முக்தா சீனிவாசன் பேசியதை வாசிக்கையில் எதோ சாருவே கைப்பட எழுதித்தந்தது போல இருக்கிறது. குறிப்பா அந்த அழுகைச் சத்தம் பற்றிய விமர்சனம். கமலைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்திருக்கிறது.. எல்லாமே விமர்சகர்கள் என்ற போர்வையில் சினிமாவிற்கு அப்பால். ஆனால் தாணுவிற்கு அடுத்தாற்போல சினிமாவில் இருக்கும் ஒரு மனிதர் கமலை கடுமையாக விமர்சிப்பது எனக்குத் தெரிந்து இதுவே. ஆளவந்தான் கூட மனிதர்கள் மறந்துவுடக் கூடும். ஆனால் காவியமான நாயகனைப் பற்றிய இது பெரிய சலனத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.