-
26th May 2012, 06:57 AM
#11
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்
'வீரபாண்டிய கட்டபொம்மன்' விளம்பர அணிவகுப்பு தொகுப்பு குற்றால அருவி போலக் கொட்டுகிறது. ஒவ்வொன்றும் ஜில் ஜில்.
குறிப்பாக முதல் வெளியீட்டு விளம்பரம் (The Hindu) முதன்மை இடத்தைப் பெறுகிறது. அழகான கட்டங்களில் நம் நடிகர் திலகம் கட்டபொம்மன் மற்றும் இதர நட்சத்திரங்கள் ஜொலிக்க ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் பக்கத்திலுள்ள கட்டங்களில் படத்தைப் பற்றிய விளம்பரங்களையும், தகவல்களையும் தந்திருப்பது கொள்ளை அழகு. கட்டபொம்மனாயிற்றே! சுவையான கட்டங்கள் இல்லாமல் இருக்குமா?
சென்னை 'சித்ரா' [Decoration Ad] வியப்பைத் தருகிறது, அதை வெளியிட்ட தங்களின்பால் உள்ள மதிப்பை மென்மேலும் உயர்த்துகிறது. இந்த விளம்பரத்தைக் கூட பத்திரமாக பாதுகாத்து வைத்து எங்களுக்களித்த தங்களுக்கு தங்கக் காப்புதான் போட வேண்டும்.
அணிவரிசை அற்புதம். அத்தனையிலும் மனம் பதிந்து கிடப்பது நிஜம். அரிய விளம்பரங்களைத் தந்து அசத்திய தாங்கள் நீடு வாழ்க!
Last edited by vasudevan31355; 26th May 2012 at 08:27 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
26th May 2012 06:57 AM
# ADS
Circuit advertisement
Bookmarks