Results 1 to 10 of 873

Thread: What a shame!

Threaded View

  1. #11
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,528
    Post Thanks / Like
    Quote Originally Posted by app_engine
    ஆயிரம் இருந்தாலும் எங்களை மாதிரி அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள் இங்கே விட்டுக்கொடுக்காமல் தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்குத்தெரியுமா?

    அது மட்டுமல்ல, மென்பொருள் மற்றும் இன்ன பிற தொழில்நுட்பத்துறை இளைஞர்களால் தான் இன்று ஓரளவுக்காவது பன்னாட்டரங்கில் பாரதம் தலை கொஞ்சம் நிமிர்ந்திருக்கிறதென்பது நீங்கள் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் நிதர்சனமான விஷயம். அதற்கும் ஒரு முக்கியக்காரணம் ஆங்கில அறிவு போன்ற, பழங்காலத்து இந்தியாவுக்கு பந்தம் இல்லாத விஷயங்கள் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. ஆதலினால், தங்கள் "வெளிநாட்டவர் வெறுப்புணர்வு" நீக்கம் செய்வது நாட்டுக்கு நீங்கள் செய்யும் ஒரு சின்ன உபகாரமாக இருக்கும்

    நன்றி!

    விரைவில் இந்த இழைக்குப்பூட்டு எதிர்பார்க்கிறேன். இல்லாவிட்டாலும், என் வாய்க்கு (இந்த இழையைப்பொறுத்த மட்டில்) பூட்டு

    விட்டுக்கொடுக்காமல் பேசுகிறீர்கள் என்ற செய்தி மகிழ்ச்சியை தருகிறது!
    'வெளிநாட்டவர் வெறுப்புணர்வு'? என்னை எவ்வளவு மிகச் சரியாக புரிந்துகொண்டுள்ளிர்கள் என்று புரிகிறது!!! என் முதிர்ச்சியே உங்களுக்கு கேள்விக்குரியதாய் இருக்கும் போது இப்படி ஒரு குற்றச்சாட்டில் அதிசயமில்லை!
    இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக உருண்டை வெகுவாக சுருங்கிவிட்ட நிலையில் திரவியம் தேடி திரைகடலோடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தத்துவமே புத்திசாலித்தனமானது! ஆனாலும் அவரவர் இன, நாட்டு உணர்வினை, பற்றினை- நியாயமான, பெருமையான சங்கதி-தொலைக்கத் தேவையில்லையே? என்னவரின் கணிப்பு/ஆரூடம் என்ன தெரியுமா? வெளிநாட்டவர் பொருளும், பெருமையும் தேடி இங்கு வந்து குவியும் நாள் வெகு தூரத்தில் இல்லை!!! Yes, the tables are going to be turned one day!!!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. A shame
    By pavalamani pragasam in forum Miscellaneous Topics
    Replies: 1493
    Last Post: 9th January 2010, 07:55 AM
  2. Replies: 16
    Last Post: 15th June 2005, 03:04 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •