-
25th May 2018, 07:37 AM
#1001
Junior Member
Diamond Hubber

ஏழிசை வேந்தர்
டி எம் எஸ் அய்யா
அவர்களின்
5-ம் ஆண்டு
நினைவு தினம் இன்று
Last edited by ravichandrran; 25th May 2018 at 07:39 AM.
-
25th May 2018 07:37 AM
# ADS
Circuit advertisement
-
25th May 2018, 03:29 PM
#1002
Junior Member
Diamond Hubber
நம்முடைய மக்கள் திலகம் புரட்சி தலைவர் பொன்மன செம்மல் எம்ஜிஆர் அவர்கள் பற்றிய ஒரு உண்மை சம்பவம்:-
உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்... நீ வேலை தருவியா மாட்டியா?' - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை. அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், 'போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க... பேசலாம்' என்கிறார். ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், 'இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?'
'போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்' என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.
உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர்... அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!
அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்... கூடவே அரசாங்க சம்பள கவர். புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.
அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. இன்றும் அந்தப் பெரியவர் இருக்கிறார். அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!
இன்றைக்கு ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா... அல்லது இதையெல்லாம் அனுமதிக்கும் பெரிய மனசுதான் யாருக்காவது வருமா?
மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.... சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்... அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.
ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல். தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் மத்தியில் தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்!
அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்... அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது!
'என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்... எதுவான போதிலும் ஆகட்டுமே' என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர்.
பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!
புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.
எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!
எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!
வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை... என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்! 👌 👍💐 Thanks... WhatsApp Friends...
-
25th May 2018, 03:33 PM
#1003
Junior Member
Diamond Hubber
1968 -2018
பொன்விழா* நினைவலைகள் .
1968 ல் வெளிவந்த படங்களின்* ஒரு கண்ணோட்டம் .....
எம்ஜிஆர் -8
சிவாஜி - 8
ஜெய்சங்கர் -9
ரவிச்சந்திரன் -4
ஜெமினி - 3
ஏ வி எம்* ராஜன் - 2*
நாகேஷ் -2
வண்ணப்படங்கள்*
ரகசியப்போலீஸ்* 115
குடியிருந்த கோயில்*
ஒளிவிளக்கு*
தில்லானா* மோகனாம்பாள்*
திருமால் பெருமை
மூன்றெழுத்து*
வெள்ளிவிழா* ஓடிய படம்*
பணமா பாசமா*
10 திரை அரங்கில்* 100 நாட்கள்* ஓடிய படம்*
குடியிருந்த கோயில்*
100 நாட்கள்* ஓடிய படங்கள்*
எம்ஜிஆர் - 3* **
ரகசியப்போலீஸ்* 115* திருச்சி* மற்றும் சேலம்*
குடியிருந்த கோயில்* - 10*
ஒளிவிளக்கு* *மதுரை , திருச்சி* குடந்தை* 3
சிவாஜி -3
தில்லானா* மோகனாம்பாள்** சென்னை -3* மதுரை* திருச்சி* கோவை* = 6
கலாட்டா கல்யாணம்* - சென்னை* சாந்தி - கிரவுன்* *மட்டும்*
உயர்ந்த* மனிதன் - சென்னை* *வெலிங்டன்* மட்டும்*
ஜெமினி - 1
வசூலில் சாதனை - குடியிருந்த கோயில்*
சிறந்த படம் - குடியிருந்த கோயில்*
சிறந்த* நடிகர் - எம்ஜிஆர்* *- குடியிருந்த கோயில்*
எம்ஜிஆர்* 100* வது* படம்* *ஒளிவிளக்கு*
சிவாஜி* 125* வது* படம்* - உயர்ந்த* மனிதன்*
டி .எம் சவுந்தரராஜன்* நடித்து தயாரித்த படம் - கல்லும் கனியாகும்*
நாகேஷின்* சிறந்த படம் - எதிர் நீச்சல்*
100 காட்சிகள்* தொடர்ந்து* அரங்கு* நிறைந்த* படங்கள்*
குடியிருந்த கோயில்*
ஒளிவிளக்கு*...
