-
21st January 2012, 11:51 AM
#1941
Senior Member
Seasoned Hubber
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் குறித்து நெல்லையிலிருந்து வந்த கடிதச் செய்தி.
-
21st January 2012 11:51 AM
# ADS
Circuit advertisement
-
23rd January 2012, 12:12 AM
#1942
நமது NT FAnS அமைப்பின் துவக்க விழா சீரோடும் சிறப்போடும் இன்று நடைபெற்றது. மாலை 4.15 மணிக்கு இறை வணக்கத்தோடு துவங்கியது. காலத்தால் அழியாத கர்ணனின் ஆயிரம் கரங்கள் நீட்டி என்ற சூரிய நமஸ்கார பாடலுடன் தொடங்கியது. மேடையில் திருமதி ஒய்.ஜி.பி அவர்கள், நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள், மெல்லிசை மன்னர் ராமமூர்த்தி அவர்கள், திருமதி சௌகார் அவர்கள், திரு ராம்குமார் அவர்கள், திரு ஏ.எல். ராகவன் அவர்கள், திரு ஆரூர்தாஸ் அவர்கள், திருமதி Dr.கமலா செல்வராஜ் அவர்கள் ஆகியோர் அமர்ந்திருக்க அமைப்பின் துவக்கமாக குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. ஒய்.ஜி. மகேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். மேடையில் அமர்ந்திருந்த அனைவருக்கும் சொசைட்டியின் சார்பாக நினைவு பரிசுகளும் பொன்னாடையும் அளிக்கப்பட்டன. சொசைட்டி நிர்வாக குழுவை சேர்ந்த திரு மோகன்ராம், திரு ஆடிட்டர் ஸ்ரீதர், திரு கவிதாலயா கிருஷ்ணன், இயக்குனர் பரத், ரஷ்யன் கல்சுரல் அகாடமி தங்கப்பன் போன்றவர்கள் இதனை செய்தனர்.
திருமதி ஒய்.ஜி.பி அவர்கள், பிறகு நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் சுருக்கமாக பேசினர். பிறகு ராம்குமார் அவர்கள் இந்தப் படம் உருவானதின் பின்னணியை பற்றி விவரித்தார். சிவாஜி பிலிம்ஸ்-ல் இருந்த முன்னாள் ராணுவ வீரர் திரு பி.என்.பிள்ளை அவர்களை பற்றி சொல்லிவிட்டு அவரின் முயற்சி காரணமாகவே இந்த ராணுவ பின்னணி உள்ள கதை உருவானதையும் குறிப்பிட்டார். பிறகு சௌகார் அவர்கள் பேசினார். நடிகர் திலகத்தைப் பற்றியும் அவருடன் நடித்ததையும் நினைவு கூர்ந்த அவர் மேடையில் இருந்தவர்களுக்கு அவர் சார்பாக மரியாதை செய்தார். ஜெமினி அவர்கள் சார்பாக கேடயத்தைப் பெற்றுக் கொண்ட அவரின் புதல்வியார் திருமதி Dr.கமலா செல்வராஜ் அவர்கள் இந்தப் படம் வெளி வந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்தார். நடிகையர் திலகம் சார்பாக அவரது பேரனின் மனைவியும் திரு ஒய்.ஜி. மகேந்திரன் அவர்களின் மகளுமான திருமதி மதுவந்தி அருண் பெற்றுக் கொண்டார். மெல்லிசை மன்னர் ராமமூர்த்தி அவர்கள் அன்றைய நாளில் எம்.எஸ்.வி.அவர்களோடு இணைந்து பணியாற்றியதை சொல்லி மகிழ்ந்தார். அன்று ஊமை பெண்ணல்லோ பாடலின் ஒரு சரணத்தை அதே குரலில் சுருதி பேதம் இல்லாமல் ஏ.எல். ராகவன் பாடி பார்வையாளர்களின் கைதட்டலை அள்ளி சென்றார்.
இறுதியாக சிறப்புரையாக இந்தப் படத்தின் வசனகர்த்தா திரு ஆரூர்தாஸ் அவர்கள் உரையாற்றினார். எப்படி பாச மலர் தன்னுடைய முதல் படமாக அமைந்தது என்பது முதல் பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா போன்ற படங்களுக்கு வசனம் எழுதியதை குறிப்பிட்டு அது எப்படி தொடர்ந்து பார் மகளே பார், அன்னை இல்லம் புதிய பறவை தெய்வ மகன் போன்ற படங்கள் வரை சென்றது என்பதை நினைவு கூர்ந்த அவர் அன்புள்ள அப்பா வரை நடிகர் திலகத்தின் 28 படங்களுக்கு வசனம் எழுத வாய்ப்பு கிடைத்தது தான் செய்த பாக்கியம் என்றார்.
ஒய்.ஜி.மகேந்திரன் நன்றி கூற விழா மாலை 6 மணிக்கு இனிதே நிறைவடைந்தது. பின்னர் மாலை 6.30 மணிக்கு பார்த்தால் பசி தீரும் திரையிடப்பட்டு இரவு 9 மணிக்கு நிறைவடைந்தது.
அன்புடன்
இந்த அமைப்பை பற்றி இங்கே எழுதும் போதெல்லாம் என்னை முன்னிலைப்படுத்தினார் ராகவேந்தர் சார் அவர்கள். ஆனால் இந்த அமைப்பிற்காக ஓடி ஓடி உழைத்தவர் அவர் தான். இன்று மேடையில் அவர் கௌரவிக்கப்பட்ட போது விழாவிற்கு வந்திருந்த நமது ஹப்பர்கள் அனைவருக்கும் அது பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.
உடல் நலம் இல்லாததால் திரு ஏ.வி.எம். சரவணன் அவர்களும், மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்களும் வர இயலவில்லை. திருமதி சுசீலா அவர்களும் தவிர்க்க இயலாத காரணத்தினால் வர முடியவில்லை. கமல் அவர்கள் வேறு ஒரு வேலையில் இருந்ததால் வர இயலாத குறையை அங்கே வந்து நேரில் சொன்ன அவரது P .R .O திரு நிகில் முருகன், விழா துவங்குவதற்கு முன் வந்திருந்து விழா முடியும் வரை இருந்தார். சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த திருமதி எம்.என்.ராஜம், இயல் இசை நாடக மன்ற பொது செயலாளர் சச்சு, நடிகர் ஏ.ஆர்.எஸ்., நடிகர் மதன் பாப், ஏ.எல்.எஸ். ஜெயந்தி கண்ணப்பன் போன்றவர்களும், சிவாஜி குடும்பத்தினரும் மற்றும் பாரத் கலாச்சார் உறுப்பினர்களும் மற்றும் நடிகர் திலகத்தின் ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
-
23rd January 2012, 08:01 AM
#1943
Senior Member
Seasoned Hubber
டியர் முரளி சார்,
நேற்றைய விழாவைப் பற்றி மிக அழகாக தங்களுக்கே உரித்தான நடையில் அருமையாக விவரித்துள்ளீர்கள். உண்மையில் இந்த அமைப்பு உருப்பெற்றதற்கு முழுமுதற் காரணம் தாங்கள் தான் என்பதே உண்மை. என்னைப் பாராட்டுவது தங்களுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. தங்களுக்கும் விழாவிற்கு வருகை தந்திருந்த நமது ஹப்பர்களுக்கும் சிவாஜி ரசிகர்களுக்கும் பிரமுகர்களுக்கும் மற்றும் இதற்காக ஒத்துழைப்பும் உதவியும் புரிந்த திரு மகேந்திரா மற்றும் பாரத் கலாச்சார் ஊழியர்களுக்கும் நமது உளமார்ந்த நன்றி. அதே போல் நமது முழு ஊக்கமும் ஒத்துழைப்பும் தந்த நமது அமைப்பு நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் உறுப்பினராக உள்ளவர்களுக்கும் உளமார்ந்த நன்றி. அதே போல் மீடியா கவரேஜிற்கு ஏற்பாடு செய்ததோடு மட்டுமன்றி, தொடர்ந்து நமது எதிர்கால நிகழ்ச்சிகளுக்கும் உதவ முன் வந்திருக்கும் திரு நகில் முருகன் அவர்களுக்கும் நமது உளமார்ந்த நன்றி. நிகழ்ச்சியில் சிற்றுண்டி வழங்கிய இதய ராஜா சிவாஜி பித்தர்கள் குழு விற்கும் நமது உளமார்ந்த நன்றி. நேரமின்மையால் நேற்றைய நிகழ்ச்சியில் விரிவான நன்றியுரை சொல்ல முடியாமல் போய் விட்டது. எனவே இங்கே கூறிக் கொள்கிறோம்.
அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.
