Results 1 to 10 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Hybrid View

  1. #1
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகன் குரல் சிறப்பு மலரிலிருந்து பந்துலு அவர்களின் கட்டுரையை வெளியிட்டது மிகச் சிறப்பு. இந்த நடிகன் குரல் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக வெளியிடப் பட்டது என எண்ணுகிறேன். இதே போல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் ஒரு மலர் வெளியிட்டதாக நினைவு. இதே போல் தேவி வார இதழில் வெளிவந்த எஸ் எஸ் ஆர் பேட்டி, புண்ணிய பூமி அரிய நிழற்படம், எமனுக்கு எமன் விளம்பரம், வசந்த்த்தில் ஓர் நாள் விளம்பரம், சரித்திர நாயகன் விளம்பரம், நேர்மை விளம்பரம், அன்புள்ள அப்பா விளம்பரம், சின்ன மருமகள் விளம்பரம், தந்தையர் தின சிறப்பாக அன்னை இல்லம் குடும்ப நிழற்படம், மோட்டார் சுந்தரம் பிள்ளை சிறப்புப் பதிவு, என பம்மலாரின் அளப்பரை சூப்பர்... பாராட்டுக்கள் சார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #2
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    நடிகன் குரல் சிறப்பு மலரிலிருந்து பந்துலு அவர்களின் கட்டுரையை வெளியிட்டது மிகச் சிறப்பு. இந்த நடிகன் குரல் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக வெளியிடப் பட்டது என எண்ணுகிறேன். இதே போல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் ஒரு மலர் வெளியிட்டதாக நினைவு. இதே போல் தேவி வார இதழில் வெளிவந்த எஸ் எஸ் ஆர் பேட்டி, புண்ணிய பூமி அரிய நிழற்படம், எமனுக்கு எமன் விளம்பரம், வசந்த்த்தில் ஓர் நாள் விளம்பரம், சரித்திர நாயகன் விளம்பரம், நேர்மை விளம்பரம், அன்புள்ள அப்பா விளம்பரம், சின்ன மருமகள் விளம்பரம், தந்தையர் தின சிறப்பாக அன்னை இல்லம் குடும்ப நிழற்படம், மோட்டார் சுந்தரம் பிள்ளை சிறப்புப் பதிவு, என பம்மலாரின் அளப்பரை சூப்பர்... பாராட்டுக்கள் சார்.
    பாராட்டுக்கு நன்றி, ராகவேந்திரன் சார்..!

    தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக வெளியான "நடிகன் குரல்", ஒரு சிறந்த கலையுலக மாத இதழ். அப்போது(1962-ல்) தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் இதன் பதிப்பாசிரியர். ஆசிரியராக பணிபுரிந்தவர் திரு.விதவான் வே.லட்சுமணன்.

    சிங்கத்தமிழன் புகழ்பாடிய சிங்கப்பூர் விழா சுட்டிக்கு சிறப்பான நன்றிகள்..!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  4. #3
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    சென்னை காமராஜர் அரங்கில், அகில இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில், 1.9.2001 சனிக்கிழமையன்று நடைபெற்ற சிவாஜி புகழாஞ்சலியை நேரில் கண்டு மகிழ்ந்தவன் என்ற முறையில், 'புரட்சிப் புயல்' வை.கோ. அவர்களின் புகழுரை எனக்கு அருமையான 'மலரும் நினைவுகள்' ஆக அமைந்தது.

    'தேன்மலர்கள்' என்ற தலைப்பில், சென்னையில் உள்ள 'கலைஞன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள வை.கோ. அவர்களின் மேடை உரைகளின் தொகுப்பு நூலிலும், நமது நடிகர் திலகம் குறித்த இந்தப் புகழுரை பிரதானமாக இடம்பெற்றுள்ளது.

    அருமையான இடுகைக்கு அன்பான நன்றிகள்..!

    பாசத்துடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #4
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    எதிர்பாராத விதமாக எனது இணையதள இணைப்பு மிகமிக மெதுவாக இயங்கிய காரணத்தால், "பாசமலர்" இன்று இரவு மலரும்..!
    pammalar

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •