-
17th September 2012, 05:05 PM
#911
Senior Member
Senior Hubber

Originally Posted by
Gopal,S.
உயர்ந்த மனிதன்-பகுதி-5
கவுரி-சத்யா காதலை உணர்ந்து
அவர் அதை அணுகும் பிரச்சனைக்குரிய காட்சி, NT யின் மேதைமைக்கு ஒரு சான்று. conference போய் வந்த தோரணையில் பிரச்சனையை
அணுகுவார். தள்ளி நிற்பார், மிரட்டுவார், ஆழம் பார்ப்பார், ஒரு உயர்ந்த ,வறண்ட,flat வாய்ஸ் இல் பேசுவார்.இறுதியாய் உறுதியை உணர்ந்து
சிறிதே உணர்ச்சி வச பட்டு ஒபபுவார். எனக்கு தெரிந்து இவ்வளவு காம்ப்ளெக்ஸ் ஆக ஒரு காட்சியை யாரும் அணுகியதில்லை.
(தொடரும்)
திரு. கோபால்,
மிக அழகாக கவனித்து குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த விசாரணைக் காட்சி நெடுகிலும், அவரது குரல் சற்றே கனமாக, அப்போது அவர் அணிந்திருக்கும் உடைக்கு ஏற்றார்ப்போலும் இருக்கும். காட்சி நெடுகிலும், அவரும் ஏற்கனவே காதலித்திருந்தாலும், அவர் செய்தது போல், சிவகுமாரும் தவறும் செய்து விடுவார் என்பது போல், கையாண்டிருப்பார். ஒரு வித சுய இரக்கம் மற்றும் பொறாமையும் கலந்திருக்கும். கடைசியில், மரத்தில் செதுக்கியதைக் கண்டு கண் கலங்கும் போது, சற்றே தடுமாறி, மறுபடியும் முன் இருந்த நிலைக்கு சட்டென மாறுவார்.
சௌகாரை அடித்து விட்டுச் சென்று, பின்னர் திரும்பியவுடன், காலை மாற்றிப் போடுவதை அழகாக கவனித்துக் குறிப்பிட்டுள்ளீர்கள். உடன், "I am sorry" என்று சௌகாரிடம் சொல்லும் போது, அவரது கண்களிலும், முகத்திலும், குற்றம் இழைத்தவனின் guilty பாவனையைக் காணலாம்.
நாகையா பணியிலிருந்து ஓய்வு பெறும் கட்டம். மிகச் சில நிமிடங்களே வந்தாலும், இந்த நிமிடம் வரை கண்களையும், நினைவையும் விட்டு அகல மறுக்கிறது.
மிக அற்புதமான ஆய்வு - மிக அற்புதமான படம், மற்றும் நடிப்பிற்கு.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
17th September 2012 05:05 PM
# ADS
Circuit advertisement
-
18th September 2012, 12:07 AM
#912
Thanks NOV. Regarding your query, unlike Karnan this may even see an immediate release in overseas if not simultaneously. That's what we hear. Just a few days and hopefully everything would become clear.
கோபால்,
முடியுங்கள்! மொத்தமாக பேசலாம்.
Regards
-
18th September 2012, 08:13 AM
#913
Junior Member
Newbie Hubber
உயர்ந்த மனிதன் -பகுதி-6
இந்த படத்தின் தனி சிறப்பு ஆற்றோட்டமான திரைகதை. Flashback அது இது என்று போட்டு (நிறைய சந்தர்பங்கள் இருந்தும் ) கதையின் மெல்லிய ஓட்டத்தை சிதைக்காமல், நேரடியாக கொண்டு சென்றிருப்பார்கள். ஜாவர் சீதாராமனின் வசனங்கள் (அந்த நாள்,ஆண்டவன் கட்டளை) தமிழ் பட நியதிகளை மீறாமல் , பாத்திர இயல்புகளை முன்னிறுத்தி ,மிக polish ஆக இருக்கும். கோபால்-ராஜூ உரையாடல்கள்,விமலா-raju , தொழிலாளி-முதலாளி உறவு சார்ந்தவை,கோபால் மரண காட்சி, கொடைக்கானல் காட்சிகள் குறிப்பிட வேண்டியவை.(ஒருவேளை உதர் புருஷ் வசனங்களை மொழி மாற்று செய்திருப்பார்களோ என்ற அளவு வித்யாசமாக இருக்கும்.) Hats off ஜாவர்.மற்ற படி ரொம்ப Technical விஷயங்கள் தேவை படாத கதை.
கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியுடன் பிணங்கி (குங்குமம்)இந்த படத்தில் இணைந்தார். அமைதியான துருத்தாத இயக்கம்.
அடுத்த படி சரியான பாத்திர தேர்வு. சுந்தர் ராஜன் ,டாக்டர் வேஷத்திற்கு தேர்வு செய்ய பட்டிறிந்தாலும் ,அவரால் நேர் அல்லது எதிர் நிலைகளில் இயங்கியிருக்க முடியுமே தவிர நேர்-எதிர்,எதிர்-நேர் என்ற கோபாலின் புதிர் நிலை மனபான்மைகளுக்கு அசோகனின் கோமாளி தனம் கலந்த mystic ஆன நடிப்பு ஒரு புதிர் தன்மையை நிலை நிறுத்துகிறது.(Dark knight Heath Ledger போல்) .அசோகன் நல்ல தேர்வு. வாணிஸ்ரீ ஒரு அற்புதம்.அறிமுகமாகி இரண்டாம் வருடத்தில் ஒரு rawness , Passion ridden poor teenager , பாத்திரத்துக்கு பொருத்தம். சௌகார், sophisticated ,obsessive -compulsive குணங்கள் நிறைத்த இந்த பாத்திரத்திற்கு இரண்டாவது nomination கூட இருக்க முடியாது. சிவகுமார் இதே குணாதிசயம் கொண்ட மனிதர்.கேட்கவா வேண்டும்?
நாகையா,சுந்தர ராஜன்,ராமதாஸ் அத்தனை பெரும் நல்ல பங்களிப்பை செய்திருப்பார்கள்.
இசை புரட்சி நிகழ்த்தியிருப்பார் விஸ்வநாதன்.(ராமமூர்த்தியை பிரிந்த பின் தனியாய் போட்ட படங்களிலேயே மிக சிறந்த படம்) பால் போலவே,வெள்ளிக்கிண்ணம்தான்,என்-கேள்விக்கென்ன பதில்,அந்த நாள் என்ற பாடல்கள் வாலி கூட்டணியில்.உறுத்தாத பின்னணி இசை.
ஏ.வீ.எம்.செட்டியார் சிவாஜியை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி (இந்த படத்தை re-make செய்ய முடியாது என்று சொன்னார்)
கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியை best perfectionist என்று பாராட்டினார்கள்.
ரசிகர்களின் பார்வையில் இன்றளவும் மறக்க முடியாத படம்.
(முற்றும்)
Last edited by Gopal.s; 18th September 2012 at 10:01 AM.
-
18th September 2012, 09:09 AM
#914
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
உயர்ந்த மனிதன் -பகுதி-6
ரசிகர்களின் பார்வையில் இன்றளவும் மறக்க முடியாத படம்.
(முற்றும்)
Gopal sir, thank you and congratulation for your excellent writeup about our NT's one of best movie "Ooyartha Manithan". One of my most favorite movie and watched countless time.
Thanks a lot.
My personal request to analysis my other favorite NT movie "Savale Samale"....
Cheers,
Sathsih
-
19th September 2012, 07:26 AM
#915
Administrator
Platinum Hubber
Gopal
excellent series, good thoughts. ungal pani thodarattum
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
19th September 2012, 07:57 AM
#916
Junior Member
Newbie Hubber
நன்றி நண்பர்களே.
சுவாமி அவர்களே- நான் ரசிப்பவர் என்னை பாராட்டினால் ருசிக்கத்தானே செய்யும்?
