-
26th September 2012, 02:06 PM
#11
Senior Member
Diamond Hubber
http://www.facebook.com/kamalhaasan....39224536114805
Kamal Haasan · 36,028 like this
54 minutes ago ·
எனக்கு கேரள நடிகர்களுடன் முன்பு இருந்த அளவுக்கு தொடர்பு இல்லாமல் போனாலும் இருதரப்பிலும் அன்பு குறையாமல் இருப்பது என் பாக்கியமே.
கேரளத்தில் நல்ல நடிகர்களுக்கான பஞ்சம் வராத அளவிற்கு சராசரி நடிப்பின் தரம் உயர்ந்து இருக்கிறது. எனினும் திரு.திலகன் போன்றவர்களின் இழப்பு ஈடு
செய்ய முடியாதது. அனுபவமும் அபார தன்னபிக்கையும் உள்ளவர். “சாணக்கியன்” படப்பிடிப்பின் போது திரு.ஜிஜோ எனக்கு அவரை அறிமுகப் படுத்தியது "formidable actor" என்றுதான். திரு.திலகனைக் கண்டு படித்தவர்கள் நன்றியுடன் கண்ணீர் சிந்துவர்.
கண்டு வியந்தவர் இது இனி எங்கே என்று மயங்குவர். மயங்கத் தேவையில்லை இனியும் வருவர் நல்ல கலைஞர்கள். ஆனால் இவர் போல் இருக்காது. சாயல் தெரியலாம் ஆனால் அசல் போனது போனதுதான். இத்தனை நாள் எங்களுடன் இருந்ததற்காக நன்றி, யாம் பெற்றதற்காகத் தனி நன்றி தோழரே.
அன்பன்
கமல்ஹாசன்.
-
26th September 2012 02:06 PM
# ADS
Circuit advertisement
Bookmarks