-
6th June 2012, 12:39 PM
#11
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார்,
நாளுக்கு நாள் மலைப்பின் உச்சத்துக்கே எங்களைக் கொண்டு செல்கிறீர்கள். 'கர்ணன்' பட வெற்றி விளம்பரத்துக்காக தங்களின் தேடல் முயற்சியும், அதன் பலனாக தங்கள் பார்வையில் கிடைத்த 'தி மெயில்' ஆங்கிலப்பத்திரிகையில் வெளிவந்த விளம்பரங்களும் தங்கள் அயராத உழைப்பைப் பறைசாற்றுகின்றன. நாங்களும் நடிகர்திலகத்தின் ரசிகர்களாக இருந்து என்ன செய்து கிழித்தோம் என்று வெட்கப்பட வைத்து விட்டீர்கள்.
1964 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளிவந்த மொத்த தமிழ்ப்படங்களின் பட்டியல், (அதுவும் தியேட்டர் பெயர்களுடன்) அசர வைத்து விட்டன. அந்தப்பட்டியல் மூலம் 'என் கடமை' படம் சென்னை புவனேஸ்வரி தியேட்டரில் 26 நாட்கள் மட்டுமே ஓடியிருக்கிறது என்ற உண்மையும் தெரிகிறது.
ஒரு உண்மையை உண்மையென்று ஆதாரங்களுடன் நிரூபிக்க எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப்பார்க்கும்போது, சும்மாவேனும் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற அளவில் பேசிவிட்டுப்போகும் "சிலர்" இப்போது என்ன சொல்லப்போகிறார்கள்..?. இல்லையென்று நிரூபிக்க ஒரு துரும்பேனும் அவர்களிடம் உள்ளதா என்பதை நடுநிலையாளர்கள் நிச்சயம் சிந்தித்து "அவர்களை"ப்பற்றி ஒரு முடிவுக்கு வருவார்கள்.
மே மாத ஆவணங்கள் வரிசையில் 'சத்யம்' விளம்பரம் கண்ணைக்கவர்ந்தது. தங்கள் உழைப்பைப் பார்க்கும்போது மேலும் மேலும் கேட்க மனம் அஞ்சுகிறது, கூசுகிறது.
நன்றியோ, பாராட்டோ, வாழ்த்தோ சொல்லத்தோன்றவில்லை. அதிசயித்து நிற்பதைத்தவிர வேறொன்றும் தோன்றவில்லை.
-
6th June 2012 12:39 PM
# ADS
Circuit advertisement
Bookmarks