Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எதிரொலி- ஜூன் 1970.

    நடிகர்திலகமும் ,இயக்குனர் சிகரமும் இணைகிறார்கள் ,அந்த இணைப்பு நடிகர்திலகத்தால் முன்னுக்கு வந்த ஜீ.என்.வேலுமணியால் நிகழ்கிறது என்றதும் எங்கள் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.

    முதல் முறை ஏமாற்றம் தந்தது. இதற்கு காரணம், சிவாஜி-கே.ஆர்.விஜயா-சுந்தரராஜன் தவிர மற்ற பாத்திரங்கள் ஏனோ-தானோ என வாரி தெளிக்க பட்டிருக்கும். ஆரம்ப காட்சிகளில் ஆழமோ அழுத்தமோ இன்றி , பிறகு சிவாஜி பணத்தை தொலைப்பதில் துவங்கி,பெட்டி வீட்டிற்கு வரும் காட்சிகள்,சுந்தரராஜன் மிரட்டல் காட்சிகள் என்று படம் எங்கேயோ உயரம் தொடும். ஆனால் சிலேட்டில் எழுத படும் நீதி போதனை (வா ராஜா வா) ,குழந்தையை வைத்து பின்ன படும் சிக்கல் அவிழ்ப்பு காட்சிகள் படத்தை சராசரியாக்கும்.

    சிவாஜி -பாலசந்தர் இணைப்பில் பாலசந்தர் கோட்டை விட்டது இசையில் கவனம் செலுத்தாதது. இரண்டாவது எஸ்.எஸ்.ஆர் போன்றவர்களை ,திராவிட மன்மதனுக்கு தம்பியாக்கி நகைக்க வைத்தது.

    தேனீ மா.அன்பழகன் என்ற இந்த படத்தின் உதவி இயக்குநனரை சிங்கப்பூர் சந்தித்த போது அவர் கூறியவை.

    1)சிவாஜி கதை கூட கேட்காமல், பாலு உன்மீது நம்பிக்கையிருக்கு. இஷ்டம் போல பண்ணு என பச்சை விளக்கு காட்டினாராம்.

    2)பாலசந்தருக்கோ தாழ்வு மனப்பான்மை .பராசக்தி காலத்திலிருந்து ,சிவாஜியின் ரசிகராக ,அவரை அண்ணாந்து பார்த்து பழகியவர். மிக மிக மன அழுத்தத்தில் இருந்தாராம். ஆரம்பம் முதல், முடிவு வரை.

    3)சிவாஜி, பாலசந்தரின் திறமையறிந்து ,மிக இயல்பான,அழுத்தமான நடிப்பை கை கொண்டாராம்.

    4)நூற்றுக்கு நூறு ,போன்ற படங்கள் அன்றைய சிவாஜியின் தோற்றத்திற்கு பொருத்தமாகவும், ஒரு முழுமையான சிவாஜி-பாலசந்தர் முழுத்திறமையை வெளிப்படுத்த ஏதுவாக அமைந்திருக்கும்.

    5)ஆனாலும், சிவாஜி,பாலசந்தர் இருவருமே படத்தை பற்றி திருப்தியை வெளியிட்டனராம்.

    இந்த படத்தை, திரும்ப பார்த்தேன். எனது அலுவலகத்தில் ஒரு அலுவலர் பணம் கையாடல் செய்த பின் ,எனக்கு தெரிய வந்து என்ன செய்வதென்று முழித்த நேரம்.மார்ச் மாதம்.2017

    அப்போதுதான் இந்த படத்தின் முழு அருமை புரிந்தது. அமைதியான ,நெறியான வாழ்வு முறை , முறையற்ற சிலரால் தடம் புரளும் போது ஒரு மனிதனின் கையறு நிலை,சுய பச்சாதாபம்,மனநிலை அழுத்தங்கள்,மீள்வது பற்றிய பயம்,சுற்றி உள்ளோரின் உதாசீனம், எதிலும் பிடிப்பற்ற நிலை,என்று சிவாஜியுடன் வாழ்ந்தேன்.

    அதிலும், அவர் ஆலோசனை சொல்லும் கே.ஆர்.விஜயாவிடம் ,ஒன்றுமே முடியாது என்று கை விரிக்கையில், விஜயா வெடித்து பொருமுவார். அப்போது சிவாஜி, ஏற்கெனெவே நான் நொந்திருக்கேம்மா,கொஞ்சம் soft ஆ பேசு என்று இறைஞ்சும் அழகு.

    ஒரே நாள்ளியாம்மா இவ்வளவு ஓல்ட் ஆ போயிடுவேன் என்ற அங்கலாய்ய்ப்பு, தூக்கத்தில் எழுந்து தன நிலை மறந்து துடிக்கும் மூணு பூட்டு போட்ட பெட்டி காட்சி.

    blackmailer சுந்தர்ராஜனிடம் தொரை தொரைன்னு கூப்பிடாதே என்று கெஞ்சும் அழகு, என்னடா பாஸ் என்று எகிறும் நயம்.

    ஆஹா, அந்த காலத்தில் நாம் உதாசித்த வைரங்கள். எத்தனை உயர்வு?
    Last edited by Gopal.s; 8th June 2017 at 10:56 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Likes Harrietlgy, adiram liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •