Quote Originally Posted by selva7 View Post
(பாரிஸ்டர் ரஜினிகாந்த்) நண்பரே.. அமைதியாக நடிகர் திலகத்தின் திரியைப் படித்து வரும் பொதுவானவன் நான்.
உங்கள் கருத்து எனக்கு உடன்பாடு இல்லாததால் தான், எழுதினேன். எனினும், விவாதத்தை தொடர விரும்பவில்லை. காரணம், நடிகர் திலகம் என்ற தமிழர்களின் icon ஆகத் திகழ்ந்த கலைஞரை நானும் ரசிப்பதால்.. பதிலுக்குப் பதிலாக, வேறு விசயங்களை எதிர் மறையாக உங்களைப் போல் எழுத விரும்பவில்லை.
(தவிர, உங்களின் ஆங்கிலத் தமிழைப் படிப்பது மிக கடினமாக உள்ளது. பொறுமையும் தேவைப்படுகிறது.)
கருத்துகளுக்கு நன்றி நண்பரே...

திரு.ராகவேந்திரா அவர்களே.. நீங்கள் குறிப்பிட்டது போல் நான் நடிகர் திலகத்தை தூற்றி எழுதவேவில்லை. கமலைப் பற்றி எதிர் மறையாக ஒரு சார்புடன் பாரிஸ்டர் எழுதவே, நானும் பதில் எழுதினேன். மற்றபடி, வேறு ஏதுமில்லை. இத்திரியின் contents இன்னும் பிடிக்கும் ஆதலால், தொடர்ந்து வாசிக்கவே செய்வேன்.
டியர் செல்வா சார்,
தங்களுடைய பதிவில் எனக்கு எந்த கருத்து இடர்பாடுகளும் இல்லை. இது எனக்கும் மற்றொரு நண்பருக்கும் இடையே நிலவும் கருத்துப் பரிமாற்றம், அல்லது கருத்து வேறுபாடுகள். எனவே தாங்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிடுங்கள். தங்களுடைய வருகைக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

அன்புடன்