-
27th September 2012, 07:18 AM
#11
Senior Member
Diamond Hubber
தமிழ் சினிமாவின் தவப் புதல்வன்... கமல்ஹாசன்!
முகம்
03-அக்டோபர் -2012 விகடன்
தமிழ் சினிமாவின் தவப் புதல்வன்... கமல்ஹாசன்! உலகம் பார்த்து உருகும் உலக சினிமாக்களைத் தமிழில் படைத்த படைப்பாளியின் பெர்சனல் முகம் இங்கே...
பொய் சொல்வது பிடிக்காது. எப்போதும் எதிராளியின் கண் பார்த்துதான் பேசுவார். 'பேசும்போது எச்சில் முழுங்கிக்கிட்டே பேசினால் பொய் சொல்றாங்கனு அர்த்தம்!’ என்பார்.
சாதத் ஹசன் மண்டோ படைப்புகள் ரொம்ப விருப்பம். அவரது படைப்பின் அசல் ருசியை உணர உருது கற்றுக்கொண்டவர்.
சைனீஸ் வகை உணவுகள் அவ்வளவு இஷ்டம். அநேகமாக கமல் உண்டிருக்காத ஜீவராசியே இருக்காது. அதே ஆர்வம் பழங்களின் மீதும் உண்டு. டயட் நம்பிக்கை கிடையாது. வயிறு நிறையச் சாப்பிட்டு சேகரித்த கலோரியை எரித்துவிட்டால் போதும் என்பார்.
முடியாது, கஷ்டம் - எடுத்த எடுப்பிலேயே இந்த வார்த்தைகளைச் சொன்னால், ரசிக்க மாட்டார். ''இறுதி வரை முயற்சித்தும் காரியம் ஆகவில்லை என்றால், சொல்ல வேண்டிய வார்த்தைகள் இவை'' என்பார்.
நடிகர் தாமு ஒருமுறை மிமிக்ரிபற்றி கமலிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மிமிக்ரியில் எத்தனை வகை உண்டு? உலகப் பிரபல மிமிக்ரி கலைஞர்கள் யார்? மிமிக்ரிபற்றிய தகவல்களைப் பகிரும் இணையதளங்கள் எவை எவை... என்று கமல் கொடுத்த நீண்ட விளக்கத்தைக் கேட்டு ஆச்சர்யத்தில் அசந்துவிட்டார் தாமு. கமலின் பலதுறை அறிவுக்கு இது ஒரு சாம்பிள்.
தினமும் காலை இரண்டு மணி நேரம் யோகா. எவ்வளவு அவசர வேலைகள் இருந்தாலும் யோகாவைத் தவறவிட மாட்டார். (
) பிறகு, நண்பர்களுடன் சந்திப்பு. தொடர்ந்து படிப்பு... படிப்பு... படிப்பு. புத்தகத்தில் முக்கியமான கருத்துகளை அடிக்கோடிடுவார். காலத் துக்கும் அந்தப் புத்தகம் மனதில் பதித்த கருத்துகளை மறக்க மாட்டார்.
தினமும் மாலை மூன்று மணி நேரம் ஜிம்மில் பழியாகக்கிடப்பார். திருமண வரவேற்பு, மற்ற நிகழ்ச்சிகளில் கடைசியாக வந்து கலந்துகொண்டு வாழ்த்த இதுவே காரணம். வெளிநாடு, வெளியூர் என எங்கு சென்றாலும் அவருடைய உடற்பயிற்சியாளர் சூரிக்கும் ஒரு டிக்கெட் உண்டு.
ட்விட்டரில் கமல் இல்லை. ஆனால், ஃபேஸ்புக்கில் இருக்கிறார். தினமும் ஒரு பார்வை பார்த்துவிடுவார்.
கடைசியாகப் பார்த்த தமிழ் சினிமா 'ஒரு கல் ஒரு கண்ணாடி’. விரும்பி அழைத்தால் போவார். மற்றபடி அவர் தினமும் பார்க்கும் அசல் சினிமாக்கள் வேறு ரகம்.
மும்பையில் இருக்கும் ஸ்ருதி, அக்ஷரா இரு மகள்களும் அடிக்கடி அப்பாவைப் பார்க்க மட்டுமே சென்னை வந்து செல்வார்கள். அவர்களுக்கு கமல், நெருக்கமான நண்பர் மட்டுமே. நோ அட்வைஸ்... நோ கண்டிப்பு.
சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில் அடிக்கடி பார்க்க முடியாது. சினிமா நண்பர்களுடன் தினசரித் தொடர்பும் இருக்காது. ஆனால், ஆச்சர்யமாக சினிமாவின் அத்தனை கிசுகிசு, ரகசியங்களும் அறிந்துவைத்திருப்பார்.
'மையம்’ வெப்சைட் விரைவில் தளம் இறங்கலாம். சினிமா, இலக்கியம் சார்ந்த ரசனைகளுக்கே முன்னுரிமை. இதற்காகவே பிரத்யேகமாக ஜெயகாந்தன், தொ.பரமசிவன், மறைந்த ரா.கி.ரங்கராஜன் ஆகியோரிடம் நீண்ட நேர்காணல்களைப் பதிவுசெய்து வைத்திருக்கிறார்.
பக்கா நாத்திகர். கோயிலுக்குச் செல்கிறார் என்றால், அன்று அங்கே படப்பிடிப்பாக இருக்கும்.
முன்பு நாகேஷ் நெருக்கமான நண்பர். வயசு வித்தியாசம் இல்லாமல் சகலமும் கதைப்பார்கள். இப்போது பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் செம தோஸ்த்.
தனது ரேஞ்ச் ரோவர் எவோக் காரை மித வேகத்தில் தானே செலுத்துவார். அலுவலகத்தில் அவருக்குப் பிரியமான மேட்ச்லெஸ் பைக் கம்பீரமாக நிற்கிறது. 'ஹே ராம்’ படத்தில் பயன்படுத்தத் தேடியபோது கிடைத்த அந்த பைக், கமல் பிறந்த வருடமான 1954 வருட மாடல். எனவே, அது அவருக்கு டபுள் ஸ்பெஷல்!
நவம்பர் 7... பிறந்த நாளன்று ரசிகர்களைச் சந்திப்பார். அப்போது கூர்ந்து கவனித்தால், அவரது கண்களில் சின்ன சோகத்தைக் காணலாம். அந்தத் தேதிதான் அவருடைய பிரியமான அப்பா இறந்த நாளும்கூட!
-
27th September 2012 07:18 AM
# ADS
Circuit advertisement
Bookmarks