-
25th May 2018, 03:39 PM
#1004
Junior Member
Diamond Hubber
1968
நடிகர்* சிவாஜி கணேசன்* நடித்து* வெளிவந்த படங்கள்*
திருமால் பெருமை* *-* 50 நாட்கள்* * * **
ஹரிச்சந்திரா -* படுதோல்வி*
கலாட்டா கல்யாணம்* * 100 நாட்கள்*
என்தம்பி - 50 நாட்கள்*
தில்லானா* மோகனாம்பாள்** * 100 நாட்கள்*
எங்க ஊர்* ராஜா - 70 நாட்கள்*
உயர்ந்த* மனிதன்* * *100 நாட்கள்*
லட்சுமி கல்யாணம் - படு தோல்வி*
மறு* வெளியீட்டில்* * தில்லானா* மோகனாம்பாள்* மட்டுமே* சில முறை* *வந்துள்ளது .*
எம்ஜிஆரின் சாதனை*
1968ல்* வசூலில்* சாதனை - குடியிருந்த கோயில்*
இலங்கையில்* ஒளிவிளக்கு* முதல் வெளியீட்டிலும் 161 நாட்கள் ஓடியது*
1979ல்* மறுவெளியீட்டில்* ஒளிவிளக்கு* இலங்கையில்; 100 நாடகள* ஓடியது*
ரகசிய போலீஸ்* 116* * - 100 நாட்கள்* ஓடியது*
கண்ணன் என் காதலன்* - 13 வாரங்கள்* மதுரையில்* ஓடியது*
புதிய பூமி* மற்றும்* கணவன்* 8 வாரங்கள்* ஓடியது*
தேர்த்திருவிழா* 7 வரங்களும்* *காதல்* வாகனம் 6 வாரங்களும்* ஓடியது .
மறு* வெளியீடுகளில்* எம்ஜிஆரின்* 8 படங்களும்* பல* முறை வெளிவந்து* வெற்றி பெற்றுள்ளது*
முதல்* வெளியீட்டில்* *வெள்ளிவிழா* ஓடிய படமான* பணமா பாசமா* *பின்னர்* மறு* வெளியீட்டை* காணவே* இல்லை ...👌 ☺
Thanks... Whatsapp friends...
-
25th May 2018, 09:52 PM
#1005
Junior Member
Devoted Hubber

Originally Posted by
suharaam63783
1968
நடிகர்* சிவாஜி கணேசன்* நடித்து* வெளிவந்த படங்கள்*
திருமால் பெருமை* *-* 50 நாட்கள்* * * **
ஹரிச்சந்திரா -* படுதோல்வி*
கலாட்டா கல்யாணம்* * 100 நாட்கள்*
என்தம்பி - 50 நாட்கள்*
தில்லானா* மோகனாம்பாள்** * 100 நாட்கள்*
எங்க ஊர்* ராஜா - 70 நாட்கள்*
உயர்ந்த* மனிதன்* * *100 நாட்கள்*
லட்சுமி கல்யாணம் - படு தோல்வி*
மறு* வெளியீட்டில்* * தில்லானா* மோகனாம்பாள்* மட்டுமே* சில முறை* *வந்துள்ளது .*
எம்ஜிஆரின் சாதனை*
1968ல்* வசூலில்* சாதனை - குடியிருந்த கோயில்*
இலங்கையில்* ஒளிவிளக்கு* முதல் வெளியீட்டிலும் 161 நாட்கள் ஓடியது*
1979ல்* மறுவெளியீட்டில்* ஒளிவிளக்கு* இலங்கையில்; 100 நாடகள* ஓடியது*
ரகசிய போலீஸ்* 116* * - 100 நாட்கள்* ஓடியது*
கண்ணன் என் காதலன்* - 13 வாரங்கள்* மதுரையில்* ஓடியது*
புதிய பூமி* மற்றும்* கணவன்* 8 வாரங்கள்* ஓடியது*
தேர்த்திருவிழா* 7 வரங்களும்* *காதல்* வாகனம் 6 வாரங்களும்* ஓடியது .
மறு* வெளியீடுகளில்* எம்ஜிஆரின்* 8 படங்களும்* பல* முறை வெளிவந்து* வெற்றி பெற்றுள்ளது*
முதல்* வெளியீட்டில்* *வெள்ளிவிழா* ஓடிய படமான* பணமா பாசமா* *பின்னர்* மறு* வெளியீட்டை* காணவே* இல்லை ...👌 ☺
Thanks... Whatsapp friends...
சுகாராம் அய்யா, நண்பா
மாற்று திிரியிலே சிவா என்பவர் நம்ப திரிக்கு வந்து அவர்கள் நடிகரைப் பற்றி நம் திரியில் எழுதுவதைப் பற்றி கேட்டார்.
அதுக்கு, நீங்கள் (சிவா) புரட்சித் தலைவரைப் பற்றி உங்கள் திரியில் இழிவுபடுத்தி போட்டதற்குத்தான் நாங்கள் பதில் சொல்கின்றோம். நாங்களாக வம்பு வலிக்கவில்லை என்று நான் அவருக்கு பதில் சொன்னேன். அதற்கு அவர் விளக்கம் அளிக்கவில்லை. அவர்கள் திரியில் தப்பையும் திரு்த்தவில்லை.
அதோடு நிற்காமல் அதுக்கு அப்புறமும் தொடர்ந்து மக்கள்திலகத்தையும் அவரது படங்களையும் குறை சொல்லி கிண்டல் செய்யும் பொய்யான பேஸ்புக் பதிவு களை போட்டுக் கொண்டு வருகிறார்.
