Page 12 of 400 FirstFirst ... 210111213142262112 ... LastLast
Results 111 to 120 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #111
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like

    Sundar Rajan

    அரசியலில் நேர்மையை கடைபிடித்தவருக்கு, தமிழகம் கொடுத்த பட்டம் இவருக்கு அரசியல் தெரியாது.
    இந்த சாக்கடை அரசியல் இவருக்கு தெரியாமல் இருந்ததே நல்லது.
    இவரைத் தேர்ந்தெடுக்காத தமிழகம் இன்று தலைகுனிந்து நிற்கிறது.
    இவரின் அன்பு இதயங்களோ தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.
    இது தாண்டா சிவாஜி......

    ( from முகநூல்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #112
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Nadigar thilagam

    அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்

    அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்

    சதிகாரக் கூட்டம் ஒன்று சபையேறக் கண்டேன்

    தவறென்று என்னைச் சொல்லும் பரிதாபம் கண்டேன்
    Last edited by goldstar; 8th June 2017 at 06:35 AM.

  4. #113
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Nadigar thilagam

    கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே

    கோவிலை இடிப்போன் சாமியைப் போலே வாழ்கின்றான்

    ஊழல் செய்பவன் யோக்கியன் போலே

    ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கின்றான்
    Last edited by goldstar; 8th June 2017 at 06:36 AM.

  5. #114
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Nadigar thilagam

    நாடக வேஷம் கூட வராது

    நாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன்

    பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்

    பாவம் செய்தவன் தலைமுறை வரையில் பார்க்கின்றேன்

  6. #115
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    மனசாட்சியின் குரல்

  7. #116
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எதிரொலி- ஜூன் 1970.

    நடிகர்திலகமும் ,இயக்குனர் சிகரமும் இணைகிறார்கள் ,அந்த இணைப்பு நடிகர்திலகத்தால் முன்னுக்கு வந்த ஜீ.என்.வேலுமணியால் நிகழ்கிறது என்றதும் எங்கள் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.

    முதல் முறை ஏமாற்றம் தந்தது. இதற்கு காரணம், சிவாஜி-கே.ஆர்.விஜயா-சுந்தரராஜன் தவிர மற்ற பாத்திரங்கள் ஏனோ-தானோ என வாரி தெளிக்க பட்டிருக்கும். ஆரம்ப காட்சிகளில் ஆழமோ அழுத்தமோ இன்றி , பிறகு சிவாஜி பணத்தை தொலைப்பதில் துவங்கி,பெட்டி வீட்டிற்கு வரும் காட்சிகள்,சுந்தரராஜன் மிரட்டல் காட்சிகள் என்று படம் எங்கேயோ உயரம் தொடும். ஆனால் சிலேட்டில் எழுத படும் நீதி போதனை (வா ராஜா வா) ,குழந்தையை வைத்து பின்ன படும் சிக்கல் அவிழ்ப்பு காட்சிகள் படத்தை சராசரியாக்கும்.

    சிவாஜி -பாலசந்தர் இணைப்பில் பாலசந்தர் கோட்டை விட்டது இசையில் கவனம் செலுத்தாதது. இரண்டாவது எஸ்.எஸ்.ஆர் போன்றவர்களை ,திராவிட மன்மதனுக்கு தம்பியாக்கி நகைக்க வைத்தது.

    தேனீ மா.அன்பழகன் என்ற இந்த படத்தின் உதவி இயக்குநனரை சிங்கப்பூர் சந்தித்த போது அவர் கூறியவை.

    1)சிவாஜி கதை கூட கேட்காமல், பாலு உன்மீது நம்பிக்கையிருக்கு. இஷ்டம் போல பண்ணு என பச்சை விளக்கு காட்டினாராம்.

    2)பாலசந்தருக்கோ தாழ்வு மனப்பான்மை .பராசக்தி காலத்திலிருந்து ,சிவாஜியின் ரசிகராக ,அவரை அண்ணாந்து பார்த்து பழகியவர். மிக மிக மன அழுத்தத்தில் இருந்தாராம். ஆரம்பம் முதல், முடிவு வரை.

    3)சிவாஜி, பாலசந்தரின் திறமையறிந்து ,மிக இயல்பான,அழுத்தமான நடிப்பை கை கொண்டாராம்.

    4)நூற்றுக்கு நூறு ,போன்ற படங்கள் அன்றைய சிவாஜியின் தோற்றத்திற்கு பொருத்தமாகவும், ஒரு முழுமையான சிவாஜி-பாலசந்தர் முழுத்திறமையை வெளிப்படுத்த ஏதுவாக அமைந்திருக்கும்.

