Page 188 of 199 FirstFirst ... 88138178186187188189190198 ... LastLast
Results 1,871 to 1,880 of 1983

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7

  1. #1871
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    பாக்கியவதி மற்றும் கர்ணன் படத்தின் டிவிடி செய்திகள் பற்றிய எனது பதிவை பாராட்டிய அனைவருக்கும் நன்றி. பாக்கியவதி படத்தின் நெடுந்தகடு அட்டைப் படங்களுக்கு ராகவேந்தர் சாருக்கு நன்றி. இதைப் பற்றி மேலும் ஒன்று சொல்ல வேண்டும். நடிகர் திலகம் படங்களின் டிவிடி விற்பனையை பார்த்து விட்டு டிவிடி தயாரிப்பில் ஈடு்பட்டிருக்கும் பல நிறுவனங்களும் நடிகர் திலகத்தின் பல படங்களையும் டிவிடிகளாக வெளியிட்டு லாபம் அடைகின்றனர். அதாவது நடிகர் திலகத்தின் ஒரே படத்திற்கு இரண்டு மூன்று நிறுவனங்கள் டிவிடி வெளியிட்டிருக்கின்றன. உதாரணமாக திருவிளையாடல்,தில்லானா, புதிய பறவை, தெய்வ மகன், தங்கப்பதக்கம், பாசமலர், ஆண்டவன் கட்டளை, இரு மலர்கள், ஊட்டி வரை உறவு போன்ற படங்கள் மூன்று நிறுவனங்களால் வெளியிடப்பட்டிருக்கின்றன. அநேகமாக நடிகர் திலகத்தின் அனைத்துப் படங்களும் குறைந்தது இரண்டு நிறுவனங்களின் டிவிடியில் கிடைக்கிறது. வேறு எவருக்கும் இப்படி இருப்பது போல் தெரியவில்லை.

    டிவிடி பற்றி எழுதும்போது மேலும் ஒரு செய்தி, நேற்று எழுத விட்டுப் போனது. டிவிடி விற்பனையில் மேலும் ஒரு சாதனை படைக்கும் படமாக கடையில் விற்பனையாளர் குறிப்பிட்டது வியட்நாம் வீடு படத்தைப் பற்றி, குறிப்பாக Moser Baer வெளியிட்ட ஒரு மூன்று பட தொகுப்பு. அதில் இடம் பெற்ற படங்கள் வியட்நாம் வீடு, கெளரவம் மற்றும் தங்கப்பதக்கம். இந்த டிவிடி விற்பனையை இதுவரை வேறு எந்த டிவிடியும் விஞ்சியதில்லை என சொன்னார்.

    அன்புடன்

    ராகவேந்தர் சார்/சாரதி,

    இந்த பதிவை இங்கே இடு்கையில் ஜெயா தொலைக்காட்சி தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் நம் அனைவருக்கும் பிடித்த சிவகாமியின் செல்வன் படத்தின் மேள தாளம் கேட்கும் காலம் பாடல் காட்சி ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. இறுதி சரணத்திற்கு முன்னர் வரும் இடை இசையில் சுற்றிலும் மாபெரும் மரங்கள் சூழ்ந்திருக்க நடுவில் சரிவான பாதையில் நடிகர் திலகம் அந்த இசையின் தாள லயத்திற்கேற்ப மான் போல துள்ளி வருவார்.எப்போதும் ரசித்துப் பார்க்கும் அந்த காட்சியை இன்றும் ரசித்துப் பார்த்தேன்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1872
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    'இதயம் பேசுகிறது' பத்திரிகையின் நடவடிக்கை பற்றிச் சொன்னீர்கள். அப்போதைய பத்திரிகைகளில் பெரும்பாலானவை நடிகர்திலகத்தின் எதிர்ப்புப் பத்திரிகையாகவே விளங்கின. குமுதம், இதயம் பேசுகிறது, தினத்தந்தி, மாலைமுரசு, ராணி, பிலிமாலயா போன்ற பல பத்திரிகைகள் அவரைக் குறைசொல்லியே செய்திகளை வெளியிட்டு வந்தன. விகடன், கல்கி, பொம்மை, பேசும் படம், தினகரன் போன்றவை மட்டுமே நடுநிலையோடு எழுதி வந்தன. அதிலும் இதயம் பத்திரிகை மிகவும் மோசம்.

