Quote Originally Posted by pammalar View Post
கலைச்சூரியனின் ஜூன் கதிர்கள்


குறிப்பு:
"தங்கப்பதக்கம்" நாடகம், 1972 தொடக்கத்திலிருந்து 25.5.1974 வரை, சரியாக 75 முறை அமோக வரவேற்போடு மிகமிக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஏறத்தாழ எல்லாமே நிதி நாடகங்கள்தான்..! அதாவது நாடகத்தின் வசூல் அனைத்தும் - [நாடகச் செவவு, சிவாஜி நாடக மன்ற உறுப்பினர்களின் சம்பளச் செலவு போக] - மீதமுள்ள பெருந்தொகை அனைத்தும், தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அச்சமயம் நடைபெற்ற பற்பல பொதுப்பணிகளுக்கும், நற்பணிகளுக்கும், நலத்திட்டங்களுக்கும் நன்கொடையாக வழங்கப்பட்டன. சிவாஜி நாடக மன்ற நாடக வசூலில் ஒரு சல்லி காசைக்கூட நமது நடிகர் திலகம் தனக்கென்று எடுத்துக் கொள்ளமாட்டார். தன் உழைப்பு மூலமாக ஈட்டப்படும் செல்வத்தின் ஒரு பகுதியை தானமாகக் கொடுப்பவர் வள்ளல். அப்படித் தனது உழைப்பினால் ஈட்டப்படும் செல்வத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், தனது உழைப்பையே தானமாகக் கொடுக்கும் நமது நடிகர் திலகம் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலான 'வள்ளல் திலகம்' என்பதனை மனசாட்சி உள்ளவர்கள் நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள்..! வாழ்க வள்ளல் திலகத்தின் புகழ்..!


பளபளக்கும்...

பக்தியுடன்,
பம்மலார்.

Well said Pammalar sir. NT is real "Vallal" because he has given away his own money and work to other people, not like giving money to others by government money and claiming themself as "Vallal".

Long live NT fame.

Cheers,
Sathish