    5)ஆனாலும், சிவாஜி,பாலசந்தர் இருவருமே படத்தை பற்றி திருப்தியை வெளியிட்டனராம்.

    இந்த படத்தை, திரும்ப பார்த்தேன். எனது அலுவலகத்தில் ஒரு அலுவலர் பணம் கையாடல் செய்த பின் ,எனக்கு தெரிய வந்து என்ன செய்வதென்று முழித்த நேரம்.மார்ச் மாதம்.2017

    அப்போதுதான் இந்த படத்தின் முழு அருமை புரிந்தது. அமைதியான ,நெறியான வாழ்வு முறை , முறையற்ற சிலரால் தடம் புரளும் போது ஒரு மனிதனின் கையறு நிலை,சுய பச்சாதாபம்,மனநிலை அழுத்தங்கள்,மீள்வது பற்றிய பயம்,சுற்றி உள்ளோரின் உதாசீனம், எதிலும் பிடிப்பற்ற நிலை,என்று சிவாஜியுடன் வாழ்ந்தேன்.

    அதிலும், அவர் ஆலோசனை சொல்லும் கே.ஆர்.விஜயாவிடம் ,ஒன்றுமே முடியாது என்று கை விரிக்கையில், விஜயா வெடித்து பொருமுவார். அப்போது சிவாஜி, ஏற்கெனெவே நான் நொந்திருக்கேம்மா,கொஞ்சம் soft ஆ பேசு என்று இறைஞ்சும் அழகு.

    ஒரே நாள்ளியாம்மா இவ்வளவு ஓல்ட் ஆ போயிடுவேன் என்ற அங்கலாய்ய்ப்பு, தூக்கத்தில் எழுந்து தன நிலை மறந்து துடிக்கும் மூணு பூட்டு போட்ட பெட்டி காட்சி.

    blackmailer சுந்தர்ராஜனிடம் தொரை தொரைன்னு கூப்பிடாதே என்று கெஞ்சும் அழகு, என்னடா பாஸ் என்று எகிறும் நயம்.

    ஆஹா, அந்த காலத்தில் நாம் உதாசித்த வைரங்கள். எத்தனை உயர்வு?
    Last edited by Gopal.s; 8th June 2017 at 10:56 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. Likes Harrietlgy, adiram liked this post
  9. #117
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டத்தில் மாற்று கருத்துக்களோ? துரோகம் ,பச்சை துரோகம்.

    உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது.

    நேர்மையான பதிவுகளை இரும்பு கரம் கொண்டா அடக்குவது?

    1961 முதல் 1966 வரை சிவாஜி பட பாடல்களும் ,ஜெமினி பட பாடல்களுமே ரசனைக்குரியவை. மற்றவை ஒரே ராகம்.ஒரே ரகமே .

    இதே கே.வீ.மகாதேவன் இசையமைப்பில் வளர்பிறை,குலமகள் ராதை,குங்குமம்,இருவர் உள்ளம்,ரத்த திலகம்,அன்னை இல்லம்,நவராத்திரி,திருவிளையாடல் மகாகவி காளிதாஸ்,சரஸ்வதி சபதம்,செல்வம் பாடல்களை கேட்போருக்கு ,கே.வீ.மகாதேவனிடம் இசைக்கு குறைவில்லை என பட்டென விளங்குமே ?

    எம்.எஸ்.விஸ்வநாதன் தனி பட்ட உரையாடலில் குறிப்பிட்டது சிவாஜி பட பாடல்கள் அவருக்கு சவாலையும் ,நிறைவையும் தந்தவை. அவருக்கு சுதந்திர கற்பனைகளுக்கு யாரும் கட்டுப்படுத்தாமல்,தடை போடாமல், வித விதமான கதைகள்,காட்சியமைப்புகள்,மாறுபாடான பாடல் களங்கள் என்று சவால் விட்டவை என்று கூறினார்.

    ஆனாலும் மற்றோருடைய படங்களிலும் சில முத்துக்கள் தெறித்தன கே.வீ.எம் மிடமிருந்து.(1961 முதல் 1966 வரை நடிகர்திலகம் படங்கள் தவிர)

    மெல்ல மெல்ல அருகில் வந்து
    தட்டு தடுமாறி நெஞ்சம்
    யாரடி வந்தார் என்னடி சொன்னார்
    கடவுள் மனிதனாக
    காவேரி கரையிருக்கு
    தொட்டு விட தொட்டு விட
    ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
    மயங்காத மனம் யாவும் மயங்கும்
    உன்னையறிந்தால் நீ
    என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
    நீயில்லாத உலகத்திலே
    எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
    உன்னை காணாத கண்ணும்
    தோள் கண்டேன் தோளே கண்டேன்
    என்னதான் ரகசியமோ
    Last edited by Gopal.s; 8th June 2017 at 12:09 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. Likes Harrietlgy liked this post
  11. #118
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    எதிரொலி- ஜூன் 1970.

