Page 69 of 400 FirstFirst ... 1959676869707179119169 ... LastLast
Results 681 to 690 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #681
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    Padmanapan A


    நடிகர் திலகத்தின்
    அன்பு இதயங்களுக்கும்
    நட்பு உள்ளங்களுக்கும்
    இனிய காலை வணக்கம்.
    என்றும்...
    உன்
    நினைவுகளோடு





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #682
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    சீமான்

    21-07-2017 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 16ஆம் ஆண்டு நினைவுநாள் - புகழ்வணக்கம் | நாம் தமிழர் கட்சி
    -------------------------------------------------------------
    தன்னிகரற்ற தன் கலைத்திறனால் நாட்டுமக்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர் தன் சிம்மக்குரலால் செந்தமிழ்ப்பேசி அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்தவர்.
    வணங்கும் கடவுளையும், வரலாற்று நாயகர்களையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய கலை உலகச் சிற்பி!
    ... தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்!
    நடிகர் திலகம் என எல்லோராலும் பெருமையோடு அழைக்கப்பட்ட நவரச நாயகன்!
    நமது ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவுநாள் இன்று (21-07-2017)
    பெருமையோடு அந்த மகத்தான மேதைக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்
    நாம் தமிழர்!

    ---
    சீமான்
    தலைமை ஒருங்கிணைப்பாளர்
    நாம் தமிழர் கட்சி

    See more


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #683
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    Trichy Srinivasan


    திருச்சி மாநகரில் நமது அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம் சார்பாக நமது உலக மகா நாயகன் சிவாஜியின் 16 நினைவு தினமான 21 ஜீலை 2017 க்கு Double sheet போஸ்டர் அடிக்கப்பட்டு நேற்று இரவு திருச்சி முழுவதுமாக ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டி..................
    --அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம் --
    How is it friends ?




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #684
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #685
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    உலகத்திலே ஒருவனென உயர்ந்து நின்ற, நிற்கும் திலகமே!

    உயர்ந்த மனிதனே!

    தெய்வத்துக்கெல்லாம் தெய்வமான தெய்வ மகனே!

    இன்று உன் நினைவு நாள்.

    உன் பிள்ளைகளின் கண்ணீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஆறாகப் பெருகி புனித கங்கையில் கலக்கும்.

    நீ இல்லாத உலகில் நாங்கள் எதற்கு என்று இன்றும் மனம் ஓடியும்.

    ஒவ்வொரு மனிதனுக்கும் உதாரண புருஷன் நீ
    ஒவ்வொரு நடிகனுக்கும் பேராசிரியன் நீ
    ஒவ்வொரு ரசிகனுக்கும் கடவுள் நீ
    ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாச மலர் நீ

    உனக்கும் எங்களுக்கும் ஏற்பட்டது ரத்த பந்தமல்ல
    அது சுத்த பந்தம். பித்த பந்தம்.

    கோவில்களுக்கு நாங்கள் சென்றது இல்லை
    உன் இல்லம் இருக்கையில் எங்களுக்கு எதற்கு கோவில்?
    உன் உள்ளம் இருக்கையில் எங்களுக்கு எதற்கு தெய்வம்?

    எண்ணிலடங்கா அன்பு உறவுகளை அளித்துச் சென்றாய்
    எவரும் எட்டாத பெருமையை எங்களுக்கு கொடுத்துச் சென்றாய்
    முக்காலமும் எக்காலமும் உனை நினைக்கும் அருள் தந்தாய்
    உடன் முடிவில்லா துயரத்தையும் தந்து விட்டுச் சென்றாயே!

    தினம் தினம் நெஞ்சு துடித்தாலும் நேற்றிலிருந்து நெஞ்சு அடைக்கிறதே!
    திரண்டு வரும் கண்ணீர்த் திவலைகளை திருப்பி அனுப்ப முடியலையே!
    திரும்பிய பக்கமெல்லாம் காட்சியளிக்கும் எங்கள் திருவரங்கனே!
    திக்கற்ற பிள்ளைகளாய் திகைக்க வைத்து சென்ற நாளலல்லவோ இன்று!

    ஒவ்வொரு இதயமும் தெய்வமே தெய்வமே என்று கதறுகிறதே!
    உன் காதில் விழவில்லையா?
    தெய்வத்திற்குத்தான் கல்மனது என்றால் உனக்குமா?
    ஒரே ஒரு முறை எழுந்து வந்து உன் 'ஓங்கார'மிட்டு சென்றுவிடு

    'காரணமின்றி என் கண்களில் கண்ணீர் வந்தால்
    நான் உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம்'

    என நண்பர் திருப்பதிசாமி நேற்று பதித்திருந்தாரே
    அது எவ்வளவு நிஜம்! அது அவருக்கு மட்டுமா?
    உன் பிள்ளைகள் அனைவருக்கும்தானே!

    மனிதப் புனிதர்கள் பலருண்டு.. சொல்லக் கேட்டிருக்கிறோம்
    ஆனால் உன்னை மட்டுமே நேரில் பார்த்திருக்கிறோம்
    பாசச் சோற்றை நடிப்புப் பாலுடன் எங்களுக்கு ஊட்டிய
    எங்கள் தாயே! தந்தையே! அண்ணனே! குருவே! இறைவனே!

