உன் கண் பார்க்க
தயங்கிய நொடியில்
துவங்கியது என் காதல்..
தினம் தினம்
அதிகாலை சிந்தும் ஒளியில்
சிலிர்த்துப் பூப்பேன்..
அந்திவேளையில் உதிரும்
என் மயங்கிய பூக்களை
எடுக்க வரும் நீ,
வேரும் வேரடி மன்னுமாய்
என்னையே சாய்த்துவிட்டு போவாய்..
உன் மடியில் விழுவதாய் எண்ணி
மகிழ்ச்சியோடு சாய்வேன்.
நீயோ என் பூக்களைப்
பிய்த்தபடி தூரத்தில் எங்கோ..
எனினும் உனக்கென் உதிர்வது
நிற்கவே இல்லை.
நீ பார்க்காமல் மலர்வதைவிட
சருகாய் உன் கைகளில்
சிதையவே விரும்புகிறேன் நான்..