-
25th February 2010, 09:37 PM
#21
Senior Member
Platinum Hubber
வம்புச்சண்டைக்கு போகவில்லை, வந்த சண்டையை விடவில்லை!
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே- அவற்றை பழிப்பவரைப் பார்த்து உணர்ச்சிவசப்படாவிட்டால் மனித இயல்பில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும்!!!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
25th February 2010 09:37 PM
# ADS
Circuit advertisement
-
25th February 2010, 09:46 PM
#22
Senior Member
Platinum Hubber
Originally Posted by
pavalamani pragasam
ஓபாமாமை மன்மோஹன் சிங் நாற்காலியில் வந்து ஒரு நாள் உட்காரச் சொல்லுங்கள்- ஓடியே போய்விடுவார் தலையை பிய்த்துக்கொண்டு!
இருக்கலாம். என்ன இருந்தாலும் நம்ம சிங்கம் மாதிரி யாராலும் முடியுமா?
தன் ஊரிலேயே லட்சக்கணக்கானோர் குளிருக்குப்போர்வையில்லாமல் தெருவில் செத்து விழும்போது சுகமாகக்கட்டிலில் (துப்பாக்கி ஏந்திய நூற்றுக்கணக்கான காவலர்கள் புடைசூழ) சயனிப்பவர்களில் ஒருவர் தானே?(ஆதாரம் - பிரபுராம் அவர்கள் "Current affairs " பகுதியில் சுட்டிய இந்து நாளிதழ்).
அவர் மாதிரி அரசியல்வாதிகளின் ஸ்விஸ் வங்கிக்கணக்குகளுக்குப்பாதுகாப்புத்தரும் பணி செய்து கொண்டு வாளா இருப்பது அவ்வளவு எளிதா என்ன?
-
25th February 2010, 09:50 PM
#23
Senior Member
Platinum Hubber
நேர்மறை சிந்தனைகள் இல்லாமல் பொழுதுக்கும் ஓட்டைகளை பூதக்கண்ணாடி மூலம் பெரிதாக்கிக் கொண்டிருப்பதில் என்ன லாபம்? இதற்கு பேர்தான் ஆக்கப்பூர்வ சிந்தனையோ?
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
25th February 2010, 09:55 PM
#24
Senior Member
Platinum Hubber
Originally Posted by
pavalamani pragasam
உணர்ச்சிவசப்படாவிட்டால் மனித இயல்பில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும்
ஏதோ கொஞ்சம் முன்னாடி தான் பைபிள் எல்லாம் மேற்கோள் காட்டியது போல் இருந்தது அதே வேகத்தில் அடுத்தவன் கண்ணில் உள்ள துரும்பு எடுக்கும் வேலை செய்வது வேடிக்கை தான்
தாராளமாக உணர்ச்சி வசப்படுங்கள் - தவறாகப்பழி சொன்னால்!
உண்மை நிலை சொல்லும்போது உணர்ச்சி வசப்படுவது இயலாமையின் வெளிப்பாடே ஒழிய, பிறந்த நாட்டை மதிக்கும் செயல் கிடையாது
-
25th February 2010, 09:59 PM
#25
Senior Member
Platinum Hubber
Originally Posted by
pavalamani pragasam
நேர்மறை சிந்தனைகள் இல்லாமல் பொழுதுக்கும் ஓட்டைகளை பூதக்கண்ணாடி மூலம் பெரிதாக்கிக் கொண்டிருப்பதில் என்ன லாபம்? இதற்கு பேர்தான் ஆக்கப்பூர்வ சிந்தனையோ?
கோயமுத்தூர்காரர்களை கோழிக்கோட்டுக்குப்போகச்சொன்னதை நீங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது.
என்ன செய்வது, அவரவர்கள் தமக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொள்வது இந்த உலகில் புதியதல்லவே
-
25th February 2010, 10:10 PM
#26
Senior Member
Platinum Hubber
அதைத்தான் சொன்னேந் இந்த அகண்ட உபகண்டத்தில் மூலைக்கு மூலை பிரச்சினை- இருவர் கொண்ட குடும்பத்தில் ஈராயிரம் பிரச்சினை என்றால் இத்தனை கோடி பேர் உள்ள நாட்டில் பிரச்சினைகளுக்கு பஞ்சமிருக்காது- சுகமாக வீட்டில் உட்கார்ந்து கொண்டு, ஓட்டு கூட போடாமல்(பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு), வாய் வலிக்காமல் கோளாறுகளை பட்டியலிட்டுக்கொண்டிருக்காமல், ஒரு எதிர்மறை கருத்துச் சூழலை- ஐயோ எல்லாம் போச்சு, இந்த நாடு உருப்படவே உருப்படாது, வெள்ளைக்காரனை பார், நம்ம நாட்டு பரதேசிகளைப் பார், ஊழல் பெருச்சாளிகளை பார் என்று சும்மா பிதற்றுவதை விட்டுவிட்டாலே நாடு உருப்படும்!
Charity begins at home!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
25th February 2010, 10:15 PM
#27
Senior Member
Platinum Hubber
நல்லனவற்றை பட்டியலிடுங்கள், நல்ல முயற்ச்சிகளை பாராட்டுங்கள், ஓசையின்றி தீதினை களையும் வழிகளை தேடுங்கள். நேர்மறையான, பெருமையான, சாதிக்க ஊக்குவிக்கும் நம்பிக்கையான கருத்துச் சூழலை உருவாக்குங்கள். நாட்டில் நிறைய மஞ்சள் பத்திரிக்கைகள் இருக்கின்றன- அசிங்கங்களை அம்பலப்படுத்தி அற்ப சுகமும் அதிக லாபமும் ஈட்டிக்கொண்டு. நாமும் சேர்ந்து ஜால்றா தட்ட தேவையில்லை.
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
25th February 2010, 10:38 PM
#28
Senior Member
Platinum Hubber
Originally Posted by
pavalamani pragasam
ஓசையின்றி தீதினை களையும் வழிகளை தேடுங்கள்
உங்களுக்குத்தெரிஞ்ச டெக்னிக்கு கொஞ்சம் சொல்லித்தந்தால் நல்லது
-
25th February 2010, 10:58 PM
#29
Senior Member
Platinum Hubber
எனக்கு தெரிந்த ஒரே டெக்னிக்- நேர்மறை சிந்தனைகள், அணுகுமுறைகள் இவற்றை நமக்குள்ளும் வளர்த்து நம்மை சுற்றியும் வியாபிக்கச் செய்ய முயலவேண்டும். குற்றங்குறைகளை காணாமல் கண்ணை மூடிக்கொள்ள வேண்டாம். அவற்றிற்கு தேவையில்லாத, பொருந்தாத விளம்பரம் கொடுக்கவேண்டாம். நம் இளைஞர்களை தட்டிக்கொடுப்போம், விவேகானந்தரைப் போல் கர்ஜனையிட்டு ஆக்கம் செய்ய அழைப்போம்- உதயமூர்த்ய் போல் 'உன்னால் முடியும் தம்பி' என்று சொல்லிக்கொண்டேயிருப்போம். எறும்பூற கல்லும் தேயும். அவரவர் வீட்டில் ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், சுகாதாரம், நேர்மை கோட்பாடுகள், பண்பாடுகள் ஆகியவற்றை கடைபிடித்து குழந்தைகளையும் அதே பாதையில் பழக்க வேண்டும். சிறு துளி பெரு வெள்ளம். ஒவ்வொரு வீடும் உருப்பட்டால் மொத்த நாடும் உருப்படாமல் போகுமா?
பாரதியை போல் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று கதற வைக்கும்படியாகத்தான் இன்றைய சூழல் உள்ளது. ஆனால்... முயல்வோம்! A die-hard optimist!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
25th February 2010, 11:33 PM
#30
Senior Member
Platinum Hubber
Originally Posted by
pavalamani pragasam
குற்றங்குறைகளை காணாமல் கண்ணை மூடிக்கொள்ள வேண்டாம். அவற்றிற்கு தேவையில்லாத, பொருந்தாத விளம்பரம் கொடுக்கவேண்டாம்.
"வெட்கக்கேடு" என்ற முதல் இழையும் (100 பக்கங்கள் ஓடியது), பின் இரண்டாவது இழையும் தொடங்கியவர் தாங்கள் தானே
NOV அவர்களிடம் சொல்லி இந்த இழைக்கு ஒரு பூட்டுப்போடச்சொல்லுங்கள்
Bookmarks