முரளி சார்,
'ஒரு யாத்ரா மொழி' படத்தைப்பற்றிய பல அரிய தகவல்களைத்தந்துள்ளீர்கள். இவை இதுவரை நாங்கள் அறியாதது. மோகன்லால், தன் நண்பன் பாலாஜியின் சொந்த மாப்பிள்ளை என்பதால் நடிகர்திலகமும் அவரை 'மாப்பிள்ளை' என்றே அழைப்பார் என்பது மட்டும் தெரியும். திலகன் மட்டுமல்ல, மலையாளத் திரையுலகினர் அனைவருமே நடிகர்திலகத்திடம் மிகவும் அன்பு கொண்டவர்கள். தெலுங்கு, கன்னட, இந்தி திரையுலகினரும் அப்படியே. (சொந்த மானிலத்தில் மட்டும்தான் அவர் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டார். அவர்களும் அவரது மறைவுக்குப்பின் புகழ்கின்றனர்).
ராகவேந்தர் சார்,
ஆகஸ்ட் வரிசையை நெற்றியில் 'குங்குமம்' இட்டு துவக்கி விட்டீர்கள். தொடரட்டும் உங்களது அட்டகாசம்.
பம்மலார் சார்,
மயிலைக்கு வர இயலாதோரை உங்கள் எழுத்துக்களால் நிகழ்ச்சியைக் காணச்செய்து விட்டீர்கள். ஏற்கெனவே பார்த்திருந்த 'இல்லற ஜோதி'யை, தங்கள் விரிவுரையைப் படித்த பின் மீண்டும் பார்க்க மனம் விழைகிறது. தாங்கள் படித்த பள்ளியில் நுழைந்ததும் தங்கள் மன நெகிழ்வுடன் கூடிய மலரும் நினைவுகள் எங்களையும் எங்கள் பழைய நினைவுகளுக்கு இட்டுச்சென்றன. இல்லற ஜோதியின் கதைச்சுருக்கத்தையே (கிட்டத்தட்ட) தந்துவிட்டீர்கள். முன்னதாக தந்திருக்கும் 'திருவிளையாடல்' நிறைவுப்பகுதியும் வெகு ஜோர்.
மகாலட்சுமியில் பாரிஸ்டரின் வெற்றிநடைபற்றிய தகவலும் அருமை. ஞாயிறு கொண்டாட்டங்க்கள் பற்றிய விவரங்களுக்கு மிக்க நன்றி. மகாலட்சுமியில் இரு திலகங்களின் படங்கள் மாறி மாறி திரையிடப்படுவதால் ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டும் என்ற ஆவலில் ஞாயிறு கொண்டாட்டங்களால், வரவர 'மகாலட்சுமி' நட்சத்திர அந்தஸ்தைப்பெற்று வருகிறது. எதிரே இருந்த சரஸ்வதிதான் நம் நெஞ்சங்களில் மட்டும் நினைவிலிருக்கிறது.
பெரம்பூரில் பாரிஸ்ட்டர் கலக்குவதற்கு சற்றும் குறையாமல், நெல்லையில் மேயர் கலக்கி வரும் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. நெல்லைக்கொண்டாட்டங்கள் பற்றிய விரிவான தகவலுக்கும் நன்றி.
சந்திரசேகர் சார்,
நடிகர்திலகத்தின் சிலை தொடர்பாக கும்பகோணம் நகராட்சி தீர்மானம் மனதில் தேனாக இனிக்கிறது. தீர்மானம் சீக்கிரம் செயல்வடிவம் பெற்று பூர்த்தியடைய வாழ்த்துக்கள். நடிகர்திலகத்தின் மன்றத்தைச்சேர்ந்தவர் நகராட்சித் தலைவராக இருக்கிறார் என்பது புதிய செய்தி மட்டுமல்ல மகிழ்வான செய்தியும் கூட. தகவல்களுக்கு மிக்க நன்றி.
Bookmarks