    1978 இறுதியில், பைலட் பிரேம்நாத் வெளியாகி ஓடிக்கொண்டிருந்தபோது 'இதயம்' பத்திரிகையில், "இனியும் சிவாஜி நடிக்கத்தான் வேண்டுமா?" என்ற தலைப்பில் மிகவும் மோசமாக அவரை விமர்சித்து கட்டுரை எழுதியதோடு, நடிகர்திலகத்தின் முகத்தை கோரமாக ஒரு கேலிச்சித்திரம் ஒன்றையும் அக்கட்டுரையின் மத்தியில் பிரசுரித்திருந்தது. இதைப்பார்த்து வெகுண்டெழுந்த கல்லூரி மாணவர்களாகிய நாங்களும், சாந்தி வளாக சிவாஜி ரசிகர்களும் சுமார் 150 பேர் கூடி, சென்னை அண்ணாசாலை பல்லவன் போக்குவரத்து அலுவலகத்தின் எதிரே, பெருந்தலைவர் காமராஜர் சிலையருகே, இதயம் பேசுகிறது வார இதழ் பிரதிகளை குவித்துப்போட்டு தீ வைத்துக் கொளுத்தினோம். அதோடு மணியனின் கொடும்பாவி எனப்படும் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. உடனே போலீஸார் வந்து தடியடி நடத்தி எங்களை விரட்டியடித்தனர்.

    பின்னர், 1981-ல் அமரகாவியம் படம் வெளியாக பத்து நாட்களுக்கு முன்னர், அப்போது தமிழக அமைச்சராக இருந்த கா.காளிமுத்து, பிரதமர் இந்திராகாந்தியை "வில்லி" என்று விமர்சித்திருந்ததை எதிர்த்து, சாந்தி வளாக ரசிகர்களும், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை ரசிகர்களும் காமராஜர் சிலையருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதிகேட்டோம். போலீஸ் அனுமதி மறுத்தது. இருப்பினும் போலீஸ் தடையை மீறி மறுநாள் காலை எட்டு மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கினோம். சிறிது நேரத்தில் போலீஸ் எங்களைக் கைது செய்து வேனில் ஏற்றி எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலக காம்பண்டுக்குள் உட்காரவைத்து, சுற்றிலும் போலீஸார் காவலுக்கு நின்றனர்.

    ரசிகர்கள் கைதான விஷயம் நடிகர்திலகத்துக்கு எட்டியதும், அவரும், அகில இந்திய ரசிகர்மன்ற தலைவர் தளபது சண்முகம், செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகரன் ஆகியோரும் கமிஷனர் அலுவலகத்துக்கு விரைந்து வந்தனர். வரும் முன்பே நடிகர்திலகம் போன் மூலம் ஸ்பென்ஸர் கம்பெனிக்கு குளிர்பானத்துக்கு ஆர்டர் கொடுத்து விட்டு வந்தார். வந்ததும் ரசிகர்கள் கைது செய்யப்பட்டு மண்ணில் உட்கார வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். அதற்குள் குளிர்பானமும் வந்துவிடவே, அவர் எங்களைப்பார்த்து 'இந்த மாதிரி விஷயங்களை மேல்மட்டத்தில் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். போலீஸ் அனுமதி மறுத்திருக்கும்போது உண்ணாவிரதம் இருந்திருக்கக்கூடாது. எனக்காகவும் காங்கிரஸுக்காகவும் நீங்கள் இவ்வளவு அன்பு வைத்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது' என்று சொல்லி அவர் கையாலேயே எல்லோருக்கும் குளிர்பானம் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

    பின்னர் உள்ளே சென்று கமிஷனரிடம் பேசி, சில தஸ்தாவேஜுகளில் நடிகர்திலகம் கையெழுத்திட்ட்பின், பிற்பகலில் நாங்கள் விடுவிக்கப்பட்டோம். இப்போது அவற்றையெல்லாம் அசைபோட வாய்ப்பளித்த முரளி சார், மற்றும் ராகவேந்தர் சார் ஆகியோருக்கும் நன்றி.
    டியர் mr_karthik,

    தங்களது இந்தப் பதிவைப் படித்தவுடன் அப்படியே மெய்சிலிர்த்து விட்டது. தாங்கள் நமது தேசிய திலகத்தின் ஒரு உண்மையான செயல்வீரர்.

    அது மட்டுமல்ல, தேசியமும், திராவிடமும் இணைந்த ஒரு அற்புதக் கலவை தாங்கள் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  4. #1873
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    திருவருட் செல்வர் சென்னை சாந்தியில் அண்மையில் திரையிடப் பட்டபொழுது ஞாயிறு 17.04.2011 அன்று மாலைக் காட்சியில் அரங்கில் நடைபெற்ற கோலாகலங்களின் ஒளிக்காட்சி தங்கள் பார்வைக்கு...