    நடிகர்திலகமும் ,இயக்குனர் சிகரமும் இணைகிறார்கள் ,அந்த இணைப்பு நடிகர்திலகத்தால் முன்னுக்கு வந்த ஜீ.என்.வேலுமணியால் நிகழ்கிறது என்றதும் எங்கள் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.

    முதல் முறை ஏமாற்றம் தந்தது. இதற்கு காரணம், சிவாஜி-கே.ஆர்.விஜயா-சுந்தரராஜன் தவிர மற்ற பாத்திரங்கள் ஏனோ-தானோ என வாரி தெளிக்க பட்டிருக்கும். ஆரம்ப காட்சிகளில் ஆழமோ அழுத்தமோ இன்றி , பிறகு சிவாஜி பணத்தை தொலைப்பதில் துவங்கி,பெட்டி வீட்டிற்கு வரும் காட்சிகள்,சுந்தரராஜன் மிரட்டல் காட்சிகள் என்று படம் எங்கேயோ உயரம் தொடும். ஆனால் சிலேட்டில் எழுத படும் நீதி போதனை (வா ராஜா வா) ,குழந்தையை வைத்து பின்ன படும் சிக்கல் அவிழ்ப்பு காட்சிகள் படத்தை சராசரியாக்கும்.

    சிவாஜி -பாலசந்தர் இணைப்பில் பாலசந்தர் கோட்டை விட்டது இசையில் கவனம் செலுத்தாதது. இரண்டாவது எஸ்.எஸ்.ஆர் போன்றவர்களை ,திராவிட மன்மதனுக்கு தம்பியாக்கி நகைக்க வைத்தது.

    தேனீ மா.அன்பழகன் என்ற இந்த படத்தின் உதவி இயக்குநனரை சிங்கப்பூர் சந்தித்த போது அவர் கூறியவை.

    1)சிவாஜி கதை கூட கேட்காமல், பாலு உன்மீது நம்பிக்கையிருக்கு. இஷ்டம் போல பண்ணு என பச்சை விளக்கு காட்டினாராம்.

    2)பாலசந்தருக்கோ தாழ்வு மனப்பான்மை .பராசக்தி காலத்திலிருந்து ,சிவாஜியின் ரசிகராக ,அவரை அண்ணாந்து பார்த்து பழகியவர். மிக மிக மன அழுத்தத்தில் இருந்தாராம். ஆரம்பம் முதல், முடிவு வரை.

    3)சிவாஜி, பாலசந்தரின் திறமையறிந்து ,மிக இயல்பான,அழுத்தமான நடிப்பை கை கொண்டாராம்.

    4)நூற்றுக்கு நூறு ,போன்ற படங்கள் அன்றைய சிவாஜியின் தோற்றத்திற்கு பொருத்தமாகவும், ஒரு முழுமையான சிவாஜி-பாலசந்தர் முழுத்திறமையை வெளிப்படுத்த ஏதுவாக அமைந்திருக்கும்.

    5)ஆனாலும், சிவாஜி,பாலசந்தர் இருவருமே படத்தை பற்றி திருப்தியை வெளியிட்டனராம்.

    இந்த படத்தை, திரும்ப பார்த்தேன். எனது அலுவலகத்தில் ஒரு அலுவலர் பணம் கையாடல் செய்த பின் ,எனக்கு தெரிய வந்து என்ன செய்வதென்று முழித்த நேரம்.மார்ச் மாதம்.2017

    அப்போதுதான் இந்த படத்தின் முழு அருமை புரிந்தது. அமைதியான ,நெறியான வாழ்வு முறை , முறையற்ற சிலரால் தடம் புரளும் போது ஒரு மனிதனின் கையறு நிலை,சுய பச்சாதாபம்,மனநிலை அழுத்தங்கள்,மீள்வது பற்றிய பயம்,சுற்றி உள்ளோரின் உதாசீனம், எதிலும் பிடிப்பற்ற நிலை,என்று சிவாஜியுடன் வாழ்ந்தேன்.

    அதிலும், அவர் ஆலோசனை சொல்லும் கே.ஆர்.விஜயாவிடம் ,ஒன்றுமே முடியாது என்று கை விரிக்கையில், விஜயா வெடித்து பொருமுவார். அப்போது சிவாஜி, ஏற்கெனெவே நான் நொந்திருக்கேம்மா,கொஞ்சம் soft ஆ பேசு என்று இறைஞ்சும் அழகு.

    ஒரே நாள்ளியாம்மா இவ்வளவு ஓல்ட் ஆ போயிடுவேன் என்ற அங்கலாய்ய்ப்பு, தூக்கத்தில் எழுந்து தன நிலை மறந்து துடிக்கும் மூணு பூட்டு போட்ட பெட்டி காட்சி.

    blackmailer சுந்தர்ராஜனிடம் தொரை தொரைன்னு கூப்பிடாதே என்று கெஞ்சும் அழகு, என்னடா பாஸ் என்று எகிறும் நயம்.

    ஆஹா, அந்த காலத்தில் நாம் உதாசித்த வைரங்கள். எத்தனை உயர்வு?
    எதிரொலி முதல்முறை பார்த்தபோதே மிகவும் பிடித்துப்போன படம், சில மைனஸ்களையும் தாண்டி.

    தம்பி ரோலுக்கு ஸ்ரீகாந்தைப் போட்டிருக்க வேண்டும். அப்போதிருந்த நடிகர்திலகத்தின் தோற்றத்துக்கு எஸ்.எஸ்.ஆர். நடிகர்திலகத்துக்கு சித்தப்பா மாதிரி இருப்பார்.

    பாடல்களிலும் இசையிலும் கே.வி.மகாதேவன் நன்றாக ஏமாற்றினார். நடிகர்திலகத்துக்கு பாடல்களே கிடையாது. ஆனால் சிவகுமாருக்கு (குங்கும சிமிழில்) டி.எம்.எஸ்ஸை போட்டு படம் பார்க்காத ரசிகர்களை ஏமாற வைத்தார். (இதே தவறை எம்.எஸ்.வியும் செயதார் 'என் கேள்விக்கென்ன பதில்' மூலம்). கே.பி.யின் ஆஸ்தான வி.குமாரை போட்டிருந்தாலாவது நிறைகுடம் போல சில நல்ல பாடல்கள் கிடைத்திருக்கும்.

    வா ராஜா வா படம் வந்து ஐந்து மாதங்களிலேயே அதே போல ஏழு வசனங்கள் எழுதப்பட்ட பலகை, காப்பியடித்து போல இருந்தது. பணமா பாசமா வந்த ஆண்டிலேயே கே.பி பூவா தலையா எடுத்தது போல.

    நாகேஷ் - ஜி.சகுந்தலா காமெடி ட்ராக் படத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் போல இருந்தது. சிவகுமார், லக்ஷ்மி, பாலையா எல்லாம் கெஸ்ட் ரோல் போல வந்து போனார்கள்.

    இதையெல்லாம் மீறி நடிகர்திலகம், விஜயா, மேஜர், ரோஜாரமணி நால்வரும் பட்டையைக் கிளம்பினர். தங்கையின் வீட்டிலேயே நடிகர்திலகம் நெக்லஸை திருடும் கட்டம் அவர்மீது பரிதாபத்தை உச்சிக்கு கொண்டுபோகும். மேஜர் வில்லனாக நடித்த படங்களில் இது தலையாயது என்பேன். அநியாயத்துக்கு அசத்துவார்.

    பஸ்ஸர் ஒலிக்க, ஒலிக்க மேஜரின் வீட்டில் வசதிகள் பெருகிக் கொண்டே வருவதெல்லாம் கே.பி.யின் டைரக்ட்டோரில் டச்.

    நல்ல வெற்றியைப் பெற்றிருக்க வேண்டிய படம்.

  12. Thanks Gopal.s thanked for this post
    Likes Gopal.s liked this post
  13. #119
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    இன்று (08/06/17)
    சன் லைப் -- 11 am -- " நவராத்திரி "

    நடிகர் திலகத்தின் 100 வது திரைப்படம்
    திரையுலக நட்சத்திரங்கள் நடித்த 100 வது படங்களிலேயே
    முதன்மையானதும் வசூலில் சாதனை படைத்ததும்
    சென்னையில் 4 திரைகளிலும் மற்றும் பல இடங்களில் 100 நாட்களுக்கு மேல்
    ஓடிய படம், உலக அளவில் பேசப்பட்ட, பேசப்படும் படம்
    நடிகர் திலகத்திற்கு செவேலியர் விருதை வாங்கிக் கொடுத்த
    திரைப்படம் நவராத்திரி.

    Last edited by sivaa; 8th June 2017 at 05:09 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  14. #120
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    இன்று (08/06/17)

    மெகா டிவி-- 12 pm -" பரீட்சைக்கு நேரமாச்சு "...

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •