-
8th June 2012, 01:20 PM
#11
Junior Member
Devoted Hubber
கருத்து சுதந்திரத்தில் இதை எழுதி இருக்கிறேன். என் மீது கல் ஏரியாதீர்கள் ப்ளீஸ்..
ராஜா சாருக்கு பேச தெரியறது இல்லை... ஆனால் தன்னை பெரிய பேச்சாளர் என்று நினைத்து எதையோ சொல்லவந்து எதையோ சொல்லி விடுகிறார்.கமல் சுத்த தமிழில் பேச வந்து, கடைசியில் வட்டார தமிழில் பேசிவிடுவது இல்லையா? ஏறக்குறைய அதுவும் இதுவும் ஒன்று தான்.
ராஜாவுக்கு தான் ஒரு பேச்சாளர் என்று மட்டுமல்ல,வெண்பா புலவன், கவிஞர், உரைநடை ஆசிரியர், சிறந்த பக்திமான், சிந்தனை வாதி, தர்மகர்த்தா என்றெல்லாம் தன் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது, அதை அவ்வப்போது காட்டியும், ஊதியும், அடித்தும் வந்திருக்கிறார்.
எனகென்ன தோன்றுகிறது என்றால், ராஜா சார் கடந்து வந்த பாதை அப்படி. ஓரளவிற்கு மேல ஏறி வந்த பின்னர், தன்னை யாரும் குறைத்து மதிப்பிட கூடாது என்று நினைக்கிறார் போல. பாரதிராஜா சொன்னது போல், ராஜா சாருக்கு இமேஜ் கான்சியச்னஸ் அதிகம். அதன் தாக்கமே இப்படி பட்ட பேச்செல்லாம்.
சகலமானவர்களுக்கும் இதனால் நான் சொல்வது என்னவென்றால், யார் நண்பன்?, யார் எதிரி? என்று தெரியாமல், பேச கூடாத விஷயத்தை,பேச கூடாத இடத்தில் பேசி விடுவதால், நாமலா தான் வலியக்க போய் மாட்டிகிறோம்.
-
8th June 2012 01:20 PM
# ADS
Circuit advertisement
Bookmarks