    அன்புடன்
    வீடியோ வேந்தர் சார்,

    உங்களுக்கும், நெய்வேலி திரு.வாசுதேவன் அவர்களுககும் கனிவான நன்றிகள் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #1874
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    நமது ராகவேந்திரன் சாரும், முரளி சாரும் அளித்த பதிவுகளின்படி "பாக்கியவதி(1957)" டிவிடியாக வெளிவந்துள்ள நிலையில், 1950களில் வெளியான நமது நடிகர் திலகத்தின் 52 தமிழ்த் திரைக்காவியங்களில் கீழ்க்காணும் 9 தமிழ்த் திரைக்காவியங்கள் மட்டும் தற்பொழுது விசிடி/டிவிடி வடிவில் நமது நல்லிதயங்களால் [அடியேனையும் சேர்த்து] எதிர்பார்க்கப்படுகின்றன. [1950களின் மற்ற 43 தமிழ்த் திரைக்காவியங்களும் கம்பெனி விசிடி/டிவிடிக்களாகவே வெளிவந்துவிட்டன. விற்பனையிலும் சக்கைபோடு போடுகின்றன.]

    1. பூங்கோதை(1953)

    2. கண்கள்(1953)

    3. மனிதனும் மிருகமும்(1953)

    4. இல்லற ஜோதி(1954)

    5. உலகம் பல விதம்(1955)

    6. கோடீஸ்வரன்(1955)

    7. நல்ல வீடு(1956)

    8. நானே ராஜா(1956)

    9. அவள் யார்(1959)

    இவையனைத்தும் கூடிய விரைவில் நமது அன்புக்கரங்களை அலங்கரிக்கும் என்கின்ற நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்புடன்,
    பம்மலார்.
    pammalar

  6. #1875
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கும்பகோணத்துக்கு அருகே உள்ள 'நகரசம்பேட்டை' பகுதியில் இருக்கும் 'கமலா' டூரிங்கில், இன்று 11.5.2011 புதன் முதல் தினசரி 2 காட்சிகளாக [மாலை மற்றும் இரவு], தங்கத்தமிழ்ப்பெருமகனின் "தங்கப்பதுமை" திரைக்காவியம் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

    தித்திக்கும் இத்தகவலைத் தந்த குடந்தை அன்புள்ளம் திரு.ராமலிங்கம் அவர்களுக்கு குஷியான நன்றிகள் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  7. #1876
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by murali srinivas View Post
    டிவிடி விற்பனையில் மேலும் ஒரு சாதனை படைக்கும் படமாக கடையில் விற்பனையாளர் குறிப்பிட்டது வியட்நாம் வீடு படத்தைப் பற்றி, குறிப்பாக moser baer வெளியிட்ட ஒரு மூன்று பட தொகுப்பு. அதில் இடம் பெற்ற படங்கள் வியட்நாம் வீடு, கெளரவம் மற்றும் தங்கப்பதக்கம். இந்த டிவிடி விற்பனையை இதுவரை வேறு எந்த டிவிடியும் விஞ்சியதில்லை என சொன்னார்.
    டியர் முரளி சார்,

    சற்றேறக்குறைய 15 வருடங்களுக்கு முன்னர், h.m.v. நிறுவனம் இந்த மூன்று காவியங்களின் பாடல்களையும் ஒரே ஒலிநாடாவில் [கேஸட்] பதிவு செய்து வெளியிட்டது. அப்பொழுது அதன் விலை 40 ரூபாய். இந்த கேஸட் மிகக் குறுகிய காலத்தில் விற்பனையில் சாதனை படைத்தது.

    ஆடியோவோ, வீடியோவோ மூம்மூர்த்திகளான பத்மநாப ஐயரும், ரஜினிகாந்தும், சௌத்ரியும் என்றென்றும் ஆராதனைக்குரியவர்களே !

    இந்த அளவுகோல் நமது நடிகர் திலகத்தின் பெரும்பாலான காவியப் படைப்புகளுக்கு பொருந்தும் !

    பெருமிதத்துடன்,
    பம்மலார்.
    Last edited by pammalar; 12th May 2011 at 02:48 AM.
    pammalar

  8. #1877
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by pammalar View Post
    டியர் முரளி சார்,

    சற்றேறக்குறைய 15 வருடங்களுக்கு முன்னர், h.m.v. நிறுவனம் இந்த மூன்று காவியங்களின் பாடல்களையும் ஒரே ஒலிநாடாவில் [கேஸட்] பதிவு செய்து வெளியிட்டது. அப்பொழுது அதன் விலை 40 ரூபாய். இந்த கேஸட் மிகக் குறுகிய காலத்தில் விற்பனையில் சாதனை படைத்தது.

