-
18th June 2012, 08:47 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajaramsgi
கமல் பங்க்ஷன் நடந்துட்டு இருக்கும் போது பாதியிலேயே கெளம்பி போய்ட்டாரு போல. அவளோ பிஸியா?
எனக்கு ஒரு விதத்தில் இது நல்லதாகவே பட்டது. உதாரணத்திற்கு ராஜாவின் பேச்சைச் சொல்லலாம். மொழியை விட இசையே பெரியது. பெயரை திருப்பி சொன்னால் பொருள் கொடுக்குமா? ஆனால் இசையை திருப்பி வாசித்தாலும் பொருள் கொடுக்கும். சுரங்களை முன்னதாகவும், பின்னதாகவும் சொல்லிக் காண்பிக்கிறார். இந்தக் கூத்தையெல்லாம் எப்படி மொழிக் காதலன் கமல் பார்த்துக் கொண்டு இருப்பார்? (கமல் அதையும் சகித்துக் கொண்டே இருப்பார் என்பது வேறு விஷயம்!). இந்த வறட்டு கெளரவம், கர்வம் (மொழியெல்லாம் தூசு! இசைதான் டாப்பு என்ற சித்தாந்தம்) ராஜாவுக்கு பல வருடங்களாக உண்டு. அவ்வப்போது வெவ்வேறு வடிவங்களில், வார்த்தைகளில் வெளிவந்து கொண்டே இருக்கும் அவரது உரைகளில். இனி கமல் போலவே நானும் பாதி வேளையிலேயே எழுந்து செல்லலாம் என முடிவு செய்துவிட்டேன். ஏனெனில் ராஜாவின் பேச்சில் இருக்கும் இனிப்பு சுவையை இதுபோன்ற மிளகாய் நெடி ஒட்டுமொத்தமாய் சிதைத்து விடுகிறது. ராஜா நீங்க இசை ராஜா! (அவ்வளவுதான்) என்னுள் இருக்கும் அந்த பிம்பம் கடைசி வரை உடையாமல் இருக்கணும் என்றால் அவரது பேச்சை முழுவதுமாக புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
18th June 2012 08:47 PM
# ADS
Circuit advertisement
Bookmarks