10 ஜனவரி 2021

நம்முடன் வாழும் இசை கலைஞர், அவர்களுக்கு நம் குழுவின் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

கே. ஜே. யேசுதாஸ்
கட்டசேரி யோசஃப் யேசுதாஸ் (மலையாளம்: കാട്ടശ്ശേരി ജോസഫ് യേശുദാസ്) , (பிறப்பு 10 சனவரி 1940) அல்லது பரவலாக கே.ஜே.யேசுதாஸ், ஓர் இந்திய கருநாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். அவர் தமது 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி,அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.[2][3][4] சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் ஏழு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார். திரையிசைத் தவிர,கருநாடக இசைக் கச்சேரிகள் பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப்பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவரை கான கந்தர்வன் என்று இவரது இரசிகர்கள் அழைக்கின்றனர்.

பிறப்பும், இசைப் பயிற்சியும்
யேசுதாஸ் இலத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் அகஸ்டைன் யோசப்குக்கும், அலைசுகுட்டிக்கும் மகனாக கேரளாவின் ஃபோர்ட் கொச்சியில் பிறந்தார். அவரது தந்தை அனைவரும் அறிந்த மலையாள செவ்விசைக் கலைஞரும் நடிகரும் ஆவார். துவக்கத்தில் இசைப்பயிற்சியை அவரிடமே கற்ற யேசுதாஸ் பின்னர் திருப்புனித்துறையில் இருந்த இசை அகாதெமியில் தனது இசைக் கல்வியைத் தொடர்ந்தார். சற்றுகாலம் வேச்சூர் அரிகர சுப்பிரமணிய அய்யரிடம் பயின்ற பின்னர் செம்பை வைத்தியநாத பாகவதரிடம் மேல்நிலைப் பயிற்சி பெற்றார். இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்றார்.

திரையிசைப் பங்களிப்புகள்
யேசுதாஸ் திரைப்படப் பாடகராக 1960களில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் துவங்கினார். தமிழ்த் திரைப்படங்களில் எஸ். பாலச்சந்தரின் பொம்மையில் முதன்முதலாக "நீயும் பொம்மை, நானும் பொம்மை" என்ற பாடல் மூலம் அறிமுகமானார். ஆனால் முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது. 1970களில் இந்தித் திரைப்படங்களில் பாடத்துவங்கினார். முதல் இந்தி மொழிப்பாடல் "ஜெய் ஜவான் ஜெய் கிசான்" என்ற திரைப்படத்திற்கு பாடினார். ஆயினும் அவர் பாடி வெளிவந்த முதல் இந்திப் படமாக "சோடிசி பாத்" அமைந்தது. இவற்றைத் தொடர்ந்து பல மொழிப்படங்களில் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி பல விருதுகளையும் பெற்றார். 2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார்.

வெளியாகியுள்ள பக்தி இசைத் தொகுப்புகள்
எண்தலைப்பு1ஐயப்ப சுப்ரபாதம்2ஹரி ஹர சுத அஷ்டோத்திர சதம்3சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்4ஒண்ணாம் பொன் திருப்படியே சரணம்5ஐயப்ப பக்தி பாடல்கள் (5 தொகுதிகள்)6மகா பிரபோ7காயத்ரி மந்திரம்8அறுபடை திருப்புகழ் வரிசை9ஆரத்தி10ஆடி வருவாய்11தாயே யசோதா (ஊத்துக்காடு பாடல்கள்)12கிளாசிக்கல் பஜன்ஸ்13எந்தவேடுகோ (தியாகராஜ கிருதிகள்)

சொந்த வாழ்க்கை
யேசுதாசுக்கு பிரபா என்ற மனைவியும் வினோத், விஜய், விசால் என்ற மகன்களும் உள்ளனர். இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸ் தமது தந்தையைப் பின்பற்றி திரைப்படப் பாடகராக விளங்குகிறார். இக்குடும்பம் சென்னை மற்றும் திருவனந்தப்புரத்தில் வாழ்ந்து வருகின்றனர். தவிர ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா மற்றும் டெக்சாசில் நிலங்கள் வணிக நோக்கோடு வைத்துள்ளார்.

விருதுகள்
இசைப்பேரறிஞர் விருது, 1992. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[10]
பத்மசிறீ விருது-1975
பத்ம பூசண் விருது-2002
பத்ம விபூசண் விருது-2017[11][12]
சாகித்திய அகாதமி விருது
சங்கீத கலாசிகாமணி விருது, 2002 வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி

(வாட்ஸசப்பில் வந்த்து)