    ஆடியோவோ, வீடியோவோ மூம்மூர்த்திகளான பத்மநாப ஐயரும், ரஜினிகாந்தும், சௌத்ரியும் என்றென்றும் ஆராதனைக்குரியவர்களே !

    இந்த அளவுகோல் நமது நடிகர் திலகத்தின் பெரும்பாலான காவியப் படைப்புகளுக்கு பொருந்தும் !

    பெருமிதத்துடன்,
    பம்மலார்.
    அன்புள்ள திரு. முரளி மற்றும் திரு. பம்மலார் அவர்களே,

    வியட்நாம் வீடு, கெளரவம் மற்றும் தங்கப்பதக்கம் படங்கள் ஒரே குறுந்தகட்டில் வெளியாவதற்கு முன்னமே, இந்தப் படங்களைத் தனித்தனி குறுந்தகடுகளாக வாங்கி வைத்து விட்டதால், இந்தப் படங்கள் ஒரே குறுந்தகட்டில் வெளியானபோது, வாங்காமல் இருந்து விட்டேன்.

    இவை மூன்றும், அதாவது ப்ரெஸ்டிஜ் பத்மநாப அய்யர், பாரிஸ்டர் ரஜினிகாந்த் மற்றும் எஸ்.பி.சௌத்ரி - திரு. பம்மலார் அவர்கள் குறிப்பிட்டபடி மும்மூர்த்திகள் மட்டுமல்லாது - முக்கனி - மா, பலா, வாழை - மேலும், தேனும், ஊனும், உயிரும் கலந்தவை என்றும் கூறலாம்.

    அன்புடன்,

    பார்த்தசாரதி

  9. #1878
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by pammalar View Post
    நமது ராகவேந்திரன் சாரும், முரளி சாரும் அளித்த பதிவுகளின்படி "பாக்கியவதி(1957)" டிவிடியாக வெளிவந்துள்ள நிலையில், 1950களில் வெளியான நமது நடிகர் திலகத்தின் 52 தமிழ்த் திரைக்காவியங்களில் கீழ்க்காணும் 9 தமிழ்த் திரைக்காவியங்கள் மட்டும் தற்பொழுது விசிடி/டிவிடி வடிவில் நமது நல்லிதயங்களால் [அடியேனையும் சேர்த்து] எதிர்பார்க்கப்படுகின்றன. [1950களின் மற்ற 43 தமிழ்த் திரைக்காவியங்களும் கம்பெனி விசிடி/டிவிடிக்களாகவே வெளிவந்துவிட்டன. விற்பனையிலும் சக்கைபோடு போடுகின்றன.]

    1. பூங்கோதை(1953)

    2. கண்கள்(1953)

    3. மனிதனும் மிருகமும்(1953)

    4. இல்லற ஜோதி(1954)

    5. உலகம் பல விதம்(1955)

    6. கோடீஸ்வரன்(1955)

    7. நல்ல வீடு(1956)

    8. நானே ராஜா(1956)

    9. அவள் யார்(1959)

    இவையனைத்தும் கூடிய விரைவில் நமது அன்புக்கரங்களை அலங்கரிக்கும் என்கின்ற நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்புடன்,
    பம்மலார்.
    அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

    தாங்கள் குறிப்பிட்ட படங்களில், "இல்லற ஜோதி" படத்தை ரொம்ப நாட்களாக அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். பல பத்திரிகைகள், மற்றும், என் உறவினர்கள் மூலமாக, இந்தப் படத்தைப் பற்றியும், குறிப்பாக, அதில் வரும் "அனார்கலி" ஓரங்க நாடகத்தைப் பற்றியும், அதில் நடிகர் திலகத்தின் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத நடிப்பு மற்றும் வசனக் காட்சிகளையும் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். பார்க்க சந்தர்ப்பம் கிடைக்க ஏங்கிக்கொண்டிருக்கிறேன் (றோம்).