அன்புடன்
-
23rd January 2012, 08:06 AM
#1944
Senior Member
Seasoned Hubber
97ல் 4ம் வகுப்பு படித்த ஒரு இளைஞன், அநேகமாக 90-ல் பிறந்திருப்பார். இன்று அவருக்கு அதிக பட்சம் 21 வயது இருக்கும். அவர் சிவாஜி ரசிகராயிருப்பது நடிகர் திலகத்தின் தாக்கத்தைக் காட்டுகிறது அல்லவா. நடிகர் திலகத்தைப் பற்றிய அவருடைய எண்ணங்களைப் படியுங்கள்.
http://www.nanparkal.com/2012/01/blog-post_20.html
-
23rd January 2012, 08:08 AM
#1945
Senior Member
Seasoned Hubber
பல சிவாஜி ரசிகர்கள் ஒருங்கிணைப்பிற்கு உதவியாக இருந்த காரணங்களில் நமது ஹப்பிற்கும் பங்கு உண்டு. எனவே நமது ஹப்பிற்கும் முக்கியமாக நமது நன்றிகள்.
-
23rd January 2012, 08:10 AM
#1946
Junior Member
Senior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் முரளி சார்,
நேற்றைய விழாவைப் பற்றி மிக அழகாக தங்களுக்கே உரித்தான நடையில் அருமையாக விவரித்துள்ளீர்கள். உண்மையில் இந்த அமைப்பு உருப்பெற்றதற்கு முழுமுதற் காரணம் தாங்கள் தான் என்பதே உண்மை. என்னைப் பாராட்டுவது தங்களுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. தங்களுக்கும் விழாவிற்கு வருகை தந்திருந்த நமது ஹப்பர்களுக்கும் சிவாஜி ரசிகர்களுக்கும் பிரமுகர்களுக்கும் மற்றும் இதற்காக ஒத்துழைப்பும் உதவியும் புரிந்த திரு மகேந்திரா மற்றும் பாரத் கலாச்சார் ஊழியர்களுக்கும் நமது உளமார்ந்த நன்றி. அதே போல் நமது முழு ஊக்கமும் ஒத்துழைப்பும் தந்த நமது அமைப்பு நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் உறுப்பினராக உள்ளவர்களுக்கும் உளமார்ந்த நன்றி. அதே போல் மீடியா கவரேஜிற்கு ஏற்பாடு செய்ததோடு மட்டுமன்றி, தொடர்ந்து நமது எதிர்கால நிகழ்ச்சிகளுக்கும் உதவ முன் வந்திருக்கும் திரு நகில் முருகன் அவர்களுக்கும் நமது உளமார்ந்த நன்றி. நிகழ்ச்சியில் சிற்றுண்டி வழங்கிய இதய ராஜா சிவாஜி பித்தர்கள் குழு விற்கும் நமது உளமார்ந்த நன்றி. நேரமின்மையால் நேற்றைய நிகழ்ச்சியில் விரிவான நன்றியுரை சொல்ல முடியாமல் போய் விட்டது. எனவே இங்கே கூறிக் கொள்கிறோம்.
அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.
அன்புடன்
Thanks murali for a short but brief notes about the function. we the hubbers are really thankful for tha pains undertaken by raghavendran murali and the team and shri YGM SIR AND HIS FAMILY FOR THE ABLE SUPPORT FOR THE SUCCESS OF THE FUNCTION.
Let us make everything in a bg way and earn a place in gunnies records. thanks for all hubbers.
-
23rd January 2012, 09:43 AM
#1947
Senior Member
Seasoned Hubber
இன்றைய டைம்ஸ் நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியின் இணையப் பக்கம்
http://timesofindia.indiatimes.com/c...w/11596183.cms
-
23rd January 2012, 10:46 AM
#1948
Senior Member
Devoted Hubber
My father attended the inaugural function yesterday-thanks to Murali sir
He felt happy and he said he spoke few words to Mr Aroor Das.
He was reminded of his young days he enjoyed in Madurai-he had attended 100th day functions, stage shows of
our beloved NT.
Great work by Mr Ragavendra, Mr Murali and all associated with this new effort.
-
23rd January 2012, 11:12 AM
#1949
Senior Member
Diamond Hubber
-
23rd January 2012, 11:43 AM
#1950
Administrator
Diamond Hubber
So nice to hear about the grand show. Congrats Ragavendran, Murali & all fans behind it!
Thanks vasudevan for the nice photos.
Bookmarks