-
22nd July 2012, 08:18 PM
#21
Senior Member
Diamond Hubber
வருவதற்கு முன்னமேயே வாழ்த்து நல்கிய முத்தான முரளி சாருக்கு என் சத்தான நன்றிகள்.
-
22nd July 2012 08:18 PM
# ADS
Circuit advertisement
-
22nd July 2012, 08:22 PM
#22
Senior Member
Diamond Hubber
புதிய திரிக்கு வாழ்த்துக்கள் வழங்கிய அன்பு ராகவேந்திரன் சார், அன்பு கார்த்திக் சார், முரளி சார், ராமஜெயம் சார் ஆகியோருக்கு அன்பு கலந்த நன்றிகள்.
-
22nd July 2012, 09:02 PM
#23
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
அமரதீபம் 'இன்று முதல்' விளம்பரம், 50வது நாள் விளம்பரம் கண்டவுடன் 'இங்கே பாரு நம் துன்பம் பறந்தோடுதே!'
Last edited by vasudevan31355; 22nd July 2012 at 11:03 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
22nd July 2012, 09:14 PM
#24
Senior Member
Diamond Hubber
'நாணயம் மனுஷனுக்கு அவசியம்'...
(நா நயமும் கண்டிப்பாக மனுஷனுக்கு அவசியம்)
'அமர தீபம்' காவியத்தில் தலைவரின் அறிவுரைப் பாடல்.
Last edited by vasudevan31355; 22nd July 2012 at 10:59 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
22nd July 2012, 09:22 PM
#25
Senior Member
Diamond Hubber
உச்சி முதல் உள்ளங்கால் வரை நம்மை சிலிர்க்க வைக்கும்
தெய்வமும், தெய்வத்தின் தெய்வமும்.
Last edited by vasudevan31355; 22nd July 2012 at 11:02 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
22nd July 2012, 09:49 PM
#26
Senior Member
Diamond Hubber
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ஹிந்தி 'அமர்தீப்' (1958)படத்திலிருந்து தேவ் ஆனந்த் அவர்களும்,பத்மினி அவர்களும் தோன்றும் ஒரு காட்சி.
Last edited by vasudevan31355; 22nd July 2012 at 09:52 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
22nd July 2012, 10:16 PM
#27
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார் அளித்த சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முத்திரையின் நிழற்படம் கண்டு களித்தீர்கள். இப்போது அதே முத்திரை நமது திரியின் அன்பர்களுக்காக வீடியோவாக. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'அமர்தீப்' இந்திப் படத்தின் டைட்டிலை தனியே நமது நேயர்களுக்காக கொடுத்துள்ளேன். இதில் சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முத்திரையை ஒலி ஒளிக் காட்சியாகக் கண்டு களிக்கலாம். டைட்டிலின் இறுதியில் produced by S.Krishnamurthi & P.N. Pillai for shivaji productions என்று வருவதைக் காணலாம்.
டைட்டிலின் போது வரும் இசையை நன்கு கவனித்து கேளுங்கள். ஆஹா! என்ன ஒரு இனிமை! சி.ராமச்சந்திரா அவர்களின் அற்புத இசையமைப்பிற்காகவே இந்த டைட்டிலை ஆயிரம் முறை பார்க்கலாம்.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 22nd July 2012 at 10:30 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
23rd July 2012, 01:36 AM
#28
Senior Member
Veteran Hubber
Originally Posted by
RAGHAVENDRA
டியர் ராமஜெயம் சார்,
தங்களுடைய அன்பான வாழ்த்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள். கார்த்திக் சொன்னது போல் இது நம் வீடு போன்ற ஒரு உணர்வைத் தருகிறது. இதற்கு பம்மலாருக்கு நாம் பாராட்டும் வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்க வேண்டும். அதே போல் வரவேற்பும் வாழ்த்தும் நல்கிய கார்த்திக் சாருக்கும் நன்றி. அதே போல் முதல் வாழ்த்து முத்தான வாழ்த்தாக அளித்த வாசு சாருக்கும் நன்றிகள்.