பிரபு ராம்- நீ தகப்பன் சாமி. உன் தேவர் மகன் ஆய்வே எனக்கு உந்துசக்தி. அற்புதமான துணை ஆய்வு. ஆனால் மகளிர் அமைப்புகள் உனக்கு எதிராய் கொடி பிடிக்க வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் பார்வதி விரும்புவது ராஜுவை.ராஜூ வேண்டாமென்றால் அவள் கோபாலிற்குத்தான் என்று கோபாலோ ,ராஜுவோ, நீயோ,நானோ முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்று அவர்கள் கொடி பிடிப்பார்கள்.நீ ரசித்ததில் எனக்கு மிக திருப்தி.
வாசு சார்- உங்கள் வழி பாராட்டுகள் எனக்கு கண்ணப்ப நாயனாரை நினைவு படுத்தும்.
கார்த்திக் சார்- நீங்கள் எழுதும் அத்தனையிலும் நான் இருப்பேன்.நான் எழுதும் அனைத்திலும் நீங்கள் இருப்பீர்கள். உங்கள் அத்தனை எழுத்திலும் எனக்கு உளமான ஈடுபாடு உண்டு. என் "பெயரையும்" காப்பாற்றி தந்ததற்கு ஸ்பெஷல் நன்றிகள். உங்கள் எழுத்துகள் பழைய நாட்களிற்கு இழுத்து செல்லும் வல்லமை படித்தவை. சுவையான சிறுகதைகள் போல் அருமையான எழுத்துக்கள்.
சதீஷ்- நிச்சயம் செய்வேன். அவரின் ஒவ்வொரு வருடத்திலும் சிறந்த ஒன்றை எடுத்து ஆய்வு செய்யும் ஆவல் இருக்கிறது. 1971 இல் சவாலே சமாளித்தான்.(முதல் மரியாதை - பிரபு ராமுக்கு reserved )
பார்த்தசாரதி சார்- அற்புதமான ரசிகர் நீங்கள். sorry ஐ விட்டு விட்டதற்கு sorry .
ஸ்ரீநிவாஸ் சார்- நான் முடித்து விட்டேன்(தங்கள் ஆக்ஞை படி) எப்போது பேச போகிறீர்கள்?
ராகவேந்தர் சார்- நீதி சௌகார் ஜானகி போல என்னை மேன்மையுள்ள பிள்ளை என்று உங்களிடத்தில் எப்போது ஏற்பீர்கள்?
Joe - என்ன,ரொம்ப நாளாகவே காணவில்லை?
Nov- Surely.Many thanks.
-
19th September 2012, 11:47 AM
#917
Moderator
Platinum Hubber
on the lovely series.
I realize I don't remember it as well as I thought I do. Must watch again soon.

Originally Posted by
Gopal,S.
ஆனால் மகளிர் அமைப்புகள் உனக்கு எதிராய் கொடி பிடிக்க வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் பார்வதி விரும்புவது ராஜுவை.ராஜூ வேண்டாமென்றால் அவள் கோபாலிற்குத்தான் என்று கோபாலோ ,ராஜுவோ, நீயோ,நானோ முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்று அவர்கள் கொடி பிடிப்பார்கள்.
That Gopal automatically thinks so, to the end of ruining his life, is a testament to the chauvinism. The authentic portrayal of that is something women's group should appreciate. And we, well, we only appreciated that authentic portrayal. So we are safe 

Originally Posted by
Gopal,S.
முதல் மரியாதை - பிரபு ராமுக்கு reserved
ஓ! எனக்காக எல்லாம் காத்திருக்காமல் நீங்கள் எல்லாம் எழுதுங்கள். எனக்கு disciplinedஆக எல்லாம் இருக்க வராது. கிடைக்கும்போது பார்த்து, பார்க்கும்போது தோன்றுவதை எழுதும் தாந்தோணி.
