Page 33 of 305 FirstFirst ... 2331323334354383133 ... LastLast
Results 321 to 330 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #321
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்
    ராதாகிருஷ்ணன் சார் கூறியது போல் உடன் நடித்த கதாநாயகி நடிகை நடித்த படங்களைப் பற்றியும் இங்கு கூறலாம்.

    அதற்கேற்ப, முதலில் கதாநாயகியாக அல்லது முக்கிய வேடத்தில் நடித்த நடிகைகளின் பெயர்களைப் பார்ப்போமா

    Ambika Maadhavi Saarada
    Anjali Devi Maalavika Saavitthiri
    Bhanumathi, P. Madhuri Devi Saritha
    Bharathi Malin Ponsekha Saroja Devi
    Chandirakala Manjula Saroja, B.S.
    Deepika Manorama Simran
    Devika Meena Soundharya
    Geetha Mynavathi Sowcar Janaki
    Girija Nadhiya Sri Ranjani
    Gouthami Nirmala Sripriya
    Jamuna Oorvasi Srividhya
    Jayachithra Padhmapriya Suhaasini
    Jayalalitha Padmini Sujatha
    Jayasudha Pandari Bai Usha Nandini
    Jeevitha Raadha Vaanishree
    Kaanchana Raadhika Vadivukkarasi
    Kajal Kiran Rajamma, M.V. Varalakshmi, G
    Krishnakumari Revathi Vijaya, K.R.
    Lakshmi Roja Vijayakumari
    Lalitha Rukmini Vyjayanthimala
    M.N.Rajam
    Names left out in the above list:
    Vyjayanirmala, Latha, Sridevi
    Home
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #322
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    டியர் பம்மலார் சார்,

    தலைவரின் காவியங்களில் இது வரை அதிகம் அறியப்படாத "வளர்பிறை" பற்றிய தங்களின் பதிவு அரிதான ஒன்றாகும்!

    பதிவிட்டமைக்கு நன்றி!
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  4. #323
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    [
    டியர் esvee சார்,

    'தினத்தந்தி' நாளிதழின், 23.4.1965 [வெள்ளிக்கிழமை] தேதியிட்ட இதழின் பக்கத்தை பார்த்துக் களித்துவிட்டு, ஒரே வார்த்தையில் பாராட்ட வேண்டுமென்றால் 'அதியற்புதம்' என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள் திலகத்தின் மகாமெகாஹிட் காவியமான "எங்க வீட்டுப் பிள்ளை"யின் 100வது வெற்றித் திருநாள் [23.4.1965] விளம்பரம் வெளிவந்த பேப்பராயிற்றே..! தாங்கள் மடித்துக் கொடுத்துள்ள பக்கத்தின் மறுபக்கத்தில் முழுப்பக்க விளம்பரமாக "எங்க வீட்டுப் பிள்ளை" 100வது நாள் விளம்பரம் வந்திருக்கக்கூடும்..! இந்த விளம்பரத்தின் (என்னிடம் உள்ள) நகல் வடிவை, சில தினங்களுக்குமுன், அடியேன் மக்கள் திலகம் திரியில் இடுகை செய்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கும்..!

    தாம்பரம் 'எம்.ஆர்.' அரங்கில் புதிய காவியமாக நடிகர் திலகத்தின் "சாந்தி" அன்று [23.4.1965] வெளியாகிறது...அதற்கு முந்தையதினம்தான் அக்காவியம் சென்னை[சாந்தி, மஹாராணி, சயானி] மற்றும் தென்னகமெங்கும் ரிலீசாகியிருக்கிறது. 'சித்ரா'வில், காதல் மன்னனின் "பூஜைக்கு வந்த மலர்" [வெளியான தேதி : 12.3.1965] திரைப்படத்தை எடுத்துவிட்டு நடிகர் திலகத்தின் "தங்கமலை ரகசியம்", 'காமதேனு'வில் நடிகர் திலகத்தின் "குங்குமம்", சைதை 'ஜெயராஜ்' அரங்கில் மக்கள் திலகத்தின் "படகோட்டி", மேலும் சில அரங்குகளில் மற்ற நட்சத்திரங்களின் திரைப்படங்கள் என இந்த ஆவணம் நம்மை சொர்க்கபுரிக்கு அழைத்துச் செல்கிறது. இடுகை செய்த தங்களுக்கு இனிய நன்றிகள்..!

