-
29th May 2012, 11:18 AM
#11
Senior Member
Regular Hubber

Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் அவர்களே,
வீரபாண்டிய கட்டபொம்மனின் 100-வது நாள், வெள்ளி விழா விளம்பர ஆவணங்களும், அதன் மாபெரும் வெற்றி பற்றிய கூடுதல் தகவல்களூம் வழக்கம்போல மிக மிக அருமை. நீங்கள் நினைத்திருந்தால் 97 நாட்கள் ஓடிய அரங்குகளையும் 100 நாள் பட்டியலில் சேர்த்திருக்கலாம். ஆனால், உள்ளதை உள்ளபடி தரும் பெருந்தன்மையாளர் அல்லவா எங்கள் பம்மலார்?.
இந்த விஷயத்தில் பம்மலார் அவர்களின் கேரக்டர் மீண்டும் ஒரு முறை வெளிப்படுகிறது.
எளிதில் சரி பார்க்க முடியாத, 50 வருடத்துக்கு முந்தைய தகவல் தானே என்று இருந்துவிடாமல் உள்ளதை உள்ளபடி சொல்லியுள்ளார் . நடிகர் திலகத்திடம் நாம் கண்ட இந்த வெளிப்படையான தன்மை அவரது தொண்டரிடமும் தொடர்கிறது .
அவரது நேர்மைக்கு தலை வணங்குகிறேன்.
நெருடிய சில விஷயங்கள்:
1) இத்தனை அரங்குகளில் மாபெரும் வெற்றிபெற்ற காவியத்தின் 100-வது நாள் விளம்பரத்தில், அனைத்து அரங்குகளின் பெயர்களையும் இடம்பெறச்செய்து விளம்பரம் அளிக்க தயாரிப்பாளருக்கு
துப்பில்லை. எனவே இவரது அடுத்த படம் தோல்வியடைந்ததில்
தப்பில்லை.
-
29th May 2012 11:18 AM
# ADS
Circuit advertisement
Bookmarks