    எமனுடன் சில நாட்கள் போராடி நீ சென்றுவிட்டாய்
    நாங்கள் உன் நினைவால் தினம் தினம் அவனுடன் போராடுகிறோமே!
    அது புரியாமல் நீ ஏன் அங்கு விரைந்து சென்றாய்

    'சொர்க்கம்' என்றால் என்ன என்று படத்திலும், நிஜத்திலும் காட்டியவன் நீ அன்றோ!
    நிஜ சொர்க்கமே நீ அங்கு போன பின்புதானே உண்மையான சொர்க்கமாயிற்று!
    நாங்கள் இன்று வரை உயிரோடிருக்க காரணம் உன் காவியங்கள்தானே!
    உன் நினைவுகள்தானே!

    தந்தை இல்லாமல் பிரிந்த குடும்பங்கள் பல உண்டு
    நீ இல்லாமல் சேர்ந்த ஒற்றுமை குடும்பங்கள் நாங்கள்
    திருக்குறளுக்குப் பிறகு நீ ஒருவன்தான்
    அத்தனை பேருக்கும் பொது.

    நீ வராவிட்டால் போ. எங்களுக்கு ஒன்றும் இல்லை
    வெறும் உன் உடலை மட்டும்தானே இழந்தோம்
    அதனால் கர்வம் கொள்ளாதே
    எங்களுள் புதைந்து கிடைக்கும் உன் நினைவை எவ்வாறு அழிப்பாய்?

    நீ என்ன செய்திருக்க வேண்டும்?
    ஒன்று எங்களுடன் இருந்திருக்க வேண்டும்...இல்லை எங்களை உன்னுடன்
    கூட்டிச் சென்றிருக்க வேண்டும். செய்தாயா?
    நிர்க்கதியாய் நிற்க வைத்து நிர்மூலமாக்கி நீ சென்ற நாள் இன்று

    காட்டுவாசிகள் மத்தியில் கனிவான மனிதன் நீ
    மதங்களைத் தாண்டிய கடவுள் நீ
    மனங்களை வென்ற மகா புருஷன் நீ
    மனிதரில் நீ மாணிக்கமல்ல. நீ ஒருவன்தான் மனிதனே!

    உடல் குலுங்க, மனம் வெம்பி தாங்கவொண்ணாமல் அழுகிறேன்
    இல்லை அழுகிறோம்... துவள்கிறோம் இன்று
    கட்டுப்படுத்த முடியாமல் கதறுகிறோம் இன்று
    எங்களின் கண்ணீர்க் கடலில் உன் கப்பலை விடவாவது

    வந்து விடேன்.

    மண்ணில் பிறந்த யாரும் நீயாக முடியாது
    மனதிலிருந்து நீக்க உன்னாலும் முடியாது

    முடியாமல் முடிக்கிறேன். உன் நினைவுகளோடு முடிவேன். உன் நினைவுகளோடேயே மடிவேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks sivaa, Gopal.s thanked for this post
    Likes sivaa, Harrietlgy, Gopal.s liked this post
  8. #686
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கள் ஒரே இதய தெய்வமே,

    ஜூலை 21 வெட்கி தலைகுனிய வேண்டும். இந்த நாள் உலக கலை
    ரசிகரெல்லாம் தூற்றும் நாள். ,சரஸ்வதியை பூமியிலிருந்து தேவர்கள் கவர்ந்த நாள்.எங்களை அனாதரவாக்கிய நாள்.தமிழக பூமியிலிருந்து எங்கள் தொப்புள் கோடியை அறுத்து விட்டு அந்நியமாக்கிய நாள். தமிழன்னை விதவை கோலம் பூண்ட நாள்.

    பசும்பொன்னுக்கும் படிக்காத மேதைக்கும் இணைப்பு பாலம்.சாதியை புறம் தள்ளி கர்ம வீரருடன் கள்ளத்தனம் இன்றி கலந்ததால் சாதி கள்ளர்களுக்கு ஆகாது போனாலும் ,அனைத்து நல்லோர்க்கும் இதய நாயகன் ஆனாய் .

    நீ என்றுமே என் விருப்ப பாடம். பள்ளி கல்லூரியுடன் முடிந்திருக்க வேண்டிய விருப்ப பாடங்கள் என் விருப்ப படங்களாய் கணினியில்,தொலைக்காட்சியில், திரைகளில்.

    அசோக மன்னனாய் நீ நடித்தது ஒரு படம் என்பார் அறியாதோர். நீயோ அத்தனை மன்னர்களையும் அசோகனாக்கியவன்.முடிவு தெரிந்த பொய் கத்தி சண்டைகளை நாடாமல் ,உணர்ச்சியாய் கக்கி கத்தி சண்டை போட்டே ஆயிரம் போர்க்களத்தை விழியிலே ஓட
    விட்டாய்.ரத்த ஆற்றில் வீரம் காணாது நடிப்பில் ஆண்மை காட்டியவன்.

    காதலோ வீரமோ காமமோ வன்மமோ விவேகமோ சோகமோ சுகமோ வரமோ சாபமோ நீ ஏற்ற பாத்திரங்களை ஒட்டியே நிகழ்ந்தன நீ மதுவில் குளித்தாலும், விலை மகளிரோடு களித்தாலும் ,புகையில் சுளித்தாலும் ,அக்கால இக்கால மது கடைகளில் விபசார சந்தையில் தட்டுப்பட்ட ஒருவன் கூட உன் ரசிகனில்லை.

