தனியே நடந்தேன்,

அப்போது தான்

நான் பார்த்தேன்,

நின்றேன் அங்கையே.

தெரிஞ்ச முகமா

இருக்கே?

ஒரு அடி பின்னாலே

போனேன்

மறுபடியும் யோசிச்சேன்.

யார் இவ?

பார்த்த முகமா

இருக்கே?

ரெண்டு அடி

பின்னாலே போனேன்.



ஞாபகம் வந்திருச்சு!

என்னை பார்த்தால்

கூப்பிடுவளே !

அயோ !…

போறேன் .. அப்படியே

அந்த பக்கமா

போறேன் நான்.



அப்போத்தான் என்ன

பார்க்க மாட்டள்.

என்னை பார்த்தாள்

கூப்பிடுவாளே !

வேக வேகமா

நடந்தேன் .

மூச்சு வாங்கினுச்சு

அப்ப கூடே நிட்களே ..

திரும்பி பார்த்து பார்த்து

நடந்தேன் .

அய்யோ!.. வலிக்குதே

விழுந்துட்டேன் கீழே .



எழுந்தேன் ..

என் கண்ணு முன்னுக்கு

நிக்கிறா !

“அய்யோ ! கையே எடுத்து

கும்பிடுறேன்

என்னை ஒன்னும்

செய்யாதே! ”

சிரிக்கிரா ..

சிரிச்சு என்னைப்

பார்த்தா.

“நானா உங்கிட்டே

கேட்டேன் ?

நீ தானே தறேன்னே ?

நான் கொடுத்தா ..நீ தறேன்னே ?”

“என்னே மன்னிசுக்கோ!”

நீ கேட்ட மன நிம்மதியே

நான் கொடுத்துடேன்

இப்போ ..நீ சொன்னே

100 பிள்ளைகளுக்கு

சாப்பாடு

எப்போ தருவே ?

“கொடுக்கிறேன் கொடுக்கிறேன்

அத்தா !”

இப்படி எல்லா

கடவுளும்

தெருவுக்கு தெருவா

வேண்டினவன்களே தேட

ஆரம்பிச்சா ?

கஷ்டம் யாருக்கு ?

-செல்வி கணேசன்