-
14th June 2012, 04:12 PM
#11
Senior Member
Veteran Hubber
அன்புள்ளங்கள் அனைவருக்கும்,
நமது நடிகர் திலகம் திரியின் பத்தாவது பாகத்திற்கு எனது இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்..!
கடந்த பத்து மாதங்களில் பத்து வருட சேவையை இத்திரியில் ஆற்றியிருக்கும் நமது ஆருயிர்ச் சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்கள் பத்தாவது பாகத்தை துவக்கி வைத்திருப்பது சாலப்பொருத்தம்..! அவரே துவக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும் ஆகும்.
தொடர்ந்து இப்பாகத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து இதயதெய்வம் நடிகர் திலகத்தின் புகழ் பாடுவோம்..!
என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ்பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
14th June 2012 04:12 PM
# ADS
Circuit advertisement
-
14th June 2012, 04:28 PM
#12
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
நமது நடிகர் திலகம் திரியின் பத்தாவது பாகத்தை தங்களது அன்புக்கரங்களால் மிகமிக மங்களகரமாக ஆரம்பித்து வைத்திருக்கும் தங்களுக்கு,
எனது பாசமான பாராட்டுக்கள் ! வளமான வாழ்த்துக்கள் !! நெஞ்சார்ந்த நன்றிகள் !!!
செவ்வாயன்று [12.6.2012] இரவு தங்களுடன் கைபேசியில் உரையாடும் போது 'நமது திரியின் இந்தப் பாகம் 400 பக்கங்களை நெருங்குவதால் அடுத்த பாகம் துவங்க மாடரேட்டர்கள் முடிவு செய்யக்கூடும் என்றும், அப்படிப் புதிய பாகம் தொடங்க முடிவெடுக்கப்பட்டால், தாங்களே அடுத்த பாகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும்' தங்களுக்கு அடியேன் அன்பு வேண்டுகோள் விடுத்தது நினைவிருக்கும்..!
இதே கருத்தை இங்குள்ள நமது அன்புள்ளங்கள் அனைவரும் வலியுறுத்தி உள்ளனர் என்பதைக் காணும்போது கண்கள் ஆனந்தத்தால் பனிக்கிறது.
பத்து ஆண்டு திருத்தொண்டினை பத்து மாதங்களில் ஆற்றியிருக்கும் தங்களை விட பத்தாவது பாகத்தை துவக்கிவைக்க பொருத்தமானவர் யார்..?!
நமது திரியில் ஒவ்வொருவரும் நல்ல பங்களிப்புகளை நல்கி, வாசிக்கின்றனர். ஆனால் தாங்களோ சிறந்த பங்களிப்புகளை நல்கி வாசிப்பதோடு மட்டுமல்லாமல், திரியை சுவாசிப்பவரும் ஆயிற்றே..!
ஆரம்பப் பதிவுகளையே மிகமிக அட்டகாசமாக வழங்கியுள்ளீர்கள்..!
"நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்" என எடுத்தியம்பும் 'அன்னை இல்ல'ப் புகைப்படம்,
"காலத்தை வென்ற கலை தெய்வம்" என்ற தலைப்பில் 'வாசுகி' இதழில் வெளிவந்த அருமையான கட்டுரை,
எனத் தங்கள் பதிவுகள் மூலம் எங்களுக்கு ஒரே திருவிழா கொண்டாட்டம்தான்..!
பொலிவோடு தொடரட்டும் தங்களின் திருப்பணியாகிய திரிப்பணி..!
தங்களுக்கு மீண்டும் எனது கோடானுகோடி நல்வாழ்த்துக்கள்..!
பாசத்துடன்,
பம்மலார்.
-
14th June 2012, 05:24 PM
#13
Senior Member
Devoted Hubber
பத்தாவது பாகத்தை தனது அன்பு கரங்களால் தொடங்கி வைத்த திரு. வாசுதேவன் அவர்களுக்கு அன்பான நன்றிகள். மேலும் மேலும் மெருகேற்றி வரும், திரு. ராகவேந்திரா, பம்மலார்,கார்த்திக், மற்றும் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்.
Last edited by abkhlabhi; 15th June 2012 at 03:10 PM.
-
14th June 2012, 05:54 PM
#14
Junior Member
Junior Hubber
திரு. வாசுதேவன் அவர்களுக்கு,
நடிகர் திலகம் அவர்களிடம் யாரேனும் ஆசி வாங்க வேண்டும் என்று நினைத்து அவரது பொற்பாதங்களில் விழும்போது, அவர் அவசரப்பட்டு அதை தடுப்பதில்லை. ஆசி வழங்கும் தகுதி தனக்கு உண்டு என்பதை உணர்ந்து, அந்த வெள்ளை மனம் நின்று நிதானமாக பூரண ஆசி வழங்குவதை நாம் பல முறை பார்த்திருப்போம். அது போலவே இன்று இந்த 10வது திரியை தாங்கள் தான் துவக்கி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவுடன், அந்த கடமையும், பொறுப்பும், தகுதியும் தங்களுக்கு இருப்பதை உணர்ந்து கால தாமதம் செய்யாமல் உடனடியாக திரியை, அசத்தலான தவல்களுடன் துவக்கி வைத்த தங்களுக்கு என் நன்றிகள்.
நட்புடன்
-
14th June 2012, 06:00 PM
#15
Junior Member
Newbie Hubber
அடடே,
திரி ஆரம்பமே களை(கலை) கட்டி விட்டதே! வாசு சாருக்கும், அனைத்து அன்புள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்,நன்றிகள்.
-
14th June 2012, 06:01 PM
#16
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகத்தின் ராஜநடை போல என்றும் பீடு நடை போடட்டும் இந்த தளம்
-
14th June 2012, 08:14 PM
#17
Senior Member
Seasoned Hubber
கர்ணன் தந்த பாடங்கள் -
ஒரு அன்பரின் பார்வையில் கர்ணன் திரைப்படத்தின் தாக்கம் ...
இத்தகவலை அளித்த அன்பருக்கு உளமார்ந்த நன்றி
-
14th June 2012, 09:47 PM
#18
Senior Member
Devoted Hubber
டியர் வாசு சார்,
ஆரம்பமே அமர்களமாக கலைத்தெய்வத்தின் குடும்ப புகைப்படத்தோடு 10 வது பாகத்தை துவக்கி வைத்துள்ளீர்கள்,
அனைவரின் வேண்டுகோளினையும் ஏற்று திரியைத் துவக்கி வைத்த தங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
14th June 2012, 10:44 PM
#19
Senior Member
Diamond Hubber
Dear groucho sir,
Thank u very much and very kind of you.
-
14th June 2012, 10:53 PM
#20
Senior Member
Diamond Hubber
மிக்க நன்றி திரு.சிவாஜி செந்தில் அவர்களே! தங்கள் கருத்து முற்றிலும் சரியே. நீங்கள் கூறியுள்ளது போல வசனம் பேசி நம்மை நடிப்பால் வசீகரித்தார் என்றால், வசனமே இல்லாமல் கர்ணன் கிளைமாக்ஸ் போல நடிப்பால் கிறங்கவும் வைப்பார். எதுவும் செய்யக்கூடிய அசாத்திய திறமை கொண்ட உலகம் போற்றும் ஒரே நடிக தெய்வம் ஆயிற்றே!
Bookmarks