நான் பொய் சொல்லவில்லை சந்தேகம் இருந்தால் பாருங்கள். (மாற்றுத் திரி பாகம் 19 பதிவ 2380)
சரி அவர் திருந்திக் கொள்ள மாட்டார் என்று விட்டு விட்டேன்.
நாம்பளும் பதிலுக்கு அவர்கள் நடிகரின் தோல்விப் படங்கள் பற்றி போட வேண்டாம் என்று உங்களக் கேட்டுக் கொள்கிறேன் சுகாராம் அய்யா.
ஹரிச்சந்திரா தோல்வி படம் என்று நம்பளுக்குத் தெரியும். அதப்பற்றி சொல்லி அந்தப் படத்தைப் பத்தி தெரியாதவர்களுக்கும் தெரிய வைக்க வேண்டாம்.
என்னதான் கமலஹாசன் உருண்டு புரண்டு அழுது மூன்றாம்பிறை படத்திலே குரங்கு மாதிரி பல்டி அடிச்சு நாயகன் படத்தில் ஹாா...ஹஹாா.... ஹஹாாாா.... என்று கதறி அழுது நடிச்சாலும்
உண்மை எல்லாருக்கும் தெரியும். ரஜினிதான் சூப்பர் ஸ்டார் நடிகர். அதிக மார்க்கெட். கமலஹாசனனைவிட அதிக சம்பளம் வாங்கும் நடிகர்.
இதேதான் அவர்கள் நடிகருக்கும் மக்கள் திலகத்துக்கும் வித்தியாசம்.
அவர்கள் நடிகர் என்னதான் குட்டிக் கரணம் போட்டாலும் மக்கள் திலகம்தான் அவர் சினிமாவில் இருந்த வரை சூப்பர் ஸ்டார். அதிக சம்பளம் வாங்கிய நடிகர்.
இதை இப்பத்திய சூப்பர் ஸ்டார் ரஜினியே ஏ.சி. சண்முகம் கல்லூரியில் புரட்சித் தலைவர் சிலை திறப்பு விழாவில் சொன்னார். சினிமாவில் சிவாஜி கணேசனையும் அரசியலில் கருணாநிதியையும் விஞ்சி நின்று புரட்சித் தலைவர் சாதனை படைத்தார் என்று ரஜினி சொன்னார். அதயும் நம்ப திரியில் ரஜினி பேசி பேப்பரில் வந்ததை போன பாகத்தில் போட்டிருக்கின்றோம்.
உண்மை எல்லாருக்கும் தெரியும்.
எனவே, சிவா அவர்களுக்குப் போட்டியாக அவர்கள் நடிகரின் தோல்விப் படங்கள் பற்றி நீங்கள் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் ெகாள்கிறேன்.
புரட்சித் தலவரை தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் பதில் சொல்லலாம். விட்டு விடுங்கள்.
-
25th May 2018, 10:19 PM
#1006
Junior Member
Diamond Hubber
திரு மஸ்தான் சாஹிப் நன்றி, நமக்கும் பதில் லாவணி பாட விருப்பமில்லை தான், அதற்கு அவசியமும் தேவையுமில்லை தான், 1968 ம் ஆண்டில் யாருடைய படங்களுக்கு யாருடைய படங்கள் போட்டி என்பதை ஊரும், உலகமும் அறியும்... ஆனால் மாற்று இட ரசிக கண்மணிகள் தெரிந்தும் அவை அறியாதது போல் சமுக வலை தளங்கள், நாளிதழ் இவற்றில் கீழ் நிலை மன பாங்கு கொண்டு தவறான பதிவுகளுக்கு விளக்கமளிக்கவே நண்பர்கள் பகிர்ந்த பதிவை தந்தோம்...
-
25th May 2018, 10:32 PM
#1007
Junior Member
Diamond Hubber
பாரம்பரிய வரலாற்றை கொண்ட தமிழ் நாளிதழ் வெள்ளிக்கிழமை சினிமா பகுதியில் யார் வேண்டுமானாலும், என்ன எழுதி கொடுத்தாலும் அதனை ஆய்ந்து சீர் தூக்கி பார்த்து ஆசிரியர் குழு, நிருபர் குழு கலந்து பேசி ஆராயாமல் அப்படியே செய்தி போடுவது வழக்கமாகி வருகிறது. தவறான செய்திக்கு மறுப்பு தந்தாலும் அதை போடுவதில்லை என நடந்து கொள்வது ஆரோக்கியமானது அல்லவே...
-
25th May 2018, 10:44 PM
#1008
Junior Member
Diamond Hubber
-
25th May 2018, 10:45 PM
#1009
Junior Member
Diamond Hubber
-
25th May 2018, 11:45 PM
#1010
Junior Member
Platinum Hubber
இன்று முதல் (25/5/18) குழித்துறை லட்சுமியில் (கன்னியாகுமரி மாவட்டம் )
நடிக மன்னன் /நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் ஆர்ப்பரித்த டிஜிட்டல்
"எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .
Bookmarks