    அன்புடன்,
    பம்மலார்.
    Last edited by pammalar; 2nd August 2012 at 11:56 PM.
    pammalar

  5. #324
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by J.Radhakrishnan View Post
    டியர் பம்மலார் சார்,

    தலைவரின் காவியங்களில் இது வரை அதிகம் அறியப்படாத "வளர்பிறை" பற்றிய தங்களின் பதிவு அரிதான ஒன்றாகும்!

    பதிவிட்டமைக்கு நன்றி!
    பாராட்டுக்கு நன்றி, ஜேயார் சார்..!
    pammalar

  6. #325
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    தாங்கள் தொடர்ந்து வனப்போடு வழங்கவுள்ள 'நடிகர் திலகத்தின் நாயகியர்' விஷுவல் தொடர் சார்ந்து, அக்கதாநாயகியர் நமது நடிகர் திலகம் குறித்துக் கூறிய கருத்துரைகளை, முடிந்த வரை, வரலாற்று ஆவணப் பொக்கிஷப்பதிவுகளாக அடியேன் வழங்கலாமே என்ற எண்ணம் உதயமானது. அந்த எண்ணம் செயல்வடிவம் பெற்றுள்ளது எமது அடுத்த பதிவில்..! இதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய தங்களுக்கு எனது கனிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  7. #326
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 1

    பாசத்திலகம் பற்றி நடிகை பண்டரிபாய்

    பொக்கிஷாதி பொக்கிஷங்கள் : இரு அரிய ஆவணங்கள்

    வரலாற்று ஆவணம் : நடிகன் குரல் : ஆகஸ்ட் 1962
    [நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக வெற்றி உலா மலர்]




    வரலாற்று ஆவணம் : தினத்தந்தி [ஞாயிறு மலர்] : 2.9.2001
    [இந்த ஆவணத்தை தெளிவாகப் படிக்க பதிவிறக்கம் (Download) செய்து படிக்கவும்]


    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  8. #327
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    தங்களின் வளமான ஆதரவிற்கு என் தலை வணங்கிய நன்றிகள். தங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் சப்போர்ட் இருக்கும் வரையில் இங்கு எனக்கும், அன்பு பம்மலார் சாருக்கும் என்ன கவலை? வானத்தையே வில்லை வளைத்து விடலாமே! நீங்கள் கூறியுள்ளது போல பல்வேறு கோணங்களில் நமது இதய தெய்வத்தை அலசவேண்டும் என்பதே என் அவா. அதற்கு முதல் ஆதரவு தங்களுடையதும், பம்மலாருடயதும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மற்ற அன்பு நண்பர்களின் ஆதரவிற்கும் நன்றி.

    நீங்கள் கூறியுள்ளது போல நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக்காட்சிகள் தொடர் கண்டிப்பாக நூறு சதவிகிதம் இங்கே தொடரும் என்று மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அது என்னுடைய நெடுநாள் கனவு. விருப்பம்.

    தாங்கள் அளித்துள்ள நடிகர் திலகத்துடன் நடித்த நாயகிகள் பட்டியல் மலைப்பைத் தருகிறது. அத்தனை நடிகைகளின் பெயர்களையும் அழகாகச் செதுக்கி வைத்து விட்டீர்கள். அதற்காக மிக்க நன்றிகள்.
    Last edited by vasudevan31355; 2nd August 2012 at 06:30 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #328
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராதாகிருஷ்ணன் சார்,

    தங்களது மேலான ஆதரவிற்கு என் அன்பு நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #329
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு பம்மலார் சார்,

    தங்களது உயரிய பாராட்டிற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

    இன்று காலை நமது திரியை ஒப்பன் செய்து பார்த்த போது எனது கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. what a sweet shock! பார்த்தால் வளர்பிறை. அப்படியே ஆடிப் போய் விட்டேன். சர்ப்ரைஸ் பதிவுகளின் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி அல்லவா தாங்கள்?

    நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசையாய் இருந்த வளர்பிறை கனவுகள் இன்று தங்களால் நனவானது. இனி தேய்பிறை என்ற சொல்லுக்கே இடமில்லை. பேசும்பட வளர்பிறை ஆவணம் நமது திரியின் வளர்ச்சியை உச்சத்துக்கு கொண்டு செல்லப் போவது நிஜம். பலபேர் வளர்பிறை திரைப்படத்தை பார்த்திருக்க முடியாது. மறு வெளியீடு என்பது அபூர்வம். ஆனால் தங்கள் மூலமாக நிழற்படங்களைக் காண முடிந்ததே என்று அனைவரும் நிச்சயம் சந்தோஷமடைவார்கள். சற்றே குண்டான அழகு முகத்துடன் படு வித்தியாசமான ஹேர்ஸ்டைலோடு தலைவர் காட்சியளிப்பது சூப்பர். அற்புதமான வித்தியாசப் பதிவுக்கு அனந்த கோடி நன்றிகள்.

    'நடிகர் திலகத்தின் நாயகியர்' விஷுவல் தொடருக்கு தாங்கள் அளித்திருக்கும் ஆதரவை எண்ணி எண்ணிப் பெருமை கொள்கிறேன். நான் எந்த முயற்சி எடுத்தாலும் ஓடோடி வந்து பாராட்டு மழை பொழிவதிலும் சரி... அதற்கு உற்ற உறுதுணையாய் அனைத்து உதவிகளை செய்வதிலும் சரி... தாங்களும் ராகவேந்திரன் சாரும் ஈடு இணையில்லாதவர்கள் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். முதல் பதிவாக நடிகர் திலகத்தின் முதல் நாயகி திருமதி பண்டரிபாய் அவர்களின் பேட்டியை மிகச் சரியான தருணத்தில் கூடவே வந்து, உடனே வெளியிட்டு அசத்தியதற்கு நன்றிகள்.

    'நடிகர் திலகத்தின் நாயகியர்' விஷுவல் தொடருக்கு மிக மேட்சாக தாங்கள் சம்பந்தப்பட்ட நாயகியர் நடிகர்திலகத்தினுடனான தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்ட பத்திரிக்கையின் ஆவணங்களை இங்கே பதிப்பித்திருப்பது, பதிக்கப் போவது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்போதுதான் 'நடிகர் திலகத்தின் நாயகியர்' விஷுவல் தொடருக்கே முழுப் பெருமையும் கிடைக்கிறது. அதற்கு காரணமான தங்களூக்கும், அதற்கு பேருதவி புரியும் தங்கள் ஆவணங்களுக்கும், அந்த ஆவணங்களைத் தாங்கி பெருமையடைந்திருக்கும் தங்கள் ஆவணக் காப்பறைக்கும் எனது கோடி கோடியான நன்றிகள்.