இப்போது முதலில் பார்க்கவேண்டியது: உயர்ந்த மனிதன்
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
19th September 2012, 01:17 PM
#918
Junior Member
Newbie Hubber
கார்த்திக் சார்,
ஒரு அழகான உரையாடலை தொடங்கியுள்ளீர்கள். தங்களுடன் உடன் படுகிறேன். Grandeaur என்று பார்த்தால் சிவந்த மண்தான் அவர் உச்சம். உயர்ந்த மனிதனை நான் தேர்ந்தெடுத்தது classical touch (பால் போலவே,வெள்ளி கிண்ணம் தான் ) Experimental genre (அந்த நாள்) ஆகியவற்றுக்குத்தான்.
அவர்கள் பிரிந்தபின் balancing of archestra , அதிசய ராகங்கள்(உள்ளத்தில் -சக்ரவாகம் தொடங்கி,சரசாங்கியில் தொடரும்) ,ரெகார்டிங் ஸ்டாண்டர்ட்ஸ் பாதிக்க பட்டது உண்மை. ராம மூர்த்தி அவர்களுக்கு வியாபார திறமை அற்றதாலும்,தங்க சுரங்கம் எதிர் பார்த்த வெற்றியை பெறாததாலும் ஒதுக்க பட்டார்.
விஸ்வநாதன் தனியே வந்த பின் சில நல்ல படங்களை 1975 வரை கொடுத்துள்ளார். நீலவானம்(ஓஹோஹோ ஓடும் ,ஓஹ் லிட்டில் flower ),மோட்டார் சுந்தரம் பிள்ளை(காத்திருந்த), Thangai(Sugam,Iniyadhu),நெஞ்சிருக்கும் வரை(அனைத்தும்),இரு மலர்கள்(மாதவி,மன்னிக்க, அன்னமிட்ட),ஊட்டி வரை உறவு(அனைத்தும்),உயர்ந்த மனிதன் (அனைத்தும்),அன்பளிப்பு(தேரு வந்தது,வள்ளிமலை), சிவந்த மண்(அனைத்தும்),எங்க மாமா(என்னங்க,சொர்க்கம்,எல்லோரும்),ராமன் எத்தனை ராமனடி(சித்திரை மாதம், நிலவு வந்து),சொர்க்கம்(பொன்மகள்,muthaaraththil),எங்கிருந ்தோ வந்தாள்(ஒரே பாடல்,சிரிப்பில்),பாதுகாப்பு(ஆற்றுக்கு),இரு துருவம்(தேரு பார்க்க),தங்கைக்காக(அங்க முத்து),Praptham (Allsongs)சுமதி என் சுந்தரி(அனைத்தும்), பாபு(வரதப்பா), ஞான ஒளி(மண மேடை),பட்டிக்காடா பட்டணமா(என்னடி,கேட்டுக்கோடி),தர்மம் எங்கே(பள்ளியறைக்குள்),தவ புதல்வன்(நானொரு,இசை கேட்டால்),பொன்னூஞ்சல்(ஆகாய, நல்ல காரியம்),கவுரவம்(யமுனா,அதிசய),ராஜபார்ட் ரங்கதுரை(அம்மம்மா,மதன),
சிவகாமியின் செல்வன்(இனியவளே,மேளதாளம்),தாய்(எங்க மாமனுக்கும்),அவன்தான் மனிதன்(ஊஞ்சலுக்கு,அன்பு நடமாடும்,ஆட்டுவித்தால்)மன்னவன் வந்தானடி(காதல் ராஜ்ஜியம்),அன்பே ஆருயிரே(மல்லிகை முல்லை),வைர நெஞ்சம்(நீராட),டாக்டர் சிவா(மலரே,கன்னங்கருத்த),பாட்டும் பரதமும்(மான் தோரண,கற்பனைக்கு), சித்ரா பவுர்ணமி (வந்தாலும்).
ரோஜாவின் ராஜா(ஜனகனின் மகளை)
Last edited by Gopal.s; 20th September 2012 at 10:57 AM.
-
19th September 2012, 04:59 PM
#919
Administrator
Platinum Hubber
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
19th September 2012, 10:08 PM
#920
Senior Member
Platinum Hubber
Gopal - excellent series! enakku avLavA pidikkAdha padam(mainly due to non-Sivaji actors in the movie). ivLo azhaA ezhudhi marubadiyum pArkka thUndugiRIrgaL
Bookmarks