    உண்மை என்றுமே விலை போனதில்லை.உண்மைக்கு விலை வைக்க இயலாதே.உன் ரசிகர்கள் நீயே சொன்னது போல விலையில்லா உண்மையின் "பிள்ளைகள்".உனக்காக எழும் குரல்கள் பிள்ளையில்லா சொத்தை கவர்ந்தோரின் பொய் குரல் இல்லை.உன் கலை சொத்தை கவர்ந்தோரின் காணிக்கை குரல்

    அத்தனை நடிகரும் உன் ரசிகரே நீ நடிகனின் நடிகன்.தமிழ் நாடு உண்மையாய் அழுத நாள் இந்நாளே உண்மையாய் சிரிக்கும் நாள் அக்டோபர் ஒன்று பொன்னாளே .
    Last edited by Gopal.s; 21st July 2017 at 12:14 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Likes Harrietlgy liked this post
  10. #687
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி என்ற மாமனிதர்.

    ஒரு விஷயத்தில் மட்டும் எனது ஏழு வயதில் இருந்து உறுதியாக இருந்துள்ளேன்.அதை ஈடுபாடு,வழிபாடு,அதீத திறமையால் கட்டுண்டல் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். அது நடிகர்திலகத்தின் மீது நான் கொண்ட நாளும் வளரும் பக்தி.எனக்கு அவர் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்பதே போதுமானதாய் இருந்தது.

    அந்த கலைஞன் பிறக்கும் போதே ஒளி வட்டத்துடன்,நடிப்பு என்ற கவச குண்டலம் கொண்டு பிறந்ததால் எவராலும் எக்காலத்திலும் வெல்ல முடியாதவராகவே திகழ்ந்தார்,திகழ்கிறார்,திகழ்வார்.அவருடைய கவச குண்டலத்தை ,அனுபவத்தால் பெற்ற ப்ரம்மாஸ்திரங்களை கவர, பல அரசியல் இந்திரர்கள் மாறி மாறி வேடமிட்டு பார்த்தனர்.ஆறு பேர் சேர்ந்து அந்த கர்ணனை அழிக்க முடிந்தது.இந்த நடிப்பு கர்ணனோ ,ஆறு கோடி பேர் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்வதை கர்ணனே வந்து உலகத்துக்கு நிரூபித்து நிலை நாட்டியாயிற்று.

    ஆனாலும் நான் கற்றதும்,பெற்றதும்,உணர்ந்ததும் எனக்கு ஒன்றை ஓங்கி உரைப்பது அவர் ஓர் மாமனிதரும் ஆவார் என்று.

    நடிப்பை பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதி கொண்டிருக்கிறோமே ? நான் வியக்கும் அவரின் மற்ற குணங்களை எழுதி பெருமை கொள்கிறேன்.

    இது சத்திய சோதனைக்கு நிகரான உண்மை பதிவுகள் .

    செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்ற சொல்லுக்கேற்ப இந்திய கூட்டு குடும்ப மதிப்பு சார் மாண்பின் உயர் பிரதிநிதி.

    அசைக்க முடியா தேசிய உணர்வு,இறை பற்று,மனதுக்கு உண்மையான வாழ்க்கை .

    வெகுளித்தனம் கொண்டு இவர் பெரியோர்,இவர் சிறியோர் என்று பாராமல் எல்லோரிடமும் உண்மையாய் பழகி உரிமை எடுத்து மனம் திறப்பார்.

    எல்லாவற்றிலும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பு(Perfection ) காட்டுவதுடன்,பிறரிடமும் எதிர்பார்ப்பார் .

    கற்றோரை மிக மதிப்பார்.ஆலோசனை கேட்பார். ஆசிரியர்களை போற்றி மதிப்பார்.

    சக கலைஞர்களிடம் மிக மிக பெருந்தன்மை காட்டுவார்.வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடோ, பழியுணர்வோ ,கெடுக்கும் எண்ணமோ அவர் மனதில் துளிர்த்ததே இல்லை.

    பொது காரியங்களுக்கு நிறைய நன்கொடைகள் விளம்பரம் இல்லாமல் வழங்கியுள்ளார்.

    சினிமா,அரசியல்,பொது நிகழ்ச்சி எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை கடை பிடித்து,மற்றவர் நேரத்தையும் மதித்தவர்.

    நடிப்பை பற்றியே சிந்தனை,காரிய கவனம் கொண்ட தனிமை விரும்பி என்றாலும் ,நகைச்சுவை உணர்வுடன் பிறருடன் எளிமையாக மனம் திறப்பார்.

    மனம், உடல் இரண்டையுமே மிக மிக சுத்தமாக பராமரித்தவர்.

    கடைசி வரை உலக புகழ் பெற்றும் தன் அடிப்படையை மறக்காத குணம் மாறாதவர்.

    தன் படங்களே தனக்கு விளம்பரம் தேடி கொள்ளும் என்ற நம்பிக்கையில் product ,Quality இரண்டையும் மட்டுமே நம்பியவர். collection சாதனை செய்த தன் படத்தை பற்றியே பிறர் சொல்லி தெரிந்து கொண்டவர். தன் தொழில் தவிர பிற விஷயங்களில் ஆலோசனை கூறுவாரே தவிர தலையிட மாட்டார்.

    பல தயாரிப்பாளர்களை ,இயக்குனர்களை உருவாக்கி உள்ளார்.இவரை மட்டுமே நம்பிய முக்தா,பாலாஜி போன்றோர் சிறப்பாக வாழ்ந்தனர்.

    ஜாதி ஒழிப்பு என்றெல்லாம் பாவ்லா காட்டாமல்,அதை ஒரு நிதர்சன உண்மையாகவே கொண்டு ,வேறுபாடு பாராமல் எல்லா சாதியினரிடமும் சம அன்பு காட்டி ,சமமாகவே உணர்த்துவார்.

    இளைய தலைமுறை வளரும் நடிகர்களுக்கு இவரளவு வாய்ப்பளித்து உயர உதவியவர்கள் யாருமில்லை.

    தன் சம்பத்த பட்ட படங்களாக இருந்தாலும் மனதில் உள்ளதை உள்ள படி விமர்சிப்பார்.

    அறவே ego இன்றி யாராவது ஏதாவது தன் மனம் கோணும் படி உளறினாலும் மன்னிப்பார்.

    நண்பர்களை மிக நம்புவார். வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்.

    படங்களின் Quality க்காக அவர் தன்னை வருத்தி கொண்ட அளவு யாரும் செய்ததில்லை.

    பிற மாநில, பிற நாட்டு கலைஞர்களிடம் மிக இணக்கம் காட்டி ,அவர்கள் மதிப்பை பெற்றார்.

    யாராவது ஏதாவது சிறப்பாக செய்து விட்டால் ,யாரென்று பாராது மிக மனம் திறந்து பாராட்டுவார்.

    தன் சுய image building பற்றி கவலையே பட்டதில்லை.

    உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை.

    பொது வாழ்வில் தூய்மை கொண்டவர். தன் நன்மைக்காக ரசிகர்களை பயன் படுத்தவே விரும்ப மாட்டார்.அவரவர் படிப்பை,தொழிலை,குடும்பத்தை கவனிக்கவே சொல்வார்.

    நல்ல விஷயங்கள் எந்த மொழியில்,திசையில் இருப்பினும் தேடி கொண்டு வருவார்.

    தன் திறமை ஒன்றையே நம்பி,வெளிப்படையாய் வாழ்ந்தவர்.

    தன் கடைசி படத்திலும், உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் ,அதே அர்பணிப்புடன் வேலை செய்தவர்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. Thanks sivaa thanked for this post
    Likes sivaa, Harrietlgy liked this post
  12. #688
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நான் மறக்கவே முயலும் நினைவு நாள் காணும் எங்கள் தென்னவர் திலகமே,திராவிட ஆண்மையின் மன்மத திலகமே ,நடிகர் திலகமே , இந்த தூசு கவி உனக்களிக்கும் மாசு காணா ஆசை கவி மழை. உன் ஆசிகளின் துளியை எனக்களி பிரதியாய் .

    அன்னை தமிழின் அருந்தவ புதல்வனே நல்லூழ் கண்டோர் நாங்கள்
    உன்னை தொழுதே அளப்பரிய களிப்புடன் அடிதன்னில் வீழ்வோம்

    போற்றி உன்னை எனை மறந்து புகழ்ந்தே கவிபாடும் திறன்
    ஆற்றல் எமக்கே அளித்தோனே ஆக்கமுடன் மருளாது

    ஏற்றமிகு வாணியின் பிணக்கா செல்வம் கணக்கிலா இணக்கமுற
    பெற்ற நீ இம்மண்ணுதித்ததோ ஆயிரத்தொன் இருபத்து எட்டில்

    தோப்புகரண துதி செய்து தெளிதேனுடன் இடுவேன் இந்நினைவுநாள்
    காப்பு நீயென வேண்டி தொழுவேன் எங்கள் கணேசமூர்த்தியே

    தேவ பெற்றோருக்கு தேவமைந்தனாய் வந்துதித்த தேவனே
    நாவன்மை பேறு நான் பெற காவன்மை குவித்த காருண்யனே

    காரிருள் களைந்து களைத்துநின்ற தமிழுக்கு பேரொளி தந்தாய்
    சூரிய செம்மை நிகர் ஒப்பரிய காரிய செம்மை வீரியம் கண்டோய்

    கொஞ்சும் தமிழால் அஞ்சுக செல்வன் அருந்தமிழை விருந்தமைவாய்
    தஞ்சையின் தங்கமே நல்லதோர் வீணையாய் விந்தையுறு விசையுறு

    வேகமொடு வேந்துவின் வீச்சோடு வற்றியிருந்த மண்ணுக்கு வெற்றிவாகை
    தாகமொடு தாங்கொணா தகிப்புடன் தவித்த தத்தைகளுக்கு தமிழமுத தாயமுது

    தரணியே இருள் இற்று அடைநதது அளப்பெரும் பேறு அருந்தவன் பேரு
    முரணியே தேங்கிடா காட்டாற்று வெள்ளம் கலையின் தலைமகன் கொடைநூறு

    கண்டோர் கேட்டோர் களித்து கடைந்தெடுத்த பார்க்கடலமுதாய் நடிப்பமுது
    வேண்டார் வேண்டார் நல்லோர் அல்லார் சிந்தையில் கண்டார் சிவாஜி வென்றதை

    வசதி வேண்டி மெய்வருத்தம் காணா தடை தகர்த்து படைபுடை கண்டு
    அசதி இன்றி ஈந்தாயே இன்னுயிர் இன்னுடல் கலைபணிக்கே

    சந்தையில் நிலை உயர நேசம் மறவா நன்நெஞ்ச நற்றமிழர் நயந்தே
    சிந்துபாடி சிறப்புற ஊக்கம் உகந்தனர் உணர்ந்தே உகந்தே

    அந்தவரை தன்னை அணுவும் மறக்காமல் ,நிலை துறக்காமல்
    தந்தவரை தலையில் தூக்கி போற்றினான் தன்னுள் பின்னாள் வரை

    விந்தையுற தந்தான் உடன் உடன்பிறந்த கற்ற பெற்ற வித்தைகளை
    தங்கு தடையின்றி ஓங்கு புகழ் சேர்த்தான் தன் பால் தமிழ்மண்ணுக்குமாய்

    காசினியில் கண்டோர் விண்டொரெல்லாம் பூசித்து போற்றும்
    மாசிலா புகழை எகிப்து ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில்

    நேசித்து ஈந்தனர் உலகின் சிறந்த கலைஞர் உயர்ந்த சிறப்பை
    யோசித்த நாசரோ நம் நடிகரல்ல உலக தலைவர் நேருவினும் நேரானவர்.

    நாணிய அமெரிக்கனோ வா வா எனவே சிவப்பு கம்பளம் விரிக்க
    வாணியின் வையக மைந்தனை சிறப்பு மேயராக்கி சிறக்க வைத்தான்

    நெப்போலிய பூமிக்கோ அளப்பிலா அசூயை கலையின் ஊற்றிடம் அன்றோ
    இப்புவியின் ஒப்பிலா வீரன் துவக்கிய அசுத்தம் கலக்கா புனித விருதை

    எப்புவிக்கும் ஒப்புவிக்கும் ஒப்ப வைக்கும் ஓய்வு காணா கலை விந்தைக்கு
    ஒப்புவித்தே தப்புவித்தது தன் கலை புகழை தன் தேச தகைமையை

    நடிப்பு வீரம் போற்றி துடிப்பு மிகு விழா கண்டு பெருமை மீட்டது ஓங்கியும்
    இடித்தே இகழ்ந்தது இந்திய துணை கண்டத்தின் இழிவு நிலை அரசு அரசியலை

    வேகமற்ற இந்திய அரசோ அரசை கலையாக்க கலையை அரசியலாக்க
    விவேகமுற்ற வேகத்தில் விருது ஒன்றிற்கு பெருமை தந்து தாதாவை காத்தது

    உலக வல்லரசே உன் முறை மீண்டும் இம்முறை தங்க சாவியல்ல
    கலகம் கண்டே கலக்கமின்றி உரைப்போம்,வாழ்நாள் ஆஸ்கார் பூட்டு

    ஓர்ந்து பதில் சொல் விருதுகளுக்கு கேள்விகளும் கேலிகளும் கூடுமுன்
    தேர்ந்தெடுப்பாய் தெளிவாக உலக உன்னத உயரத்தை பதிலாக

    தூயவனே தேட படுகிறாய் உலக மனிதம் காக்கும் காவலர்களால்
    மாயவனே மனித அடிமை விலங்கொழித்து துடைத்தெறிந்த வழக்கை

    ஓயாமல் காத்துள்ளாயாமே பெரும் வாழ்நாள் அடிமை கூட்டம் சுமந்து
    மாயாமல் மாய்ந்ததாய் கதைத்து விடுவிக்கும் மனமும் அற்று சோதிக்கிராயாமே

    தேயாமல் புகழ் தாங்கும் கூட்டமோ நிலை பெற்ற விலையிலா பிடிப்புடன்
    காயாமல் காக்கும் கதிர்களாய் கர்ணன் கண்ட புத்திளம் புது கூட்டம் கூடுதல்

    வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து
    இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. Thanks sivaa thanked for this post
    Likes sivaa liked this post
  14. #689
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Vikatan,



    இவருக்கு நிகராக நடிக்கக் கூடிய ஒரு நடிகர் அகில உலகிலும் இல்லை. ஒருவேளை, ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால், இவரைப் போல நடிக்கக்கூடும்' என 60 களில், அந்த நடிகரின் நாடக விழாவில் பங்கேற்ற அண்ணா பேசினார். நடிகரின் திறமையை உயர்த்திக்காட்ட அண்ணா மிகைப்படுத்தி சொன்ன வார்த்தைகளை அந்த ஹாலிவுட் நடிகரே நேரில் கூறக் கேட்கும் அதிர்ஷ்டத்தை அடுத்த இரு ஆண்டுகளில் பெற்றார் அந்த நடிகர். அவர், நடிப்புப் பல்கலைக்கழகம் என இந்திய சினிமா கொண்டாடும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

    1962 ம்ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா சென்ற சிவாஜிகணேசனுக்கு அத்தனை இடங்களையும் சுற்றிப்பார்த்தபின் நடிப்பில் தன்னுடன் ஒப்பிடப்படும் உலகப் புகழ் நடிகர் மார்லன் பிராண்டோவை நேரில் பார்க்கும் ஆசை பிறந்தது. 'அக்ளி அமெரிக்கன்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பிராண்டோவுக்கு அந்தத் தகவல் போனபோது, ' அப்படி ஒரு சந்திப்பு நடந்தால் அவரைவிடவும் எனக்குத்தான் அதில் மகிழ்ச்சி” என உடனே சம்மதித்தார்.