டியர் பம்மலார் சார்,
அமரதீபம் வெளியீட்டு விளம்பரமும் சரி, 50வது நாள் விளம்பரமும் சரி, இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். உண்மையிலேயே பொக்கிஷாதி பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை. தங்களுக்கு அனைத்து சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அதே போல் இன்னொரு பொக்கிஷம்...இது வரை இணையத்தில் வந்திருக்காது என எண்ணுகிறேன். முதன் முதலில் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முத்திரையின் நிழற்படம் இதோ நம் பார்வைக்கு..
பின்னர் இது விரைவிலேயே மாற்றப்பட்டு விட்டது.
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் பாராட்டுதல்களுக்கு எனது பணிவான நன்றிகள்..!
Globeக்கு முதன்முதலாக Shivaji Productionsன் முதல் Logoவை அளித்து முத்திரை பதித்து விட்டீர்கள்..!
'வணக்கம் பல முறை சொன்னேன்' பாடல் வீடியோவுக்காக எனது நன்றியை தங்களுக்கு பலமுறை சொல்லிக் கொள்கிறேன்..!
அன்புடன்,
பம்மலார்.
-
23rd July 2012, 01:43 AM
#29
Senior Member
Veteran Hubber
Originally Posted by
Murali Srinivas
அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்
நடிகர் திலகத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள
அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்
பொன் போன்ற திரியை "அமர தீபம்" ஏற்றி மங்களகரமாய் துவக்கியிருக்கும் சுவாமி அவர்களே!
பாங்குடன் வரவேற்று இதுவரை கண்டிராத சிவாஜி புரொடக் ஷன்ஸ் லோகோவை அப்லோட் செய்து தன் பங்களிப்பை செவ்வனே செய்துள்ள ராகவேந்தர் சார் அவர்களே, கார்த்திக் அவர்களே
வரவிருக்கும் வாசு அவர்களே! நன்றிகள் பல!
அன்புடன்
டியர் முரளி சார்,
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..!
தங்களின் அன்புக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது கனிவான நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
23rd July 2012, 01:57 AM
#30
Senior Member
Veteran Hubber
Originally Posted by
mr_karthik
அன்பு ராகவேந்தர் சார்,
நடிகர்திலகத்தின் நினைவுநாளையொட்டி, நமது இரண்டாவது 'அன்னை இல்லமான' சாந்தி திரையரங்க வாயிலில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியினை தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி. அஞ்சலி பேனரில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் மனதைத்தொட்டன.
சிவாஜி புரொடக்ஷன்ஸின் முந்தைய எம்ப்ளம் நிழற்படம் அருமை. மராட்டிய மன்னர் சிவாஜி, பவானி அம்மனை கும்பிடுவது போன்ற தோற்றத்தில் வரையப்பட்டது. இதை வடிவமைத்தவர் ஆர்ட் டைரக்டர் மோகன். பின்னர் இது வி.சி.சண்முகம் அவர்களால் நிராகரிக்கப்பட்டு, நடிகர்திலகமும் ராஜாமணி அம்மாவும் சாமி கும்பிடுவது போன்ற ஷாட் எடுக்கப்பட்டு வியட்நாம் வீடு படத்தில் காண்பிக்கப்பட்டது.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் முன்னாள் நிர்வாக மேலாளர் ஆர்.கே.என் மோகன்தாஸுடன் 'ரத்தபாசம்' வெளியீட்டன்று பேசிக்கொண்டிருந்தபோது இத்தகவலைச் சொன்னார்.
அன்புள்ள பம்மலார் சார்,
தங்கள் மேலான வரவேற்புக்கு மிக்க நன்றி.
'அமரதீபம்' முதல் நாள், மற்றும் 50-வது நாள் விளம்பரங்கள் மிகவும் அருமை. நடிகர்திலகத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் சாதனைகள் தொடர்வது மனதுக்கு சந்தோஷமளிக்கிறது.
டியர் mr_karthik,
தங்களின் பாராட்டுக்கு அன்பான நன்றிகள்..!
Shivaji Productionsன் முதல் எம்ப்ளத்தை பற்றிய சுவையான அரிய தகவலை அளித்து, தாங்கள் ஒரு தகவல் பெட்டகம் என்பதனை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்..!
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks