-
23rd July 2012, 03:01 AM
#31
Senior Member
Veteran Hubber
'பொங்கல்' வாசுதேவன் சார்,
தங்களை 'வருக! வருக!' என இரத்தின கம்பளம் விரித்து மனமார வரவேற்கிறோம்..!
மடை திறந்த வெள்ளமென 'பொங்கலோ பொங்கல்' என்று பொங்கி வந்துள்ளீர்கள்..!
அந்தப் பொங்கலின் விளைவாக இங்கு எத்தனை வகையான படையல்..!
'முக்கண் முதல்வ'ரை முதல் புகைப்படமாக அளித்த பதிவு முதல்வரே,
'அம்பிகையே ஈஸ்வரியே' பாடல் வீடியோ என்ன..,
[இன்றும் இப்பாடலின் முதல் இரண்டு சரணங்களும் கூட என்னமாய்ப் பொருந்துகின்றன..
வேலையிலே மனசு வெச்சோம் முத்துமாரி
இப்போ வெற்றிக்கொடி நாட்டுகிறோம் முத்துமாரி
ஆலமரம் போலிருக்கும் எங்கள் கூட்டம்
எமை ஆதரிச்சு வாழ்த்துதடி முத்துமாரி
ஏழைகள ஏய்ச்சதில்ல முத்துமாரி
நாங்க ஏமாத்தி பொழச்சதில்ல முத்துமாரி
வாழவிட்டு வாழுகிறோம் முத்துமாரி
இனி வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி
கவியரசருக்கு ஒரு ராயல் சல்யூட்..]
நாணயத்தையும், நா நயத்தையும் நடிகர் திலகத்தின் 'நாணயம் மனுஷனுக்கு அவசியம்' அறவுரைப் பாடல் மூலம் தெரிவித்த விதம் என்ன..,
தம்மை ஈன்றெடுத்த தெய்வத்துடன் கலைதெய்வம் அமர்ந்திருக்கும் 'சிவாஜி புரொடக்ஷன்ஸ்'ஸின் அன்றைய-இன்றைய Logoவை இடுகை செய்து, உண்மையிலேயே உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்க வைத்த சிறப்பு என்ன..,
'சிவாஜி புரொடக்ஷன்ஸ்'ஸின் முழுமுதற் தயாரிப்பான "அமர்தீப்(1958)"பின் கிடைத்தற்கரிய ஸ்டில் என்ன, டைட்டில் வீடியோ என்ன..,
என்ன என்ன என்ன.., என்ன என்ன என்ன..,
எதைச் சொல்வது எதைச் சொல்லாமலிருப்பது..,
அரிய பதிவுகளுக்கு ஆனந்தமான பாராட்டுக்கள்..!
தங்களின் இணையில்லா அன்புக்கும், பாசமான பாராட்டுதல்களுக்கும், பொன்னான வாழ்த்துக்களுக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகள்..!
இனி இந்தத் திரியில்,
கலக்கப் போவது யாரு.. நீங்கள் தான்..!
பாசப்பெருக்கில்,
பம்மலார்.
-
23rd July 2012 03:01 AM
# ADS
Circuit advertisement
-
23rd July 2012, 03:51 AM
#32
Senior Member
Veteran Hubber
-
23rd July 2012, 04:24 AM
#33
Senior Member
Veteran Hubber
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் : 3
நடிகர் திலகத்தின் 32வது காவியம்
அமரதீபம் [வெளியான தேதி : 29.6.1956]
100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
10வது வார விளம்பரம் : The Hindu : 1.9.1956

தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
23rd July 2012, 12:50 PM
#34
Junior Member
Newbie Hubber
இது நம் வீடு என்ற உணர்வு வருகிறது(கார்த்திக் சார் சொன்னது போல்). முதல் முறையாக பணக்கார சகோதரர்களை தனி குடித்தனம் அனுப்பி துணிவான "காரியம் " செய்துள்ளனர்.
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
-
23rd July 2012, 01:17 PM
#35
Junior Member
Regular Hubber
AWESOME !! BINGO !! HITTING STRAIGHT AT THE BULLS EYE, ALL WOULD SAY. CONGRATULATIONS ON STARTING THIS THREAD AIMED AT WHAT WE ARE AIMING AT. THE TITLE NEEDS NO EXPLANATION - PAMMALAR SIR !! VAARTHAIGAL POADHAADHU PAARAATTA. I REMEMBER THE DIALOGUE OF RAMAN ETHANAI RAMANADI CHATHRAPATHI SIVAJI ....... AADUVAAR AAATAMUM PAADUVAAR PAATUMAAI ANNIYAR KALITHIRUKKA ! YAARADHU MANNINALAE ..YAARADHU NAADAGAM PAARKALAAM ENDRU NAAN PADAIEDUKKA ! ENNADA MUDIYUM UNNAL ENDRU EN EDHIRIGAL KOKKARIKKA....! IDHUVUM MUDIYUM ..INNAMUM MUDIYUM ENDRU NAAN VAALEDUKKA...........IT GOES lIKE THAT....AS ALL AWARE OF.... !!
-
23rd July 2012, 01:31 PM
#36
Senior Member
Devoted Hubber
திரு பம்மல் சார்,
என்ன ஒரு இன்ப அதிர்ச்சி,இதைத்தான் நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்தோம்.இரண்டு வாரங்களாக தொலைந்து போயிருந்த என்னுடைய சந்தோஷத்தை மீட்டுகொடுத்த தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.
திரு ராகவேந்திர சார்,திரு வாசு சார்,திரு கார்த்திக் சார்,
இனி தங்களுக்கு தடையேது?சும்மா பூந்து விளாடுங்க சார்
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
23rd July 2012, 02:31 PM
#37
Senior Member
Seasoned Hubber
இரண்டே நாட்களில் 700 ஹிட்ஸ்..பார்வையாளர் எண்ணிக்கை பறை சாற்றுவது என்ன ...
புரிய வேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும்...வேறென்ன வேண்டும் ....
வாசுவும் பம்மலாரும் நடிகர் திலகம் என்கிற ரயிலுக்கு தண்டவாளம் மாதிரி ...
தொடருங்கள் நண்பர்களே...
Last edited by RAGHAVENDRA; 23rd July 2012 at 02:34 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd July 2012, 03:18 PM
#38
Senior Member
Veteran Hubber
வரும்போதே தங்கள் அட்சய பாத்திரத்தைத் திறந்து வைத்துக்கொண்டு, வந்ததுமே அள்ளி வழங்கத்துவங்கிய வாசுதேவன் அவர்களே...!
தங்கள் முதல் பதிவிலேயே அள்ளித்தந்தவற்றை பம்மலார் அழகாக பட்டியலிட்டுவிட்டார். எனவே அதை மீண்டும் நான் நகலெடுக்க வேண்டிய அவசியமில்லையென நினைக்கிறேன்.
நீங்கள் அளித்துள்ள இந்திப்பட சமாச்சாரமெல்லாம் நான் இதுவரை பார்த்திராதது. நடிகர்திலகத்தின் புதிய திரிக்குச்சென்றால் எல்லாம் கிடைக்கும் என்ற உண்மையை மீண்டும் நிலைநாட்டத்துவங்கியுள்ளீர்கள்.
உங்களது அட்சய பாத்திரத்திலிருந்தும், பம்மலாரின் ஜீபூம்பா ஜாடியிலிருந்தும், இன்னும் என்னவெல்லாம் வரப்போகிறதென்று ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
-
23rd July 2012, 03:40 PM
#39
Senior Member
Seasoned Hubber
-
23rd July 2012, 04:09 PM
#40
Senior Member
Diamond Hubber
Bookmarks