    (குறிப்பு: வளர்பிறை பதிவை நமது அன்பு ராகவேந்திரன் சார் அவர்களுக்கு தாங்கள் dedicate செய்தது சாலப் பொருத்தம். ஏனெனில் ரசிகவேந்தருக்கு உயிர் போன்ற படம் இது. வளர்பிறையைப் பற்றி பல்வேறு சமயங்களில் ராகவேந்திரன் சார் தொலைபேசியிலும், நேரிலும் சிலாகித்து பேசியுள்ளார். இப்படத்தின் வீடியோ எங்கும் இல்லை. அதற்கான் முயற்சியில் பகீரதப்பிரயத்தனம் செய்தும் பாச்சா பலிக்கவில்லை. உலகெங்கும் வலை போட்டு தேடியாயிற்று. கிடைத்தபாடில்லை. என்றாவது ஒருநாள் கிடைக்காமலா போய் விடப் போகிறது என்ற நம்பிக்கையில் இன்று வரை முயற்சி செய்து வருகிறோம். அப்படி கிடைத்து விட்டால் அதன் முதல் பிரதி நமது ரசிக வேந்தருக்குத்தான். அவர்தான் வளர்பிறையின் அதிதீவிர ரசிகர். திரியின் வளர்ச்சிக்கும் வேந்தர்).
    Last edited by vasudevan31355; 2nd August 2012 at 01:26 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #330
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு பம்மலார் சார்,

    தாங்கள் பதிவிட்டிருந்த பண்டரிபாய் அவர்களின் பேட்டியில் அவர்கள் குறிப்பிட்டிருந்த கண்கள் பற்றிய நினைவலைகள் என் கண்களைக் குளமாக்கி விட்டது. இப்போது தான் கண்கள் கதையை முழுமையாகத் தெரிந்து கொண்டேன். பல தெரியாத விஷயங்கள் உங்கள் செயற்கரிய பதிவுகளால்தான் தெரிய வருகின்றன. அப்போதே பாசமலர் ரேஞ்சுக்கு கண்கள் கவிதையாய் கலக்கியிருப்பது இப்போதுதான் புரிகிறது. நடிகர் திலகத்தின் நடிப்பை திருமதி பண்டரிபாய் அவர்கள் குறிபபிட்டிருப்பதைப் படிக்கும் போது எப்போது அந்தக் காவியத்தை பார்ப்போம் என்ற ஆவல் மேலிடுகிறது. கண்கள் பூத்துப் போக காத்திருக்க வேண்டியதுதானா?

    by the by 'பட்டாக்கத்தி பைரவன்' என்ன மட்டமானவரா ... ஏன்... அவருக்கென்ன?... அவரைப்பற்றி எழுதக்கூடாதா?... ஏதோ குதிரை கடிவாளத்தைக் கட்டிக்கொண்டு ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதைப் போல பட்டாக்கத்தி பைரவன் என்றால் அது ஒரு மட்டமான படம் மோசமான படம் என்பது சிலருக்கு வழக்கமாகி விட்டது. அது மோசமான படமாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதில் இவருடைய நடிப்பின் முத்திரைகள் எவ்வளவு இருக்கிறது தெரியுமா... உருவ அமைப்பு சற்று வித்தியாசமாகிப் போனதால் அந்தப் படத்தின் சிறப்பம்சங்கள் எடுபடாமல் போய்விட்டன...ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசாமல் இப்போது ஒருமுறை நேரம் கிடைத்தால் அப்படத்தைப் பார்க்கட்டும். வெகு வித்தியாசமான பல மூவ்மென்ட்களை அப்படத்தில் காணலாம். அதற்காக பட்டாக்கத்தி பைரவன் ஒரு சூப்பர் படம் என்று நான் வாதிட வில்லை. அந்தப் படத்திலுள்ள சிறப்பம்சங்களை எழுதினால் என்ன தவறு? இந்தப் படத்திலும் அவர் மிகச் சிறப்பாக பல இடங்களில் செய்திருக்கிறார் என்பதை மறைக்க என்னால் இயலாது.

    தம்பி என்று தெரியாமல் ஜெய்கணேஷை கட்டிவைத்து சித்திரவதை செய்யும் போது தாய் சௌகார் வந்து உண்மையை சொன்னவுடன் முகத்தில் பல்வேறு உணர்சிகளை அனாயாசமாய் படரவிட்டு "என்ன கொக்கி போட்டு இழுக்குற"...என்று இழுத்துக் கேட்கும் பாணி இதுவரை அவர் எந்தப் படத்திலும் செய்யாதது.
    Last edited by vasudevan31355; 2nd August 2012 at 01:36 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •