது என்பதே உண்மை...அப்படி ஒருவரை ஒருவர் பின்னிப் பிணைத்துக் கொண்டு நெஞ்சத்தில் ரீங்காரம் செய்து கோலோச்சுகிறார்கள் என்பதே உண்மை...எனக்கு மிகவும் பிடித்த பாடல்...1962 இல் வந்த படித்தால் மட்டும் போதுமா படப் பாடல்.
    திருமணம் முடிந்து விடுகிறது.ஆனால் அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை...அவன் என்ன செய்வான் பாவம்....இத...ு வெளியில் சொல்லக் கூடிய விஷயமா?
    நான் கவிஞனும் இல்லை என்று ஒரு பாடல் இப்பொழுது உங்களுக்காக!!!
    ஒரு வீரமான வாலிபன் திருமணம் முடிந்து ஓராயிரம் கனவுகளோடு முதலிரவு அறைக்கு செல்கிறான்!அவ்ளோ அவன் படிக்கதவன் என்று வெறுத்து ஒதுக்குகிறாள்!அவனின் வாலிப விரகம் இந்தப் பாடல்!நடிகர் திலகம் அந்த ஆண்,அந்த ஆணுக்கு ஒரு ஆண்மைகென்றே அமைந்த குரலோன் டி.எம்.ஸ் குரலில்,மெல்லிசை மன்னரின் இசைப்பூங்கொத்து இது!
    நான் கவிஞனும் இல்லை,நல்ல ரசிகனும் இல்லை,காதலென்னும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை!!!
    அவன் விரகம்,கவியரசரின் கண்ணியமான வரிகளில்........
    இரவு நேரம் பிறறைப் போலே என்னையும் கொல்லும்,துணை இருந்தும் இல்லை என்று போனால் ஊரென்ன சொல்லும் என்று பாடி ஆஹாஹாஹா என்று வார்த்தைகளே இல்லாமல் ஊமைகீதத்தில் தன் வருத்ததை அழுதும் அழாமலும் புரியவைக்கிறான்!!!
    உடலை முறுக்கிக் கொண்டு உடம்பெல்லாம் வலிப்பதாகக் காட்டும் லாவகம்,மேலிருந்து ஒரு மாண்டலினை எடுத்து பிரடையை சரி செய்து சுருதி சேர்க்கும் நயம்....நடிகர் திலகத்துக்கு இதையெல்லாம் யாராவது சொல்லித்தர வேண்டுமா?வாழ்ந்திருப்பார்...'அன்பே ஆருயிரே,இன்பமே இனியவளே...பண்போடு அன்போடு படியேறி வந்தவளே!!!உன்மேல் பாட்டுப் பாட...நான் கவிஞனும் இல்லை என்று பாடும்போது நம் கண்ணை நிறைக்கும் கண்ணீர் துளிகள்....
    'காட்டு மானை வேட்டையாடத் தயங்கவில்லையே...இந்த வீட்டு மானின் உள்ளம் ஏனோ மயங்கவில்லையே...கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்கை புரியவில்லையே...நான் கொண்டு வந்த பெண் மனதில் பெண்மை இல்லையே.....நான் அழுதால் சிரிக்கிறால் சிரித்தாள் அழுகிறாள்....அம்மா தாயே.....இந்த வரிகளைப் பாடும்போது கெஞ்சும் அவன் முகம்...அதில் கப்பிக் கொண்டிருக்கும் சோகம்.....பெண்ணினமே பெண்ணை வெறுக்கும் காட்சி அது....ராஜசுலோசனாவைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது...அந்த ஆணவப் பார்வை.....அற்புதம்.
    எனக்குத் தெரிந்தவரையில் இந்த மாதிரி ஒரு விரகத்தை விரசமில்லாமல் விரிவாக இரண்டு வரிகளில் சொன்ன கவிஞன் வேறு யாரும் இல்லை என்பதால்,கவியரசர்,ஒப்பாரும்,மிக்காரும் இல்லாத கவிமாமன்னன்!!!!!!!பாடல் உங்களோடு.
    See more




    Naan Kavignanum Illai - Padithal Mattum Podhuma Tamil Song
    Naan Kavignanum Illai - Padithal Mattum Podhuma Tamil Song. Watch old Tamil song, Naan Kavignanum Illai from the super hit classic film, Padithal Mattum Podh...
    youtube.com

    (முகநூல் விசாலி ஶ்ரீராம்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •