-
22nd July 2012, 04:46 PM
#11
Senior Member
Veteran Hubber
அன்பு ராகவேந்தர் சார்,
நடிகர்திலகத்தின் நினைவுநாளையொட்டி, நமது இரண்டாவது 'அன்னை இல்லமான' சாந்தி திரையரங்க வாயிலில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியினை தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி. அஞ்சலி பேனரில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் மனதைத்தொட்டன.
சிவாஜி புரொடக்ஷன்ஸின் முந்தைய எம்ப்ளம் நிழற்படம் அருமை. மராட்டிய மன்னர் சிவாஜி, பவானி அம்மனை கும்பிடுவது போன்ற தோற்றத்தில் வரையப்பட்டது. இதை வடிவமைத்தவர் ஆர்ட் டைரக்டர் மோகன். பின்னர் இது வி.சி.சண்முகம் அவர்களால் நிராகரிக்கப்பட்டு, நடிகர்திலகமும் ராஜாமணி அம்மாவும் சாமி கும்பிடுவது போன்ற ஷாட் எடுக்கப்பட்டு வியட்நாம் வீடு படத்தில் காண்பிக்கப்பட்டது.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் முன்னாள் நிர்வாக மேலாளர் ஆர்.கே.என் மோகன்தாஸுடன் 'ரத்தபாசம்' வெளியீட்டன்று பேசிக்கொண்டிருந்தபோது இத்தகவலைச் சொன்னார்.
அன்புள்ள பம்மலார் சார்,
தங்கள் மேலான வரவேற்புக்கு மிக்க நன்றி.
'அமரதீபம்' முதல் நாள், மற்றும் 50-வது நாள் விளம்பரங்கள் மிகவும் அருமை. நடிகர்திலகத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் சாதனைகள் தொடர்வது மனதுக்கு சந்தோஷமளிக்கிறது.
-
22nd July 2012 04:46 PM
# ADS
Circuit advertisement
Bookmarks