    அரைமணிநேரத்திற்கும் மேலாக தனிமையில் பேசினர் இருவரும். சிவாஜியின் நடிப்பை வெகுவாக சிலாகித்துப்பேசிய பிராண்டோ, சிவாஜி கிளம்பிய சமயம் அவரைக் கட்டிப்பிடித்த பிராண்டோ, “ நான் அல்ல எந்த ஒருநடிகரை விஞ்சியும் நீங்கள் நடித்துவிடமுடியும். ஆனால் உங்களைப்போல் நடிப்பதுதான் எங்களுக்குச் சிரமம்” என்று சொல்லி நெகிழ்ந்தார். உலகப்புகழ் நடிகனால் இப்படி சிலாகிக்கப்பட்ட ஒரு நடிகருக்குதான் உள்ளுரில் ஒரு சிலை அமைக்க பல ஆண்டுகளாகப் பெரும்பாடுபடவேண்டியதிருக்கிறது என்பது வரலாற்றுச் சோகம்.



    நடிகர் திலகத்தின் நினைவுநாளில், தன் நடிப்பால் திரையுலகைக் கட்டி ஆண்ட அந்த மகாநடிகனுக்குத் தமிழ்த்திரையுலகமோ தமிழக அரசோ ஒரு சிலை அமைக்கும் பணியில் கூட உரிய மதிப்பளிக்கவில்லை எனக் கூடுதல் வருத்தத்தில் உள்ளனர்.

    கே. சந்திரசேகரன்இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவாஜி ரசிகர் நற்பணி மன்றத் தலைவர் கே.சந்திரசேகரன், “தன் நடிப்பினால் இந்தியாவை நிமிர்ந்து பார்க்க வைத்தவர் சிவாஜி. தமிழகத்தின் கலை அடையாளங்களில் தவிர்க்கமுடியாதவர். ஆனால் ஒரு சிலை விவகாரத்தில் அவருக்கு இழைக்கப்படும் அநீதி எங்களைப்போன்ற ரசிகர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்திவருகிறது” என்று பேசத் துவங்கினார்.




    “கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, சிவாஜியைக் கவுரவிக்கும்விதமாக சென்னை டிஜிபி அலுவலகம் அருகே, அவரது முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டது. இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி நாகராஜன் என்பவர் வழக்குத் தொடுத்தார். கடந்த 10 வருடங்களில் அந்த சிலையால் எந்த விபத்து அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என நாங்கள் தெரிவித்த கருத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை; சிலையை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து அடையாறில் சிவாஜிக்குக் கட்டப்பட்டுவரும் மணிமண்டபத்தில் அதை வைக்கப்போவதாகத் தெரிவித்த அரசு மணிமண்டப பணிகள் முடியும் வரைகால அவகாசம் கேட்டுப்பெற்றது.

    இந்த நிலையில் அகற்றப்படும் சிலையை அதே பகுதியில் பொதுமக்கள் பார்வையில் படும் ஓரிடத்தில் வைக்க உத்தரவிடும்படி நீதிமன்றத்தில் மனு செய்தேன். விசாரணையில் சிலையை மணிமண்டபத்தில் வைக்கும் முந்தைய தீர்ப்பை உறுதி செய்துள்ளது நீதிமன்றம்” என்றவர் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசினார்.

    “தமிழகத்தில் சிலை வைக்கும் கலாசாரம் நீண்டகால வழக்கம். எம்.ஜி.ஆர் ,அண்ணா. காமராஜர், இன்னும் பல தேசியத் தலைவர்களை கவுரவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இவர்களுக்குச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவாஜிக்கு ஒரே ஒரு சிலை சென்னையில் மட்டும்தான் உள்ளது. ஆனால் அந்த ஒரு சிலையையும் அகற்ற நடக்கும் முயற்சிகள் வேதனையைத் தருகிறது.

    கடந்த பத்து வருடங்களில் அந்த சிலையால் எந்த விபத்துகளும் ஏற்பட்டதில்லை என்றாலும் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்தோம். ஆனால் பொது இடத்திலிருந்து அகற்றுகிற சிலையைத் திரும்பவும் வேறொரு பொது இடத்தில் வைப்பதுதானே நடிப்புக்கு இலக்கமான ஒரு கலைஞனுக்குச் செய்கிற மரியாதை?!... அரசு அதை மணிமண்டபத்தில் வைப்பதாக முடிவெடுத்துள்ளது. மணிமண்டபம் என்பது ரசிகர்கள் மட்டுமே வந்துசெல்லும் இடம். அங்கு வைப்பது சிவாஜிக்குக் கவுரவம் செய்வதாக இருக்காது.