    என் தந்தை "நானே ராஜா" படத்தைப் பற்றி மிகவும் சிலாகித்துக் கூறுவார் (அவர் MGR ரசிகர் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன்.). அந்தப் படத்தில், அவர் வில்லன் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் நடிக்க ஆரம்பித்த புதிதில் வெளிவந்த படம். ஆரம்ப காலங்களில், அவர் எந்த வேடத்தில் வந்தாலும், அவர் scene stealer -aaga இருந்ததால், (எப்போதுமே அப்படித்தான் என்றாலும்), நிறைய படங்களில், அவருக்காக முக்கியமான பாத்திரத்தைப் படைத்து, (இடைச்செருகல் என்று சொல்லலாம்) மற்றவருடைய படங்களில், அவரை நுழைத்து, (வியாபார ரீதியாக படத்தை ஓட வைக்க), அந்தப் படங்களையும் சேர்த்து, ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். தயாரிப்பாளர்கள், லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர். இந்த வகையில், அந்தக் காலத்தில், மிக முக்கியமான படம், பி.ஆர். பந்துலுவின் தயாரிப்பு, மற்றும் இயக்கத்தில் வந்த "ஸ்கூல் மாஸ்டர்" படத்தில் வரும் அந்த போலீஸ்காரர் பாத்திரம். முதலில், அந்தப் படம் கன்னடத்தில் வெளிவந்து, ஒட்டு மொத்த கர்நாடகாவையே அவரது நடிப்பு புரட்டிப்போட்டு, அந்தப் படத்தில், நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்க்க மட்டுமே மக்கள் குவிந்து, ஏராளமான லாபத்தை, பந்துலுவுக்கு கொடுத்தது எனலாம். அந்த அளவிற்கு, நடிகர் திலகத்தின் நடிப்பு அந்தப் படத்தில் இருக்கும். (பல வருடங்களுக்கு முன் தூர்தர்ஷனில் பார்த்திருக்கிறேன்.) அதனால், அந்தப் படத்தை, பந்துலு மலையாளத்திலும், பின்னர் ஹிந்தியிலும், எடுக்கும்போது, நடிகர் திலகத்தையே மீண்டும் மீண்டும் அந்த போலீஸ்காரர் பாத்திரத்தில் நடிக்க வைத்து மேலும் மேலும், லாபம் சம்பாதித்தார். இதைப் பற்றி மேலும், விரிவாக எழுதவிருப்பதால், இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன்.

    அன்புடன்,

    பார்த்தசாரதி

  10. #1879
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    //இந்த பதிவை இங்கே இடு்கையில் ஜெயா தொலைக்காட்சி தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் நம் அனைவருக்கும் பிடித்த சிவகாமியின் செல்வன் படத்தின் மேள தாளம் கேட்கும் காலம் பாடல் காட்சி ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. இறுதி சரணத்திற்கு முன்னர் வரும் இடை இசையில் சுற்றிலும் மாபெரும் மரங்கள் சூழ்ந்திருக்க நடுவில் சரிவான பாதையில் நடிகர் திலகம் அந்த இசையின் தாள லயத்திற்கேற்ப மான் போல துள்ளி வருவார்.எப்போதும் ரசித்துப் பார்க்கும் அந்த காட்சியை இன்றும் ரசித்துப் பார்த்தேன்.//

    முரளி சார்,

    அந்தப்பாடல் ஒளிபரப்பானபோது நானும் ஆர்வத்துடன் கண்டுகளித்தேன். ஏனென்றால் அடிக்கடி ஒளிபரப்பாகாத பாடல் மட்டுமல்ல, மிகவும் அருமையான பாடலும்கூட. அப்படத்தின் பாடல்களை வரிசைப்படுத்தினால், முதலிடம் பெறும் பாடலும் இதுதான்.

    அழகிய ரோஸ் கலந்த சிவப்பு வண்ண கோட் சூட்டில் நடிகர் திலகம், உள்ளே பூப்போட்ட டிசைனில் சட்டை, அழகான நேர்த்தியான மேக்கப், சிறந்த ஜோடிகளில் ஒருவரான வாணிஸ்ரீ, அழகான வண்ண ஒளிப்பதிவு, அழகான லொக்கேஷன், குளோஸ்-அப், மிட்லாங் ஷாட், லாங்ஷாட் என்று வகை வகையாக அசத்தும் சி.வி.ஆர். எல்லாமே இப்பாடலின் சிறப்பு.

    சிவாஜி வாணிஸ்ரீ ஜோடிப்பாடல் என்றாலே உடனே எல்லோரும் 'மயக்கமென்ன, இந்த மௌனமென்ன' பாடலையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்காமல், இதுபோன்ற ரம்மியமான பாடல்களையும் சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும்.

    சில நாட்களுக்கு முன் இதே சகோதரி t.m. ஸ்ரீதேவிதான், இதே ஜோடியின் இன்னொரு அருமையான பாடலான 'அலங்காரம் கலையாத சிலையொன்று கண்டேன்' (ரோஜாவின் ராஜா) பாடலையும் ஒளிபரப்பினார்.

  11. #1880
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Prabhu Sir, now Dr. Prabhu Ganesan.



    More photos and info to be added shortly at www.ilaiyathilagamprabhu.com.

    Raghavendran
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •