-
16th June 2012, 01:25 AM
#51
Senior Member
Veteran Hubber

Originally Posted by
joe
That is truly remarkable

Thank You So Much, Mr. Joe..!
-
16th June 2012 01:25 AM
# ADS
Circuit advertisement
-
16th June 2012, 01:38 AM
#52
Senior Member
Veteran Hubber

Originally Posted by
HARISH2619
அனைவரது வேண்டுகோளையும் ஏற்று பத்தாவது பாகத்தை கலக்கலாக துவக்கியிருக்கும் திரு வாசு சாருக்கு நன்றிகள் பல கோடி .இந்த பாகத்தை துவக்க உங்களை விட சிறந்தவர் வேறு யார் ?தொடரட்டும் தங்கள் திருப்பணி .
திரு பம்மல் சார்,
கட்டபொம்மன் பொக்கிஷங்கள் காலாகாலத்துக்கும் பாதுகாக்கப்படவேண்டியவை .அவைகளை இங்கு தரவேற்றி அவைகள் அழியாமல் காலத்தை வென்று நிற்பதற்கு வழி செய்து விட்டீர்கள் .அதற்காக தங்கள் பொற்பாதங்களை மானசீகமாக தொட்டு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
திரு முரளி சார்,
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் நாங்கள் உங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .இந்த திரியின் முக்கிய தூண் போன்ற நீங்கள் இத்தனை நாட்களாக இங்கு வராமல் இருப்பது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது தயவு செய்து மிக விரைவில் இங்கு வரவும்.
டியர் செந்தில் சார்,
தங்களின் இதயபூர்வமான பாராட்டுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..!
தங்களின் எல்லையில்லா அன்புக்கு தலைவணங்குகிறேன்..!
தவிர்க்க இயலாத காரணங்களினால், நமது முரளி சாரால் ஒரு மாத காலத்திற்கும் மேலாக பதிவுகளை அளிக்க இயலவில்லை. இன்னும் சில தினங்களில் தமது சீரிய பங்களிப்பை நல்க அவர் அவசியம் வருவார்..!
அன்புடன்,
பம்மலார்.
-
16th June 2012, 01:42 AM
#53
Senior Member
Veteran Hubber
பாராட்டுக்கு நன்றி, சந்திரசேகரன் சார்..!
Thank You Very Much, sivajisenthil Sir..!
உயரிய பாராட்டுக்கு உளங்கனிந்த நன்றி, ஆனந்த் சார்..!
-
16th June 2012, 03:33 AM
#54
Senior Member
Veteran Hubber
-
16th June 2012, 06:46 AM
#55
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
அமரர் 'காகா' ராதாகிருஷ்ணன் அவர்களின் மறைவிற்கு 'பொம்மை' ஆவணத்தை வெளியிட்டு தாங்கள் அஞ்சலி செலுத்திய விதம் கண்களைக் குளமாக்கி விட்டது. தலைவரின் சிறு வயதுத் தோழராக அவருடைய சகல இன்ப, துன்பங்களிலும் பங்கு கொண்ட நல் இதயம் கொண்டவர் 'காகா' ராதாகிருஷ்ணன் அவர்கள்.
"கட்டபொம்மன்" நாடகம் குறித்து நடிகர் திலகம் அவர்களுடைய கவின்மிகு கட்டுரையை வெளியிட்டு உணர்ச்சிப் பெருக்கில் திக்குமுக்காட வைத்து விட்டீர்கள். என்ன ஒரு உணர்வு பூர்வமான கட்டுரை! தான் சிறு வயதில் பார்த்த கட்டபொம்மன் கூத்தை தன்னுடைய நடிப்பில் நாடகமாக்க வேண்டும் என்ற வெறி அவருடைய கட்டுரையில் மட்டுமல்ல அவருடைய இதயம் முழுதும் வியாபித்துக் கிடக்கிறது. ஆலவிருட்சம் போல் வளர்ந்த அந்த ஆசையை தக்க சமயம் பார்த்து அவர் தீர்த்துக் கொண்டதைப் பார்க்கையில் தலைவரின் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் என்னவென்று பாராட்டுவது. அதே தலைவர் வழியை தாங்களும் கடைப்பிடித்து வருவது தலைவர் புகழுக்கு பெருமை சேர்ப்பதாகும். தலைவர் போலவே அந்த விடாமுயற்சி, தன்னம்பிக்கை தங்களிடம் பரிபூரணமாக இருப்பதை கண்கூடாகக் காண முடிகிறது.
மற்றும் தன் நாடகக் குழுவினரின் நல்வாழ்விற்கு கட்டபொம்மன் மூலம் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது போல, தங்கள் ஒப்பற்ற ஆவணங்களினால் இந்த நடிகர் திலகம் திரிக்கு புதிய முறையில் அடித்தளமிட்டுக் கொடுத்து, திரியின் ஆணிவேராக தாங்கள் திகழ்வது நாங்கள் செய்த பூஜாபலன் தான்.
நடிகர் திலகம் கட்டபொம்மன் நாடகத்தைப் பற்றி கூறியுள்ள கருத்துக்களைத் தொடர்ந்து அவர் கட்டபொம்மன் திரைப் படத்தைப் பற்றி கூறியுள்ள கருத்துக்களை மிக அழகாக, மிகப் பொருத்தமாக பதித்துள்ளீர்கள். ஒரு காரியத்தை எடுத்து விட்டால் அதை வெற்றிகரமாக, சிறப்பாக முடித்து உலகப் புகழ் அடைய வேண்டும் என்ற நடிகர் திலகத்தின் கொள்கை வென்று வெற்றிவாகை சூடியது. அவருக்கு கட்டபொம்மன் உலகளாவிய அங்கீகாரத்தையும், அந்தஸ்தையும் பெற்றுத் தந்தான் என்று கூறுவதை விட கட்டபொம்மனுக்கு தலைவர் காலத்தால் அழியாத புகழை உலக அரங்கில் உருவாக்கிக் கொடுத்து விட்டார் என்பதுதான் சாலப் பொருத்தமாக இருக்கும்.
அதே போலத்தான் தாங்களும் உலக அரங்கில் நடிகர் திலகத்தின் அருமை, பெருமைகளை அற்புத ஆவணங்கள் மூலம் பறை சாற்றிக் கொண்டிருக்கீறீர்கள். இந்த தன்னலமற்ற அரிய சேவைக்கு தங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரமும், உலகம் போற்றும் புகழும் கிடைக்கக் கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை.
Last edited by vasudevan31355; 16th June 2012 at 07:36 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
16th June 2012, 07:19 AM
#56
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
தேசிய திலகம் பற்றி தயாரிப்பாளர்-இயக்குனர் திரு.பி.ஆர்.பந்துலு அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் உணர்வுபூர்வமானவை. உண்மை. நடிகர் திலகத்தின் ஊண், உறக்கம் மறந்த உழைப்பை பந்துலு அவர்கள் கட்டுரையில் தெரிவித்திருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.
உன்னதமான பதிவுகளுக்கு உயிரினும் மேலான நன்றிகள் சார்!
அதே போல இலட்சிய நடிகர் திரு எஸ்.எஸ்.ஆர். அவர்கள் தன்னால் VPKB படத்தில் நடிக்க முடியாமல் போனதிற்கான காரணத்தை அழகாகக் கூறியிருந்தார். திரு எஸ்.எஸ்.ஆருக்கு பதிலாக வெள்ளையத் தேவனாக நடிக்க திரு ஜெமினி கணேசன் ஒப்பந்தம் செய்யப் பட்டார். ஆனால் "எஸ்.எஸ்.ஆர். அவர்கள் தன்னால் VPKB படத்தில் நடிக்க இயலவில்லை என்பதை அவரே உறுதி செய்து கூறினால்தான் நான் (திரு ஜெமினி கணேசன்) அந்த வேடத்தில் நடிக்க முடியும்", என ஜெமினி கணேசன் உறுதியாகக் கூறி விட்டார். எஸ்.எஸ்.ஆர்.அவர்களும் 'தான் நடிக்க இயலவில்லை' என்ற உத்திரவாதக் கடிதம் கொடுத்து, திரு ஜெமினி அவர்களுடன் பேசிய பிறகுதான் ஜெமினி வெள்ளயத்தேவனாக நடிக்க ஒப்புக் கொண்டார். இது சம்பந்தமாக 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழில் வெளிவந்த எஸ்.எஸ்.ஆர். அவர்களின் பேட்டியில் இருந்து....



அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 16th June 2012 at 09:06 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
16th June 2012, 10:23 AM
#57
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,

சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது வழக்கமான விசிட்டாக 'சாந்தி' திரையரங்கிற்கு சென்று வந்தேன். அங்கு நடிகர் திலகம்.காம் மற்றும் சாந்தி திரையரங்கு நிர்வாகம் சார்பில், அன்பு ராகவேந்திரன் சாரின் அளப்பரிய டிசைனில் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் மிகப் பெரிய, நீண்ட பேனர் ஒன்று காண்போர் அனைவரின் கருத்தைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. பார்த்ததும் மலைத்துப் போய் விட்டேன். சுப்பிரமணியன் ராமஜெயம் சார் கூட இதைப் பற்றிய ஒரு பதிவை நமது திரியில் அளித்திருந்தார். 'தினமலர்' (வாரமலர்) செப்டம்பர 27, 2009 இதழில் வெளிவந்த நடிகர் திலகம் பற்றிய article மெருகேற்றப்பட்டு, அந்த article க்கான online feedback-க்கும் தொகுக்கப்பட்டு ராகவேந்திரன் சார் அவர்களால் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காமிரா வேறு கொண்டு செல்லவில்லை. இருந்தாலும் செல்லில் 'கிளிக்' செய்தேன். மிகப் பெரிய பேனராக இருப்பதால் முழுமையாக கவர் செய்ய முடிய வில்லை. முடிந்தவரை சிறு பகுதிகளாக படம் பிடித்து பதிவிட்டுள்ளேன். Nadigarthilagam.com, 'சாந்தி' தியேட்டர் நிர்வாகம் மற்றும் தினமலர் வாரமலருக்கு நம் திரியின் சார்பாக நன்றிகளும், வாழ்த்துக்களும்.
அன்பு ராகவேந்திரன் சாருக்கு ஸ்பெஷல் நன்றிகள்.
இடம்: சாந்தி தியேட்டர் வளாகம், சென்னை.








டியர் ராகவேந்திரன் சார்,
இந்த பேனர் பற்றிய மேலதிக விவரங்களை முடிந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 16th June 2012 at 11:08 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
16th June 2012, 10:39 AM
#58
Senior Member
Seasoned Hubber
-
16th June 2012, 11:05 AM
#59
Senior Member
Diamond Hubber
The Hindu - 16-06-2012 article- க்கு நன்றி திரு.சந்திரசேகரன் சார்.
-
16th June 2012, 11:16 AM
#60
Junior Member
Newbie Hubber
வருடம் 2012 உலகத்துக்கு எப்படியோ, நமது நடிகர் திலகம் பக்தர்களுக்கு ,1952 , 1959 ,1960 ,1961 ,1964 ,1972 ஆகியவற்றை போல் மறக்க முடியாத வருடம்.(மறக்க வேண்டியது 2001 ,வணங்க வேண்டியது 1928 )
பம்மலார் சாரின் வீரபாண்டிய கட்டபொம்மன் விருந்து கெய்ரோ விருதுக்கு ஒப்பான பங்களிப்பு. உங்களுக்கு நன்றி சொல்ல நிஜமாக வார்த்தையில்லை.
ராக(வேந்தர்) சாந்தி திரையரங்கு பேனருக்கு மிக்க நன்றிகள்.
அத்தனை பேரின் பங்களிப்பும் அமர்க்களம்.இந்த திரி கர்ணன் பெற்ற வெற்றியை பெரும்.(துவக்கி வாய்த்த கை மோதிர கையாயிற்றே??)
Bookmarks