பாசம் நிறைந்த பம்மலார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நீங்கள் துவங்கியிருக்கும் இந்த புதிய திரி, மனதில் எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. முதல் பதிவே நடிகர்திலகத்தின் நினைவுநாள் பதிவாக அமைந்ததில் இதயம் கனக்கிறது. ஒரே நேரத்தில் இருவேறு உணர்வுகள்.

இங்கே வந்ததும் நமக்கென்று ஓர் இடம். நம் சொந்த வீட்டுக்கு வந்து விட்டோம் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. இனி தடையேதும் இல்லை. தங்கள் தலைமையில் இந்த புதிய திரி எந்த தடைகளும் இன்றி வெற்றி நடைபோட நாங்கள் அனைவரும் துணை நிற்போம்.

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.