    மணிமண்டபத்தில் வைக்க அரசுக்கு வேறொரு சிலை கிடைக்காதா..தமிழகத்தில் பிறந்து நடிப்பில் உலகளாவிய புகழ்பெற்ற ஒரு கலைஞனுக்கு அவன் பிறந்தமாநிலத்தில் சிலைவைக்க வேண்டுகோள் வைப்பது என்பதே வெட்கக்கேடானது. தன் மூத்த கலைஞனுக்கு இழைக்கப்படும் அவமரியாதையை நடிகர் சங்கம் வேண்டுமென்றே கண்டும் காணாமலும் இருக்கிறது.

    எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் நடிகர் சங்கத்தில் அரசியலோ மதமோ மற்ற எந்தப்பிரச்னையும் இருந்ததில்லை. சிவாஜி அமெரிக்க அரசின் அழைப்பில் அமெரிக்கா சென்று வந்ததற்கு விமானநிலையத்திலிருந்து மாலை மரியாதையோடு அழைத்துவந்து நடிகர் சங்கம் சார்பாக பாராட்டுக்கூட்டம் நடத்தியவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் பாரத் விருது பெற்றதற்காக அதேநடிகர் சங்கம் சார்பாக மிகப்பெரிய பாராட்டுவிழா நடத்தியவர் சிவாஜி. இப்படி அன்றைக்கு கட்சிமாச்சர்யங்களின்றி நடிகர் சங்கம் இயங்கியது. ஆனால் இன்று அரசியல் கட்சியின் கிளை போல் சங்கத்தை ஆக்கிவிட்டனர். ஆளும் அரசை துதிபாடி ஆதாயம் பெறுவதுதான் சங்கத்தின் முதன்மைப் பணி என்றாகிவிட்டது. நடிகர்கள் ஆளுக்கொரு அரசியல் கட்சியில் இருப்பதால் சங்கத்தை தங்களின் அரசியல் நடவடிக்கைக்குப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதிமுகவின் 3 அணிகளில் எதை ஆதரிப்பது என்பதுதான் இப்போதைக்கு அவர்களின் ஆகப்பெரிய கவலை. அதனால் அவர்களுக்குத் தங்கள் முன்னோடிகளைப்பற்றிய அக்கறை துளியும் இல்லை. தமிழகத்தின் கலை அடையாளமான ஒரு கலைஞனின் சிலை விவகாரத்தில் இன்றுவரை அவரது ரசிகர்களாகிய நாங்கள்தான் சட்டப்போராட்டம் நடத்திவருகிறோம். இது அரசும் நடிகர்சங்கமும் வெட்கப்படவேண்டிய விஷயம்.

    முதலில் இந்த சங்கத்தின் பெயரே முரணானது. அன்றைக்குச் சென்னையை மையமாகக் கொண்டு எல்லா மொழிப்படங்களும் தயாரானபோது தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தபின் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப்படங்கள் தனித்தனியே தயாரிக்கப்படத்துவங்கி மொழியின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களில் தனித்தனியே நடிகர் சங்கங்களை உருவாக்கிக்கொண்டுவிட்டனர். அவை தங்கள் மொழித்தனித்துவத்துடன் இன்றளவும் இயங்கிவருகிறது. ஆனால் தமிழகத்தில் இன்றும் அபத்தமாக தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் தொடர்கிறார்கள். மலையாளத்தில் யாத்ரா மொழி என்ற படத்தில் சிவாஜி நடிக்கப்போனபோது, மலையாள நடிகர் சங்கமான 'அம்மா,' சிவாஜி, தங்கள் சங்கத்தில் உறுப்பினராகவில்லையென்றால் நடிக்க அனுமதிக்கமாட்டோம் என பிரச்னை கிளப்பினர். இத்தனைக்கும் படத்தில் கெஸ்ட் ரோல் தான் சிவாஜிக்கு. இப்படி மற்ற மாநிலங்களில் தனித்துவத்துடன் நடிகர் சங்கங்கள் செயல்பட்டுவருகின்றன.



    ஆனால், தமிழகத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் முரணான பெயரில் செயல்படுகிறது. அப்படித் தமிழ் நடிகர் சங்கமாக இருந்திருந்தால் சிவாஜி சிலைக்கு இந்த நிலை நேர்ந்திருக்காது. தலைமைப் பொறுப்பில் இருக்கும் தமிழர், சிவாஜியின் மதிப்பை உணர்ந்து அவருக்குக் கவுரவம் கிடைக்க பாடுபட்டிருப்பார். ஆனால் சிவாஜி, எம்.ஜி.ஆரால் அரும்பாடுபட்டு உருவாக்கிய சங்கத்தில் எந்த சிரமுமின்றி வந்து உட்கார்ந்துகொண்டவர்களுக்கு சிவாஜியைப்பற்றி நினைக்கவோ அவர்களின் பிரச்னைக்குக் குரல் கொடுக்கவோ நேரமில்லை.

    ஆந்திராவில் என்.டி.ஆர் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவரானாலும் அவருக்கான மரியாதையை அந்த மாநில அரசும் மக்களும் தரத்தவறவில்லை. கர்நாடகாவிலும் ராஜ்குமாருக்கு மணிமண்டபம் கட்ட அத்தனை அரசியல் கட்சிகளும் நடிகர்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தனர். அங்கு யாருக்கும் ராஜ்குமார் சிலையை அகற்றச் சொல்ல துணிச்சல் வரவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் கலைஞர்களை அரசியலோடு பொருத்திப்பார்க்கிற அவலம் இருக்கிறது.


    உடனே சில அறிவாளிகள் சிவாஜி நடித்துசம்பாதித்தாரே அவரது பிள்ளைகள் தங்கள் சொந்த செலவில் சிலை அமைக்கலாமே என்கிறார்கள்...விளையாட்டு மற்றும் மற்ற துறைகளில் பணியாற்றியவர்களும் அதன்மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள். தேசத்திற்கு தேடித்தரும் புகழுக்காக அவர்களுக்கு விருது கொடுத்தும், சிலை அமைத்தும் கவுரவிப்பார்கள். அதுபோலத்தானே இது. இந்த சிறுவிஷயத்தைக் கூட உணராமல், பேசுகிறார்கள்; சிலையை அகற்றக் கோரிக்கை வைக்கிறார்கள். காலம் முழுவதும் தன் நடிப்பாற்றலால் தமிழகத்திற்கு புகழ்சேர்த்த ஒருவரின் சிலை விவகாரத்தில் ஆயிரத்தெட்டு பிரச்னைகளை எழுப்புகிறார்கள். இதற்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் யாரும் முன்வராதது சோகம்.

    இப்போதும் நாங்கள் சிலையை அகற்றாதீர்கள் என்றெல்லாம் சவால் விடவில்லை. எடுக்கிற சிலையை மீண்டும் அதே இடத்தில் எங்கேயாவது வையுங்கள் என்றுதான் கேட்கிறோம். கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலை, கத்திபாரா நேரு சிலை, ஆலந்துார் அண்ணா சிலை ஆகியவை மெட்ரோ பாலத்திற்காக அப்புறப்படுத்தப்பட்டு அதே இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறின்றி அமைக்கப்பட்டது. அதைப்போலவே இந்த சிவாஜி சிலையை மக்கள் பார்வை படும் இடத்தில் வைக்கக் கோருகிறோம். சிவாஜி தன் காலம் முழுவதும் சாதி மத அடையாளங்களுமின்றி ஒரு கலைஞனாக மட்டுமே இருந்தவர். ஒருவேளை அதுதான் அவரது பலகீனமோ என்று இப்போது நினைக்கிறோம்.

    தன் சமூகத்தைச் சார்ந்த ஒரு தலைவர் அரசியலில் பேரும்புகழோடும் இருந்தபோதும் சிவாஜி அவருக்கு நேர் எதிராக அரசியல் செய்த காமராஜரின் புகழை வளர்க்க இறுதிக்காலம் வரை பாடுபட்டார். அந்தக்கட்சியின் வளர்ச்சிக்குத் தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் செலவிட்டார். அப்படிப்பட்ட நேர்மையாக வாழ்ந்து மறைந்த கலைஞனுக்கு அரசும் நடிகர் சங்கமும் செய்கிற கவுரவம் இதுதானா...கலைஞனையும் கலையையும் புறக்கணிக்கிற ஒரு சமூகம் முன்னேற்றமடையாது என்பதை அரசு உணரவேண்டும்.” என்று வேதனையான குரலில் சொல்லிமுடித்தார் கே. சந்திரசேகரன்.

    காலம் முழுவதும் தன் நடிப்பாற்றலினால் தமிழர்களை மகிழ்வித்த கலைஞனின் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்து கவுரவிப்போம்; மன்னிக்கவும் 'கவுரவம் பெறுவோம்!'
    Last edited by Barani; 21st July 2017 at 02:44 PM.

  15. Thanks sivaa thanked for this post
    Likes sivaa liked this post
  16. #690
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று நான் நினைக்கவே விரும்பாத ஒரு நாள்.
    இது உன் நினைவு நாளாம் .
    என் தெய்வமே ,எனக்கு அனுதினமும் உன் நினைவு நாள்தானே.
    நான் உன்னை விட அதிகம் நேசித்தது இவ்வுலகில் இல்பொருளாகும் .
    உலகில் உன்னை மிஞ்ச யாருமில்லை என்ற ஒற்றை வரியில் முடித்து நெஞ்சு நிமிர்த்தாமல்,
    எத்தனை வரிகளை எழுதி எழுதி இந்த திரியில் சுமை ஏற்றுகிறோம்.
    நீ உன் நடிப்பால் என்னை அழ வைத்த நாட்களை எண்ணி முடிக்கும் வலு என் மூளைக்கில்லை
    ஆனால் நீ உறங்கி கண் மூடி என்னை கதற வைத்த ஒரே நாள்
    உன்னால் எனக்கு கெடுதல் விளைந்து ஊண் உறக்கத்தை தொலைய வைத்த நாள்
    ஆனாலும் இதை நான் நினைவு நாளாக எண்ண வேண்டுமாம்.
    நான் சொல்வேன் இந்த நாளொன்றை தவிர அனைத்துமே எனக்கு உந்தன் நினைவுநாளே...
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  17. Thanks sivaa thanked for this post
    Likes sivaa liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •