Results 1 to 10 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    நேற்று சிறிது நேரம் சுமதி என் சுந்தரி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் திலகத்தின் திறமைக்கு அவர் ப்பூ என்று ஊதி தள்ளிய வேடம்தான் என்றாலும் அதையும் ஒரு ஈடுபாட்டோடு செய்திருக்கும் விதம் நம்மை ஆச்சரியப்படுத்தும். குறிப்பாக ஒன்றிரண்டு காட்சிகள்.

    அடியம்மா ராசாத்தி பாடல் காட்சி முடிந்ததும் நடிகர் திலகமும் ஜெஜெ-வும் நடந்து வரும் காட்சி. தான் நடித்துக் கொண்டிருந்த படத்தின் டைரக்டர் அந்த தோட்ட தொழிலாளர் விழாவிற்கு வந்து விட தன்னை அடையாளம் தெரிந்துக் கொண்டு விடுவாரோ என்று பயந்து அவர் கண்ணில் படாமல் மறைந்து விழா முடிந்து வீட்டிற்கு போகும்போது கூட அதே நினைவாக வரும் ஜெஜெ, அதை கவனிக்காமல் பேசிக் கொண்டே வரும் நடிகர் திலகம். "என்னை போய் தீடிர்னு நடுவிலே விட்டு ஆட சொல்லிட்டாங்க. எனக்கு என்ன தெரியும்? ஆனா நீ பரவாயில்லை கையை காலை அப்படி இப்படி அசைச்சு ஏதோ டான்ஸ் தெரிஞ்ச மாதிரி மானேஜ் பண்ணிட்டே " என்று வெகு இயல்பாக பேசிக் கொண்டு வருவார். ஜெஜெ-வின் கவனம் தன் பேச்சில் இல்லை என்பதை கவனிக்காமல் " பெரியவரோட தம்பி வேற நம்மை போட்டோ எடுக்கிறேன்-னு எடுத்துட்டார். எனக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு. நான் மூஞ்சியை அந்த பக்கம் திருப்பிக்கிட்டேன்" என்று சொல்லும் போதுதான் தற்செயலாக ஜெஜெ௦வின் முகத்தை பார்க்க " ஏய் உனக்கு என்ன ஆச்சு? " என்று ஜெஜெ பக்கம் திரும்புவார். இந்த காட்சியை கவனித்தோம் என்றால் தனிமையில் நடந்து கொண்டே அதே நேரம் ஒரு சம்பாஷணையில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்க கூடிய ஒரு ஜோடி எப்படி இயல்பாக நடந்து கொள்வார்களோ அதை வெகு இலகுவாக கையாண்டிருப்பார். அடுத்த வினாடியில் மரத்தில் சாய்ந்து பலூன் வைத்து முகம் மறைத்திருக்கும் ஜெஜெ, அந்த பலூனை ஒரு மரக்குச்சியின் நுனியால் வெடிக்க வைக்கும் நடிகர் திலகம் உடனே பயந்து அவரை அனைத்துக் கொள்ளும் ஜெஜெ, அந்த நேரத்தில் சட்டென்று ஏற்பாடு நெருக்கத்தில் உணர்ச்சி வசப்படும் நடிகர் திலகம், என்ன அழகாய் அதை வெளிப்படுத்துவார். அந்த நேரம் பின்னணியில் ஒலிக்கும் ஹம்மிங், ஒரு சின்ன காட்சி கூட ஒரு தேர்ந்த கலைஞனின் கைப்படும் போது எப்படி பரிமளிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
    Well observed, Sir !!! Yet another simple & amazing performance by NT.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  2. Thanks senthilvel thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •