சங்கப் புலவர் கொல்லன் அழிசியார் " பனிப்புதல்"
பனிப்புதல் இவர்ந்த பைங்கொடி அவரைத்
கிளிவா யொப்பின் ஒளிவிடு பன்மலர்
வெருக்குப்பல் உருவின் முல்லையொடு கஞல,
வாடை வந்ததன் தலையும் நோய் பொரக்
கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக்
கடலாழ் கலத்திற் றோன்றி
மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே.
கொல்லன் அழிசியார், குறுந்தொகை 240.
இவ்வழகிய பாடற்பொருளை இனி நோக்குவோம்.
அருஞ்சொற்பொருள்
புதல் - புதர். பனிப்புதல்: பனிப்பொழிவின் காரணமாக மிகக் குளிர்ந்துவிட்ட புதர் இவர்ந்த = பற்றி ஏறிய. பைங்கொடி அவரை = பசுமையான அவரைக் கொடி. கிளிவாய் ஒப்பின் = கிளியின் அலகினை ஒத்த.
ஒளிவிடு பன்மலர் = ஒளிவிடுகின்ற பல மலர்கள்.
வெருக்குப்பல் = காட்டுப் பூனையின் பல். உருவின் = உருவத்தை ஒத்த. முல்லை - முல்லைமலர். கஞல = செறிய. வாடை = வடக்குத் திசையினின்றும் வீசும் குளிர்காற்று. பொர = வருத்த. தெண்டிரை = தெண் - திரை, தெளிந்த அலைகள்,
கடல் ஆழ் - கடலில் மூழ்கும்.
தெள் - தெளி - தெளிவு.
தெள் - தெள்ளு, தெள்ளுதமிழ்.
தெள் - தெள்ளத் தெளிந்த (மரபுத் தொடர்.)
தெள்+மை = தெண்மை.= தெளிவு.
தெண்மை+ திரை= தெண் திரை = தெண்டிரை.
தொடரும்




Reply With Quote
Bookmarks